பிப்ரவரி 18, 2011

Libiya

ஆர்பாட்டங்கள் கடாபியை பிடுங்கும் புரட்சியாக மாறுமா ?

M.ரிஸ்னி முஹம்மட்

   லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக் கடலையும்  கிழக்கின்  எல்லையில் எகிப்தையும் , தென்கிழக்கு எல்லையில்   சூடானையும் , தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன துனீசியாவினதும் எகிப்தினதும் தாக்கம் அதிகமாக லிபியாவை தாக்கிவருகின்றது துனீசியா மக்கள் புரட்சி அதை தொடர்ந்த உலகை உலுக்கி நிற்கும் எகிப்திய புரட்சி என்று தொடரான மக்கள் புரட்சி ஆர்பாட்டங்கள் அரபு முஸ்லிம் நாடுகளின் மேற்குலக சார்பு சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக நடை பெறுகின்றது .
‘ஒன்றின் வீழ்ச்சி அதன் வழியில் அதன் அருகில் அதன் மாதிரிகளை கொண்டு விளங்குகின்றது’ மேற்குலக சார்பு சர்வாதிகாரம் மீது சுழல் சூறாவளியாய் வீசுகின்றது கடந்த இரு வாரங்களாக லிபிய மக்கள் கடந்த 40ஆண்டுகளாக அடக்குமுறைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி கடாபிக்கு எதிராக பல்லாயிரக்கணக்கில் ஆர்படங்களில் ஈடுபடுகின்றனர் 
இன்று ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் லிபியாவின் இரண்டு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி ஆர்படத்தில் ஈடுபட்டனர் லிபியாவில் கடாபியின் ஆட்சியில் ஊடகங்கள் எதுவும் சுதந்திரமாக இயங்கமுடியாது என்பதால் அங்கு சரியான தகவல்களை பெற்றுகொள்வது மிகவும் கடினமாக பணியாக இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது இன்று வெள்ளிகிழமை மட்டும் ஆர்பாட்டம் செய்யும் மக்கள் மீது கடாபின் காவல் படைகள் நடத்திய தாக்குதலில் ௫௦ பேர் கொல்லப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்படுவதாக அல் ஜஸீரா தெரிவிக்கின்றது
ஆர்பாட்டங்கள் புரட்சிகள் நடைபெறும் நாடுகளான துனீசியா, எகிப்து , யெமன், ஜோர்டான் அல்ஜீரியா, பஹ்ரைன் பலஸ்தீன், போன்று லிபியா அமெரிக்கா சாராதது எனினும் கடந்த ௫ வருடங்கள் மேற்கின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் கடாபியின் மகன் சைபுல்லாஹ் ஒரு முழுமையான அமெரிக்க விரும்பி என்று தெரிவிக்கபடுகின்றது, இங்கு அடக்கு முறை முழுவதும் மக்கள் மீது காட்டப்படுகின்றது கடாபியை எதிர்க்கும் அந்தவொரு நபரும் லிபியாவில் வாழமுடியாது எதிர் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் எதுவும் அங்கு இயங்கமுடியாது ஏன் கடாபிக்கு எதிராக எதையும் எவரும் வாய் திறந்து பேசமுடியாது லிபியாவின் சிறைக்கூடங்கள் இஸ்லாம் போதிக்கும் மனிதர்களால் நிரம்பி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய கிழக்கில் மிகவும் மோசமான அடக்குமுறை இடம்பெறும் நாடுகளில் லிபியா முதல் தரத்தில் உள்ளதாக பார்க்கபடுகின்றது கடாபி யின் அடக்கு முறைகளை மீறி வலுவான இஸ்லாமிய சக்திகள் அங்கு வளந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது மிகவும் மோசமான அடக்குமுறை இடம்பெறும் நாடு என்பதால் இயங்கும் எந்த இஸ்லாமிய அமைப்புகளும் தம்மை வெளிப்படுத்துவதில்லை அல் ஜஸீராவுக்கு செய்திகை வழங்கும் செய்தியாளர்கள் கூட இரகசியமாகத்தான் இயங்குகின்றனர் என்பது குறிபிடத்தக்கது.
கடாபி தற்போது இடம்பெறும் மக்கள ஆர்பாட்டங்களை மிகவும் கடுமையா ஒடுக்க முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றது அதேபோன்று அரச ஊடகங்கள் கடாபி அரசுக்கு எதிராக நடக்கும் ஆர்பாட்டங்களை கடாபிக்கு சார்பாக நடப்பதாக திரித்து காட்சிப் படுத்துவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன லிபியாவின் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்திவரும் இஸ்லாமிய  அமைப்பாக இஹ்வானுல் முஸ்லிமூன் மறைமுகமாக இயங்கி வருவதாக தகவகள் தெரிவிக்கின்றன கட்டபி  கடாபி எழுதிய பசுமை புரட்சி என்ற நூல் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களால் தீயிடபடுவதுடன் அந்த நூல் வடிவில் கட்டப்பட்ட நிர்மாணங்களும் உடைத்து வீசப்படுகின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக