ஆகஸ்ட் 22, 2011

சிங்கள கமிஷன் - மறந்து போன உண்மைகளின் இன்றைய விஸ்வரூபம்

சோனவன்ருசியாக சாப்பிடுவான். தகுதிக்கு மீறிய
 ஆடைகளை உடுத்துவான். கணக்கு பார்க்காமல்
 செலவழிப்பான். கொலஸ்ட்ரோல், டயபிடிக் வந்து அவஸ்தை 
படுவான். ஹார்ட் அட்டாக் வந்தால் அப்பலோவில் பைபாஸ்
 செய்வான். மய்யத்து வீட்டு 3ம் கத்தத்திற்கும் சிறப்பாக
 சஹனில் புரியாணி ஓடர் பண்ணி விருந்து வைப்பான். 
அவ்வளவு தான். இது தான் இலங்கை சோனவனின் வாழ்க்கை. 
ஆனால் இந்த சோனவனை பற்றி சிங்கள இனவாத 
சக்திகளும், பொளத்த மதவாத சக்திகளும் புரிந்து 
வைத்திருப்தோ வேறு விதமாக. அவர்கள் புரிதல் எப்படி 
என்று சற்று பார்ப்போம்.
  • சோனவன் (தம்பிலா) இந்த நாட்டிற்கு விசுவாசமில்லாதவன்.
  • பாகிஸ்தானையும், சவுதி அரேபியாவையும் நேசிக்கும் துரோகி.
  • வியாபாரத்தில் மோசடி, கலப்படம் செய்பவன்.
  • தாடி வைத்துக்கொண்டு பொய் சொல்பவன், வாக்கு
          மாறுபவன்.
  • இலங்கையின் நகரங்களில் வாழ்ந்து கொண்டு மண்ணின்
           மைந்தர்கள் சிங்களவர்களை கிராமப்புரங்களில் முடக்கியவன்.
  • பொளத்த சிங்கள நாட்டில் அராபிய கலாச்சாரங்களை 
           திணிப்பவன்.
  • புலி பயங்கரவாதிகளுடனான யுத்தத்தில் ஒதுங்கியிருந்தவன்.
          தனது சமூகத்திற்கு சேதமில்லாமல் தப்பிக்கொண்டவன்.
  • சிங்கள சமூகம் செய்ய வேண்டிய வர்த்தகத்தை தன்வசம்
            வைத்துக்கொண்டு தனியாதிக்கம் செய்பவன்.
  • இவனின் முன்னோர்களான அராபியர்கள் அப்பாவி சிங்கள
          பெண்களை பலவந்தமாகவும், பணத்தாசை காட்டியும் 
           கற்பை சூறையாடியவர்கள்.
  • சிங்கள ரத்தத்தில் வந்து இஸ்லாமிய தனித்துவம் பேசும் 
           துரோகிகள்
  • இப்போது கல்வியிலும் சிங்கள சமூகத்தின் உரிமைகளை
            தட்டிப் பறிப்பவர்கள்.
  • சோனவனின் மதத்தை சேர்ந்த இஸ்லாமியர்களான 
          அரேபியர்களே அப்பாவி சிங்கள யுவதிகளை வீட்டு 
          பணிப்பெண்களாக வாடகைக்கு அமர்த்தி அவர்களின் 
         கற்பை தினமும் ருசிப்பவர்கள், கொடிய அநியாயங்களை
         செய்பவர்கள்.
  • இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய 
           சாம்ராஜ்யம் அமைக்க திட்டமிடுபவர்கள்.
  • புத்தளம் போன்ற பிரதேசங்களில் இஸ்லாமிய சட்டங்களை
           திணிப்வர்கள்
  • குருநாகல் மாவட்டத்தினதும், கொழும்பு மாவட்டத்தினதும்
          சிங்கள மக்களின் நிலங்களை ஏமாற்றி விலைக்கு 
          வாங்குபவர்கள். இது பிரபாகரனின் பிரிவிணையை விட 
          மிகப் பயங்கரமானது
  • பொளத்த சாத்வீக கொள்கைக்கு முரணாக மாடுகளை 
          வதை செய்பவர்கள் மற்றும் அவற்றை தினமும் 
          விழுங்குபவர்கள்
  • சிங்கள பிரதேசங்களில் பள்ளிவாயல்களை அமைத்து,
           பிரதேசங்களை இஸ்லாமிய மயப்படுத்துபவர்கள்.
  • அல்கைதா, ஹமாஸ் போன்றவற்றில் பயிற்சி எடுத்து 
          சிங்களவர்களை அழிக்க முயல்பவர்கள்.

மேலே சொன்னவைகள் அனைத்தும் வெறுமனே
 பேரினவாதத்தின் புரிதல்கள் மட்டுமல்ல. 1997 செப்டம்பர்
 மாதம் தொடராக நிகழ்ந்த விசாரணைகளின் பின் சிங்கள 
பொளத்த மக்களிற்கு இந்த நாட்டில் இழைக்கப்பட்ட 
அநீதிகள் பற்றி சிங்கள கமிஷனில் முஸ்லிம்கள்
 தொடர்பாக முழங்கப்பட்ட வார்த்தைகள். இவற்றை 
சொன்னவர்கள் சாதாரண சிங்களவர்கள் அல்ல. மாறாக
 படித்த உயர் நிலை சிங்களவர்கள். புத்திஜீவிகள் வட்டத்திலும்,
 தொழில்சார் வல்லுனர்கள் மட்டத்திலும் உள்ள சிங்களவர்கள்.
 பொளத்த மத உயர் நிலை பீடாதிபதிகள். பல்கலைகழக
 பேராசியர்கள். மருத்துவதுறை நிபுணர்கள், சட்ட 
வல்லுனர்கள். புரிகிறதா இப்போது. இந்த பிரச்சனைகளிற்கு 
சிங்கள கமிஷன் உத்தேச தீர்வுகளை முன்மொழியுமாறு,
  இலங்கை கொழும்பு பல்கலை கழக பொளதீக, கணிதவியல் 
பேராசிரியர் நளின் டீ சில்வாவிடம் கூறியது. அதற்கான
 தீர்வுகளாக அவர் சில பிரேரனைகளை சமர்ப்பித்தார். 
அவை வருமாறு..

  • முஸ்லிம்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள். ஆகவே 
          இவர்களிற்கு இந்த நாட்டில் வாழ மட்டுமே உரிமை உண்டு.
         ஆட்சியிலோ அல்லது நிர்வாக விடயங்களிலோ 
         பங்கெடுக்க எந்த ஒரு உரிமையையும் வழங்க கூடாது.
  • வர்த்தகம் முழுமையாக பொளத்த சிங்களவர்களால் 
         ஆதிக்கம் செலுத்தப்படல் வேண்டும். முஸ்லிம்கள்
         வியாபாரம் செய்யலாம். ஆனால் ஏற்றுமதி, இறக்குமதி
          வர்த்தக உரிமை கி்டயாது.
  • நிலங்களை முஸ்லிம்கள் விட்டேத்தியாக வாங்க முடியாது.
         முஸ்லிம் முஸ்லிமின் நிலத்தையே வாங்கலாம். ஆனால்
         அவர்கள் நிலங்களை சிங்களவர்களிற்கு விற்க முடியும்.
  • பள்ளிவாயல்கள் (மஸ்ஜித்க்ள்) கட்டலாம் தடையில்லை. 
        ஆனால் அவற்றின் கட்டடக்கலை அமைப்பு “டகோபா” 
        வடிவிலேயே இருத்தல் வேண்டும். அராபிய கட்டடக்கலை
         (மினாரா - குதுப்) வடிவில் அல்ல.
  • முஸ்லிம்களின் பிற்பத்தாட்சி பத்திரங்களில் அவர்கள்
          பெயர் பதியப்படும் போது இறுதியில் சிங்கள பரம்பரை
         பெயர் காணப்படல் வேண்டும். (உதாரணமாக - சுல்தான் 
        அப்துல் காதர் முஹம்மத் நியாஸ் முதியன்சலாகே 
        ஹீண் பண்டா)
  • இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவம் போன்றவை 
          இரண்டு குழந்தைகளை பெறும் முஸ்லிம் குடும்பங்க
           ளிற்கு மட்டுமே உரித்தாகும்.
  • முஸ்லிம்களின் நிலப் பரம்பல் மாற்றியமைக்கப்படல்
          வேண்டும்
  • கிழக்கு மாகாண முஸ்லிம்களின் காணி மற்றும் 
           நிர்வாக கட்டமைப்பு மாற்றப்படல் வேண்டும்.
  • ஹஜ் செய்வதற்கு பொலிஸ் நற்சாட்சி பத்திரம் 
          பெறல் அவசியம்.
  • மாடுகள் மற்றும் ஆடுகள் அறுப்பதை முற்றாக தடை
          செய்தல் வேண்டும்.
  • மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியின் இறக்குமதியும் 
           தடை செய்யப்படல் வேண்டும்
  • இஸ்லாமிய மதரஸாக்கள் அரசின் அனுமதியுடன் 
           மட்டுமே ஆரம்பிக்கப்படல் வேண்டும்.
  • சிங்கள பிரதேசங்களில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் 
           தடை செய்யப்படல் வேண்டும்.
  • கட்டாய மதமாற்றம் செய்யும் இஸ்லாமிய நிறுவனங்கள்
          சீல் வைக்கப்படல் வேண்டும். போதகர்கள் சட்டத்தின் 
          முன் நிறுத்தப்படல் வேண்டும்.
  • முஸ்லிம் பெண்கள் முகம் மூடி வீதியிலோ அல்லது
            பொது இடங்களிலோ நடமாட முடியாது.
  • முக்கிய நகரங்களில் இருந்து முஸ்லிம்கள் 
           வெளியேற்றப்படல் வேண்டும். அவர்கள் பரவலாக 
          கிராமப்பகுதிகளிற்கு பின்தள்ளப்படல் வேண்டும். இதன்
          மூலம் அரச வைத்திய மற்றும் இன்னோரன்ன 
          சேவைகள் சிங்கள சமூகத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு
          உருவாதல் வேண்டும்.
  • ஆங்கிலேயர்களால் முஸ்லிம்களிற்கு வழங்கப்பட்ட 
          பலதார மணம் தொடர்பான உரிமை, மண விலக்கு 
         சம்மந்தமான உரிமை மற்றும் சொத்துரிமை போன்றன
         தடை செய்ய்ப்படல் வேண்டும். 
  • இலங்கை முஸ்லிம்கள் ஸ்ரீ லங்கா ஜனநாயக சோஷலிச
          குடியரசின் சிவில் சட்டங்களிற்கு முற்றாக கட்டுப்படல் 
          வேண்டும்.

இவையே அவரது ஆலோசணைகள். இவை அனைத்தையும் 
சிங்கள கமிஷனும் அதன் நிர்வாக குழுவும் விசாரணை செய்த
 நீதிபதிகளும் ஏகமனதாக அங்கீகரித்தனர். (தமிழர்கள் 
சம்மந்தமாகவும், நாட்டின் பிரிவினை சம்மந்தமாகவும் கூட 
பல பிரேரணைகள் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன
. “இவை அனைத்தும் அவர்களது “கனவு பொளத்த 
தேசத்தில்” (Dream Buddhist Nation) சட்டமாக நடை
முறைப்படுத்தப்படும் என ஏகோபித்து முடிவானது.

இதன் பின்னரான கமிஷனின் இறுதி தீர்ப்பில் நாளைய சிங்கள 
பொளத்த அரசில் சிறுபான்மையினர் தொடர்பாக கடைபிடிக்க 
வேண்டிய கொள்கைகள் தொடர்பாக ஒரு நீண்ட தீர்மானங்கள்
 எடுக்கப்பட்டன. அவை ஜனாதிபதியிடமும் கையளிக்கப்பட்டது. 
ஆனால் அவற்றை அன்று ஜனாதிபதியாக இருந்தசந்திரிகா 
பண்டாரநாயக்க குமாரரணதுங்க பெரிதாக எடுத்துக் 
கொள்ளவில்லை. ஜீ.எல்.பீரிஸ், லக்ஷ்மன் கதிர்காமர், 
ஜெயதேவ உயன்கொட போன்ற கல்விமான்கள் இவற்றின் 
விபரீதங்கள் பற்றி தக்கவாறு எடுத்துரைத்தனர். 

ஆனால் இன்றைய நிலைமைகள் வேறு. பொளத்த இனவாத 
சக்திகள் ஆட்சியில் பங்காளியாக இருக்கின்றன. இராணுவ 
கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பொளத்த சிங்கள
 இனவாத ஊடகங்கள் அவர்களின் மறை கரங்களின் 
கட்டுப்பாட்டில் உள்ளன. பர்மா (மின்மார்) இவர்களிற்கு நல்ல 
முன் உதாரணமாக உள்ளது. புலிப் பயங்கரவாதத்திற்கு 
முற்றுப் புள்ளி வைத்தாகி விட்ட நிலையில் அவர்களது 
அரசியல் இருப்பை தக்க வைக்க இது ஒரு நல்ல கிராக்கி 
மிக்க அரசியல் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. இது சில
 வேளைகளில் அரசியலில் உள்ள நல்ல மனிதர்களையும் 
தாண்டி தனது கரங்களை நீட்டும். தங்கள் அரசியல்
 இருப்பிற்காகவும், மீட்சிக்காகவும் அந்த நல்ல மனிதர்களும்
 மௌனித்து போகின்றனர். 

இப்போது புரிகிறதா கிறிஸ் மனிதன் யார் என்று? கிண்ணியா
 மஸ்ஜித் தாக்குதல் ஏன் என்று? காத்தான்குடி அராஜகம்
 ஏன் என்று? 

இனவாத ஆதிக்க சக்திகள் கிறிஸ் மனிதனின் உளவியல்
 போரின் மூலம் ஒரு விடயத்தில் குறியாக இருக்கின்றன. 
அது என்ன தெரியுமா? முஸ்லிம் இளைஞர்களின்
 தீவிரவாதத்தை, ஆத்திரத்தை கிளறி விடல் என்பதே
 அது. அதன் வழியாய் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுத 
செயற்பாட்டை தமது தெரிவாக தேர்ந்தெடுக்க வேண்டும் 
என்பது அவர்களது அவா. அவ்வாறு நடந்தால் அவர்கள் 
ஆசைப்படும் எல்லாவற்றையும் படிப்படியாக நிறைவேற்றி
 விடலாம். முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் பட்டம்
 சூட்டிஅல்கைதாவுடனும், லஷ்கர் ஈ தைபாவுடனும்,
 ஹமாஸுடனும் இணைத்து பேசி, பயங்கரவாதத்தி்ற்கு
 எதிரான போரின் ஒரு முகமாகவே தாங்கள் இலங்கை
 முஸ்லிம் விவகாரத்தை கையாள்வதாக கருத்து வெளியிடுவர்.


குப்ர் அரசியலில் பங்கேற்றுள்ள முஸ்லிம் 
முதுகெலும்பற்ற பச்சோந்தி அரசியல்வாதிகளால் 
சமூகத்திற்கு எந்த தீர்வும் கிடைக்கப் போவதில்லை. 
குப்ர் அரசியலை ஏற்றுக்கொண்டவன் குப்பாரின் 
அடிமை. குப்பாரின் அடிமையால் அல்லாஹ்வின் 
அடிமையை ஒரு போதும் பாதுகாக்கவும் முடியாது 
பலப்படுத்தவும் முடியாது. 

அமெரிக்க இராஜாங்க மற்றும் ஆசிய பசுபிக் கட்டளை
 மையங்களின் இடைக்கி்டையான கிழக்கு மாகாண 
ஜிஹாத் பற்றிய கருத்துக்கள், லஷ்கரின் இலங்கை 
தொடர்புகள் பற்றிய கருத்துக்கள், நோர்வேயின் 
கிறிஸ்தவ பயங்கரவாதியின் இலங்கை
 முஸ்லிம்களி்ன் வெளியேற்றம் தொடர்பான
 கொள்கை பிரகடனம் 
 போன்ற விடயங்கள் சற்று நெருடலாக
 உள்ளன. இவற்றிற்கான தொடர்புகள் பற்றியும், 
கிறிஸ் மனிதன் போன்ற இனவாத மறைவான 
சக்திகளின் தொடர்புகள் பற்றியும் தொகுத்து 
பார்க்கையில் இமாம் மஹதியின் வருகையின் 
அவசியம் அவசரமாக புரிகிறது. இல்லையெனின்.......


அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக