மே 31, 2011


பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரிகள் C.I.A & R.A.W.

பாகிஸ்தான்  ஈராக்கிற்கும் ஆப்கானிற்கும் அடுத்த நிலையில் தற்கொலை தாக்குதல் அதிகம் இடம்பெறும் நாடு. ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆக்கிரமிப்பு இராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடைபெறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். பாகிஸ்தானில் தற்கொலை தாக்குதல் நடாத்த வேண்டிய அவசியங்கள் என்ன? ஆனால் பல தடவை தொடராக பாகிஸ்தானிய படையினரையும் பொலிஸாரையும் இலக்கு வைத்து தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன. ஷியா சுன்னி முஸ்லிம்கள் மத்தியிலும் மசூதிகளிலும் மரண திருமண வீடுகளிலும் நடைபெறும் தொடர் தாக்குதலின் மர்மங்கள் தான் என்ன?


அமெரிக்கஉளவு மற்றும் நாசகார அமைப்பான C.I.A.யிற்காக இந்திய உளவு அமைப்பான R.A.W. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தற்கொலை தாக்குதலை நடாத்துவதற்கான ஆட்களை தெரிவு செய்து தயார் படுத்தி இதுவரை காலமும் அனுப்பி வந்த இரகசிய நடவடிக்கை பாகிஸ்தானிய I.S.I. யினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வெறுமமே பாகிஸ்தான் உளவு அமைப்பு கிளப்பி விடும் வதந்தியாக அல்லாமல் ஆதராரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது என்பது அதிர்ச்சி தரும் விடயமாகும்.

கடந்த ஜனவரியில் லாகூரில் வைத்து பிரான்சிய புரட்சிகர அமைப்பை சேர்ந்த குழுவிவினரை பாகிஸ்தானிய உளவமைப்பினர்

மே 26, 2011


ஈராக்கில் அமெரிக்கா உருவாக்கும் இன்னொரு - ஹிரோசிமா




ஈராக்கின் சதாம் அரசு பேரழிவு இரசாயன ஆயுதங்களை வைத்திருப்பதாகவும், அது மனித இனத்துக்கே ஆபத்து என்றும் அப்பட்டமாகப் புளுகிய அமெரிக்கா தனது புளுகு மூட்டைகளில் இருந்து பேரழிவு ஆயுதங்களை அவிழ்த்துவிட்டு ஈராக்கின் இடிபாடுகள், பிணக் குவியல்கள் மேல் ’ஜனநாயகத்தை’ நிலைநாட்டியது.   நெடுந்தொலைவில் இருந்து குண்டு வீசலாம், ஆனால், ஈராக்கின் எண்ணை வயல்களை எப்படி உறிஞ்ச முடியும்?
ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது.  ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.

ஈராக்கில் கால் பதிக்காமல் எண்ணை வளப் பிராந்தியத்தில் தன் ஆதிக்கத்தையும் தனது உலக மேலாதிக்கத் திட்டத்தையும் எப்படி நிறைவேற்ற முடியும்?  பீதியுடன் கால் பதித்த அமெரிக்கா, துரோகிகளின் பொம்மை அரசாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் மட்டுமல்லாமல் தான் அடைந்த அதே பீதியை மக்களுக்கு ஏற்படுத்தும் பயங்கரவாத நடவடிக்கைகளாலுமே ஊன்றிய காலை உறுதி செய்துகொள்ள முயற்சித்தது. 

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான வீரஞ்செறிந்த ஈராக் மக்களின் சுதந்திர வேட்கை போராட்டமாக வெடித்துக் கிளம்பிய முதல் நகரம்தான் ஃபலூஜா.  ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு மேற்கே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த நகரம் அது.  இங்கே தண்டகாரன்யா காட்டு வேட்டையில் ஆதிவாசிப் பள்ளிகளை இராணுவ முகாம்களாக மாற்றுவதுபோல இந்திய அடிவருடிகளின் எஜமானர்களான அமெரிக்கா ஏப்ரல் 28, 2003ல் ஃபலூஜாவின் ஒரு பள்ளிக்கூடத்தை இராணுவ

மே 25, 2011


பின்லேடன் இருப்பும், மரணமும் - தீர்மானித்தது யார்?



மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள 
அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் ‘வெற்றியுடன்’ திரும்புகின்றனர்.
அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான உசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே 
கப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் உசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான உசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.
பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய்,

கராச்சி கடற்படைத்தள தாக்குதல்” - அமெரிக்காவின் இன்னொரு நாடகம்!!



ராச்சி. பாகிஸ்தானின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. அதன் துறைமுக நகரம் இது. ஞாயிற்றுக்கிழமை பின் இரவு 10.30 மணியளவில் தலிபான் போராளிகள் சடுதியாக பீ.என்.எஸ். மெஹ்ரான் (P.N.S. MEHRAN) கடற்படைத் தளத்தினுல் நுளைந்து தாக்குதல் நடாத்தினார்கள். 12 பேர் கொண்ட தாக்குதல் அணி நடாத்திய தாக்குதலின் காரணமாக 13 பாகிஸ்தானிய கடற்படை சிப்பாய்கள் ஸ்தல பலியானார்கள்.   போராளிகள் நடாத்திய தாக்குதலில் 2 அமெரிக்க  விமானங்கள் (P-3 Orion surveillance aircraft) நாசமடைந்தன.  20 மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானிய கடற்படை சிப்பாய்கள் திருப்பி தாக்கியதில் 4 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர். 2 போராளிகள் சிறை பிடிக்கப்பட்டனர். 4 கலஸ்னிகோவ் ரைபிள்(A.K.47) 10 கை எறிகுண்டுகள் 1 எறிகணை செலுத்தியும் இரண்டு எறிகணைகளும் (Rocket Launcher - R.P.G. 7) போன்றவை உதவி்க்கு விரைந்த பாகிஸ்தானிய பரா துருப்பினரால் கைப்பற்றப்பட்டன. சண்டை அதிகாலை 03.30 மணிவரை நீடித்தது. இந்த தளத்திற்கு சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தானிய வான் படைத்தளமான மஸ்ரூர் (MASROOR AIR BASE & ATOMIC HEADS YARD) இருக்கிறது. இங்கே 100 இற்கும் மேற்பட்ட அனுஆயுத முகப்புக்களையுடைய ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் தலிபான்கள் நன்றாகவே ஊடுருவியுள்ளனர். ஒரு கடற்படைத் தளத்தையே தாக்குமளவிற்கு பலம் பெற்றுள்ளனர். உஸாமா பின் லாதினுடைய தாக்குதலிற்கான பதில் தாக்குதலலே இது. சுமார் 6 மணி நேரம் கடற்தளத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். அதுவரை பாகிஸ்தானிய படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக இவர்கள் மஸ்ரூர் அனு களஞ்சிய சாலையை தாக்கினால் என்னவாகும்?. அந்த அனு ஆயுதங்களை கைப்பற்றினால் விளைவு என்ன?.................. பாகிஸ்தானை பாகிஸ்தானிய அரசால் பாதுகாக்க முடியாவிட்டால் யார் பாதுகாப்பது? இவை அனைத்தும் அமெரிக்காவும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் கேட்கும் கேள்விகளாகும்.

விடயம் இது தான். மேற்படி தாக்குதல் அமெரிக்காவால் அதன் உளவு அமைப்பான C.I.A.யால் வடிவமைக்கப்பட்ட ஆயுதக் குழுவான லஸ்கர் ஈ ஜங்வி (Lashkar-e-Jhangvi (LeJ))அமைப்பினரால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கான அனைத்துவிதமான அனுசரணைகளும் அமெரிக்க உளவு அமைப்பால் இவர்களிற்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதக் குழுவை உருவாக்கி பயிற்சி அளித்து பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவன்றேய்மண்ட் டேவிஸ் (Raymond Davis). இவன் தான் அப்பாவி இரு பாகிஸ்தானிய முஸ்லிம்களை சகட்டு மேனிக்கு சுட்டு படுகொலை செய்தவன். அமெரிக்க அழுத்தம் காரணமாக பாகிஸ்தானிய கோழை அரசால் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டவன்.

பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவினரும் கராச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் தளத்திற்கு வந்த போது அங்கிருந்த கடற்படை அதிகாரிகளால் தாமதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் பிரதான வாயிலின் ஊடாக உள்நுளைய அநுமதிக்கப்படவில்லை. கடற்படைத்தளத்தினுல் நடைபெற்ற ஒரு வைபவத்திற்கு விருந்தினர்களாக பல பொது மக்களும் கலந்து கொண்டுள்ள வேளையிலேயே தாக்குதல் அணியினரும் மெல்ல உள்நுளைந்துள்ளனர். இவர்களிற்கு கடற்படை அதிகாரிகள் சிலரது உதவியும் கிட்டியுள்ளதாக பாகிஸ்தானிய கடற்படை புலனாய்வுப்பிரிவின் முதல் அறிக்கை சொல்கிறது.

அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள்
இஸ்லாமாபாத் தாக்குதலை சமாளிக்க அமெரிக்காவால் நடாத்தப்பட்ட போலித் தாக்குதலே இது. பாகிஸ்தானிய அனுஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது என உலக மக்களை நம்ப வைக்கவே அமெரிக்கா இவ்வாறெல்லாம் செய்கிறது.
தலிபான் பயங்கரவாதம் என்ற பெயரில் நடைபெறும் பல தாக்குதல்களிற்கு இந்த லஸ்கர் ஈ ஜங்வி குழுவினரே காரணம். பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் சியா சுன்னி தற்கொலை தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்மீதான தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் இவர்களே பொருப்பாளர்கள்.

இன்றைய பாகிஸ்தானில் ஆசீப் சர்தாரி முதற்கொண்டு பல அரசியல்வாதிகளும் நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரிகளும் அமெரிக்க C.I.A.யால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இந்தியாவால் தேடப்படும் முதன்மை குற்றவாளி தாவுத் இப்றாகிம் முதல் பாகிஸ்தானில் செயற்படும் இந்திய உளவமைப்பான றோ ஏஜென்ட்கள் வரை அமெரிக்க சீ.ஐ.ஏ.வால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். 

கடந்த பல வருடங்களாக தாவுத் இப்றாஹி்ம் அமெரி்க்காவிற்காக நேரடியாகவே களமிறக்கி விடப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. கராச்சி மசூதியில் வைத்தும் ராவல்பிண்டியி்ல் வைத்தும் அபுதாபி விளையாட்டு மைதானத்தில் வைத்தும் 3 தடவைகள் தாவுத் இப்றாஹிமை கொல்லக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் றோ அதனை செய்யவில்லை. மாறாக இந்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைக்கும் வரை கை கட்டப்பட்டு விடப்பட்டது. தாவத் இப்ராஹிம் அமெரிக்காவிற்கு இன்றைய நகர்வுகளிற்கு முக்கியமாக புள்ளியாக இருப்பதால் அமெரிக்க வேண்டுகோளின் பேரிலேயே இதனை அவர்களால் செய்ய முடியாமல் போனது. 

கடந்த இரு வார காலத்தினுல் பாகிஸ்தானிய கடற்படையினர் மீது நடாத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானிண கடற்படையினர் சென்ற வாகனம் மீத பாதையோர குண்டுத் தாக்குதவுலும் அவர்கள் மீதான எறி குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டன. இவற்றை செய்தது தரீக் எ தலிபான் என அமெரிக்கா விசம பிரச்சாரமும் செய்தது நினைவிருக்கலாம்.

ஒரு நாட்டை கைப்பற்றவோ அல்லது அழிக்கவோ நினைத்தால் அமெரிக்கா முதலில் குறி வைப்பது கடற்படை தளங்களையும் அதன் போரிடும் வளங்களையுமே. அராபிய கடலில் பம்பாயை தாக்கவல்ல தளமான கராச்சியின் மீது தாக்குதல்கள் நடாத்தப்படுவதன் பின் புலத்தில் அமெரிக்க ஸியோனிஸ சக்திகள் மட்டுமல்லாது இந்திய உளவமைப்பான றோவின் கைங்கரியங்கள் நிறையவே உண்டா?, என எண்ணத் தோன்றுகிறது.