“இஸ்லாமிய அடிப்படைவாதம்” இலங்கை முஸ்லிம்களில் தாக்கம் செலுத்துகிறதா?
காலமாக பல செய்திகள் திட்டமிட்டு
வெளியிடப்படுகின்றன. அச்சு மற்றும்
இலத்திரனியல் ஊடகங்கள் இதில் பெரிய
அளவில் செயற்படுகின்றன. உலகலாவிய
இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் இலங்கை
முஸ்லிம்களிற்கான உறவும் பங்கும்
பற்றியதாகவும், மற்றையது இலங்கையில்
இஸ்லாமிய ஷரீஆ ஆட்சிக்கான
முன்நடவடிக்கைகளும் இஸ்லாமிய ஆயுத
பேரினவாதிகளாலும் ஒரளவிற்கு தமிழ் இனவாதிகளாலும்
இன்று சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பேசும் பொருளாக
மாற்றப்பட்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம்,
முஸ்லிம் பயங்கரவாதம் போன்றவற்றில் இருந்து
இலங்கையை எவ்வாறு பாதுகாக்கலாம் என விவாத
அரங்குகளை டெலிவிஷனில் நடாத்தும் அளவிற்கு
அதன் வீச்செல்லை பரந்து பட்டுள்ளது. இது வெறுமமே
மேற்கில் ஏற்பட்டுள்ள இஸ்லாம் தொடர்பான அச்சமான
வளற்ச்சியில் ஏற்பட்டுள்ள பொறாமை மற்றும் காழ்ப்புணற்ச்சி
ஒரு காரணமாகவும் இலங்கை வாழ் முஸ்லிம்களை மூன்றாம்
தர அடிமை சமுதாயமாக மாற்றி மியன்மாரை ஒத்த நிலையில்
வைத்திருக்க வேண்டும் எனும் பேரினவாதிகளின் ஆதிக்க
எண்ணம் மறு காரணமாகவும் அமைந்துள்ளன.
நேற்றைய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித செயசுந்தரவின்
நேற்றைய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பூஜித செயசுந்தரவின்
இஸ்லாமிய நீதி மன்றங்கள்” தொடர்பான கூற்று, காத்தான்குடி
பெயர் பலகைகள் விவகாரம் தொடர்பான கபினட் அமைச்சர்
சம்பிக்க ரணவக்கவின் கூற்று, ஜாதிக ஹெல உறுமய அரசாங்க
எம்பிக்களது தொடரான கூற்றுக்கள், அமெரிக்க இராஜாங்க
திணைக்களத்தின் “கிழக்கு மாகாண லஷ்கர் இ தொய்பா”
தொடர்பான கூற்று, தென் பசுபிக் அமெரிக்க மத்திய கட்டளை
பணியத்தின் “கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்களின்
ஆயுத குழுக்கள் பற்றிய கூற்று, வவுனியா நகர சபை தலைவரின்
“ஜிஹாத் குழுவின் கடிதம் தொடர்பான” ஆரவாரம், நோர்வே
கிறிஸ்தவ பயங்கரவாதியின் வாக்குமூலம் என இதன் பட்டியல்
நீண்டு செல்கிறது.
லங்காதீப, திவயின போன்ற சிங்கள பேரினவாத பத்திரிகைகள்
லங்காதீப, திவயின போன்ற சிங்கள பேரினவாத பத்திரிகைகள்
தினமும் ஒரு செய்தி எனுமடிப்படையில் முஸ்லிம் மத
அடிப்படைவாதம் பற்றி சிறப்புக் கட்டுரைகளை எழுதுகின்றன.
கூடவே இலங்கை முஸ்லிம்கள் பற்றி அப்பாவி சிங்கள மக்கள்
உள்ளங்களில் தவறான விளக்கங்களும் உருவகங்களும்
உருவாகும் வகையில் ஊடக மூளைச் சலவை யுக்தியை
இளைஞர்களை காமுகர்களாகவும், முஸ்லிம் வர்த்தகர்களை
தந்திரமான ஏமாற்று வியாபாரிகளாகவும், இலங்கைக்கான
ஹெரோயின் போதை மருந்து கடத்தல்காரர்களாகவும்
சித்தரித்து எழுதுகின்றன. இவை சிங்கள சமூகத்தால்
அச்சத்துடனும் ஆத்திரத்துடனும் உள்வாங்கப்படுவதை நாம்
அனுமானிக்க பல முறை தவறி விடுகிறோம்.
தெளிவாக
இந்த இனவாதத்துடன் கலந்த மதவாத எழுத்துக்கள், பேச்சுக்கள்,
கலந்துரையாடல்கள் போன்ற அனைத்தும் இலங்கை எனும்
குட்டித் தீவில் சில மாற்றங்களை நிச்சயமாக உருவாக்குவதற்கான
வாய்ப்புக்கள் அதிகம். இலங்கை முஸ்லிம்களிற்கு எதிரான
திட்டமிட்ட கூட்டு கலவரங்களை உருவாக்குவதற்கான
வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. நெறிப்படுத்தப்பட்ட
அரசமயப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனக்கலவரம் என்பது பாரிய
தாக்கங்களை ஏற்படுத்தவல்லது. குஜாராத், பொஸ்னியா,
கொஸாவோ என பல முஸ்லிம்களிற்கு எதிரான
கலவரங்களை வரலாற்றில் மட்டுமே நாம் படித்துள்ளோம்.
நிஜங்களில் அனுபவிக்கவில்லை என்பதே உண்மை.
நாயை அடித்தாலோ அல்லது கொன்றாலோ தான் ஏனையவர்
நாயை அடித்தாலோ அல்லது கொன்றாலோ தான் ஏனையவர்
அனுதாபப்படுவர். தடுக்க முற்படுவர். ஆனால் அந்த நாயை
“வெறி நாய்” என தினமும் கூறி மக்கள் மனதில் அதை
பதிய வைத்த பின் கொன்றால் யாரும் அதைப்பற்றி
கவலைப்படப் போவதில்லை. ஆதரவாகவே பேச முற்படுவர்.
இந்த செயற்பாடே இலங்கை முஸ்லிம்கள் மேல் திட்டமிட்
டு நடாத்தப் படுகிறது. ஆனால் இது பற்றிய எந்த விதமான
பிரக்ஞையும் இல்லாமல், கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாமல்
எம் சமூகம் வாழ்கிறது. வாழவும் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
சொகுசான வாழ்க்கை, உல்லாசங்களின் உச்சங்களை
சொகுசான வாழ்க்கை, உல்லாசங்களின் உச்சங்களை
அனுபவித்தல், இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு மாறான
வாழ்வியல், ஜமாத்களிற்கு இடையிலான போட்டி, முட்டாள்
முல்லாக்களின் வழிகாட்டல், கோக்கோ கோலா கலாச்சாரத்தில்
மூழ்கி போதல் என இலங்கை முஸ்லிம் சமூகம் ஒரு நச்சு
சக்கரத்தில் சுத்துகிறது.
சிங்கள, தமிழ் சமூகங்களை பாதுகாக்க எவ்வகையிலோ
சிங்கள, தமிழ் சமூகங்களை பாதுகாக்க எவ்வகையிலோ
பயிற்றப்பட்ட இராணுவ மனிதர்கள் இருக்கிறார்கள். முப்படை
வீரர்களாக அல்லது முன்னாள் போராளிகளாக. இலங்கை
முஸ்லிம்களிடம் சிங்கள பேரினவாதிகள் சொல்வது போல்
பிஸ்டல்களும், ஏ.கே.47 துப்பாகிகளும் இல்லை. அவர்களிடம்
சென்று பார்த்தால் தெரியும் எஞ்சியிருப்பதெல்லாம் புட்டும்
பாபத்துமே. இலங்கைக்கு ஆரியர்கள் ஈட்டியுடனும், திராவிடர்கள்
வாளுடனும், கிறிஸ்தவர்கள் பீரங்கியுடனும் வந்ததே வரலாறு.
இதையே கொழும்பு மியூஸியமும் சொல்கிறது. சான்று பகர்கிறது.
மியுஸியத்தில் இன்னொரு பொருளும் உண்டு. அது
பூ போடப்பட்ட சஹன். இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்த
வரலாற்றின் நினைவுச் சின்னமது.
நாம் அவசரமாக விழித்துக்கொள்ள வேண்டும். சிங்கள தமிழ்
நாம் அவசரமாக விழித்துக்கொள்ள வேண்டும். சிங்கள தமிழ்
ஆங்கில ஊடகங்கள் முஸ்லிம்கள் பற்றி தவறான விடயங்களா
க என்ன சொல்கின்றன, அதற்கான பதில் செயற்பாடு என்ன?
மாற்று நடவடிக்கைகள் என்ன? இதை எந்த இயக்க மற்றும்
சமூக ஒழுங்கில் முகம் கொடுப்பது? நிறைவேற்றுவது? என்பது
தொடர்பாக அவசரமான ஆய்வுகளிற்கு நாம் செல்வது அவசியமான
ஒன்றாகும். அப்பாவி மாற்று இன மக்களின் உள்ளங்களில்
இஸ்லாம் தொடர்பாகவும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாகவும்
தெளிவான விளக்கங்களை தொடராக எவ்வாறு உட்புகுத்தலாம்
என்பது தொடர்பாக நாம் சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.
அவ்வப்போது நிகழும் முஸ்லிம்களை பாதிக்கும் விடயங்களிற்கு
அவ்வப்போதே பதில்களையும் விளக்கங்களையும் முன்வைக்கும்
நடைமுறை ஒழுங்குகள் பின்பற்றப்படல் வேண்டும். மாறாக
அடுத்த மாதம் அதை ஆராய்ந்து அதற்கு விளக்கம் சொல்ல
முற்படும் போது நாம் நிறையவற்றை இழந்தே விடுவோம்.
“காரணங்கள் நிகழ்கால ஒத்தடங்கள். காரியங்களே
“காரணங்கள் நிகழ்கால ஒத்தடங்கள். காரியங்களே
வருங்கால வாஸ்தவங்கள்” என்ற நியதிக்கேற்ப நாம்
தெளிவாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அன்புடன் அபூ ஸய்யாப்
அன்புடன் அபூ ஸய்யாப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக