ஆகஸ்ட் 24, 2011


”சுதந்திர போராளிகள்” - MADE IN AMERICA - DESIGNED BY FRANCE

லிபியாவில் புரட்சி ஏற்பட வலுவான காரணங்களே இல்லை. ஆனால்
 முதலில் அமெரிக்க மேற்குலக ஊடகங்கள் “மக்கள் புரட்சி” என 
செய்திகளை வெளியிட்டன. பின் சிறிது நாட்களில் அது 
பழங்குடியினரின் ஆயுதக்கிளற்ச்சி” என பெயர் மாறியது. மீண்டும்
 மேற்குலக ஊடகங்கள் முழங்கின. “லிபியாவின் தென் பகுதி
 மக்களினதும் பெங்காஷி துறைமுக நகர் மக்களினதும்
 விடுதலை” என செய்திகள் வெளியிட்டன. பின்னர் “இஸ்லாமிய
 போராளிகள், ஸலபிஸ்ட்கள்” என கதைவிட்டன. இறுதியாக
 “சுதந்திர போராளிகள் ” (FREEDOM FIGHTERS) எனும் பதத்தை 
பிரஸ்தாபிக்க ஆரம்பித்துள்ளன. சுதந்திர போராட்டம் நடாத்த 
லிபியாவை எந்த நாடு ஆக்கிரமித்துள்ளது என்பது இன்றும் விடை
 கிடைக்காத கேள்வியாகவே இருக்கின்றது.

பல எபிசய்ட்களையும், பனரோமாக்களையும்,
 டொக்கியுமென்றிகளையும் கொலிவூட் பாணியில் கடாபிக்கு
 எதிராக வெளியிட்டன அமெரிக்க ஊடகங்கள். லிபியாவின்
 மக்கள் புரட்சிக்கு ஏதுவான காரணங்களை பற்றி பேசாமல்
 கேர்ணல் கடாபியின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் அவரது
 ஓரு சர்வாதிகாரிக்கே உரிய அரஜக குணங்கள் பற்றியுமே
 மேற்கின் ஊடகங்கள் அலசி ஆராய்ந்தன. 

கடாபியின் இராணுவத்திற்கு 
அப்பால் ஆபிரிக்காவின்
 புரூண்டியிலும், லைபீரியாவில்
 இரத்த ஆற்றினை ஓடச் செய்த
 மேஸனரியினரை (கூலிப்படை) 
களமிறக்கி மக்களை படுகொலை
 செய்ய ஒழுங்குகளை செய்தது 
இஸ்ரேல்.   பிரான்சிய விமானிகளை 
ஒப்பந்த அடிப்படையில் 
உத்தியோகப்பற்றற்ற விதத்தில் கடாபிக்கு வழங்கியது
 பிரான்சிய உளவுத்துறை. இதில் பெரும் பங்கு
 வகித்தது DGSE (General Directorate for External Security).

நேட்டோவை களமிறக்கி பரவலான
 வான் தாக்குதலை மேற்கொண்டனர்.
 “சுதந்திர போராளிகள்” என மேற்கின்
 ஊடகங்கள் பதவிகளும் பட்டங்களும் கொடுக்கப்பட்டவர்களிற்கு 
ஆயிரக்கணக்கில்M16, Gold 
Commando, Bazooka போன்ற 
அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்கள் 
கையில் புளங்கியதன் அற்புதம் 
அமெரிக்காவிற்கு மட்டுமே வெளிச்சம். இப்போது திரிப்போலி
 நகர்புறச் சண்டைக்கு ஏதுவாக இஸ்ரேலிய தயாரிப்பான 
'UZI" Sub Machine Gun எவ்வாறு கைகளில் முளைத்துள்ளது
 என்பதை ஸியோனிஸம் மட்டுமே நன்கறியும். ஆனால் 
வீடியோக்களிலும் புகைப்படங்களிலும் A.K.47 துப்பாக்கிகள் 
ஏந்தும் சுதந்திர போராளிகளே கூகிலிலும், யாகூவிலும் வலம் 
வருகிறார்கள். பெங்காசியில் American Black Waterகம்பனிக்கு
 சொந்தமான கொந்தாரத்து இராணுவ பயிற்சியாளர்கள்
 எவ்வாறு தரையிறங்கினர் என்பதும் மரணித்த கேள்வியே.
 சுமார் 50000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுதந்திர
 போராளிகளிற்கு பயிற்சி எங்கே எப்போது வழங்கப்பட்டது? 


சீனா, ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளை சேர்ந்த
 எண்ணெய் கம்பனிகள் லிபியாவின் எண்ணைய் 
அகழ்வையும், விநியோகத்தையும் குத்தகைக்கு எடுக்க 
பேச்சுக்கள் நடாத்த முற்பட்ட 2010 ஒக்டோபரிலேயே 
லிபியாவை கைப்பற்றும் அமெரிக்க பிரித்தானிய கபட 
திட்டம் பென்டகனால் வடிவமைக்கப்பட்டு 
ஒழுங்குபடுத்தப்பட்டு விட்டது.


லொக்கர்பீ குண்டு வெடிப்பிற்கு பகரமாக அமெரிக்காவிற்கு
 பல டிரில்லியன் டொலர்களை கடாபி இறுதி காலங்களில்
 செலுத்தினார். அதை சாக்காக வைத்து பிரித்தானியாவும்
 தன் பங்கிற்கு லண்டன் சந்தையில் முதலீடு செய்யப்பட்ட 
லியிய சொத்துக்களை ஏகபோகமாக முடக்கிக்கொண்டது. 
 ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கவே கேர்ணல் கடாபி
 சீனா, ஜேர்மன், இத்தாலி போன்ற நாடுகளுடன் எண்ணெய்
 அகழ்வின் குத்தகை பற்றிய பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தார்.


லிபிய எண்ணெய் வயல்களை பங்கு போடுவதற்கும்,
 இஸ்ரேலிய இராணுவ கட்டமைப்பிற்கு தடையில்லாத 
எண்ணெய் விநியோகத்தை மேற்கொள்ளவுமே
 மேற்குநாடுகள் சடுதியாக லிபியா மக்கள் புரட்சி எனும்
 செயற்கை புரட்சியை உருவாக்கின. இனி என்ன. இவற்றிற்கு 
இடையிலான பங்கு பிரச்சனை தான் பாக்கியிருக்கிறது..



திரிப்போலி நோக்கிய நகர்வில் பெங்காஸியை கைப்பற்றிய
 ஆயுத போராளிகளை கலக்க விடாமல் பார்த்துக்கொண்டுள்ளது 
நேட்டோ. பெங்காஷி முற்றுகைக்கு தலைமை வகித்த
 ஜெனரலை கொலை செய்ததும் அமெரிக்க சீ.ஐ.ஏ.யின் 
கைங்கரியமே. திரிப்போலியை கைப்பற்றியவுடன் 
ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் ஈராக்கிலும், 
ஆப்கானிஸ்தானிலும் செய்தது போல குழு மோதல்களை 
உருவாக்கி அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் 
மேய்ப்பராக தங்களை காட்டிக் கொள்ள பார்க்கிறது 
மேற்குலகு. கடாபியையோ அல்லது அவரிற்கு அடுத்த
 கட்ட தலைவர்களையோ அழிக்காமல் நிச்சயமாக 
வைத்திருக்கும் அமெரி்க்கா. நாளை லிபியாவில் ஒரு
 இஸ்லாமிய ஆட்சி மலருமானால் இவர்கள் மீண்டும்
 தேவைப்படுவார்கள் இவர்களிற்கு.


ஈராக், ஆப்கானிஸ்தான் போன்றவற்றில் வளங்களை மட்டும் 
கொள்ளையடிக்கவில்லை. மாறாக அங்குள்ள மக்களின்
 வாழ்க்கை கட்டமைப்பையும் சீர்குலைத்துள்ளனர். 
குரோதம், பகைமை, பழிக்கு பழி போன்ற குணங்களில்
 ஊறிய மக்கள் கூட்டமாக அவர்களை மாற்றியுள்ளது 
அமெரிக்கா. அதையே நாளை லிபியாவிலும் 
செய்யப்போகிறது. மக்களின் இரத்தங்களை ஆறாக
 ஓடச்செய்து அதில் தங்கள் வருமானங்களை 
கொள்ளையடிக்கும் இந்த காட்டேரி தேசங்களின் 
பின்னால் ப்றீமேஷனும், ஸியோனிசமுமே பின்புல 
சக்திகளாக தொழிற்படுகின்றன என்பது தத்துவம்
 சார்ந்த விடயமாகும். இன்னொரு முஸ்லிம் நாட்டின் 
இரசாயன தாக்குதல் நடாத்தும் ஆற்றல் மிக்க இராணுவம்
 பிளவு படுத்தப்பட்டு தம்முள் மோதும் துர்பாக்கிய 
நிலையை அமெரிக்கா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.


உமர் முக்தார் பெற்றுத்தந்த லிபிய விடுதலையை
 தட்டில் வைத்து அமெரிக்காவிடம் தாரை 
வார்த்துள்ளார்கள் இந்த “சுதந்திர போராளிகள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக