“ஆப்கானிஸ்தானில் முன்னேயுள்ள பாதை"
“ஆப்கானிஸ்தானில் முன்னேயுள்ள பாதை" என்ற வியாழனன்று
வழங்கப்பட்ட ஒபாமாவின் உரை, அமெரிக்க மற்றும் ஆப்கான்
மக்கள் இருவருமே அதிகபட்சமாக எதிர்க்கும் ஓர் அழுக்குமிக்க
காலனித்துவ யுத்தம் இன்னும் ஒருசில ஆண்டுகள் நீடிக்கும்
“யுத்த காலம் முடிந்து வருகிறது", “ஒரு பாதுகாப்பான
அமைதியின்வெளிச்சத்தைத் தூரத்தில் காண முடிகிறது"
ஒபாமாவின் திரும்பப்பெறும் திட்டம் என்றழைக்கப்படுவதன்
மறுக்கமுடியாத உண்மைகளால் பொய்யாகி போயுள்ளது.
டிசம்பர் 2009இல், ஆப்கானிஸ்தானில் 33,000 கூடுதல்
துருப்புகளை அனுப்பிய போது, அது 18 மாதங்களுக்குள்,
அதாவது இவ்வாண்டின் ஜூலைக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து
துருப்புகளைத் திரும்ப பெற வாஷிங்டனுக்கு ஒத்துழைக்கும்
ஒரு தற்காலிக நடவடிக்கையாக அதனை அமெரிக்கமக்களிடம்
ஒபாமா அறிவித்தார்.
ஆனால் 'இவ்வாண்டின் இறுதிவாக்கில்' என்று வெள்ளை மாளிகையால்அறிவிக்கப்பட்டிருக்கும் இப்போதைய திட்டம்,
தற்போது ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க
துருப்புகளில் பத்தில் ஒன்பதை அங்கேயேவைத்திருக்கும்.
தங்களின் முயற்சிகள் மீதமிருக்கும் அமெரிக்க படைகளையும்
நாட்டிற்கு திரும்ப அழைக்க உதவும் என்றபோலிக்காரண
ங்களோடு டிசம்பர் 2009இல் அனுப்பப்பட்ட 33,000
துருப்புகள்மட்டும், அடுத்த ஆண்டு செப்டம்பர் அளவில்
திரும்பப் பெறப்படலாம்.
ஒபாமாவால் இப்போது முன்வைக்கப்பட்ட இந்த
ஒட்டுமொத்தமாக திரும்பப்பெறும் திட்டம், ஏழ்மை நிறைந்த, யுத்தத்தால்சின்னாபின்னமாகியுள்ள அந்த நாட்டினுள்
2013இலும் 68,000 அமெரிக்கதுருப்புகளை வைத்திருக்கும்.
இது 2009இல் ஜனநாயக கட்சி ஜனாதிபதி பதவிஏற்றபோது
நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க சிப்பாய்கள் மற்றும்கடற்
படைகளையும் விட அண்ணளவாக இரண்டு மடங்கு
அதிகமாகும்.
"மாற்றத்திற்கான செயல்முறை
" நடந்துவருகிறது என்ற வெற்று
அறிவிப்போடு, அமெரிக்க தலைமையிலானஆக்கிரமிப்பி
ற்கான மக்களின் எதிர்ப்பை
ஒடுக்க பொறுப்பேற்கும் ஒரு
கைப்பாவை ஆப்கான்
படைகளை அவ்விடத்தில்
நிறுவும்.
எதார்த்தத்தில், ஆப்கானிஸ்தானின் இராணுவ
தளங்களை
நிரந்தரமாக அமெரிக்கா அணுகுவதற்கு அனுமதிக்கும்
வகையில், பத்து ஆயிரக்கணக்கானஅமெரிக்க இராணுவ
சிப்பந்திகளைக் காலவரம்பின்றி அங்கே நிறுத்த ஒரு
மூலோபாய கூட்டு உடன்படிக்கையைச்
செய்துகொள்ளும் நோக்கில்,ஜனாதிபதி ஹமீத் கர்ஜாய்
ஆட்சியோடு வாஷிங்டன் தீவிரமான பேச்சுவார்த்தையில்
ஈடுபட்டுள்ளது.
ஒபாமாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டம் ஆப்கானி
ஸ்தானில் இரத்தம் சிந்தலை குறைப்பதற்கு மாறாக
அதை இன்னும் தீவிரமாக்கும். இந்த கோடைக்குள் ஓர்
இராணுவ தாக்குதலை
நடத்துவதும், அதைத் தொடர்ந்துஅமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு
எதிராக எழும் மக்கள் எதிர்ப்பை, இராணுவத்தைக் கொண்டு
நசுக்கும் ஒரு முயற்சியை நடாத்துவதுமே நோக்கமாகும்.
திரும்பப்பெறும் நடவடிக்கையானது எந்தளவிற்கு அமெரிக்க
தளபதிகளின் தாக்குதல் நடத்துவதற்கான பலத்தை
பாதிக்கிறதோ, அந்தளவிற்கு அதுதவிர்க்கவியலாமல் இன்னும்
அதிகமான வான்வழி தாக்குதல்கள் மற்றும் ஆளில்லா
ஏவுகணை தாக்குதல்களுக்கு இட்டுச்செல்லும்; இதன்
விளைவு,இன்னும் பெரும் எண்ணிக்கையிலான வெகுஜன
மக்களின் உயிரிழப்பாகஇருக்கும்.
ஆப்கானிஸ்தானிலிருந்து துருப்புகளைப் மட்டுப்படுத்தப்
பட்டளவில்திரும்பப்பெறுவது வேலைவாய்ப்புகளில் இன்னும்
அதிகமான முதலீட்டை கோரும் என்பதோடு "உள்நாட்டில்
நாட்டைக் கட்டியமைப்பதிலும் கவனம் செலுத்த
வேண்டியதிருக்கும்" என்பது மிகவும் எரிச்சலூட்டும்
ஒபாமாவின்வாதங்களில் ஒன்றாக உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள இராணுவ
முடிவுகள் அமெரிக்க முதலாளித்துவத்தின் பெரும் மோசமான
நெருக்கடியால் பெரிதும்உந்தப்பட்டுள்ளது என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் என
இரண்டு யுத்தங்களில் 1.3 ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமான
செலவுகளும், அத்தோடு சேர்ந்து அமெரிக்க இராணுவம்
மற்றும்உளவுத்துறைக்கும் அதிகளவில் வாரியிறைக்கப்பட்ட
ட்ரில்லியன் கணக்கான தொகையும், அமெரிக்காவை ஒரு
பொருளாதார சிதைவிற்குஇட்டுச்சென்றதில் எவ்வித சிறிய
பாத்திரத்தை வகிக்கவில்லை.
ஆனால் யாருக்காக ஒபாமா பேசுகிறாரோ, அந்த அமெரிக்க
ஆளும் மேற்தட்டின் மூலோபாயமானது, அன்னியநாட்டில்
அமைதி, உள்நாட்டில்சமூக சீர்திருத்தம் என இவற்றிற்கு
திடீரென்று மாறிவந்துவிடவில்லை.அதற்கு வேறுபட்ட
விதத்தில், வாஷிங்டன் இப்போது லிபியா மற்றும் யேமனில்
புதிய யுத்தங்களையும், இராணுவ தலையீடுகளையும்
தொடங்கியுள்ளது என்பதோடு, வேறிடங்களிலும்
துருப்புகளை நிலைநிறுத்தும்திட்டங்களைக் கொண்டுள்ளது
என்பதில் ஏதும் சந்தேகமில்லை.
வெளிநாடுகளில் இராணுவவாதத்தை கட்டுக்கடங்காமல் பரப்புவதென்பது,பொருளாதார நெருக்கடியால் உந்தப்பட்டுள்ளது.
உலக முதலாளித்துவவிவகாரங்களில் போட்டியின்றி இருந்த
ஒப்புயர்வற்ற இடத்தைஇழந்திருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்,
அதன் உலகளாவிய நலன்களைப் தொடரவும், அதன்
முதலாளித்துவ போட்டியாளர்களை எதிர்கொள்ளவும்அதன்
மிஞ்சியிருக்கும் இராணுவ பலத்தின் பக்கம் இன்னும்
அதிகமாக சாய்கிறது.
ஆளும் நிதியியல் செல்வந்த தட்டு,
வேலைகள்,வாழ்க்கை தரங்கள், சமூக
நலன்கள் மற்றும் அடிப்படை
ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக
ஓர் இரக்கமற்ற தாக்குதல்களைப்
பின்தொடர்ந்து, இலாபகர அமைப்பு
முறையின் நெருக்கடியை
தொழிலாளர் வர்க்கத்தின்முதுகில் சுமத்த விரும்புகிறது.
வெளிநாட்டு யுத்தம் மற்றும் அமெரிக்காவிற்கு உள்ளேயே
தொழிலாளர் வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என
ஒரே வர்க்க கொள்கையின்இரண்டு பக்கங்களும் ஒபாமாவின்
உரையில் அதன் வெளிப்பாட்டைக்காண்கின்றன. அது
அமைதிக்கோ அல்லது அமைதிக்கான எவ்வித முன்னெடு
ப்புகளுக்கோ கூட உறுதியளிக்கவில்லை.
தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறை மற்றும் இருகட்சி
ஆட்சிமுறைக்குள் இருந்துகொண்டு பெரும்பான்மை உழைக்கும்
மக்களால் காட்டப்படும் கடும் யுத்த விரோதம் எவ்வித
நேர்மையான வெளிப்பாட்டையும் காணாது.
அமெரிக்க இராணுவவாத விரிவாக்கத்திற்கு உதவுவதில்,
ஜனநாயக கட்சியை ஆதரிக்கும் மற்றும் நீண்டகாலத்திற்கு
முன்னரே வலதிற்கு மாறிவிட்ட ஒருவசதிபடைத்த மத்தியதர
வர்க்க அடுக்கின் உத்தியோகப்பூர்வ "யுத்த எதிர்ப்பு
"போராட்டம் ஒரு மைய பாத்திரம் வகிக்கிறது. ஜனநாயக
கட்சியினரின்தேர்தல் நலன்களுக்கு ஏற்ப தங்களின் நடவடிக்கைகளைவடிவமைத்துக்கொள்ளும் அது, 2003 ஈராக்
ஆக்கிரமிப்பு சமயத்தில்,அமெரிக்காவிலும் உலகம்
முழுவதிலும் மில்லியன் கணக்கானவர்கள் வீதிகளில்
இறங்கிய போது, பொங்கியெழுந்த அந்த மக்களின்
யுத்த-எதிர்ப்பைஅமைதிப்படுத்த வேலை செய்தது.
2008இல் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இந்த
அடுக்கு ஜனநாயக கட்சியின் சுற்றுவட்டத்தில் இன்னும்
அதிகமாக தன்னைத்தானேநெருக்கமாக்கி கொண்டது.
ஒபாமா உரைக்கு விடையிறுப்பாக அவர்களின் கண்ணோட்டம்,
வியட்நாம்யுத்த முன்னாள் எதிர்ப்பாளரும், கலிபோர்னியாவில்
நீண்டகாலம் இருந்த ஜனநாயக கட்சி செனட் உறுப்பினரான
டோம் ஹேய்டெனால் Nation இதழுக்காக எழுதப்பட்ட
கட்டுரையில் வெளிப்பாட்டைக் காண்கிறது.
“அமைதிக்கான அழுத்தத்தால் ஆப்கானிலிருந்து துருப்புகளைத்
திரும்பப்பெறுவதை ஒபாமா துரிதப்படுத்துகிறார்" என்று தலைப்பிடப்பட்டஹேய்டெனின் கட்டுரை, “மக்கள் கொடுத்த
பெரும் அழுத்தத்தின் பிரதிபலிப்பால் ஒபாமா துருப்புகளைத்
துரிதமாக திரும்பப்பெறுகிறார்,” என்று குறிப்பிட்டதோடு,
“அமைதிக்கான ஆர்வலர்கள் செய்நன்றியுணர்வை
உணரவேண்டும்,” என்றும் குறிப்பிடுகிறது.
அவர் மேலும் வலியுறுத்துகையில், "வழக்கம் போல
ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை
தெரிவு செய்யும் அடுத்த முக்கியகாலகட்டத்தின் போதும்,
ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சாரத்தின் போதே கூட
துருப்புக்களைத் திரும்ப கோர … மூலோபாய சந்தர்ப்பம்
உள்ளது,” என்றவர்குறிப்பிட்டார்.
யுத்த எதிர்ப்பை மீண்டுமொருமுறை ஜனநாயகக் கட்சிக்கு
அடிபணிய வைப்பதே இந்த அடுக்கின் நோக்கமாகும்.
அதேநேரத்தில், “உங்களால்உருவாக்கப்பட்ட ஓர் இராணுவ
குழப்பத்திலிருந்து வெளியேறுவதென்பது மிகவும் சிக்கலான
சவால்களில் ஒன்றாகும் என்பதால், அதில் பல்வேறு
படிநிலைகள் சம்பந்தப்பட்டிருக்கும்,” என்று எழுதி, நீண்டகால
யுத்தத்திற்கு ஹேடென் வெளிநாட்டில் இருப்பதற்கான
ஓர் ஒப்புதலையும் ஒபாமாவிற்குவழங்குகிறார்.
அதற்கும் கூடுதலாக, “அமைதி இயக்கமானது" லிபியாவை
நோக்கிஒபாமாவின் செயல் விருப்பங்களை ஆராய போராட
வேண்டுமென்று அவர் எழுதுகிறார். லிபிய யுத்த எதிர்ப்பையே
நிராகரிக்கும் ஒரு திரித்த சூத்திரமாகஉள்ள இது, ஆனால்
காங்கிரஸின் ஒப்புதலைக் கோருவதில் வெள்ளைமாளிகை
காட்டும் மறுப்பை மட்டும் நிராகரிக்கிறது. அமெரிக்க-
நேட்டோவின்லிபிய யுத்தத்தில், இத்தகைய முன்னாள்-
இடதுகளின் ஒட்டுமொத்த அடுக்கும், “மனித உரிமைகள்"
என்ற எரிச்சலூட்டும் முழக்கத்தின் அடிப்படையில்
ஏகாதிபத்தியத்தை வெளிப்படையாக அணைத்துக்கொள்ள
அவற்றின் வழியைக் கண்டுள்ளன.
அவர்களின் முன்னாள்-இடது
ஆதரவாளர்களால் அரசியல்ரீதியாக
திணறடிக்கப்பட்டுள்ள யுத்தத்திற்கு
எதிரான மக்கள் விரோதமானது,
ஒபாமா நிர்வாகத்திற்கு எதிராகவும்,
இருகட்சி ஆட்சிமுறைக்கும்,
இராணுவவாதத்தின் மூலக்காரணமாக
விளங்கும் முதலாளித்துவத்திற்கு
எதிராகவும் தொழிலாள வர்க்கத்தின்
ஒரு சுயாதீனமான பரந்த அரசியல்
இயக்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாகமட்டுமே
உண்மையான வெளிப்பாட்டைக் காண முடியும்.
யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, இலாபகர அமைப்புமுறையால்கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள சீரழிவுகளுக்கு
எதிராக வேலைகளுக்கான,வாழ்க்கை தரங்களைப்
பாதுகாப்பதற்கான, அத்தியாவசிய சமூகசேவைகளுக்கான
போராட்டத்தோடு இணைக்கப்பட வேண்டும். இது சோசலிச
சமத்துவ கட்சி போராடி வரும் சோசலிச மற்றும் சர்வதேச
வேலைதிட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எட்டப்பட முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக