ஆகஸ்ட் 10, 2011


சோமாலிய இஸ்லாமிய

 ஆட்சியும் இலங்கை

 முஸ்லிம்களின் நிலையும்


சோமாலியா. அமெரிக்க
 நாய்களை நையப்புடைத்த
 வீரமிக்க தேசம். அமெரிக்க,
 ரஷ்ய வல்லாதிக்க
 பனிப்போரில் சிக்கி சின்னா
 பின்னமாக்கப்பட்ட தேசம்.
 அமெரிக்க மற்றும் ரஷ்ய
 புதிய இராணுவ உற்பத்தி
களையும், போர்
 விமானங்களையும்
 சோதித்து பார்க்கும் சோதனைக்
 களம் சோமாலியா
. எரிட்ரியாவில், எதியோப்பியாவில், ஆப்கானில், ஈராக்கில்
 என நடாத்தப்பட்டது போன்றஆயுதங்களின் தரம் மற்றும்
 துல்லியம் தொடர்பான மதிப்பிடல்களிற்கான அன்றைய களம் 
சோமாலியா. களப்பலியானதும் சோமாலிய மக்களே. ஆதாவது
 சோமாலிய முஸ்லிம்கள். ஆம் முஸ்லிம்கள்.


இப்போது மேற்கின் ஊடகங்கள் அலறும் சோமாலிய கடற்
 கொள்ளையர் விவகாரம் கூட அரசியல் அஜன்டாவின் பரிணாமமே.
 சுயஸ்கால்வாயின் கட்டுப்பாட்டை சோமாலிய கொள்ளையரிடம்
 வழங்கிய பெருமை அமெரிக்காவையே சாரும். நன்நம்பிக்கை
 முனையூடான கப்பல் போக்குவரத்திற்கு இது அமெரிக்காவிற்கு
 தேவையான ஒன்று. மேற்குலகின் பொருளாதாரத்திற்கு முன்
 அமெரிக்க பொருளாதாரம் மண்டியிட்ட போது, டொலர் தேசம்
 யூரோ அமைப்பிடம் தோற்றுப்போன போது அதை முட்டுக்கொடுக்க
 உருவாக்கப்பட்டதே சோமாலிய கடற்கொள்ளையர் யுகம்.


சோமாலிய கடற்கொள்ளையர்
களை அழிப்போம் என அடிக்கடி
 அறைகூவல் விடுக்கும் 
பிரித்தானிய தேசம் கூட
 கடற்கொளை்ளையை
 அடிப்படையாக வைத்து 
கட்டமைக்கப்பட்ட நாடாகும்.
 கொலம்பஸ் எனும் 
அமெரிக்காவை 
கண்டுபிடித்ததாக(?)
  கூறப்பட்டவனும் ஒரு கொடிய கடற்கொள்ளையனே. ஆக கடற்கொள்ளையர்களால் உருவாக்கப்பட்ட
 இரு தேசங்கள் கடற்கொள்ளையை கட்டுப்படுத்துவது பற்றி 
சர்வதேச உச்சி மாநாடுகளை நடாத்துகின்றன. அதை உலகமும்
 நம்பிக்கையுடன் பார்க்கிறது. 


சோமாலியாவில் இஸ்லாத்தின் தாக்கம் எகிப்திய இஹ்வான்களின் 
தோற்றப்பாட்டுடன் தொடர்புடையது. பிற்காலங்களில் ஸலபிகளின் 
ஆயுத அமைப்புக்களின் செயற்பாடு அங்கு ஒரு இஸ்லாமிய ஆட்சி
 முறைமைக்கான அடித்தளத்தையிட்டது.  இதற்கு சவுதி அரேபிய
 ஸலபி தலைவர்களின் வழிகாட்டலும் ஆதரவும் வெகுவாக
 இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்.


சோமாலியாவின் இஸ்லாமிய இறையாட்சி அதிகார
 எல்லைக்குள்
 வாழ பல்லாயிரம் சோமாலியர் திரண்டு சென்றனர்.
 சூடானியரும் எதியோப்பியரும் கூட புலம் பெயர்ந்து 
அங்கு வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நிலை மிக பரிதாபகரமானது.
 முஸ்லிம் பிரதேசங்களி
ல் காணப்படும் கொடிய பஞ்சம் காரணமாக பல ஆயிரம் குழந்தைகள்
 மடிந்து விட்டன. மக்கள் நீர் இல்லாமல் வேறு பிராந்தியங்கள் நோக்கி
 புலம் பெயர்கின்றனர். ஓரு தாய் தன் குழந்தையை வெட்ட வெளியில்
 விட்டு விட்டு செல்லும் மனித பேரவலம் அங்கு நிகழ்கிறது. பஞ்சம், 
பசி, பட்டிணி, பிணி என எங்கு பார்த்தாலும் மரணம். அவலம் நிறைந்த
 மரணம். பல்லாயிரக்கணக்கான மக்கள் இஸ்லாமிய ஆட்சி 
பிரதேசங்களில் இருந்து நீர் நிலைகள் உள்ள இடங்கள் கிடைக்காதா
? என வெருண்டோடுகின்றனர்.


இதில் ஒரு பாடத்தை அல்லாஹ் (சுபு) வைத்துள்ளான். இஸ்லாமிய 
இறையாட்சியுண்டு. அதில் வாழ விரும்பும் மக்கள் கூட்டமும் உண்டு.
 ஆனால் வாழ முடியாத நிலை. எப்படியிருக்கிறது? பட்டிணியை 
எதிர்கொள்ள முடியாத மக்கள் கூட்டம் மொகாதிசூவில் உள்ள I.C.R.C.
 (சர்வதேச செஞ்சிலுவை சங்கம்)பணிமணையை நாடி ஓடுகிறார்கள்.
 இப்போது புரிகிறதா மக்களின் நிலை.


இலங்கை முஸ்லிம்களிடம் உணவு உண்டு. வளங்களும் வாழ்வும் 
உண்டு. ஆனால் இஸ்லாமிய இறையாட்சியில் வாழும்
 இலட்சியம் இல்லை. இந்த இலங்கை முஸ்லிம்களை நோக்கியே
 இப்போது பேரினவாதம் மெல்ல நகர முற்பட்டுள்ளது. அவர்கள் தம் 
ஊடகங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும்,
 காமுகர்களாகவும், ஏமாற்றுக்காரர்களாகவும், தேசவிரோதிகளாகவும்
 பல கோணங்களில் சித்தரிக்கின்றனர். அவர்கள் மூளைகளில் இருந்த 
புளுதி படிந்த இந்த எண்ணக் கோட்பாடுகளை நாடு தழுவிய ரீதியில்
 தேசிய கோட்பாடாக மக்கள்மயபடுத்த முற்பட்டுள்ளனர். சி
 கட்டங்கள் வரை வெற்றியும் கண்டுள்ளனர்.


ஆக நாளைய இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் நிச்சயமாக சவால்
 நிறைந்ததாக மாற நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. மியன்மாரையும் விட
 மோசமாக நாம் பாதிக்கப்படலாம். பொஸ்னியா ஹேர்ஸிகோவினாவை
 போன்ற சாயலில் பல சோகங்களை நாம் சந்திக்கலாம். இதை பல முறை
 நாம் சொல்லியுள்ளோம்.


நோர்வேயில் வெடிகுண்டு தாக்குதலை நடாத்தியவன் ஒரு தனி
 மனிதனல்ல. அது மீடியாவின் திட்டமிட்ட மாயை. இதன் பின்புலத்தில்
 ப்றீமேசன் எனும் சாத்தானிய மறை சக்திகளின் வலிதான கரங்கள் தொழிற்பட்டுள்ளன. ஒரு பலம் வாய்ந்த குண்டு வெடிப்பின் ஊடாக
 உலக மக்களிற்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.
 “இஸ்லாம் தொடர்பான பூதகரமான அச்சம்” எனும் கருத்தியல்
 இங்கு தொழிற்பட்டுள்ளது. முஸ்லிம்களின் இன சுத்திகரிப்பு பற்றியும்
 சங்காரம் பற்றியும் குண்டு வைத்தவன் அரசியல் பிரகடனம்
 வாசிக்கின்றான். அதை நீதிபதி ஆவலுடன் கேட்கிறார்.
 ஊடகங்கள் விலாவாரியாக அதற்கான கருத்தியல்
 விளக்கங்களையும், விரிவுரைகளையும் வழங்குகின்றன.
 புரிகிறதா இப்போது?

அவன் செய்த கொள்கை பிரகடனத்தில் கலாச்சாரங்களின் யுத்தம் 
பற்றி பேசியுள்ளான். இலங்கை முஸ்லிம்களின் வெளியேற்ற
ம் பற்றியும் பேசியுள்ளான். உலகத்தில் எத்தனையோ நாடுகள்
 இருக்க அவன் இலங்கை பற்றி பேசியுள்ளான். “உலகலாவிய 
ரீதியில் வெளியேற்றப்படவுள்ள 5 முஸ்லிம் வாழும் நாடுகள்”
 பட்டியலில் இலங்கையும் ஒன்று என்பது பின்னைய அதிர்ச்சி
 தரும் உண்மையாகும்.


இலங்கை முஸ்லிம்களின் இன சுத்திகரிப்பு ஏன்? எதற்காக? என்ற
 விடயத்தின் காரணங்களை இன்ஷாஅல்லாஹ் இன்னொரு
 தலைப்பில் விரிவாக தருவோம். சோமாலியாவின் பாடங்கள்
 கற்றுத் தரும்
 படிப்பிணைகள் தொடர்பாக நாம் அவசரமாக சிந்திக்க 
வேண்டியுள்ளது. எதிர்மறையான நிகழ்ச்சி நிரல்களின்
 நேரான கணக்கீடு இது.


இலங்கை முஸ்லிம்கள் தங்களை 
அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்தல்
 அவசியம். எம்மை பற்றிய
 தீர்மானங்கைள ஸியோனிஸமும்,
 ப்றிமேசனும் எடுக்கும் காலமிது.
 இலங்கையில் இஸ்ரேலிய ஸ்தானி
கராலயமும் உண்டு.
 ப்றீமேசன் அங்கத்தவர்களும் உண்டு.
 இனவாத பிரச்சனைகளிற்கு ஜம்மியது
ல் உலமாவில் தவக்கல் வைத்து அழிந்து
 போகும் சமூகமா இலங்கை முஸ்லிம்கள்? அல்லது மஹதியின்
 வருகை பற்றி பேசிக்கொண்டிருக்கும் சமூகமா நாம்? நாம்
 நிறையவே மாற வேண்டும். அது போல நிறைய விடயங்கைளை
 மாற்றவும் வேண்டும். அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். 


அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக