மே 31, 2012


புதிய(முதலாளித்துவ) இந்தியா!

"levis jeans" ஸும்,"van heusen"ஸும்
வந்ததால் - எங்களின்
பருத்தி காதி துணிகள்
பழசாய்ப் போயின!

"நைட்டியும்","கவுனும்"
வந்ததால் - எங்களின்
தாவணிகளும்,புடவைகளும்
தரமிழந்துப் போயின!

"pizza" வும் "burger" ரும்
வந்ததால் - எங்களின்
இட்லி,சப்பாத்திக்களை
சுவை இழக்க வைத்தன!

"axe perfume" உம் "olay" க்களும்
வந்ததால் - எங்களின்
மஞ்சளும்,மருதாணிக்களும்
வாசம் இழந்துப் போயின!

"valentine's day, friendship day" க்களும்
வந்ததால் - எங்களின்
நட்புக்களும்,கல்யாணங்களும்
கோர்ட் படிகள் ஏறுகின்றன!

"cricket"டும்,"golf" பும்
வந்ததால் - எங்களின்
கபடியும்,மல்யுத்தமும்
களையிழந்துப் போயின!

"wine" னும்,"vodka" வும்
வந்ததால் - எங்களின்
கூழையும்,கள்ளையும்
குழித்தோண்டிப் புதைத்தன!

"standard charted,american express bank" கும்
வந்ததால் - எங்களின்
கூட்டுறவு வங்கிகள்
திவாலாகிப்போயின!

"dollar ,euro" க்களும்
வந்ததால் - எங்களின்
மூளைகள் வெளிநாடுகளில்
அடமானத்திற்க்கு விற்கப்பட்டன!

இதோ....
"walmart" டும்,"tesco" வும்
வருவதால் - எங்களின்,அண்ணாச்சி கடைகளும்
நாடார் அங்காடிகளும்,செட்டியார் வியாபாரங்களும்
உழைக்கும் விவசாயிகளும் கூட இனி...
அமெரிக்கர்களின் எகாதிபத்யத்தில்
மீண்டும் அடிமையாகப் போகிறார்கள்.

இருப்பதை விட்டுவிட்டு
பறப்பதற்கு ஆசைப்படும்
அரசியல் அதிகாரிகளுக்கு
மீனைவிட தூண்டில் பெரிதென்று
புரிவதெப்போது?


ரத்தம் குடிக்கும் பூச்சிகளால் அமெரிக்காவில் பரவும் புதிய எய்ட்ஸ் நோய்

The 'new AIDS of the Americas': Experts warn of deadly insect-borne disease that can cause victims' hearts to explode
   ரத்தம் குடிக்கும் பூச்சிகளால்
 அமெரிக்காவில் புதிய 
எய்ட்ஸ் நோய் பரவுகிறது.
 உயிர்க்கொல்லி நோயான 
எய்ட்ஸ் உலகை அச்சுறுத்தி
 வருகிறது. ஆப்பிரிக்கா கண்டத்தில்
 இருந்து மனித குரங்குகள் மூலம் 
இது பரவியது. தற்போது 
அமெரிக்க நாடுகளில் ரத்தம்
 குடிக்கும் பூச்சிகள் மூலம் 
புதிய வகை உயிர்க்கொல்லி
 நோய் பரவி வருகிறது. இதற்கு
 புதிய வகை எய்ட்ஸ் நோய் என  
ஹுஸ்டனில் உள்ள பேய்லர்
 மருத்துவக் கல்லூரி 
ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.
 இது எய்ட்ஸ் நோயை போன்று 

மே 29, 2012


பொதுச் சொத்துக்களும், நரக நெருப்பும்


இப்னு அப்பாஸ் (ரழி), தனக்கு உமர் (ரழி) அவர்கள் தெரிவித்ததாகப் பின்வரும் சம்பவத்தை அறிவிக்கின்றார்கள் : கைபர் யுத்தம் நடந்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்களது தோழர்களிற் சிலர் அங்கு வந்தனர். மேற்படி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களைப் பற்றி 'அவர் ஷஹீத், இவர் ஷஹீத்", என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒரு நபரை (அவரது ஜனாஸாவைக்) கடந்து சென்ற அவர்கள் 'இவரும் ஷஹீத்" என்றனர். அதுகேட்ட நபி (ஸல்) அவர்கள் ''நீங்கள் அப்படிக் கூற வேண்டாம். அவர் யுத்தத்தில் கிடைத்த கனீமத் பொருட்களில் ஒன்றான ஓர் ஆடையை அல்லது மேலங்கியைத் (திருட்டுத் தனமாக) அபகரித்துக் கொண்டார். அந்த ஆடையுடன் அவரை நான் நரகில் கண்டேன்"" என்று கூறி விட்டு, ''உமர் இப்னு கத்தாபே! நீர் சென்று

குஜராத்தில் இனப்படுகொலையின்போது வீரப்போர் புரிந்த 

வீராங்கனைகள்

வீர சுபைதாவும் 
கொடூர ஃபாசிஸ்டுகளும் 

அந்த சகோதரியின் பெயர் சுபைதா மன்ஷூரா . வயது 35 .
குஜராத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் மண்டிஜவ்கரின் 
என்ற இடத்தில் வாழ்ந்து வந்தாள். இது  பெரும்பான்மையாக 
இந்துக்கள் வாழும் பகுதி .

மே 24, 2012


ஈரானுடனான மோதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா


PETER SYMONDS     அடுத்த வாரம் பாக்தாத்தில் ஈரானுக்கும் 
P5+1 எனப்படும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, 
சீனா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றிற்கு இடையே நடக்கும்
 பேச்சுக்கள் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் பற்றிய ஓர் 
ஆபத்தான மோதலின் திருப்புமுனையாக இருக்கும். பெரும் விட்டுக்கொடுப்புக்களை செய்யுமாறு அமெரிக்கா 
தெஹ்ரானுக்குத் தீவிர அழுத்தங்களைக்

மே 22, 2012


யெமனில் நுழையும் சவுதி அரேபிய டாங்கிகள் - சத்தமில்லாமல் ஒரு யுத்தம்


இலக்கு 1) Ansar al-Sharia

இலக்கு 2) Al Qaeda - Arabian Peninsula ( AQAP )

இடம் - அபியான் (யெமன்)


அபியான்”. யெமனில் இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான முதன்மை பிரதேசம்.
 அல்-காய்தா தோழர்களால் அழகான ஒரு நிருவாக முறைமையை ஒரிருவாரங்களுல் 
நடைமுறைப்படுத்தி காட்டி, இது போன்றே உலகின் ஏனைய நிலப்பரப்புக்களில் இஸ்லாமிய 
ஆட்சியின் தன்மை இருக்கும் என விளம்பரப்படுத்த அவர்கள் தேர்வு செய்த பூமி அபியான். 
அன்சார் அல் ஷரியாஹ் அமைப்பினரை அழிப்பதற்காக யெமனிய இராணுவம் கடந்த ஒரு
 மாத காலமாக தயார் படுத்தப்பட்டது. பல உளவுத் தகவல்கள் சரிபார்க்கப்பட்டன.

மே 16, 2012



புனிதப் பயணத்துக்கான தமிழக 

அரசின் மானியம் சரியா?





தமிழகத்திலிருந்து இந்துக்கள் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகியத் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த

பிரான்ஸ்கிரீஸ் தேர்தல் உணர்த்துவது...

பிரான்சிலும் கிரீஸிலும் நடைபெற்ற தேர் தல்களில் முடிவுகள் அதிர்ச்சியை ஒன்றும்கொண்டுவரவில்லை. உக்கிர மான உலகப் பொருளாதார நெருக்கடி மக் கள் மீது சொல் லொண்ணாதுன்பத்தைத் திணித்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலக முதலாளித்துவமும்,சர்வதேச நிதிமூலதன மும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்த நடவடிக் கைகளுக்கு எதிராகமக்கள் கிளர் ச்சிகள் மிகவும் விரிவடைந்து வந்ததைப் பார்த் தோம்பொருளாதாரநெருக்கடியிலிருந்துமீள்வதற்காக அவை மேற்கொண்ட நட வடிக்கைகள் ஒவ்வொன்றும் புதிய நெருக்கடிகளைஉருவாக்கிமக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடு மையான பாதிப்புகளை உருவாக்கின.கடைசியாக அவை மேற்கொண்ட முயற் சிகளில் முக்கியமானது ‘‘சிக்கன நட வடிக்கைகள்’’ என்றபெயரில் மக்களுக்கு அளித்து வந்த நலத்திட்டங்கள் பலவற்றை நீக்கியதாகும்இதனால் மக்களின்வாழ் நிலை மிகவும் மோசமாக சரிந்தது. இவை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீதுஇயற்கையாகவே கோபமடைய வைத்தது.

மே 15, 2012


உலகில் முதன் முதலில் "ரோபோ இயந்திரத்தை" அறிமுகம் செய்தவர் முஸ்லிம்களே.!!!


சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

மே 14, 2012


EPL - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரபரப்பு


லகின் பிரசித்திப்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் 
(tournament) இதுவும் ஒன்று. முக்கிய ஆட்டம். 2-0 என்ற 
கோல் கணக்கில் வென்ற அணியில் அந்த இரண்டு
 கோல்களையும் போட்டதால் ஆட்டநாயகனாக 
தேர்ந்தெடுக்கப்படுகின்றார் ஒருவர். ஆனால் பரிசாக 
கொடுக்கப்பட்ட பெரிய ஷாம்பைன் (மது) பாட்டிலை ஏற்க 
மறுத்துவிடுகின்றார்.

இது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை