இலங்கை அமெரிக்க முறுகல்
அமெரிககாவின் யுத்த விமானங்கள் இலங்கை வான் பரப்பில் பறந்ததாக வெளியான பரபரப்பு தகவல்களிடையே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையானது நம்பகரமிக்கதும், சுதந்திரமானதும், சர்வதேச தரம் வாய்ந்ததுமான விசாரணைகளை நடத்தத் தவறுமிடத்து சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுமென அமெரிகக இலங்கையை எச்சரித்துள்ள விவகாரமும் பூதாகரமாகியுள்ளது.
கடந்த வாரம் மாத்திரம் அமெரிககாவிடமிருந்து இலங்கை தொடர்பில் மூன்றுக்கும் மேற்பட்ட பிரதிபலிப்புகள் வெளியாகியுள்ளதை நாம் அவதானிககலாம்.
வழமையாகவே அமெரிககா இலங்கை தொடர்பில் இவ்வாறு அடுக்கடுக்கான எச்சரிக்கைகளை இதுவரை விடுத்திருக்காத நிலையல், இம்முறை அமெரிககாவிடமிருந்து ஒரேதடவையில் வெளிப்பட்டுள்ள எச்சரிக்கைகள் குறிப்பிட்டு கூறும்படியாக அமைந்துள்ளன.
அமெரிககாவின் இந்த எச்சரிக்கை குறித்தும், அதற்கு இலங்கை பொறுப்புடன் பதில் கூறியிருப்பதும்கூட என்னவோ இலங்கை அமெரிககாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தியுள்ளது என்பதையே எமக்கு காட்டுகிறது.
அந்தவகையல் கடந்த 8 ஆம் திகதி அமெரிகக ராஜாங்க திணைக்களத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிகக ராஜாங்க திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் இலங்கையில் சர்வதேச பொறிமுறை ஒன்று அவசியமென கூறியிருந்தமை குறிப்பிட்டு கவனிக்கும்படியாக அமைந்திருந்தது.
இதுதொடர்பில் மார்க் ரோனர் மேலும் தெரிவித்திருந்ததாவது,
இலங்கையில் புலிகளுக்கெதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றஙகள் தொடர்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று அவசியம் என்பதே எல்லோரினதும் விருப்பம என்று அமெரிககா நம்புகிறது.
போர்க்குற்றஙகளுக்கு பொறுப்புக்கூறும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையின் சிபார்சுகளை இலங்கை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இலங்கை வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட அமெரிககா அழைப்பு விடுக்கிறது. போர்க் குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட வேண்டுமென சர்வதேசம் விடுக்கும் அழைப்பை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஸ நிராகரிக்கிற போதிலும், போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கையும்கூட விசாரணை நடத்துகிறது என்பதை அவர் அறிவாரென்றும் ராஜாங்க திணைக்கள பிரதிப் பேச்சாளர் மார்க் ரோனர் சுட்டிக்காடடியுள்ளார்.
அமெரிகக ராஜாங்க திணைக்கள பிரதிப் பேச்சாளரின் கருத்துக்கள் இவ்வாறானதாக இருக்கையில் மறுபுறம் அமெரிகக ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோரிய நுலன்ட் அம்மையாரும் இலங்கையை கடும் தொனியில் அச்சுறுத்தியுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச தரம் வாய்ந்த, நம்பகரமானதும், சுந்திரமிக்கதுமான விசாரணைகளை மேற்கொள்ளத் தவறினால் இலங்கை சர்வதேச நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்குமென்பதே அவ்வெச்சரிக்கையாகும்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தோன்றிய அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும், மனிதாபிமானச் சட்டங்களும் மீறப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து நம்பகம் வாய்ந்த, சுந்திரமிக்க விசாரணை நடத்தப்படுவதற்கே அமெரிககா ஆதரவளிக்கிறது. அவ்வாறான உயர் தரத்திலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென்றே அமெரிககா எதிர்பார்க்கிறது.
ஆனால் இவ்விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு ஒத்தவையாக இருக்கவேண்டியது இலங்கையின் பொறுப்பு சார்ந்ததாகும். இலங்கை அரசாங்கமானது இதை உடனடியாக செய்ய வேண்டுமென அமெரிககா வலியுறுத்தி வருகிறது. இலங்கை அதைச் செய்யும் என்றும் அமெரிககா நம்பிக்கை கொண்டுள்ளது.
இலங்கையானது நம்பகரமிக்கதும், சுதந்திரமானதுமான சர்வதேச தரம் வாய்ந்த விசாரணைகளை நடத்தத் தவறுமிடத்து சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுமெனவும் அமெரிகக ராஜாங்க திணைக்களப் பேச்சாளர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அமெரிககாவின் இந்த அடுத்தடுத்த எச்சரிக்கை இலங்கையை உசுப்பிவிட்ட நிவையிலதான் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலயிடமிருந்து அமெரிககாவின் எச்சரிக்கை தொடர்பிலான கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கமானது கடந்த மாதங்களில் பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை அமெரிககா கவனத்திற் கொள்ளாமை வருத்தமளிக்கும் விடயமாகும். போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு போதுமானளவு நிரூபித்து விட்டோம்.
சர்வதேச சமூகத்தின் ஒவ்வொரு கேள்விக்கும் போதுமானளவு பதிலும் கொடுத்து விட்டோம். இருந்தபோதும் அமெரிககாவுக்கு மாத்திரமென்று பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் தொடர்பில் நேரடியாக பதிலளிக்கப்படவில்லை.
அமெரிககா இலங்கையை எச்சரித்துள்ள விவகாரத்தை அரசாங்கம் அலட்சியப்படுத்தவில்லை. அமெரிககாவின் அறிக்கையை இலங்கை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது தவறானதாகுமெனவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இலங்கை இவ்வாறு பொறுப்புக்கூறும் போக்கிலிருந்து நழுவி செயற்படுவதை தடுத்து நிறுத்துவதற்காக அமெரிககா புது வியூகமொன்றை வகுத்திருப்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் சண்டே டைமஸ் கடந்தவாரம் குறப்பிட்டுள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கையை சிக்கவைக்கும் நடவடிக்கையில் அமெரிககா ஈடுபட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 2012 ஆண்டு, மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் விவாதிக்க விரும்புவதாக இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் அனுப்பியிருந்தது. இருந்தபோதும் இலங்கை இதுகுறித்து அமெரிககாவுக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.
இலங்கையின் செயற்பாடுகள் இவ்வாறு நீடிக்கும் பட்சத்திலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கையை சிக்கவைக்க அமெரிகக முயற்சிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிககாவின் இந்த செயற்பாடு குறித்து ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கை ராஜதந்திரிகள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு தகவல்களை அனுப்பியுள்ளனர்.
இந்த கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை, சர்வதேச விசாரணைககான அழைப்பு மற்றும் பொருளாதார தடை குறித்தும் அமெரிகக ஆhவம் காட்டுமெனவும் இலங்கை ராஜதந்திரிகள் வெளிவிவகார அமைச்சுக்கு சுட்டிக்காட்டியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு நிலையிலதான்; ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச செஞ்சிலுவைக் குழுவும் இலங்கையின் போர்க்குற்றங்களை உறுதி செய்யும் அறிக்கையொன்றை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற நிலையே லிபியா, சோமாலியா நாடுகளிலும் காணப்படுகிறது.
வன்னிப் பிராந்தியத்தில் புதக்குடியிருப:பு மருத்துவமனை மீது இருமுறை நடத்தப்பட்ட தாக்குதல்களில் அங்கிருந்த 500 நோயாளர்களில் பலர் கொல்லப்பட்டும், காயமுமடைந்தனர் எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆhவம் செலுத்தலாமென நம்பப்படுகிறது.
யுத்தம் நடைபெற்று சில வருடங்கள் கழித்து வெளியாகியுள்ள இந்த அறிக்கை தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் போர்க்குற்றம் பற்றி இலங்கை மீது குற்றம் சுமத்தும் தரப்புகளுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை நிச்சயம் சாதகமாக அமையுமென்பதில் சந்தேகமில்லை.
அதேநேரம் அமெரிககாவிடமிருந்து இலங்கை தொடர்பில் அண்மைக்காலமாக வெளிப்படுத்தப்படும் எச்சரிக்கைகளை இலங்கை கவனத்திற்கொண்டே ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ சீனாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கலாமென்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்துவது போல ரொய்டர் செய்தி நிறுவனமும் மஹிந்தவின் சீனப் பயணத்திற்கான பின்னணி பொருளாதார நோக்கம் கொண்டதல்ல என்று சுட்டிக்காட்டி தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றஙகளை முன்னிறுத்தி மேற்குலக சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் அழுத்தஙகளிலிருந்து விடுபடும் வழிவகையை தேடிக்கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக்ஸ சீனா சென்றுள்ளார் என ரொய்டர் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.
அத்துடன் சமூக, ஜனநயக நிறுவனத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் குசல் பெரேராவின் கருத்துப்படி, போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மேற்குலகு நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள அழுத்தம் மஹிந்த ராஜபக்ஸவை குழப்பமடையச் செய்துள்ளது.
எதிர்வரும் செம்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. முனித உரிமைகள் கூட்டத்தொடரில் சீனாவின் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியுமா அல்லது இல்லையா என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்காகவே மஹிந்த சீனாவுக்குச் சென்றிருக்க வேண்டும். சுPனா மட்டுமெ இலங்கையின் போர்க் குற்றந்கள் தொடர்பாக பேசாத ஒரேயொரு நாடும், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியைப் பாதுகாக்கின்ற ஒரேயொரு நாடுமெனவும் குசல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிககா உள்ளிட்ட நாடுகள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள ஒருபுறம், மறுபுறம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இலங்கை சீனா, ரஸ்யா ஆகிய நாடுகளிடம் அடைக்கலம் தேடுவதும் நாட்டு மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தாமலிருந்தால் போதுமானது..!!
மொஹமட் அன்ஸிர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக