ஆகஸ்ட் 11, 2011


இலங்கையை கலக்கும் நடு நிசி நாய்கள் - கிறீஸ் பூசிய மனிதர்கள்

இலங்கை. வேதாளங்கள் பூபாளம் பாடும்
 தேசம். இந்து சமுத்திரத்தின் முத்து என்று
 பெயர் வேறு. சிப்பியை திறந்து
 பார்த்தால் மண்டையோடுகளும்,
வெள்ளை வேன்களும், அரசமர
 கன்றுகளுமே  
எஞ்சி நிற்கின்றன. இறைவனால் 
அருள்பாலிக்கப்பட்ட தேசம். சகல 
வளங்களும் நிறைந்த தேசம். ஆனால்
 அதன் துர்அதிர்ஷ்டம் இனவாத பேய்களின் காலடியில் கட்டுண்டு 
கிடப்பதே கதியாகி போய் விட்டது.

மூன்று தசாப்த இன முரண்பாட்டின் விளைவான யுத்தம் முடிந்து
 ஒரு சில வருடங்கள் தான் ஆகியுள்ளன. ஆனால் பிரச்சனைகளோ
 அணிவகுத்து நிற்கின்றன. சிங்கள இனவாதிகளின் சிறுபான்மை
யினர் மீதான ஆதிக்க செயற்பாடுகள், தமிழ் குறுந்தேசியவாதிகளின் 
கிறுக்குத்தனமான சுயம்சார் அரசியல் முன்னெடுப்புக்கள், முஸ்லிம்
 பச்சோந்தி அரசியல்வாதிகளினால் பலிக்கடா ஆக்கப்படும்
 முஸ்லிம்கள், பிடியாணையுடன் அழையும் மேற்குலகின்
 முஸ்தீபுகள் என இலங்கை தேசம் பைத்தியம் பிடித்து நிற்கிறது.


இப்போது இன்னொரு பிரச்சனை. இன்று இலங்கையின் 'Talk of the town"
 ஆக மாறி நிற்கும் செய்தி, கிறிஸ் மனிதர்களின் அட்டகாசம். நடு
 இரவுகளில் உடல் முழுதும் கிறிஸ் பூசிய மனதர்கள் பெண்களை
 தாக்குவதும், குறிப்பாக அவர்களது மார்பகங்கள், தோல் புஜங்கள்
 போன்றவற்றை இலக்கு வைத்து நகங்களால் கீறுவதும், சில
 சந்தர்ப்பங்களில் இரத்தத்தை சேகரிப்பதாகவும், நாக்கினால் நக்கி
 சுவைப்பதாகவும் பற்பல செய்திகள் தினமும் வருகின்றன.


 ஒரு பெரிய அரசியல்வாதியின் ஒரு பெரிய பிரச்சனைக்கு தீர்வாக
 ஒரு பெரிய இரத்த பூசை செய்யவே இவை என ஒரு கருத்தும், 
சிறுபான்மையினரை குறி வைத்தே இது அதிகாரமிக்க சக்தியினால்
 வழி நடாத்தப்படுகிறது என ஒரு கருத்தும், தேசத்தின் முக்கிய
 பிரச்சனைக்கு காரண கர்த்தாக்கள் தாங்கள் தான் எனும் மக்கள்
கருத்தை மாற்றி அவர்களது சிந்தனையை வேறு புறம் திசை
 திருப்பவே இது என ஒரு கருத்தும், சில சட்டங்களை சர்வதேச
 அழுத்தங்களை தாண்டியும் தக்கவைக்கவே இவை என ஒரு
 கருத்துமாக அலை அலையாக கருத்துக்கள் வருகின்றன.


ஐக்கிய தேசிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் “டிபென்டர்” ரக
 வாகனங்களில் வந்து இறக்கி விடப்படும் மனதர்களால் சிறு 
குழுக்களாக பிரிந்தே இது நடாத்தப்படுகிறது என அரசை குற்றம் 
சாட்டியுள்ளதை நாம் கவனத்தில் கொள்தல் நன்று. கிழக்கிழங்கை
 வாழச்சேனையில் கைது செய்யப்பட்ட கிறிஸ் மனிதன் மறு
 மணித்தியாலத்தில் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்ட
 விதம் வியப்பளிப்பதோடு சிந்தணைகளை பல திக்குகளிற்கும்
 அகட்டிச் செல்கிறது. எது எப்படியோ. கிறிஸ் மனதர்களின் 
அச்சமளிக்கும் தோற்றமும் தாக்குதல்களும் கண்கூடாக 
காணப்பட்டுள்ளன.


”வதந்திக்கு வாகனம் கிடையாது” என ஒரு முறை லெனின் 
கூறினார். இது விவகாரத்தில் இந்த கருத்தும் தாக்கம் செலுத்தும்
 காரணியாகவே உள்ளது. சில காலங்களிற்கு முன்பு ஆபிரிக்க
 கண்டத்தில் கொலை பிசாசுகள் (Wild Devils) என்று இதையொத்த
 பாணியில் கிறிஸ் மனித குழுக்கள் பல கிராம மக்களை கொன்று 
குவித்தது வரலாறு. மொஸாம்பிக்கிலும், கொங்கோவிலும்
 இது பல முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. 1950 களில் பலஸ்தீன 
எல்லை கிராமங்களில் உள் நுழைந்து இவ்வாறே யூதர்கள் 
கிறிஸ்பூசிய நிலையில் பல கொலைகளையும் அழிவுகளையும்
நடாத்தி சென்றனர். அவர்களை அன்று மக்கா பீஸ் (Maka Feez),
 டெல் அவிவ் (Tel Aviv) போன்ற ஸியோனிஸ பயங்கரவாத 
அமைப்புக்கள் நெறிப்படுத்தி வழிப்படுத்தின.


அரச கட்டுப்பாட்டை மீறிய நிலையில் இந்த கிறிஸ் மனிதர்களின் 
அட்டகாசம் அதிகரிக்கும் எனும் நிலை உருவானால்
 முஸ்லிம்களாகிய நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளல் 
கடமையாகும். பல சந்தர்ப்பங்களில் இது சமுதாய கடமையாகவும்
 மாறி விடுகிறது. ஒரு முஸ்லிமின் மானம் எனும் தலைப்பில் இதை
 பார்ப்போமாக இருந்தால் முஸ்லிம் பெண்களின் மானத்தை காப்பது
 நமது கடமை. இதில் கொலையின் எல்லை கூட தற்காப்பு தாக்குதல்
 எனும் நியதிகளுல் அடங்கலாம். நாம் நோன்பு திறக்க மட்டுமல்ல
 இதற்கும் தயார்படுத்தல் அவசியமே.

அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக