ஜனவரி 29, 2012

ஜேர்மனிய உளவாளிகளை பாகிஸ்தான் வழியனுப்பிய மர்மம்?


மூன்று ஜேர்மன் உளவாளிகள் 
பாகிஸ்தானில் நடமாடியதாக கூறப்பட்ட விவகாரம், நினைத்ததைவிட 
சிக்கல் மற்றும் மர்மம் வாய்ந்ததாக உள்ளது. ஜேர்மனி மறுத்தாலும், 
உளவு வட்டாரங்களில் எமக்கு கிடைத்த தகவல்கள், இவர்கள் ஜேர்மனியின் 
வெளிநாட்டு உளவுப்பிரிவு ஆட்கள் என்றே சொல்கின்றன.


இந்திய உளவுத்துறை “றோ”வின் இரகசிய ஆயுத சப்ளை?


ந்திய உளவுத்துறை றோ மூலமாக, 
தீவிரவாத அமைப்பு ஒன்றுக்கு இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத் ஆயுத 
சப்ளை செய்கிறதா என்ற கேள்வி, உளவு வட்டாரங்களில் அடிபடுகின்றது. 

இந்த ஆயுத சப்ளையில் மொசாத்துக்கு தொடர்பு உள்ளது கிட்டத்தட்ட உறுதியான 
தகவல் என்று தெரியவருகிறது. இதில் இந்திய உளவுத்துறைக்கு தொடர்பு 
என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

ஜனவரி 27, 2012


இஸ்லாமியவாதிகளின் அரசியல் போராட்டம்: கொள்கையும் தந்திரோபாயங்களும்


அறபு-முஸ்லிம் நாடுகளில் கடந்த பல தசாப்தங்களாகப் போராடி வரும் இஸ்லாமியவாதிகள் பற்றிய மங்கலான அல்லது தவறான அபிப்பிராயங்களே சமூகத்தில் நிலவுகின்றன. எத்தகைய சக்திளோடு அவர்கள் போராடி வருகின்றனர் என்ற உண்மையும் பலரால் புரிந்துகொள்ளப்படவில்லை.

ஜனவரி 26, 2012

பின் லாதினை தாக்கியதாக சொல்லப்படும் அதே அணியின் அதே பாணி இன்னொரு தாக்குதல்


ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்கி பின்லேடனை 
கொன்ற அதே அதிரடிப்படை, சோமாலியாவில் 9 கடத்தல்காரர்களை கொன்று
விட்டு, இரு பணயக் கைதிகளை மீட்டு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி 
ஒபாமாவின் நேரடி உத்தரவின்படி இந்த ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது நேவி சீல்ஸ் அதிரடிப்படை!

ஜனவரி 25, 2012

புதிய அறிவியல் பொற்காலம்?



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

அறிவியல் ஆர்வலர்களுக்கு இந்த பதிவு எவ்விதத்திலாவது உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளிக்குமானால் அந்த புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாவதாக...

                        சுமார் 350 ஆண்டுகள் பழமையானதும், பிரிட்டன் அரசுக்கு அறிவியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமும், அறிவியலாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் அமைப்புமான "The Royal Society", இஸ்லாமிய உலகில் நடைபெறும் அறிவியல் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகள், மற்றும் சவால்கள் குறித்த ஆய்வறிக்கையை, "புதிய பொற்காலம்? (A new golden age?)" என்ற தலைப்பில் வெளியிட்டது. இந்த பதிவின் பல தகவல்கள் அந்த ஆவணத்தை தழுவியே எழுதப்படுகின்றன.

'9/11 - என்ன மாதிரியான மதம் இது?'



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் 
சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்..

                                                        "9/11 தாக்குதலின் போது, மனக்குழப்ப
த்தில் இருந்த பலரையும் போல, ஜோஹன்னாஹ் சகரிச் 
தன்னைத்தானே கேட்டுக்கொண்டார், 'இம்மாதிரியான 
செயலை செய்ய இவர்களை ஊக்குவிக்கிறதென்றால் என்ன 
மாதிரியான மதம் இது?'

இந்த சகோதரி, இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை 
படித்திருக்கின்றார். இஸ்லாம் குறித்த தன்னுடைய 
எண்ணங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு குர்ஆன் பிரதியை 
வாங்கி வந்து படிக்க ஆரம்பித்தார். 

ஏழு வசனங்கள் கொண்ட  முதல் அத்தியாயம், அன்புடைய 
இறைவனிடம் இருந்து வழிகாட்டுதலை பெறுவதை பற்றி 
இருந்தது. சில வாரங்களில் குர்ஆன் முழுவதையும் படித்துவிட்டார் 
சகரிச். 9/11 அரங்கேறி சுமார் பத்து வாரங்களுக்கு பிறகு, 'நான் 
இப்போது உணர ஆரம்பித்தேன்' என்று கூறும் இவர், 'நான் 
ஒரு முடிவை தற்போது எடுக்க வேண்டும்' 

மூன்று கப்பல்கள் குண்டு வீச்சில் மூழ்கினால், கடல் பாதை?


நீண்ட காலமாக இதோ வருகிறது என்று ஈரானைப் பயமுறுத்திக் கொண்டிருந்த பூதம் வந்தே விட்டது. ஈரானின் எண்ணை இறக்குமதிக்கு தடை விதிப்பது என்று முடிவு எடுத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஈரானிடமிருந்து 

எண்ணை வாங்குவதை நிறுத்திக் கொள்ளப் போகின்றன. ஈரானிய அணு ஆயுதத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தடை இது. 

ராணுவத்தை துரத்தியடிக்க ‘ரகசிய’ ஆயுத சப்ளை எங்கிருந்து வந்தது?


 

 மலை சூழ்ந்த நகருக்கு வெளியே சிரியாவின்

T-55 பிரதான தாக்குதல் டாங்கி.

 

சிரியா நாட்டு ராணுவம் தமது கட்டுப்பாட்டில் இருந்த நகரம் ஒன்றைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், ராணுவம் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. ராணுவத்தினர் சராமாரியாகச் 

சுட்டபடி, நகருக்குள் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களில் பின்வாங்கிச் சென்றனர்.

அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பு, தமது 
வெற்றியை அறிவித்துள்ளது. 
தமது ராணுவம் பின்வாங்க நேர்ந்தது குறித்து சிரிய அரசு இதுவரை வாய்திறக்
கவில்லை.
கடந்த சில தினங்களாக

ஜனவரி 24, 2012

சிரியா: 

 புரட்சி நீடிப்பதேன்?

   

syria pro
லிபியாவிலும் தூனிஸியாவிலும் எகிப்திலும் அறபு வசந்தம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரிய மக்கள் அந்த வெற்றிக்காகக் காத்திருக்கின்றனர்.
கடந்த 10 மாதங்களாக சிரியாவில் பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் வன்கொடுமைகள் கட்டவிழ்க்கப்படும் நிலையிலும், மக்கள் தமது நிலைப்பாட்டிலிருந்து தளரவில்லை. அரச பயங்கரவாதத்தினால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் மக்களிடையே இன்னும் வெற்றிக்கான ஏக்கமும் பெருமூச்சும் நின்றுவிடவில்லை.

ஜனவரி 17, 2012

காணொளி - லிபியா ! அமெரிக்காவின் கைக்கு மாறும் ஓர் அரபு தேசம்



ஜனவரி 16, 2012

 

அரசியல் 

மாற்றங்களும் 

இஸ்லாமியவாதிகளும் 

புரட்சிக்குப் 

பிந்திய உணர்வலைகள்!


1924 இல் துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தலைமைத்துவமற்ற சமூகமாகமாறியது. ஏனெனில், றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவில் நிலவிய இஸ்லாமிய கிலாபத் 1924 ஆம் ஆண்டு வரை ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.
மதச்சார்பற்ற, சியோனிஸ ஏஜன்ட் முஸ்தபா கமால் இஸ்லாமிய கிலாபத்தை இரத்துச் செய்து, துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தினான். இதன் எதிரொலியாக ஈமானிய உள்ளங்கள் வெகுண்டெழுந்தன. உலகின்

பலஸ்தீனின் கிறிஸ்தவ போராளி - ஜோர்ஜ் ஹபாஷ் (Dr. George Habash)

 
பலஸ்தீன மண்ணை தாயைவிடவும் நேசித்த உண்மை தளபதி

இந்த மக்களின் போராட்டத்தை முஸ்லிம்களின் போராட்டம் என்று மட்டும் பார்க்காமல் மனித இனத்தின் போராட்டமாக பார்க்க வேண்டும்.

உலக ஊடகங்கள் பலஸ்தீன் விவகாரத்தில் ஊமையாக நிற்கின்றன.  வெறுமனே மதச்சாயம் பூசி அந்தப் போராட்டத்தை மலினப்படுத்தியும் வருகின்றன.
சொந்த நாட்டை மீட்கப் போராடும் அவர்களை பயங்கரவாதிகளாக

பாலைவன சிங்கம் ஷஹீத் உமர் முக்தார்


 
உமர் முஃக்தார் (1862 – செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி 
இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் 
பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 32 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் 
ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 
1931 இல் தூக்கிலிடப்பட்டார்.
சிறு வயது வாழ்க்கை

16ம் வயதை எட்டுகையில் இவரது தந்தை காலமானார். இவருடைய 
மாமனார் ஹுசைன் எல் கரியானியின் பராமரிப்பில் வளர்ந்தார். அப்த் 
அகாதிர் போடியா இவருக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்.

1912 ல் இத்தாலி லிபியாவை துருக்கியிடமிருந்து கைபற்றியது. அது 
முதல் இத்தாலி சுமார் சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக இத்தாலியின் 
காலணி ஆதிக்கத்தின் கீழ் லிபியா இருப்பதை விரும்பாத உமர் முஃக்தார் அவ்வாட்சியை எதிர்க்க எதிர்ப்பு இயக்கம் நடத்தி அதன் தலைவராக களம் கண்டவர். ஒமர் தன் எதிர்ப்பு இயக்கத்தை ஒழுங்கு படுத்தப்பட்ட, தீரமிக்க 
மற்றும் சீர்மிக்க இயக்கமாக வழிநடத்தி இத்தாலியை எதிர்த்தார்.

ஜனவரி 11, 2012

ஹிஸ்புல்லா இயக்கம், தனது ஆயுதங்களில் முக்கியமானவற்றை எங்கே மறைத்து வைத்திருக்கிறது? - சிரியா நாட்டு ராணுவத்தின் ராணுவக் கிடங்குகள்தான்


ஹிஸ்புல்லா இயக்கம், தனது ஆயுதங்களில் முக்கியமானவற்றை எங்கே மறைத்து வைத்திருக்கிறது? இந்தக் கேள்விக்கான பதில், யாருக்குத் தெரிகின்றதோ இல்லையோ,  இஸ்ரேலிய உளவுத்துறை மொசாத்துக்குத் தெரியும்.

அடுத்த ஆட்சிக் கலைப்புக்கு அமெரிக்கா தயார்!


வாஷிங்டன், அமெரிக்கா: டுத்த ஆட்சிக் கலைப்புக்கு அமெரிக்கா தயாராகி விட்டது என்று கூறப்பபடுகின்றது. சமீப காலங்களில் அடுத்தடுத்து சில நாடுகளில் ஆட்சிக் கலைப்புகள் இடம்பெற்று, கடைசியில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் லிபிய முன்னாள் ஜனாதிபதி கடாபி. இப்போது, அந்த வரிசையில் அடுத்த ஜனாதிபதியை அமெரிக்கா கொண்டுவரப் போகின்றது என்று தெரியவருகின்றது.

“உங்கள் ஆயுதத்தை எடுத்தே, உங்கள் தலையில் போடுவோம்”


டமாஸ்கஸ், சிரியா: த்திய மாகாணத்தில் நேற்று (புதன்கிழமை) ராணுவத்தினர் மீது நடைபெற்ற அதிரடித் தாக்குதலை யார் செய்தது என்ற விபரம் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவின் மத்திய பகுதியில் நடைபெற்ற அந்தத் தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரியும், எட்டு சிப்பாய்களும் கொல்லப்பட்டிருந்தனர்.

சிரியாவில் மக்கள் போராட்டம், தாக்குதல் போராட்டமாக பரிணாமம் பெறுகிறது


 
பாதுகாப்பு படையினர்மீது தாக்குதல் நடாத்தும் பொதுமக்கள்.
 

ராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் வெளியேறி அரசுக்கு எதிரான கலகக்காரர்களுடன் சேர்ந்த குழுவினர் பாதுகாப்பு படையினரை தாக்கியதில், குறைந்தது எட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்தத் தாக்குதல், ராணுவத்திடமிருந்து மக்களைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று கலகக் குழுவினரால் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 09, 2012

அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது


 
 அமெரிக்க யுத்தக் கப்பல் யு.எஸ்.எஸ்.கிட்
 
இரு நாடுகளுக்கிடையிலான அரசியலையும் கடந்து சில சம்பவங்கள் நடைபெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சம்பவம் நடுக்கடலில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கடற்படையின் யுத்தக்கப்பல், அமெரிக்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் ஈரானியக் கப்பலையும், அதன் மாலுமிகளையும் நடுக்கடலில் வைத்துக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
அமெரிக்க கடற்படை வெள்ளிக்கிழமை

அமிர் ஹெக்மாத்தி - சீ.ஐ.ஏ.யின் ஈரானிய உளவாளி


 
 ஈரானிய அரசு தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட அமிர் ஹெக்மாத்தியின் போட்டோ.
 
ஈரானிய கோர்ட் ஒன்று நேற்று (திங்கட்கிழமை) சி.ஐ.ஏ. உளவாளி என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருக்கிறது. ஈரானின் வரலாற்றில் 33 ஆண்டுகளின்பின் அமெரிக்கப் பிரஜை ஒருவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் முறுகலை மேலும் அதிகமாக்கி விட்டுள்ளது.

ஜனவரி 08, 2012

ஹிஸ்புல்லாவின் அழிவில் வாழும் இஸ்ரேல்

Abu Sayyaf

வளைகுடாவில் போர் மேகங்கள் மெல்ல கருக்கொள்ள தொடங்கி விட்டன. பேச்சு பேச்சாக இருக்கும் அதே பொழுதுகளில் இராணுவ பிரசன்னத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நோக்கி அமெரிக்கா முனைப்புடன் செயற்படுத்தி வருகிறது.  ஈரானை ஒரு போதும் அமைரிக்கா தாக்காது என்றும் ஈரான் ஒரு போதும் இஸ்ரேலை தாக்காது என்றும், இவையிரண்டுமே ஏகாதிபத்திய சக்திகள்தான் என்றும் சில அரசியல் ஆய்வாளர்கள் வாதங்களை முன்வைத்த போதும் அதையும் தாண்டிய நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர இராணுவ ஒத்திகைகளை நிகழ்த்தி முடித்துள்ளன.


புதிய தகவல் - அமெரிக்காவின் டிரோன் உளவு விமானத்தை ஈரான் கைப்பற்றியது எப்படி?.


மெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக் கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. 
அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர் என்ற செய்தி தற்போது கசிந்துள்ளது.

ஜனவரி 05, 2012

துருக்கியின் செயற்கைகோள் 

விண்ணில் பாய ஆயத்தம் - 

இஸ்ரேலுக்கு புதிய தலைவலி



துருக்கி விண்ணில் செலுத்தவிருக்கும் மேன்மையான செயற்கை கோளால் இஸ்ரேலின் அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்திற்கும் புதியதலைவலி தொடங்கி உள்ளது.

 
ஒரு பிக்சலை இரண்டு மீட்டருக்கு நெருக்கமான முறையில் புகை படத்தை எடுக்கக் கூடிய செயற்கைகோள் அமெரிக்காவிடம் இருந்த நிலையிலும், அமெரிக்காவில் அவ்வாறு எடுக்க கூடிய புகைப் படங்களை வெளியிட அந்நாட்டின் அலுவலகங்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நிலச்சரிவில் மிண்டானோ முஸ்லிம்கள்.

  Abu Maslama
 பிலிப்பைன்ஸின் மிண்டாணோ மாகாணம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசம். மொத்த பிலிப்பைன்சிலும் 30 விகிதமான மக்கள் வாழும் இடம். தமது பிரதேச சுயாட்சிக்காக பல குழுக்கள் அரசியல் ரீதியாகவும் இராணவரீதியாகவும் போராடுகின்றன. தனது பெரிய கடற்படைத் தளத்தை தற்காப்தற்காக முஸ்லிம்களின் போராட்டத்தை பயங்கரவா பிரிவினை கோரும் போராட்டமாக அமெரிக்கா பிரகடனப்படுத்தியது. பிலிப்பைன்ஸ் அரசிற்கு வலிகோலியாக ஊடக யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது இந்த தேசம்.
ஹலாலான உணவின்றி வணக்கத்தில் இன்பம் இருக்காதுPrintE-mail
 ஹலாலான உழைப்பின் சிறப்பு
M. முஹம்மது இப்ராஹீம் பாகவி,
இஸ்லாம் ஹலாலான உழைப்பை 
வலியுறுத்துகின்றது. இறைவன் 
தனது அருள்மறையில், (ஜுமுஆ) 
தொழுகை முடிந்தவுடன் பூமியில் 
பரவிச் சென்று இறையருளைத் தேடுங்கள். (63:10) என்று 
கூறுகின்றான்.
தனது கையால் உழைத்துச் சாப்பிடுகின்றவனைவிட சிறந்த 
உணவை வேறு யாரும் சாப்பிட முடியாது. இறைவனின் 
நபியாகிய தாவூத் (அலை) அவர்கள் தமது கையால் உழைத்து 
அதிலிருந்து சாப்பிட்டார்கள் என நபியவர்கள் 
கூறினார்கள்.(புகாரீ)
உழைத்து உண்ணும் உணவே நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் 
மிகச் சிறந்ததாகும் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி 
வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)
அல்லாஹ்வின் தூதரே! பரிசுத்த மான தொழில் எது? என்று 

ஜனவரி 02, 2012

சிந்தப்போகும் லிபிய இரத்தம்...! - 2012 பழங்குடி சண்டையின் ஆண்டா?

 Abu Sayyaf

( ருடம் - 2012. மொத்த போராளிகள் எண்ணிக்கை 45000. போராளி குழுக்களின் எண்ணிக்கை 59. இதில் இஸ்லாமிய பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டவை 11. சோஷலிஸ அடிப்படையிலமைந்தவை 13. பழங்குடி இனக்குழுக்களிற்கு சொந்தமானவை 19. கடாபி ஆதரவு குழுவினர் 08. ஆக மிகுதி 06. இந்த 06 குழுக்கள் மட்டும் மேற்குலகின் அதாவது நேட்டோவின் கட்டுப்பாட்டில்.

இதுதான் இன்றைய லிபியா. 2012ம் வருடம் லிபியாவின் உள்நாட்டு போரிற்கான ஆமுல் ஹர்ப் (யுத்த ஆண்டு). அமெரிக்காவின் சீ.ஐ.ஏ. இப்போது

பாகிஸ்தானின் பிரச்சனைகள் மதீனா அரசமைப்பின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட முடியும் - அல் ஹாபிஸ் ஷயீத்

Abu Maslama
பாகிஸ்தானின் மிக முக்கியமான சக்திவாய்ந்த நபர்களில் ஒருவரும், ஜமாதுத் தஃவா அமைப்பின் தலைவருமான அல் ஹாபிஸ் மௌலான ஷயித் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் பாகிஸ்தானின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்த செய்தி இதுதான்.