பிரிட்டன் இனவாத முன்னணியான EDL பயங்கரவாதத்துடன் தொடர்பு
M.ரிஸ்னி முஹம்மட்
நோர்வேயில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐரோப்பாவை உலுக்கிய மனித படுகொலை பயங்கரவாத தாகுதல்களில் மேற்கு நாடுகளில் பலகாலம் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்பு பற்றிய தகவல்கள் ஆதர பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படும் நிலையில் பல மேற்கு ஆய்வளர்கள் அப்படி ஒரு அமைப்பு இருக்கிறது என்பதாகன ஆதாரம் எதுவும் இல்லை என்று எந்த ஆய்வுகளும் இன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஆனால்பயங்கரவாதம் மற்றும் பிரிட்டன் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான மார்டின், -Martin Feldman- எமது ரேடாரில் இந்த அமைப்பு சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்
இந்த பயங்கரவாத சிந்தனை போக்கு நன்கு திட்டமிட்ட முறையில் மேற்கு முழுவதும் பரவியிருப்பதாக பல பொது ஆய்வளர்கள் தெரிவிக்கும் அதேவேளை பயங்கரவாதம் என்ற பெயரில் இஸ்லாத்தை குறிவைத்து செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள் தனது சொந்த தேசங்களில் , தமக்கு அருகில் பலமாக வளர்ந்து வரும் பயங்கரவாதம் பற்றி அக்கரை இன்றி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேவேளை பிரிட்டனில் செயல்படும் ஆங்கிலேயர் பாதுகாப்பு முன்னணி EDL அமைப்பு மக்கள் மத்தியில் இனவாதம் , வன்முறை ஆகியவற்றை துண்டிவிடுகின்றது என்ற பலமான குற்றசாட்டு எழுந்துள்ள. இந்த அமைப்பை மேற்கு ஐரோப்பாவுக்கு ஒரு அருள் என்று நோர்வே கொலையாளி குறிபிட்டுள்ளான். கொலையாளி மேலும் தனது The Knights Templar இயக்கத்தில் இருந்து 80 வரையானவர்கள் இவ்வாறான தாக்குதல்களுக்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துரைத்துள்ள EDL இயக்கத்தின் தலைவர் ஒஸ்லோ பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கும் தமது இயக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆனால் இதுபோன்ற பல சம்பவங்கள் பிரிட்டனில் எதிர்வரும் ஐந்து வருடங்களுள் நடைபெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நோர்வே கொலையாளி இந்தியாவின் இந்து தேசிய பேரினவாத அமைப்புகளை தனது நேச அணியாகப் பாராட்டியுள்ளான். சர்வதேச ரீதியில் ஜனநாயக ஆட்சிகளை வீழ்ச்சியுறச் செய்யும் போராட்டத்தின் முக்கியமான அணியாக இந்து பேரினவாத இயக்கத்தை அவன் புகழ்ந்திருக்கின்றான் The Knights Templar என்ற அந்த அமைப்பு ஐரோப்பாவின் அதிகாரத்தை கைப்பற்றி அங்கிருந்து இஸ்லாத்தை துடைத்தெரிவதை நோக்கமாக கொண்ட அமைப்பாக தன்னை அடையாளப் படுத்துகின்றது. EDL என்ற தீவிரவாத இயக்கம் பிரிட்டனில் இஸ்லாத்தை அதன் ஷரியாவை தகர்த்தெறியும் நோக்கம் கொண்டு உருவாக்க பட்டுள்ள இயக்கம் என்பது குறிபிடத்தக்கது.
நோர்வே கொலையாளி 2002 இல் லண்டனில் இதன் உருவாக் கூட்டத்தில் பிரிட்டன், நோர்வே, பிரான்ஸ், ஜெர்ன், கிரீஸ், நெதர்லாந், ரஷ்யா, செர்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கு பற்றியதாகவும் ஆனால் சுவிடன், பெல்ஜியம் , மேற்கு அமெரிக்க ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் பங்குகொள்ள முடியாது போனதாகவும் அந்த சந்திப்பை ஆங்கில புரடஸ்தாந்து கிஸ்தவர் ஒழுங்கு செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளான்.
தமது பிரதான நோக்கமாக ‘கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் படை வீரர்கள் ‘PCCTS (Poor Soldiers of Christ and of the Temple of Solomon) கொண்ட Knights Templar இயக்கத்தை சில சதாப்தங்களில் மேற்கு ஐரோப்பாவின் சக்திமிக்க புரட்சிப் படையாக மாற்றுவதை நோக்கமாக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.
இந்த கொலையாளியின் பிரகடனத்தில் பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் இனவாத இஸ்லாமிய விரோத சிந்தனை கொண்ட அரசியல் கட்சியான EDL பற்றி அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையை கிழப்பியுள்ளது. அந்த கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவரினால்தான் இந்த ‘கிறிஸ்து மற்றும் சாலமன் கோவிலின் படை வீரர்கள்’ கொண்ட Knights Templar இயக்கம் உருவாக்கப் படுவதாக தான் திடமாக நம்புவதாகவும் கொலையாளி தெரிவித்துள்ளான்.
பயங்கரவாதம் மற்றும் வலது சாரி தீவிரவாதம் தொடர்பான பேராசிரியர் மார்டின் Martin Feldman ரேடாரில் இந்த அமைப்பு சிறிதாக தெரிந்தாலும் இதன் இருப்பை மறுக்கமுடியாது, எச்சரிக்கையாக இருக்கவேண்டிய பக்கத்தில் தவறு நடகின்றது “Err of the side of caution” என்றும் தெரிவித்துள்ளார்.
கொலையாளி பெரிவிக் -Anders Behring Breivik- என்ற தான் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுக்கும் கிறிஸ்தவ அடிப்படைவாதி என்பதை ஒப்புக்கொண்டுள்ள அதேசமயம், தனது “சிலுவைப் போர்’ அமைப்புக்கான இலச்சினைகளைத் தயாரிப்பதற்கு இந்திய கலை நிறுவனம் ஒன்றை அவர் தெரிவு செய்துள்ளான்.
Knights Templar இலச்சினையானது வெள்ளை மண்டையோட்டின் நெற்றியில் இஸ்லாம், கம்யூனிஸம், நாஸிசம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டுவதாக குறிகள் பொரிக்கப்பட்ட மண்டையோட்டை கிறிஸ்தவ சிலுவையை குறிக்கும் வால் ஊடறுத்து செலுத்தப்படிருப்பது காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த இலச்சினையை ஒரு இந்திய முஸ்லிம் நபர் தொழிலுக்காக அந்த விடயங்களை பற்றி தெரியாத நிலையில் அதை உருவாக்கி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
“2080: சுதந்திரத்துக்கான ஐரோப்பியப் பிரகடனம்’ 1500 பக்கங்கள் கொண்ட அந்த விஞ்ஞாபனத்தில் 102 பக்கங்களில் இந்தியா தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது Knights Templar இந்திய தேசியவாதிகளுக்கும் ஆதரவளிப்பதாக தனது விஞ்ஞாபனத்தில் பெரிவிக் கூறுகிறான். இவன் தனது கொள்கை உரையில் இந்து தேசியவாதிகள் தமது ஐரோப்பிய மச்சான்மார் போன்றே இந்திய கலாசார மார்க்சிஸ வாதிகளினால் இந்துத் தேசியவாதிகள் துன்பப்படுவதாக குறிப்பிட்டுள்ளான்.
இந்தியாவின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கமானது முஸ்லிம்களை சாந்தப்படுத்துவதில் சார்ந்திருப்பதாகவும் துன்பகரமான முறையில் கிறிஸ்தவ மிஷனரிகளை நெருக்கடிக்குள்ளாக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளான். தாழ்ந்த மட்ட இந்துக்களை சட்டவிரோதமாக மதம் மாற்றுவதாக கிறிஸ்தவ மிஷனரிகள் மீது நெருக்குதல் கொடுப்பதாகவும் அதேசமயம், இந்து நம்பிக்கை கலாசாரத்தை முழுமையாக அழிக்க கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளான்.