ஆகஸ்ட் 03, 2011


வல்லரசுகளின் கெளரவ சின்னம் விமானம் தாங்கிக் கப்பல்களா?

உலகின் பெரும் வல்லரசுகளாக கணிக்கப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகள் உலக அரங்கில் தங்கள் ஆதிக்கங்களை செலுத்தும்  முகமாக தங்கள் கடற்படைகளில் விமானம் தாங்கிக் கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளன. 10 – 20 வருடங்களுக்கு முன்பு இந்நாடுகளுக்கு 5 கண்டங்களிலும் பல இராணுவத் தளங்கள் இருந்தன.
பல நாடுகள்   சுதந்திரம் பெற்றதாலும்   உலக அரங்கில் கம்யூனிசம்  வீழ்ச்சியுற்றதாலும்   ரஷ்யா     சாம்ராஜ்யத்திலிருந்து  18 நாடுகள் விலகிசென்றதாலும் மேற்படி வல்லரசுகளுக்கு இராணுவ ரீதியில் பல சங்கடங்கள் ஏற்பட்டது கண் கூடு.   இருந்தும்   அமெரிக்கா   முழுப் பலத்துடன் இயங்கக் கூடிய 11 விமானம் தாங்கி கப்பலு டன் 5 கண்டங்களிலுள்ள கடலில் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
உலகில் பெரிய   இராணுவத்தை   (மக்கள் விடுதலை இராணுவம்) கொண்ட நாடு என்ற பட்டத்தை சீனா தட்டிக் கொண்டுள்ளது.

இதன் பாதுகாப்புத் திட்டங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. உலகின் வளர்ந்து வரும் நாடுகளில் சீனா குறிப்பிடத்தக்கது. சீனாவின் பொருளாதார  முன்னேற்றம்  மற்றும்   இராணுவ   விஸ்தரிப்பும்   நவீன    மயப்படுத்தலும்   உலகின்   பல   நாடுகளின்   கவனத்தையும்   ஈர்த்துள்ளது.   சீனா தனது   எரிபொருள்   இறக்குமதிக்கும்     உற்பத்தி செய்யப்படும்   பொருட்களின்   ஏற்றுமதிக்கும்     கடல் மார்க்கத்தையே   நம்பியிருக்கிறது. ஏட்டிக்குப் போட்டியாக  இந்தியாவும்  -  சீனாவுடன்   கடல் ஆதிக்கத்தில் போட்டி போடுகிறது.
சீனாவுக்கு தேவையான எரிபொருள் வாயு    என்பன மத்திய கிழக்கிலிருந்து   மலாக்கா  நீரிணையூடாக    (சிங்கப்பூர் ஊடாக செல்லும் கால்வாய்) சீனாவுக்கு வந்து சேர்கிறது.  ஆகவே   இந்த 8000   மைல் கடல்   வழிப்பாதையை   பாதுகாப்பதற்கு   சீனாவிற்கு    விமானம்     தாங்கிக் கப்பலின் தேவை அவசியமாகிறது.   இந்த விநியோகப்  பாதைக்கு  பாதிப்பு   ஏற்பட்டால்    சீனாவின் பொருளாதாரத்திற்கு பாரிய  பின்னடைவு  ஏற்படும்.
இதை    நன்கு உணர்ந்த சீனா விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் நீண்ட காலமாக    இரகசியமாக    ஈடுபட்டு வருகிறது.    இது வரை காலமும் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல்   விவகாரத்தை சீனா    இராணுவ   தளபதியான ஜெனரல் சென் பிஞ்ட் அண்மையில் ஹொங்கொங்    ‘கொமர்சியல் டெயிலி’    பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில் உறுதி செய்தார்.    சீனாவின்    வட கிழக்கு துறைமுகமான   ‘டாலியன்’ னில் 900 அடி நீளமான   இக்கப்பல்   கட்டப்படுவதாகவும்   எப்போ கட்டி  முடிக்கப்படும்   என்பதை   கூறமுடியாது எனவும் குறிப்பிட்டார்.
1980 இல்   இக்கப்பல்   உக்றேயின்    நாட்டில் சோவியத்   யூனியனுக்காக  கட்ட ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்படவில்லை.  ‘வார்யாக் » எனப் பெயரிடப்பட்டு கட்டப்பட்டு    வந்த இக்கப்பல் சோவியத்    யூனியனின்   வீழ்ச்சிக்கு பின் கப்பல் கட்டும் தளத்தில் துருப்பிடித்து  வந்தது. இந்த நிலையில் சீனா   மக்கள் விடுதலை   இராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு   கொண்ட சீனா     நிறுவனம்   மக்கா     நாட்டின்   ஒரு மிதக்கும்  கசினோவாக   இக்கப்பலை மாற்ற  நினைத்து   60,000 தொன் எடையுள்ள    இக்கப்பலை   1991 இல் வாங்கியது.
கம்யூனிசம்    உலக அரங்கில் வீழ்ச்சியுற்ற போது உக்கிறேயின் மற்றும் 17 நாடுகள்   ‘சோவியத் யூனியன்’ சாம்ராஜ்யத்திலிருந்து தனி   நாடுகளாகப் பிரிந்தன.   இக்கப்பல் ஏற்கனவே    கட்டி முடிக்கப்பட்டதாகவும்      இவ்வருடக் கடைசியில் வெள்ளோட்டம் விடப்பட்டு     சீன    கடற்படையுடன் சேவையில்   ஈடுபடுமெனவும்     அறியப்படுகிறது.    இக்கப்பல் ஒரு பொழுதும் வெளிநாட்டு ஆதிக்கத்திலுள்ள கடற்பரப்பில் நுழையாது என சீனா இராணுவ   உப தளபதிகளுள்  ஒருவரான   லெப்  ஜெனரல்  கீ ஜியங்கோ  தெரிவிக்கிறார்.
பி.பி.சி. நிருபர் கருத்து தெரிவிக்கையில், இக்கப்பல் சீன கடற்படையிடம் இணைந்தாலும் ஒரு யுத்த கால சேவையில் ஈடுபடுவதற்கு பல காலமெடுக்குமென்கிறார்.         இக்கப்பலை போர் முறைகளுக்கு ஏற்ப இயக்குவதற்கும் விமானங்கள் இக்கப்பலில் ஏறி, இறங்கி திறம்பட செயல்படுவதற்கும்  நீண்ட   காலமெடுக்குமென்கிறார்.
லெப்டினன்ட்   ஜெனரல்  கீ ஜியங்கோ  முக்கிய கருத்தொன்றையும்  இங்கே  கூறுகிறார்.  ‘உலகின் பெரும் வல்லரசுகள் யாவும் விமானம் தாங்கி கப்பல்களை  இயக்குகின்றன.   அவை    பெரும் வல்லரசுகளின் சின்னங்களாகும்’ என்கிறார்.    ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம் தான். சமுத்திரங்களைப்  பற்றி    நாம்   அறிய வேண்டியதும்    அதில் எமது   திறமையை பெற்றுக் கொள்வதும் மிகவும்  முக்கியம் என்றும் தெரிவிக்கிறார்.
குவைத், ஈராக் நாடுகள் மீட்கப்பட்ட இராணுவ நடவடிக்கையிலும் ஆப்கானிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளிலும் அண்மையில் பின்லேடன் கொல்லப்பட்ட   சம்பவம்   ஆர்ஜன்ரீனாவினால்  “FULL LAND’ தீவில் கைப்பற்றப்பட்டு பின்பு பிரிட்டன் அதை மீள கைப்பற்றிய இராணுவ நடவடிக்கைகளில்   விமானம்  தாங்கி   கப்பல்களின்   சேவை மகத்தானது   என்பதை யாரும் மறுக்க  முடியாது தான். இக்கப்பல்களை வைத்து இயக்குவதற்கு  பண வசதியும் இருக்கத்தான் வேண்டும்.

தென் சீனக் கடல்,      கிழக்கு சீன    கடல் மஞ்சள் கடல், தாய்வான்    நீரிணை போன்ற கடல்களின் தாங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்வதாகவும் அத்துடன் வியட்னாம், பிலிப்பைன் போன்ற நாடுகளுடன் பிராந்திய ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும் சீனா இராணுவத் தளபதிகள் கூறுகின்றனர்.   சீனா கடற்படையின் நோக்கங்களையிட்டு    ‘11 நவீன விமானம் தாங்கி கப்பல்களை   கொண்டுள்ள அமெரிக்காவும் கவலையடைந்துள்ளது.
சீனா    நீர்மூழ்கி கப்பல்களில் அதிக அக்கறை காட்டுவதாக தெரிகிறது. கரையிலிருந்து      1500 கிலோ மீற்றர்    தூரத்திற்குள்    பயணிக்கும்    விமானம் தாங்கி கப்பல்களை   மூழ்கடிக்கும்    திறன் கொண்ட   ‘Carrier Killer’ ஏவுகனைகளை விரைவில் சீனா இராணுவத்தில் இணைக்க உள்ளது. அது மாத்திரமல்ல,   அமெரிக்க,  ‘Stealth Fighter’ (அதாவது   ரடார்களின் கண்களில் தென்படாமல் பறக்கும் விமானம்) போன்று சீனாவின் தயாரிப்பு விமானம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் உறுதி செய்கின்றன.     தனது விமானம்    தாங்கி கப்பலில் பாவிப்பதற்காக ரஷ்ய கப்பல்களில் பாவிக்கப்படும்  விமானங்களை   ஒத்த விமானங்களையும்   சீனா தயாரிப்பதில்   ஈடுபட்டு வருகிறது.
‘வார்யாக் » கப்பலில்  நவீன  ராடர்களும்   ஆயுதங்களும்   பொருத்தப்பட்டிருப்பதாக   சீனா   இராணுவத் தளபதி செங் பிஞ்ட் கூறுகிறார்.  சீனா விமானமோட்டிகளும்   விமானங்களை இக்கப்பலில் ஏற்றி இறக்குவதற்கான தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சீனாவின் எரிபொருள் வளங்களை  பாதுகாக்கும்   பணிக்காக   கடற்படையை    நவீனப் படுத்தும்   முகமாக கடற்படைக்கென அதிக பணம் ஒதுக்கப்பட் டுள்ளது.
அமெரிக்க,  ‘Stealth Fighter’ (அதாவது   ரடார்களின் கண்களில் தென்படாமல் பறக்கும் விமானம்)
இன்றைய    நிலைவரப்படி அமெரிக்கா 14 அணுசக்தி நீர் மூழ்கிகளையும் 11 நவீன விமானம் தாங்கி கப்பல்களையும் 4000 விமானங்களையும் கொண்டுள்ளது.    சீனா 3 அணுசக்தி  நீர் மூழ்கிகளையும்      290 விமானங்களையும்   கொண்டுள்ளது.     விரைவில்   விமானம் தாங்கி கப்பல் வைத்திருக்கும்     நாடுகளின்   பட்டியலிலும்   இடம்பெறப் போகிறது.
2020 ஆம் ஆண்டளவில்     சீனாவுக்கு  இன்னும் 4 விமானம்    தாங்கி     கப்பல்கள் கட்டும் நோக்கமிருப்பதாக    ரஷ்ய இராணுவ ஆய்வாளர் பவல் கமினோவ்    மொஸ்கோவிலிருந்து     அறிவித்துள்ளார். சீனாவின் கடற்படை விஸ்தரிப்புக்கு ரஷ்யா தாராளமாக    உதவுவதாகவும்    4 நாசகாரி   கப்பல்களையும்    12 அணுசக்தி   நீர்மூழ்கி கப்பல்களை    ரஷ்யாவிடமிருந்து     சீனா அண்மையில் பெற்றுள்ளதாகவும் இவர் கூறுகிறார்.
பவல் கமினோவ் மேலும் கூறும்போது    ஒரு இராணுவ    நடவடிக்கையின்போது    ஆசியாவிலுள்ள    அமெரிக்க தளங்கள், கப்பல்கள், அத்தோடு அமெரிக்க   விமானம் தாங்கி   கப்பல்கள் எல்லாம்   சீனாவின் தாக்குதலுக்குள்ளாகும்.  அத்தோடு ஆசியாவிலுள்ள கடற்பகுதியில் இராணுவ சம நிலையும்  பாதிக்கப்படுமென்று   பி.பி.சி. யின்   ஆசியா   பிராந்திய   பாதுகாப்பு   நிருபரான   நிக் சைள்ஸ் கூறுகிறார்.
தென் சீனக் கடலில் சிங்கப்பூருக்கும் சீனாவுக்குமிடையில் பரந்து அமைந்துள்ள ‘ஸ்பாற்லி தீவுகள்’(Spartly Islands) பல கனிப் பொருட்களையும் எண்ணெய் வளங்களையும் கொண்டுள்ளதாக     அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன. இத்தீவுகளுக்கு வியட்னாம், பிலிப்பைன்ஸ்,   சீனா, தாய்வான் உட்பட பல நாடுகள்  உரிமை கோருகின்றன. ஆகையால் சீனாவுவக்கு 1000 மைல் தொலைவிலுள்ள இத் தீவுகளுக்கான கடற்படை பலத்தேவையும் இருப்பதை எவரும் தட்டிக் கழிக்க முடியாது.
விமானம்   தாங்கிக் கப்பல்களை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலையும் பார்ப்போம்.
பிட்டன் 2
பிரான்ஸ் 1
ஸ்பெயின் 1
இத்தாலி  1
இந்தியா 1 இன்னும் 2 கட்டப்படுகிறது.
ரஷ்யா 1
பிரேசில் 1
தாய்லாந்து 1

ஈராக், குவைத், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை நல்ல அனுபவங்களைக் கொண்டுள்ளது. எது எப்படியிருந்தாலும் உலக வல்லரசுகள் பல கோடி டொலர்களைச் செலவழித்து மிக நவீன ஆயுதங்களை கண்டு பிடிப்பதிலும் ஈடுபட்டிருக்கின்றன.
அமெரிக்க   ஆயுத விற்பனை   2009 யிலும்   பார்க்க 2010 இல்   இரு மடங்காக அதிகரித்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  பல போர் நடவடிக்கைகளில்   பங்குபற்றி   யுத்த அனுபவங்களை கொண்டுள்ள அமெரிக்க கடற்படைக்கு சீன கடற்படை ஒரு பாரிய சவாலாக விளங்குவதற்கு இன்னும் 10 20 ஆண்டுகள்   செல்லலாமென    சர்வதேச இரா ணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தொகுப்பு: ஏ. பாலேந்திரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக