கிழக்கிலங்கை முஸ்லிம் படுகொலையும் சிவந்து போன தென் தமிழீழமும்
ஆகஸ்ட். இந்த மாதத்திற்கு ஒரு தனி வரலாறே உண்டு
“சிவப்பு ஆகஸ்ட்“. இலங்கையின் கிழக்கு மாகாண முஸ்லிம்கள்
முசல்லாவை கண்ணீரால் கழுவும் மாதம். தமீழீழ விடுதலை எனும்
இலக்கற்ற பாசிஸ ஆயுத போராட்டம் தனது சகோதர இனத்திற்கு
அவை. தமிழின அழிப்பிற்கெதிராக இன்று எழுந்து நின்று மனித உரிமை
பேசும் புலம் பெயர் தமிழர்கள் அன்று இவை தமிழர் விடுதலையின்
பெயரால் நிகழ்த்தி முடிக்கப்பட்ட போது மௌனம் காத்த பொழுதுகள்
இன சங்காரம்
அன்று ஆகஸ்டில்
புலிகளாலும்
நிழல் புலிகளாலும்
நிகழ்த்தி
முடிக்கப்பட்டது. அதை
படித்த
தமிழ் சமூகம்
நியாயப்படுத்தி
வக்காலத்து வாங்கியது. வெட்டியும்
சுட்டும் முஸ்லிம்கள் துடிக்க துடிக்க படுகொலை
செய்யப்பட்டனர். பள்ளிவாயல்களில் சஜ்தாவில்
இருந்த முஸ்லிம்கள் சகட்டு
மேனிக்கு சுடப்பட்டனர். (ரமழான் மாதத்தில் கிராமங்கள் சுற்றி
வளைக்கப்பட்டு ஒட்டு மொத்த கூட்டு கொலை நிகழ்த்தப்பட்டது.
இதில் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள்
அப்பாவி ஏழை முஸ்லிம்கள் வெகுவாக
வேட்டையாடப்பட்ட மாதமது.
திருகோணமலையின்
மூதுர் கிராமம் விடுதலை புலிகளால் ஒரு
முழு இராணுவ தாக்குதல் பாணியில் பெரும்
எடுப்புடன் சுற்றி வளைக்கப்பட்டு முஸ்லிம்
ஆண்கள் சாரி சாரியாக காட்டுப் புதர்களிற்கு
கொண்டு செல்லப்பட்டு படுகொலை
செய்யப்பட்டனர். இவை வார்த்தைகளால் வடிக்க முடியாதவை.
உலகில் நடை பெற்ற பிரசித்தமான இனப்படுகொலைகளுடன்
எவ்விதத்திலும் குறைந்தவையல்ல கிழக்கு மாகாண முஸ்லிம்
இடைக்கால ரணில் அரசாகட்டும்,
பின்னைய சந்திரிகா அரசாகட்டும் புலிப்பயங்கரவாதிகளை மெல்ல
புகவிட்டு தாக்குதலை வேடிக்கை
பார்த்ததே உண்மை. அநியாயமாக
படுகொலை செய்யப்பட்ட அப்பாவி
முஸ்லிம்களின் உறவுகள் ஆகஸ்டின்
ஓவ்வொரு வருடமும் தம் கொல்லப்பட்ட
அல்லது காணாமல் போன உறவுகளிற்காக ஏங்குகிறார்கள். அவர்களின் துக்கத்தில்
உலகளாவிய முஸ்லிம் உம்மா என்ற அடிப்படையிலும் எமது இஹ்வான்கள்
என்ற ரீதியிலும் நாமும் பங்கெடுப்போம். அவர்களிற்காக
இந்த பிரார்திப்போம்.
கிழக்கிலங்கை முஸ்லிம்களின் சமூக பாதுகாப்பிற்கான
அனைத்தையும் முடியுமானவரை செய்வோம். ஆமீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக