ஆகஸ்ட் 25, 2011



மோடியின் பையிலிருந்து
 பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது...!
PrintE-mail
(டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
மாக்கண்டேய கட்சு அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல்
துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில்
 கருத்துச் கொல்லும் போது, "போலி என்கவுண்டர் மூலம்
அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில்
 போட வேண்டுமென்று கண்டனம்’ தெரிவித்தது. 12.8.2011
இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது 
பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு 
அப்பாவி 18 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரால் 
பிடித்து ராணுவத்தினரால் ஜூன் மாதம் சுட்டுக்
 கொல்லப்படுவதும் அதனை வீடியோவில் பார்த்த கராச்சி 
ஐகோர்ட் சூயோமோட்டோ (தன்னிச்சையான) வழக்காக 
எடுத்துக் கொண்டு அந்த ஏழு ராணுவ வீரர்களுக்கும் கடும்
 தண்டனை கொடுத்ததாகவும்,
அந்தத் தண்டனையினை
 மேல் முறையீடு செய்த ராணுவத்தினருக்கு அங்குள்ள
 சுப்ரீம் கோர்ட் அந்தத்தண்டனையினை உறுதி 
செய்ததாகவும் காட்டினார்கள்.
என்ன தண்டனை எனக் கேட்கிறீர்களா? அந்த 
இளைஞனைச் சுட்ட ராணவ வீரர் ஷாஹித் ஜாபருக்கு
 மரண தண்டனையும் அதற்கு துணையாக இருந்த 
அறுவருக்கு ஆயுள் தண்டனையும் சம்பவம் நடந்து
 மூன்று மாதத்திற்குள் வழங்கியதாக பி.பி.சி ஒளி பரப்பானது.
ஆனால் 2002ஆம்; ஆண்டு பிப்ரவரி 27ந்தேதி குஜராத்தில் 
நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்பு போலி 
என்கவுண்டர் என்ற பெயரில் பல முஸ்லிம்
 இளைஞர்களைக் கொண்ட காவல் துறையினருக்கும், 
காவி அரசியல் வாதிகளுக்கும் இன்னமும் தண்டனை 
வழங்கப்படவில்லை. மாறாக அந்த போலி
என்கவுண்டர்களை வெளிக்கொண்டு வந்த உயர் காவல் 
துறை அதிகாரிகள் தான் அங்குள்ள அரசால் 
பந்தாடப்பட்டுள்ளனர் என்பது சமீப கால செய்திகள் 
வெளிக்காட்டுகின்றன.
குஜராத்தில் முஸ்லிம் இனக்கொலை நடந்த சமயத்தில்
 உளவுப்படை தலைவராக இருந்த ஸ்ரீகுமார் என்ற 
நேர்மையான அதிகாரி விசாரணைக்கமிஷனிடம் சமர்ப்பித்த 
தனது அறிக்கையில் இனக் கொலைக்கு குஜராத் அரசம்,
மற்றும் காவியுடை தலைவர்கள் தான்; காரணம் என்றார். 
அதனால் அவர் பதவி பணி நீக்கம்செய்யப்பட்டது 
மட்டுமல்லாமல் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய டி.ஜி.பி
 என்ற உயர் பதவியும் மறுக்கப்பட்டது. அதன் பின்பு அவர் நீதி 
மன்றத்தினை நாடி தன் உயர் பதவியினை பெற்று ஓய்வும் 
பெற்றதோடு மட்டுமல்லாமல் மனித வேட்டைக்கு 
காரணமானவர்கள் அத்தனை பேருக்கும் தண்டனை 
பெற்றுத்தராமல்குஜராத்தினை விட்டு போக மாட்டேன் 
என அங்கே தங்கியுள்ளார் என்றால் அவர் மனத் தைரியம் 
பாருங்களேன்..
உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட திரு. ஆர்.கே. ராகவன் 
தலைமையிலாள எஸ்.ஐ.டி என்ற விசாரணைக் குழு உச்ச நீதி
 மன்றத்திற்க சமர்ப்பித்த 600 பக்க அறிக்கையில்pல் மோடி 
அரசு சமபவத்தினை மிகவும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும்,
 அந்த அரசு இரண்டு மந்திரிகளான அசோக் பட் மற்றும் 
ஜடேஜா ஆகிபோர்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்க 
அனுப்பி முஸ்லிம்களின் அபாயக்குரலினை கண்டு கொள்ள 
வேண்டாமென்று கூறியதாகவும் 2011பிப்ரவரி மாதம் 4ந்
தேதியிட்ட ஹிந்து ஆங்கில பத்திரிக்கை சொல்கிறது.
கோத்ரா ரயில் சம்பவத்திற்கு பின்பு மோடிக்கு முஸ்லிம் 
தீவிரவாதிகளால் ஆபத்து என்று பொய்யான தகவலை 
சொல்லி அப்பாவி முஸ்லிம் இளைஞர் சொச்ராபுதீன், 
அவனுடைய மனைவி கவுசர் பீவி மற்றும் அவனுடைய
 நண்பனும் போலி என்கவுண்டரின் ஒரே சாட்சியுமான
 பிரஜாபதியம் போலி என்கவுண்டரால் கொல்லப்பட்டார்கள். 
அந்த வழக்கு உச்ச நீதி மன்றம் வரை சென்று அதன் உத்திரவு 
மூலம் எஸ்.ஐ.டி என்ற சிறப்ப காவல் படை அமைக்கப்பட்டது.
அதன் பலனாக முன்னாள் உள்துறை அமைச்சர் அமித்ஷா,
 டி.ஐ.ஜி வன்ஸாமா,ஐ.பீ.எஸ் அதிகாரிகளான சுடாமா மற்றும் 
விபுல் அகர்வால,; இன்ஸ்பெக்டர் ஆஷிஸ் பான்டியா 
ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்னும் அந்த 
வழக்கு நிலுவையில் உள்ளது.
கோத்ரா ரயில் விபத்தினை விசாரிக்கள நானாவதி கமிஷன் 
அமைக்கப்பட்டது, அதன் பின்பு நடந்த சம்பவங்களை விசாரிக்க 
பானர்ஜி கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த வழக்குகள் உச்ச நீதி 
மன்றம் சென்றன. உச்ச நீதி மன்றமும் கோத்ரா ரயில் விபத்து 
அதன் பின்பு நடந்த கொலை,கொள்னை, தீ வைப்பு, சூறையாடல் 
போன்றவைகளை விசாரிக்க எஸ்.ஐ.டி என்ற சிறப்பு 
புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. அதில் அப்போதிருந்த
 உள் துறை அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கருதி 
அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சமீப கால 2ஜி வழக்கு, காமன் வெல்த் கேம்ஸ், லோக் அயுக்தா 
வரைவுச் சட்டம் போன்ற விவகாரங்களில் மத்திய அரசிற்கு 
பாராளுமன்றத்திலும் மற்றும் வெளியேயும் உள்ள 
நெருக்கடியினை சாதகமாமக பயன் படுத்தி குஜராத் அரசுக்கு 
எதிராக சாட்சி சொன்ன ஐ.பீ.எஸ் போலீஸ் அதிகாரிகள் மீது 
நடவடிக்கை எடுக்க துவங்கியிருக்கிறது. அந்த மாநில அரசு;
அவ்வாறு நடவடிக்கைக்குள்ளான அதிகாரிகளும் அதன்
 பின்னணியும்:
1) திரு ராகுல் சர்மா ஐ.பீ.எஸ்:.
இவர் கோத்ரா ரயில் விபத்து நடந்த பின்பு காவியுடையினர்
 நரோடா காம், நரோடா பாட்டியா மற்றும் குல்பர்கா
 சொஸைட்டி பகுதியில் நடத்திய வேட்டையின் போது 
அஹமதாபாத் நகரின் உள்ள போலீஸ் கட்டுப்பாடு 
அறையில் டி.சி.பியாக பணியாற்றியவர். சுhதாரணமாக 
கட்டுப்பாடு அறையில் வரும் அவசர போலீஸ் அழைப்புகள் 
அதன் பின்பு கட்டுப்பாடு நிலைய தகவல் பரிமாற்றம் 
அத்தனையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்படும்.
இந்தக் கட்டுப்பாடு அறைக்குத் தான் முன்னாள் எம்.பி ஜாப்ரே
 பல தடவை மரண அபாய தகவல் அனுப்பியதாகவும் அதன்
 பின்பு ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் அது போன்ற 
அழைப்புதல்களை கண்டுகொள்ள வேண்டாம் என்று 
சொன்னதாகவும் ஊடகங்கள் அப்போது சொன்னன. அந்த 
கட்டுப்பாட்டு அறைக்கு தான் முன்னாள் உள்துறை அமைச்சர் 
அமித்ஷா வருகை தந்து வெறியாட்டங்களை 
மேற்பார்வையிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் 
இருந்தன. ஆகவே தற்போது ராகுல் சர்மா டி.ஐ.ஜியாக 
ராஜ்கோட்டிலுள்ள ஆயுதப் படைப்பிரிவில் பணியாற்றுகிறார்.
அவர் அப்போது நடந்த கலவரங்களை விசாரித்த நானாவதி 
கமிஷன்,பானர்ஜி கமிட்டி மற்றும் உச்ச நீதிமன்றம் நியமித்த 
எஸ்.ஐ.டி ஆகியோரிடம் போலீஸ் கன்ட்ரோல் அறையில் 
நடந்த சம்பாசனைகளின்சி.டி தொகுப்பினை அளித்து தனது 
கடமையினைச் செய்துள்ளார்.. அது தான் அவர் செய்த தப்பு 
அதற்காக அவருக்கு விளக்கம் கேட்டு குற்ற நமுனா
 கொடுக்கப்பட்டுள்ளதாக 14.8.2011 ஊடகங்கள் செய்திகள் 
சொல்லி குறையும் கூறியுள்ளன.
2) திரு. சஞ்சய் பட் ஐ.பீ.எஸ்.
இந்த அதிகாரி குஜராத்தில் நடந்த இனப் படுகொலைகளுக்கும்,
 சூறையாடலுக்கும் அரசினை நேரடியாக குறை சொல்லி 
ஐகோர்ட்டிலும், உச்ச நீதி மன்றத்திலும் அபிடவிட் தாக்கல் 
செய்தார். அதன் பயன் அவர் இடைக்கால பணி நீக்கம் 
செய்யப்பட்டார்.
3) திரு. ரஜினீஸ் ராய் ஐ.பீ.எஸ்.
இலர் தற்போது டி.ஐ.ஜியாக பணியாற்றுகிறார். இவர் 
சொகராபுதின் போலி என்கவுண்டர் வழக்கில் கைது 
செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் உள்துறை 
அமைச்சர் மற்றும் குஜராத் அரசின் கைங்காரியம் தான் 
கலவரங்களுக்குக் காரணம் என குற்றச்சாட்டினை சொல்லி 
தனி அபிடவிட் கோர்ட்டில் தாக்கல் செய்திருப்பதால் அவரின்
 ஐ.ஜி புரமோஷன் தடுக்கப்பட்டுள்ளது என ஊடகச் செய்திகள்
 கூறுகின்றன.
நான் மேற்குறிப்பிட்ட 3 ஐ.பீ.எஸ் உயர் அதிகாரிகளின்
 மனுக்களால் குஜராத் கலவரத்தில் காவிச்சட்டையினர்
 அரசு ஆதரவுடன் ஆடிய கோரத் தாண்டவம் வெளி உலகிற்கு 
வந்து விட்டதே என்று ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் 
பல்வேறு தண்டனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் 
என்று ஆணித்தரமானசெய்திகளை ஊடகங்கள் தருகின்றன.
மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் சமீபத்தில் 
பத்திரிக்கை நிருபர்கள் குஜராத்தில் ஐ.பீ.எஸ் அதிகாரிகள் 
பலி வாங்கப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு ‘நடவடிக்கை
 தலைக்கு மீறி போனால் மத்திய அரசு தலையிடும்’ என்று
 சொன்னதாக செய்திகள் வந்துள்ளன.
இலங்கையில் போராளிகளை ஒடுக்க ராணுவம் பயன் 
படுத்தப்பட்டது. அதன் அத்து மீறல்களை ஐ.நா. சபை விசாரிக்க 
ஆணையிட வேண்டும்,இலங்கை அரசிற்கு பொருளாதார
 தடை வேண்டும் என்ற தமிழ் நாட்டிலுள்ள சில அரசியல் 
கட்சிகள் சொல்கின்றன. அத்துடன் சமுதாய இயக்களில்
 சிலவும் இணைந்து குரல் எழுப்பியுள்ளன. அதனை யாரும் 
மறுக்க முடியாது, தடுக்க முடியாது.
ஆனால் இந்தியாவிலேயே, உள்ள குஜராத் மாநிலத்தில் 
போலியான காரணங்கள் சொல்லி மனித வேட்டைகள்
 மூலம் அப்பாவி 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 
இன்னமும் பல இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் 
சொத்துக்களை இழந்து அகதிகளாக இருக்கின்றனர். அந்த 
வெறியாட்டத்திற்கு இங்கே உள்ள எந்த அரசியல் கட்சியாவது
 கண்டனம் தெரிவித்தது உண்டா? அல்லது பகிரங்க
 விசாரணை இலங்கையில் கேட்பது போல கேட்டதுண்டா?
அல்லது தனது கண்டனக்கனைகளாவது வீசியது உண்டா?
முன்னாள் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் 
இறப்பதிற்கு முன்பு குஜராத் கலவரத்தினை அறிந்து 
கண்ணீர் விட்டதாகசொல்லிய பிறகாவது பாராளுமன்றத்தில் 
குஜராத் அரசினை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது
 உண்டா? அல்லது பதவியிலுள்ள உச்ச நீதி மன்ற
 நீதிபதியினை மூலம் விசாரணை செய்யதுண்டா?
இங்கிலாந்து நாட்டில் தோட்டன்ஹாம் நகரில்29வயதான 
கறுப்பின இளைஞர், மார்க் டுகா,சந்தேகப்பட்டு 
போலீஸாரால் 4.8.2011 அன்று கொல்லப்பட்டார். அதன் 
விளைவாக 6.8.2011லிருந்து8.8.2011 வரை லண்டன், 
பிர்மிங்காம், தோட்டன்ஹாம் போன்ற நகர்களில் 
பயங்கரக் கலகம் ஏற்பட்டு 100கோடிக்கு மேல் பொதுச்
 சொத்து நாசமானது.
அது போன்ற சம்பவம் குஜராத் கலவரத்திற்கு பின்பு இந்திய
 நாட்டு முஸ்லிம்கள் கொதித்தெழுந்து கலவரத்தில் 
ஈடுபட்டார்களா? இல்லையே? ஏனென்றால் இஸ்லாமியர் 
தங்கள் மார்க்கம் சொல்லித் தந்த சாந்தி, சமாதானம் போன்ற 
கொள்கைகளை பின்பற்றுபவர்கள். நாட்டின் சட்டத்தினை 
மதிப்பவர்கள். இது போன்ற கலவரங்களை அடக்கத்தான் 
மத்திய அரசு மதவாத கலவர தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறது.
ஐ.பீ.எஸ் அதிகாரிகளான ராகுல் சர்மா, சஜ்சய் பட்,ரஜினீஸ் 
ராய் பேன்றவர்கள் குஜராத்தின் இனக் கலவரத்திற்கு 
காரணமானவர்களின் முகத்திரையினை கிழிக்க 
கிளம்பியிருக்கிறார்கள். அவர்களின் வாயிலாக 
ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் எந்த வகையில் குஜராத் 
மனித கொலைக்கு உறு துணையாகி இருக்கிறார்கள் 
என்ற வண்வாலம் தண்டவாலத்தில் ஒரு நாள் 
ஏறப்போவது தின்னமே!
அவர்கள் ஒளித்து வைத்திருந்த காவி பூனைக் குட்டியும் 
மெல்ல மெல்ல விச் கண்டிங் என்ற அரசு அதிகாரிகள் 
பலிவாங்கும் நடவடிக்கை மூலம் வெளிறேப் பார்க்கிறது.! 
அவர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர்
 குரல் கொடுத்தால் குஜராத் அரசு மாநில அரசின்
 உரிமையில் தலையிடுகிறது என்று கதறுகிறது. அதற்காக
 மக்களும், மத்திய அரசும் மனித படுகொலைகளை
 வேடிக்கை பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்? 
சட்டம் முன் அனைவரும் சமம் அது தன் கடமையினைத் 
தானே செய்யுமல்லவா?
AP,Mohamed Ali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக