ஆகஸ்ட் 02, 2011


அரேபிய புரட்சியில் இஸ்ரேலிய இரசாயன ஆயுதங்கள். 




லவரங்கள் கிளற்ச்சிகள் புரட்சிகள் போராட்டங்கள்.
 இந்த சொற்களனைத்தும் பாலைவன தேசங்களின்
 இன்றைய பாங்கொலிகள். முஸ்லிமிற்கு எதிராக
 முஸ்லிம் செய்யும் போராட்டம் இது. கொல்வதும்
 முஸ்லிம் கொல்லப்படுவதும்
இது தான் இன்றைய இஸ்லாமிய நாகரீகம்.


ஒரு முஸ்லிமின் இரத்தம் இந்த கஃபாவைவிடவும் புனிதமானது என்று
 சொன்ன எங்கள் தலைவர் தூதர் முஹம்மத் நபியவர்களின் உம்மத்தாகிய 
இவர்கள் தான் இதையும் செய்தார்கள் செய்கிறார்கள். (முஸ்லிமின் மானம்
 இந்த கஃபாவைவிட புனிதமானது என்பது பிறிதொரு ஹதீஸ்)

இங்கே முஸ்லிமை கொல்ல முஸ்லிமிற்கு ஆயுத உதவி செய்வது யஹீதியும்
 நஸாராவும் தான். இந்த அரபு நாடுகளிற்கெல்லாம் பொது எதிரி இஸ்ரேல். ஆனால்
 இவர்கள் இஸ்ரேலிடமிருந்தே பல ஆயுதங்களை கொள்வனவு செய்கிறார்கள் என்பது 
அதிர்ச்சி தரும் உண்மை.

இஸ்ரேலிடமிருந்தே ரப்பர் குண்டுகள் கண்ணீர் புகை குண்டுகள் சினைப்பர்
 துப்பாகிகள் போன்றவற்றை இந்த முஸ்லிம்(?) நாடுகள் இறக்குமதி செய்து 
தாராளமாக தனது சொந்த நாட்டு மக்களிற்கு எதிராக பயன் படுத்துவதென்ப
து மிக கவலை தரும் விடயமாகும்.

அண்மையில் பஹ்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இஸ்ரேலிய ஆயுத
 உற்பத்திக் கம்பனியான ரபெலிற்கு( Rafael Advanced Defense Systems,
 Israel's armament development authority) கொள்வனவிற்கான ஒரு
 ஆயுத பட்டியலிற் அனுப்பப்பட்டது. அதில் ஒரு குறிப்பு காணப்பட்டது. அது என்ன
 தெரியுமா?. பாலஸ்தீன இன்திபாதாவில் நீங்கள் பயன்படுத்திய சிறந்து கண்ணீ
ர் புகை குண்டுகள் எமக்கு தேவை என்பதே அது. எப்படி இருக்கிறது நிலைமை. 
இவர்களை என்ன செய்வது?.

இஸ்ரேலில் இருந்து பலவகை ஆயுதங்களும் டுனீஸயா, அல்ஜீரியா, லிபியா,
 பஹ்ரைன், யெமன் போன்ற நாடுகளிற்கு கடந்த 3 மாதகாலமாக இடைவிடாமல் அனுப்பப்படுகிறது. ஆக எகிப்தும், சிரியாவுமே இஸ்ரேலிடம் கையேந்தவில்லை.

இரு நாடுகளிற்கிடையிலான ஐ.நா. சாஸனம் அனுமதித்த ஆயுதங்கள ஒப்பந்த
 அடிப்படையில் கொள்வனவு செய்யும் விதிகளிற்கு மாறாக இஸ்ரேலிய ஆயுத
 நிறுவனமான ரபெல் மூன்றாம் தரப்பு ஆயுத முகவர் ஊடாக இஸ்ரேலிய தயாரிப்பான
 தடை செய்யப்பட்ட ஆயுதங்ளை இந்த அரபு நாடுகளிற்கு விநியோகித்துள்ளது.

மனித இனத்திற்கு பாரிய நாசத்தை ஏற்படுத்தவல்ல இரசாயன ஆயுத கலவைகளை
 கொண்ட கிரனைட்டுகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் திட்டமிட்டு இஸ்ரே
ல் இந்த அரபு நாடுகளிற்கு வழங்கியுள்ளது. வழங்கிய இஸ்ரேலும் போர்குற்றவாளி. 
வாங்கிய அரபு நாடுகளும் போர் குற்றவாளிகள்.

Chlorine and Phosgene, Gas Mustard Gas, Lethal Tear Gas, 
White Posparas Dusted Hand Bombs and Tear Gas, Clorosulphite 
Tear Gas (synthetic type), Synide Coaded Sniper Bullets, 
Synide Coaded J.R. Metal Dust Hand Granede, Nitro Sulpar Side 
Chargers 


இவை இஸ்ரேல் கள்ளத்தனமாக அரபு நாடுகளிற்கு விற்ற தடை
 செய்யப்பட்ட ஆயுதங்கள். தெரிந்து கொண்டே தான் இதை அரபு நாடுகளின் 
தலைவர்களும் வாங்கியுள்ளனர்.


கண் பார்வை புலத்தை அற்றுப் போகச் செய்தல், நுரையீரலை சிதைவடைய
ச் செய்தல், நரம்பு மண்டலத்தை செயளிலக்கச் செய்தல், சடுதியான
 மூச்சுத்திணரலை உருவாக்கி மயங்கச் செய்தல், தோலில் ஆழமான 
எரிகாயங்களை உருவாக்கள், மூளையின் செயற்பாட்டை செயழிலக்க 
வைத்தல், கணையங்களை வீக்கமுறச் செய்து அழற்ச்சி்க்கு உட்படுத்தல்
 போன்றன இவற்றின் சில சிறப்பியல்புகள். நாஸி ஜேர்மனிய காலத்திலும்
 இவை பாவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதாரங்கள் உண்டு. விச வாயுக்கலவை
 கொண்டவை இவை.


இது மட்டுமா?. பிரான்ஸ் லிபிய ரத்தக் காட்டேரி கடாபிக்கு மிராஜ் ரக தாக்குதல் விமானங்கள ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கியுள்ளதுடன் அதன் விமானிகளையும் தாக்குதல் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதே நேரம் நேட்டோ லிபியாவில் மனித அவலத்தை தடுப்போம் எனக் கூறிக் கொண்டு மனிதாபிமான
 தாக்குதல் நடாத்துகிறது. எப்படி இருக்கிறது இவர்களது நாடகம்.

நாம் சற்று சிந்திக்க வேண்டும். இவ்வாறான அரபு நாடுகளை அல்லது முஸ்லிம்
 நாடுகளை இதயத்தில் வைக்காதீர்கள். மூளையில் வைத்து சிந்தியுங்கள்
 விடை கிடைக்கும்.
அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக