ஆகஸ்ட் 11, 2011

Loans


ஏகாதிபத்திய நாடுகளின் கடன்கள்


தனிமனித நலனை அடிப்படையாகக் 
கொண்ட உலகம், மூன்றாம் உலகநாட்டு 
மக்களை மட்டும் சூறையாடுவதில்லை
. மாறாக ஏகாதிபத்திய நாட்டு
 மக்களையும் சூறையாடுகின்றது. 
ஏகாதிபத்திய தன்மை வாய்ந்த இந்தத் 
தனிமனித நலன்கள், மூன்றாமுலக
 மக்களையும், நாட்டையும் ஏகாதிபத்திய நாட்டு மக்களையும்
 சூறையாடுகின்றது. இப்படிச் சிலர் நலன் தான், உலக நலனாக
 உள்ளது.


இதற்கு இனம், தேசம், பண்பாடுகள், கலாச்சாரங்கள், மதங்கள்
 முதல் அனைத்து தனித்துவமான வேறுபட்ட அடையாளங்
களையும் கடந்து, இந்தச் சிலர் நலனை உறுதிசெய்வது தான்
 உலகமயமாதல்.
மக்களின் உழைப்பில் இருந்து எப்படி, எந்த வகையில் அபகரிப்பது
 என்பதே, இதன் ஒழுக்கம்கெட்ட ஒழுக்கம். மனித இரத்தத்தை 
உறிஞ்சிக் கொழுக்க, உலகம் முழுக்க சதா அலைகின்றது. மனித
 இனம் வாழ்விழப்பதுதான் உலக ஒழுங்கு. ஒருபுறம் கொழுக்க 
வேண்டும் என்றால், இழப்பது அவசியமானது. இந்த உலகில்
 யார் எப்படி கொழுக்கின்றனர், யார் எப்படி இழக்கின்றனர் என்பது,
 பொதுவான சமூக வடிவங்களின் ஊடாகவே நிறுவப்பட்டு ஒரு
 விதியாகிவிட்டது. இந்த விதியே சுதந்திரம், ஜனநாயகம் என்பது,
 இதுவே மாற்ற முடியாத உலக விதிகளாக காட்டப்படுகின்றது.
   
இந்த எல்லைக்குள்தான் ஏகாதிபத்திய
 மக்களும் குதறப்படுகின்றனர். மூன்றாம்
 உலக நாடுகளைச் சூறையாடும் ஏகா
திபத்தியங்கள், தமது தேசிய உள்கட்ட
மைப்பிலும் அதே கொள்கையையே
 கையாளுகின்றது. அதாவது மக்களுக்
கு எதிராக, அவர்களின் உழைப்பை
 பிழியும் கொள்கையைக் கையாளுகின்றன.
 உள்நாட்டு தேசிய 
சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதுடன், சொந்தநாட்டுப் 
பொருளாதாரத்தையே நிதி மூலதனத்தின் இலாபவேட்டைக்கு
 ஏற்ப மாற்றிவிட்டனர். இதனால் மிக அதிகக் கடனைக் கொண்ட
 நாடுகளாக ஏகாதிபத்தியம் இருப்பதுடன், வட்டியாக மிகப் பெரும்
 தொகையை மக்களிடம் இருந்து அபகரிக்கத் தொடங்கியுள்ளனர்.


உல்லாசமாக வாழ நினைக்கின்ற
 மனநிலையை உருவாக்கிவிட்டு, அது 
அந்த மக்களுக்கு தெரியாது கடன் 
சூக்குமமாக உள்ளது. 1997இல் அமெரிக்கா
 அரசின் அன்னியக் கடனோ 5,50,000 கோடி
 டொலராக இருந்தது. இது போன்று 15

 ஐரோப்பிய நாடுகளின் கடன் 5,50,000 கோடி

 டொலராக இருந்தது. இதுவே 2001இல் மேற்கு நாடுகளின் மொத்தக்
 கடன் 20,00,000 கோடி டொலராகியது. இதில் அமெரிக்காவின் கடன்


 7,40,000 கோடி டொலராகவும், ஜப்பானின் கடன் 7,20,000 கோடி
 டொலராகவும், ஐரோப்பாவின் கடன் 5,00,000 கோடி டொலராகவும்
 மாறியது.
இந்தக் கடன் யாரிடம், எப்படி? என்ற கேள்விகள் ஒருபுறம். இதற்கு 
எப்படி எந்த வழியில் வட்டி கட்டுகின்றனர் என்பது மறுபுறம். இது
 மட்டுமல்ல இந்தக் கடனை இந்த அரசுகள் எப்படி அடைக்கும் என்ற
 கேள்விகள் பதிலின்றி உள்ளன. இந்தக் கடனை எதற்காக, யாருக்காக
 வாங்கினர் என்பதும் கேள்விதான். இந்த நிலைமையை மிகக் குறுகிய
 காலத்தில்தான் உருவாக்கினர். இதை உருவாக்கிய மேற்கு அரசுகள்
 மக்கள் நலன்கொண்டவை என்ற பிரமைகளைக் கடந்து, இதற்கு
 விடைகாண முடியாது.
முதலாளித்துவ ஜனநாயகம் அழுகி, மனித இழிவை மனித குலத்துக்கு
 பரிசளிக்கின்றது. மூன்றாமுலக நாடுகளின் மொத்தக் கடனை
 விடவும், பிரதான ஏகாதிபத்திய மையங்களின் கடன் தனித்த
னியாகவே மிஞ்சி நிற்கின்றன. ஆனால் ஊர் உலகத்தையே
 கொள்ளையடித்து உருவாகும், உள்நாட்டு தேசிய வருமானத்துடன்
 ஒப்பிடும் போது இவை மிகச் சிறியதே. மூன்றாம் உலக நாடுகளின்
 கடன்களுக்கான அளவீடுகள் முதல் சுரண்டிச் சேர்க்கும் லாபங்கள்
 ஈறாக, ஏகாதிபத்திய நாடுகளை நோக்கி வருகின்றன. ஆனால்
 ஏகாதிபத்திய கடன்களின் அளவீடுகள், உள்நாட்டில் மீள் சுழற்சிக்குள்
 இருப்பதால், அவை நாட்டைவிட்டு வெளியேறுவதில்லை.
இந்த ஏகாதிபத்தியங்களுக்கு அன்னியக் கடனை விட, மிகப் பெரிய 
அளவில் உள்நாட்டு கடனும் காணப்படுகின்றது. உதாரணமாக 
அமெரிக்காவை எடுத்தால் உள்நாட்டு கடன் மற்றும் அன்னிய கடன்
 மிகப் பெரும் தொகையாக உள்ளது. இப்படி மொத்தமாக அமெரிக்க
 அரசின் கடன் 31,00,000 கோடி டொலர். அமெரிக்க தனியார் நிறுவ
னங்களின் கடன் 14,00,000 கோடி டொலர். மிகப் பெரிய குமிழிப்
 பொருளாதாரம், போலியாக மிதக்கின்றது.

அமெரிக்காவில் மொத்தமாக உள்ள கடன்,
 உலகத்தில் மொத்த தேசிய வருமான
த்துக்கு நிகரானதாக உள்ளது. இது எதை
 உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றது.
 இந்தக் கடனை ஒரு நாளுமே, யாராலும்
 இந்த உலகமயமாதல் என்ற சமூக
 எல்லைக்குள் அடைக்கமுடியாது. இப்படி
 நிதி மூலதனத்தின் சூறையாடும்
 உலகளாவிய போக்கும், திவாலாகிய
 தன்மையும், உலகமயமாதலில் நிரந்தரமான ஒன்றாகவே நிலைத்து 
காணப்படுகின்றது. உழைக்கும் உலக மக்கள் அனைவரும், நிதி 
மூலதனத்துக்கு நிச்சயமாக தொடர் வட்டியைக் கட்டுகின்றனர்.
 உழைப்பின் ஒரு பகுதியை இப்படி கொடுத்தேயாக வேண்டுமென்பது,
 உலகமயமாதலின் அடிப்படையான ஒரு ஒழுங்குவிதியாகிவிட்டது.
 கோடானு கோடி மக்கள், இந்தக் கடன் பணத்தில் இருந்து ஒரு 
சல்லிக்காசைக் கூட நுகர்ந்தது கிடையாது, ஆனால் வட்டி 
கட்டுகின்றனர். இதுதான் முதலாளித்துவ பொருளாதாரம். மக்கள்
 உழைத்துதான் வாழ்கின்றனரே ஒழிய, கடனில் வாழவில்லை.
 கடனை நுகர்ந்தவன் அதைக் கட்டுவதில்லை, அதை நுகாரதவன்தான்
 தனது உழைப்பில் இருந்து வட்டி செலுத்துகின்றான்.
உழைக்கும் மக்கள் கடனுக்கு வட்டியை மட்டும் கட்டுவதில்லை.
 தமது சொந்த சேமிப்புகளுக்கும், ஓய்வூதியங்களுக்கும், காப்புறுதி
 நிதிகளுக்கும் கூட, மறைமுகமாக வட்டியைக் கட்டுகின்றனர்
 என்பதே உண்மை. இங்கு இது சூக்குமமாகவே உள்ளது. உழைக்கும்
 மக்களின் இந்தப் பணத்தை எடுத்துதான், மிகப் பெரிய நிதி மூலத
னங்கள் இயங்குகின்றது. அத்துடன் அதை மூலதன சூதாட்டத்தி
லேயே இறக்கி விட்டுள்ளனர். மக்கள் தமது பணத்துக்கே வட்டி 
கட்டும் அவலம். முதலாளித்துவ பொருளாதாரத்தின் ஒழுக்கமே,
 ஒழுக்கக்கேடாகி இயங்குவது இப்படித் தான்.
1991 1996 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஓய்வூதியம் மற்றும்
 சேமிப்பு நிதியில் இருந்து 33,000 கோடி டொலரை, பத்திர பங்குகளில்
 உலகம் எங்கும் முதலீடு செய்தது. அந்த மக்களின் பணம், இப்படி
 மோசடியாக இயக்கப்பட்டு அந்த மக்களுக்கே அதன் மூலம் வேட்டு 
வைக்கின்றனர். இப்படி உலகெங்குமுள்ள பணத்தைக் கைப்பற்ற,
 அதைத் திருட நிதி மூலதனம் பைத்தியம் பிடித்து அலைகின்றது.

உலகளாவிய ரீதியில் 1989இல் 
ஓய்வூதிய சொத்தின் மதிப்பு 4,30,000
 கோடி டொலராக இருந்தது. இது
 1994இல் 7,00,000 கோடி டொலராகியது
. இந்தப் பணத்தை எப்படி சூறையாடுவது
 என்பது தான், முதலாளித்துவத்தின்
 ஒழுக்கம். அந்த வகையில் இந்த நிதியை
 மோசடியாகவே சூதாட்டத்தில் இறக்கி
 விடுகின்றனர். இந்த வகையில் இந்த ஓய்வூதிய நிதியில் இருந்து
 நடக்கும் முதலீடு 1989க்கும் 1994க்கும் இடையில் 7 சதவிகித்தி
ல் இருந்து 11 சதவிகிதமாக அதிகரித்தது. மொத்த ஓய்வூதிய நிதியில்
 இருந்து சர்வதேச முதலீடு 30,200 கோடி டொலரில் இருந்து 79,000
 கோடி டொலராக மாறியது. உற்பத்தி முதலீடு, நிதி முதலீடு, பங்குச்
சந்தை முதலீடு என, ஒரு குமிழிப் பொருளாதாரத்தில் மக்களின்
 பணம் இறக்கிவிடப்பட்டுள்ளது. இலாப நட்டக் கணக்கிற்குள் இது
 அழிக்கப்படுகின்றது. தனியுடமைதான் உலகின் இருத்தலுக்கான
 உயர்வான சமூக அடிப்படை என்று கூறுகின்ற அரசுகள் தான்
 இதைச் செய்கின்றன. மக்களின் இந்த பணம் தனியாரிடம்
 சென்றடையும் வண்ணம் சந்தையில் கொட்டிவிடுகின்றனர். 
இந்தச் சமூக விரோத பொறுக்கிகளின் ஜனநாயகம், இதை 
சுதந்திரமாகவே செய்கின்றது. சுற்றி வளைத்து மக்களுக்கு எதிராக
 அவர்களின் பணத்தையே பயன்படுத்துகின்றனர்.
இன்று உலகின் செல்வ இருப்பின் அடிப்படைகளாக கருதப்படும்
 பன்னாட்டு நிறுவனங்களின் கதையே இதற்குள் தான் அடங்குகின்றது
. உண்மையில் மக்களின் சேமிப்புகளையும், ஓய்வூதிய நிதிகளையும்,
 காப்புறுதி நிதிகளையும் கைப்பற்றி, இதில்தான் பன்னாட்டு
 நிறுவனங்கள் மிதக்கின்றன. உதாரணமாக 1980இல் அமெரிக்காவின்
 முன்னணி 500 அமெரிக்க நிறுவனங்களின் கடன் 84 சதவிகிதமாக 
இருந்தது என்றால் பாருங்களேன். யாருடைய பணம். மக்களின் 
பணம்தான். இந்தக் கடன் 1999இல் 116 சதவிகிதமாகியது. குமிழிப் 
பொருளாதாரத்தில் மிகப்பெரிய சூறையாடும் நிறுவனங்கள்
 மிதக்கின்றன. தனிச்சொத்துரிமை, மக்களின் பணத்தில் இருந்து
 சம்பாதிக்கின்றது. சம்பாதிக்க பயன்படும் மக்களின் பணம், இப்படி
 குறுக்குவழியில் அழிக்கப்படுகின்றது.
1980க்கும் 1999க்கும் இடையில் நிதி அல்லாத நிறுவனங்கள்
 வாங்கிய கடன் மட்டும் 1,22,000 கோடி டொலராகும். இதில் 15.3
 சதவிகிதம் மட்டுமே மூலதனச் செலவுக்கு என வழங்கப்பட்டது.
 57 சதவிகிதம் அதாவது 69,470 கோடி டொலர் பங்குகள் வாங்கும்
 சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்டது. இப்படி உலகின் முன்னணி
 பன்னாட்டு நிறுவனங்களின் உலகளாவிய மதிப்பு, ஒரு
 சூதாட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. மக்கள் தமது அற்ப
 சேமிப்புகளையும், தமது சொந்த உழைப்பினால் கட்டிய காப்புறுதி 
மற்றும் ஓய்வூதிய நிதியை திரும்ப எடுக்க நினைத்தால்,
 அக்கணமே உலகம் திவாலாகிவிடும். பணம் பணமாக 
இருப்பதில்லை. உண்மையில் அதை திருப்பிக் கொடுக்கும்
 ஆற்றலை, இந்த முதலாளித்துவம் இழந்துவிட்டது. ஒரு நம்பிக்கை,
 பண சுழற்சி என்ற எல்லைக்குள், அரசை நம்பும் மக்களின் 
அறியாமைக்குள் முதலாளித்துவ பொருளாதார நாடகம்
 நடத்தப்படுகின்றது.
மக்களின் பணத்தை அவர்களுக்குத் தெரியாது எடுத்துக் கொண்டு,
 அதைக் கொண்டு அவர்களையே ஒடுக்குகின்றனர். அந்த மக்களே
 தமது பணத்துக்கு வட்டியைக்கட்டவே, உழைக்கக் கோரும்
 சூக்குமமே, உலகமயமாதலின் ஒழுக்கமாகிவிட்டது.

இந்த உண்மை, உலகம் திடீரென திவாலாகும் தன்மையையும் 
பறைசாற்றுகின்றது. உலகளாவிய நெருக்கடிகள் எப்போதும் 
எங்கும் நிகழும். இப்படி ஒரு கத்தி விளிம்பில்தான் 
உலகமயமாதல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதுவே 1930களிலும்
 நடந்தது. 19281935ஆம் ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட
 பொருளாதார நெருக்கடியின் போது, உள்நாட்டு உற்பத்தியில்
 ஏற்பட்ட திடீர் இழப்புகள் கடுமையானதாகவே இருந்தது. அன்று
 இந்த இழப்பின் அளவு எந்தளவில் இருந்தது என்பதைப் பார்ப்போம்.
ஒஸ்ரிஸ் 22.5 சதவிகிதம்   ஜெர்மனி 24.5 சதவிகிதம்  பிரான்ஸ்  
       14.7 சதவிகிதம்   பிரிட்டன் 5.8 சதவிகிதம்   கனடா         
    29.6 சதவிகிதம்   நியூசிலாந்து   14.6 சதவிகிதம்   அமெரிக்கா   
  28.5 சதவிகிதம் போலந்து       20.7 சதவிகிதம்   சோவியத்      
  1.1 சதவிகிதம்   சிலி 30.0 சதவிகிதம்   மெக்சிகோ   
  20.8 சதவிகிதம் பெரு  25.8 சதவிகிதம்   வெனிசுலா    22.6 சதவிகிதம்பங்களாதேசம் 0.9 சதவிகிதம்சீனா 

   8.7 சதவிகிதம்

இந்தியா         0.9 சதவிகிதம்
இரண்டாம் உலக யுத்தம் ஹிட்லர் என்ற தனிப்பட்ட நபரின்
 குணாம்சங்களினால் உருவாகவில்லை. முதலாளித்துவ நெருக்கடி
 தான் ஹிட்லரை உருவாக்கியது. வீங்கிவெம்பி உருவான
 மிதப்புகளின் போது, ஏற்படும் நெருக்கடிகள் எப்போதும் உலகளவி
ல் பாரிய அதிர்வை உருவாக்கிய வரலாற்றையே நாம் காண்கி
ன்றோம். தனியார் சொத்துரிமை அமைப்பில், மூலதனம் எப்போதும்
 தூக்கு கயிறுடன் தான் சந்தையில் சுதந்திரமாக இயங்குகின்றது.
யாரை தூக்குவது என்பதும், அதில் தானே தற்கொலை செய்வது
 வரை இது தன்னளவில் ஓய்வதில்லை. இதில் இருந்து தப்பவும்,
 மீண்டும் உலகை அழிப்பதும், உலகை ஆக்கிரமிப்பதும்
 முதலாளித்துவத்தின் மீள் மீட்சியாகின்றது. இதற்கு உலக
யுத்தங்கள் மட்டுமே, ஒரு வழிப் பாதையாக அவர்கள் முன் உள்ளது.
 உலக யுத்தத்தை, முதலாளித்துவ மீட்சிக்காகவே மூலதனம்
 எப்போதும் தேர்ந்தெடுக்கின்றது. யுத்தம் தொடங்கியவுடன் மீட்சியும்
 உருவாகின்றது. இதையே இரண்டாம் உலகயுத்தம் எடுத்துக்
 காட்டுகின்றது.

இரண்டாம் உலக யுத்தம் தொடங்
கியவுடன், உள்நாட்டு நெருக்கடியில்
 இருந்து மீண்டு உற்பத்தி மிதப்பு
 உருவாகின்றது. அதாவது 1938,1944ஆம்
 ஆண்டுகளில் உற்பத்தி மீண்ட
 தரவுகளை காண்போம்:
ஒஸ்ரிஸ் - 22.5 சதவிகிதம் ஜெர்மனி - 24.2 
சதவிகிதம் பிரான்ஸ் - 49.7 சதவிகிதம்
 பிரிட்டன் - 22.0 சதவிகிதம்  கனடா - 75.4 சதவிகிதம்நியூசிலாந்து - 9.6 சதவிகிதம் 
 அமெரிக்கா - 114.4 சதவிகிதம் 
சிலி - 20.0 சதவிகிதம்   மெக்சிகோ - 39.9 சதவிகிதம்  பெரு - 16.3 சதவிகிதம் 
 வெனிசுலா - 18.1 சதவிகிதம்  இந்தியா - 17.1 சதவிகிதம்
தாய்வான் - 39.7 சதவிகிதம்
உலக யுத்தம் ஏன் தேவைப்படுகின்றது என்பதை இந்தத் தரவுகள் அம்பலமாக்கிவிடுகின்றன. முதலாளித்துவத்தின் தேர்வுதான் உலக
 யுத்தங்கள். இல்லையென்றால் முதலாளித்துவம் வாழமுடியாது
.இப்படி முதலாளித்துவப் பொருளாதார மீட்சிக்கான மூலதனத்தின்
 உலக யுத்தம், பல நாடுகளை மீளவும் செழிப்பாக்கி விடுகின்றது.
 விதிவிலக்காக முற்றாக ஆக்கிரமிக்கப்பட்ட, யுத்த பிரதேசங்கள்
 மட்டுமே தொடர்ச்சியாக இழப்பைச் சந்திக்கின்றன. இந்த மீட்சி 
கூட இராணுவத்துறை சார்ந்ததாகவே தொடங்குகின்றது. பின்னால் 
அதைக் கொண்டு சமூக அடிப்படைகளையே அழித்து, அந்த 
இடிபாடுகளின் மேல் மனித உழைப்பின் மீட்சி முதலாளித்துவத்தின்
 ஆன்மா மீட்சியாகிவிடுகின்றது. 
இப்படி இன்று உலகமயமாக்கலில் காணப்படும் கத்தி விளிம்பு
 பொருளாதாரத்தின் கதியும் இதுதான். கடன் பொருளாதாரத்தில்
 கட்டமைக்கப்பட்ட எல்லைக்குள், உலகின் வளங்களைச்
 சூறையாடுவது என்றுமில்லாத ஒரு சமூக அழிப்பாகிவிட்டது.
சமூகம் சார்ந்த அரசு நிறுவனங்களை, சமூகத்தின் பொறுப்பில்
 இருந்தவைகள் எல்லாம் சூறையாடப்படுகின்றன. அமெரிக்காவின்
முன்னணி 500 நிறுவனங்களின் கடன் 116 சதவிகிதமாக உள்ள
 நிலையில், இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களாக உள்ளது.
 இவை உலகில் மிகப் பெரிய நிறுவனங்களும் கூட. சமூகம் சாந்த
 உலகப் பொருளாதாரத்தை, சுவடு தெரியாது அழித்து வருபவையும்
 இவைதான். ஆனால் இவற்றுக்கான மூலதனம் மக்களின் உழைப்பில்
 இருந்து உருவாகும் அற்ப சேமிப்புகளும், அவர்களின் வாழ்வுக்காக
 அவர்கள் கொடுத்த சமூக ஆதார நிதிகளுமே என்ற உண்மை
 உலகமயமாதலில் சூக்குமமாக உள்ளது.

இப்படிப்பட்ட கடனை அடிப்படையாகக்
 கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்,
 கடனுக்கு வெளியில் தாமே முன்னின்று
 ஒரு நிதிச் சூதாட்டத்தையும்
 நடத்துகின்றனர். அமெரிக்கக் கம்பெனிகள்
 2000ஆம் ஆண்டின் முதல் நான்கு
 மாதத்தில், பங்குச் சந்தையில் தனது
கடன் கட்டமைப்பிலான பொருளாதாரம்
சார்ந்த குமிழிப் பங்குகளின் விற்பனையை
19,60,000 கோடி (19.6 டிரில்லியன்)
 டொலருக்கு நடத்தியது. இந்தச் சூதாட்டம் 1994இல் 6,30,000 கோடி
 (6.3 டிரில்லியன்) டொலராக மட்டுமே இருந்தது. கடனாலான ஒரு
 நிறுவனத்தை முன்நிறுத்தி, பங்குச் சந்தை மூலம் மக்களின் பணம்
 உறிஞ்சப்படுகின்றது.
மூலதனமே கடனாக இருக்கும் இந்த குமிழிப் பொருளாதார
சூதாட்டத்தின் மூலம், இந்த நிறுவனங்களின் லாபம் பெருகுகின்றது.
 1982க்கும் 1995க்கும் இடையில் இலாப அதிகரிப்பு 160 சதவிகிதமாக
 அதிகரித்தது. இப்படிக் கடன் பொருளாதார சூதாட்டமே வக்கிரமாகி
 வெதும்புகின்றது. உலகளாவிய மக்களது கடுமையான தொடர்
 இழப்புகளே, மூலதனத்தின் மிதப்புகளை உருவாக்குகின்றது. இங்கு
 இந்த மிதப்புகள் எதுவும், அரசின் கடனையும் சரி தனியார்
நிறுவனங்களின் கடனையும் கூட மீட்பதில்லை. சூறையாடல்
சார்ந்த மிதப்புகள், தனிநபர் சொத்துக்களாகவே குவிகின்றது.
இது அமெரிக்காவில் மட்டுமல்ல, மேற்கு நாடுகளிலும் பொதுவான
 ஒன்றாகிவிட்டது. பிரான்சு அரசின் கடனை எடுத்துப் பார்ப்போம்.
1984 29.0 சதவிகிதம்1990 35.1 சதவிகிதம்1995 54.6 சதவிகிதம் 2000 57.3
 சதவிகிதம் 2004 64.0 சதவிகிதம்2006 66.7 சதவிகிதம்
பிரான்சு தேசத்தின் கடன் அதன் தேசிய வருவாயில் மிகப்
பெரிதாகவே மாறிவருகின்றது. இப்படிக் கடன் அதிகரிக்கும்
 சமகாலத்தில்தான், பல அரசு நிறுவனங்கள் தொடர்ச்சியாகவே
தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. இந்தத் திடீர் நிதி மூலதனம்
 ஒரு நாட்டின் செல்வத்தை எவ்வளவு வேகமாக உறிஞ்சி
 எடுக்கின்றது என்பதை நாம் துல்லியமாகவே இங்கு மேற்கிலும்
 இனம் காணமுடிகின்றது. என்ன நடக்கின்றது? உலகில் பணக்காரக்
 கும்பல் கொழுத்து வருகின்றது. மக்களின் பொதுச் சொத்துக்களை
 அரசு தனியார்மயமாக்க, எங்கும் தனியார் செல்வக் குவிப்புகள்
உருவாகின்றது. உற்பத்திக்கு வெளியில் நிதி மூலதனத்தின் மூலமே,
பெருமளவில் தனியார் செல்வம் உருவாக்கப்படுகின்றது. சுரண்டல்
 என்பது உற்பத்தி மீதான நேரடியான ஒன்றாக, பெருமளவில்
 இருந்தது. இன்றோ இவை மறைமுக வழிகளின், நிதி மூலதனத்தின்
 நவீன சுரண்டலாகவும் எகிறிக் குதிக்கின்றது.
பிரான்சின் கடன் 2004இல் 79,600 கோடி ஈரோவாகியது. இந்தக் கடனில்
 42 சதவிகிதம் பிரான்சல்லாத அன்னியரிடம் இருந்து பெறப்பட்டது.
 ஒவ்வொரு பிரான்சு மக்களுக்கும் அண்ணளவாக 15,000 ஈரோ கடன்
 உள்ளது. அடிப்படைக் கூலி பெறும் ஒரு தொழிலாளியின்
 வருடாந்தரக் கூலியை விட, இந்தத் தனிநபரின் கடன் தொகை
 அதிகமானது. இப்படி உள்ள கடனை, இந்தச் சமூகத்தால் ஒருநாளுமே
 அடைக்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் முடிவு என்பது,
 நாட்டை திவாலாக அறிவிப்பதில்தான் போய்முடியும்.
1983இல் ஜப்பானின் தேசிய வெளிநாட்டு கடன் 26,400 கோடி டொலராக
 இருந்த அதேநேரம், வெளிநாட்டில் வைத்திருந்த சொத்து 30,000 கோடி
 டொலராகும். உலகின் மிகப் பெரிய வங்கிகள் எட்டில் 7
ஜப்பானுடையதாக இருந்தது. முதல் 100 வங்கியில் 25 ஜப்பõனு
டையதாக இருந்தது. முன்னணி 500 வங்கியில் 98 ஜப்பானுடையது
. உலக வங்கி கடனில் 25 சதவிகிதம் ஜப்பானுடையதாக இருந்தது.
 அமெரிக்காவின் அன்னிய கடன்கனில் 18 சதவிகிதத்தையே ஜப்பான்
 கொண்டிருந்தது. உலகப் பங்குச் சந்தையில் மூன்றில் ஒன்றை,
 ஜப்பானின் பங்குச் சந்தை கட்டுப்படுத்தியது. இப்படி நிதி மூலதனம்
 தனியாராகி சூறையாடுகின்றது. மறுபக்கத்தில் உள்நாட்டில் கடனை
திணித்து, மக்களை சூறையாடுகின்றது.
ஜப்பான் 2002 2003ற்கான நிதி ஆண்டில் கடன் வாங்கும் தொகை 18,850


 கோடி டொலரில் இருந்து 89,750 கோடி டொலராக அதிகரித்தது.
 2003,2004ற்கான நிதி ஆண்டில் கடன் வாங்கும் தொகையை 57,750
 இருந்து 1,25,650 கோடி டொலராக அதிகரித்தது. இப்படி இந்தக்
கடன்கள் மூலம், உலகளாவிய நிதித் தலையீட்டை அதிகரித்துள்ளது.
 அதேநேரம் 2003இல் ஜப்பானிய அரசின் கடன், அதன் தேசிய
 வருமானத்தில் 133 சதவிகிதமாகியது. அதாவது கடன் 6,70,12,000
 கோடி யென்னாக (6,70,120 கோடி டொலராக) மாறியது. 2010இல்
 கடனுக்கான வட்டியாக மட்டும் 4,30,000 கோடி யென் (4300 கோடி
 டொலர்) கட்டும் நிலைக்கு ஜப்பான் மாறியுள்ளது. ஜப்பான்
 அரசின் கடன் 2004இல் தேசிய வருமானத்தில் 152 சதவிகித
மாகியுள்ளது. சூப்பர் ஏகாதிபத்தியங்கள் என்பது, கவர்ச்சியாக
 போர்த்திய வெற்று உடல்கள்தான். தனியார் சொத்துடைமை
 ஏகாதிபத்தியத்தின் உண்மையான உடல்கள் ஆகும்.
இப்படித்தான் ஏகாதிபத்தியம் எங்கும். மேற்கின் கடன், அவற்றின்
 உள்நாட்டு தேசிய வருமானத்தில் 78 சதவிகிதமாகியுள்ளது. இதில்
 15 ஐரோப்பிய உறுப்பு நாடுகளின் கடன் தேசிய வருமானத்தில் 73
 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவின் கடன் உள்நாட்டு தேசிய
வருமானத்தில் 63 சதவிகிதமாக உள்ளது. விதிவிலக்கு
 ஆஸ்திரேலியா மட்டும்தான். அதன் கடன், தேசிய வருமானத்தில்
16 சதவிகிதமாக உள்ளது. இப்படி மக்கள் மேல், கடன் மிகப் பெரிய
அளவில் பெருத்துச் செல்கின்றது. கடன் மீளக் கொடுக்க முடியாத
 அளவில், முந்திய நிலையைக் கடந்து செல்கின்றது. வட்டி
 அளவீடுகள், கடனின் முந்திய மொத்த தொகையை விட தாண்டிச்
செல்கின்றது. இப்படி உலகளாவிய சூறையாடல் மூலம், உற்பத்திகள்
மீதான பொது நெருக்கடியை உருவாக்குகின்றனர்.
தனியார் உற்பத்திகள் கூட கடன் என்ற கட்டமைப்பை ஆதாரமாகக்
 கொண்டிருப்பதால், ஒரு தொழிலாளி முதலாளியின் இலாபத்துக்
காகவும் முதலாளி வாங்கிய மூலதனத்தின் வட்டிக்காகவும், அரசு
 வாங்கிய நிதி மூலதனத்தின் வட்டிக்காகவும் உழைக்க கோரப்படு
கின்ற, ஒரு உலக ஒழுங்கு அரங்கேறுகின்றது. இங்கு அரசியல்
 என்பது சதிராட்சியே. ஏகாதிபத்தியங்கள் மிகவும் திட்டமிட்ட
வகையில் இதைக் கையாளுகின்றன. மக்களின் அற்ப சேமிப்பு
 நிதிகளை வங்கிகளில் இருந்து எடுத்து, மிகப் பெரிய கடன்களையே
 வழங்குகின்றன. இதற்காக சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதத்தை
 திடீரென குறைப்பதன் மூலம், நிதி மூலதனத்தின் இலாப விகிதத்தை
 அதிகரிக்க வைப்பது உலகெங்கும் நடக்கத் தொடங்கியுள்ளது.
சிறுசேமிப்பு மீதான வட்டி விகிதத்தைக் குறைப்பதன் மூலம்,
 மக்களின் சேமிப்புக்குக் கொடுக்க வேண்டிய தொகை குறையும்
போது, அது மற்றொரு சிறிய பிரிவுக்கே அந்தப் பணம் போய்ச்
சேர்கின்றது. திடீரென கிடைக்கும் வட்டி மூலமான அதிக லாபம்,
 நிதி மூலதனத்துக்கு அதிர்ஷ்ட தேவதையாக காட்சியளித்து வரம்
 கொடுக்கின்றது.

2000 2001இல் அமெரிக்க பங்குச் சந்தை
 வீங்கி வெம்பி, உற்பத்தி முதலீடுகள்
வீழ்ச்சிக் கண்டன. இதன் நேரடி
 விளைவாக 20002001இல் 11 தடவைகள்
 அமெரிக்க சேமிப்புக்கான வட்டி
விகிதங்களை குறைத்தது. இதனால்
 மக்களின் சேமிப்பு மீதான இழப்பு
 தவிர்க்க முடியாத விதியாகியது.
உதாரணமாக அமெரிக்காவில் மக்களின்
 சேமிப்பு பணத்துக்கு வட்டிக் குறைப்பு
செய்த போது, 8.4 கோடி மக்களுக்குக்
 கிடைக்க வேண்டிய 40,000 கோடி டொலர் பணத்தை அவர்களுக்கு
 இல்லாததாக்கியது. இந்தப் பணம் நிதி மூலதனத்துக்கு திடீரென
 கிடைத்த, ஒரு மிகப்பெரிய திடீர் கொள்ளையாகும். மக்களின்
 வறுமை,
இதன் மூலம் அதிகரித்தது. பணக்காரன் கொழுப்பது மேலும்
 வக்கிரமாகியது. இது உலகளவில் எல்லா நாடுகளிலும்
 கையாளும்படி, ஏகாதிபத்தியங்கள் நிர்ப்பந்திக்கின்றன. உலகளாவில்
 உள்ள நிதிகள் மீது ஏகாதிபத்தியங்களே அதிகாரம் கொண்டிருப்பதால்,
 இது திடீர் பணக் குவியல்களை திடீர்திடீரென உருவாக்குகின்றது.
இதன் மூலம் முதலீட்டுக்கான நிதிக் கையிருப்பும், நிதி மூலதனமும்
 மேற்குநாடுகளில் அதிகரித்து வருகின்றது. அத்துடன் மக்களின்
சேமிப்புகள், காப்புறுதி நிதிகள், ஓய்வூதிய நிதிகள், முதலீட்டு
நிறுவனங்களின் நிதி என அனைத்தும், இன்று ஒரு மிகப் பெரிய
நிதி மூலதனத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச
 ரீதியாக உலகெங்கும் உள்ள நிதியங்கள் கூட, எந்தக் கட்டுப்பா
டுமின்றி சூதாட்டங்களில் இறக்குகின்றன. உலகளாவிய மக்களின்
சமூக நிதி ஆதாரங்கள் திவாலாகிவிட்ட நிலையிலும், அவை
 போலியான சுழற்சி மூலம் பாதுகாக்கப்படும் நிலையே
 தொடருகின்றது.
இப்படிக் குவிந்து வரும் போலியான நிதி, எல்லை கடந்த
முதலீட்டுக்கான தயார் நிலையை எட்டுகின்றது. இப்படி உருவான
 நிதி மூலதனம் 1995இல் 9,80,000 கோடி டொலராகியது. இது 1990இல்
 இருந்ததை விடவும் 75 சதவிகிதம் அதிகமாகும். நிதி முதலீட்டுக்கான
 நிதியின் அதிகரிப்பு, ஆண்டுக்கு 1,96,000 கோடி டொலராக இருந்தது.
 நம்ப முடியாத அளவுக்கு, இதில் இலகுவாக இலாபம் அடைய
முடியும் என்ற உலக ஒழுங்கில் இருந்து இது உருவாகின்றது.
இந்த அதிகரிப்பு, மேற்கு நாடுகளின் மொத்த தேசிய வருமானத்தில்
 10 சதவிகிதமாக இருந்தது. இப்படி சூதாட்டத்துக்கு கொண்டுவரக்
 கூடிய வகையில், 1990இல் உலகில் பரஸ்பர நிதியும், ஓய்வூதிய
நிதியும் 2,00,00,000 கோடி (200 டிரில்லியன்) டொலராகியது. இது
 1980இல் இருந்ததை விட 10 மடங்கு அதிகமாகும். நிதி மூலதனத்தின்
 உலகளாவிய ஆதிக்கம், உற்பத்தி மூலதனத்தை விடவும் மிகப்
பிரமாண்டமான ஒன்றாகியுள்ளது. இதுவும் நேரடியான உற்பத்தி
 மீது தான், தனது இலாப வேட்கைக்கான களத்தை உருவாக்கின்றது.
 வேடிக்கை என்னவென்றால், உற்பத்தியில் கிடைக்கும் இலாப
 விகிதத்தை விட, அதிக இலாப விகிதத்தை நிதி மூலதனம்
 கோருகின்றது.
இது இதனடிப்படையில் இயங்கும் போது, பல நிதி மூலதனங்களும்
 நிதி மூலதனத்திடமே திவாலாகி விடுகின்றது. சிலந்தி வலையாகி
விட்ட கடன் என்ற கட்டமைப்பு, உலகம் முழுக்க
 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கே
 வழியற்ற தேசங்களாக, உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
 உலகமே திவாலாகிவிடும் நிலையில், நிதி மூலதனம் நடத்தும்
 சூதாட்டம் போலியான பொருளாதார குமிழிகளாக காணப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக