ஜனவரி 02, 2012

பாகிஸ்தானின் பிரச்சனைகள் மதீனா அரசமைப்பின் அடிப்படையிலேயே தீர்க்கப்பட முடியும் - அல் ஹாபிஸ் ஷயீத்

Abu Maslama
பாகிஸ்தானின் மிக முக்கியமான சக்திவாய்ந்த நபர்களில் ஒருவரும், ஜமாதுத் தஃவா அமைப்பின் தலைவருமான அல் ஹாபிஸ் மௌலான ஷயித் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் பாகிஸ்தானின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் செய்தியை வெளியிட்டுள்ளார். அவர் விடுத்த செய்தி இதுதான்.

“பாகிஸ்தானின் அரசியல் அமைப்பானாலும் சரி, இராணுவ அமைப்பானாலும் சரி யார் நாளை ஆட்சி பொருப்பில் அமர்ந்தாலும் அவர்களிற்கு ஒரு விடயத்தை எத்திவைக்க விரும்புகின்றேன். பாகிஸ்தான் உலகின் உன்னதமான தேசம். அல்லாஹ்வால் அருள்பாளிக்கப்பட்ட தேசம். பாகிஸ்தான் இராணுவம் கலிமா தய்யிபாவின் அடிப்படையாக கொண்டு இயங்கும் இராணுவமாக பரிணமிக்கின்றது.


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பாகிஸ்தானிற்கு எதிராக நிகழ்த்தப்படும் சதிகளையும், கபட திட்டங்களையும் முறியடிக்க ஒரே ஒரு வழி தான் இருக்கின்றது. அது மதீனா யுகத்தை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய அரசின் ஸ்தாபிதம். நபி முஹம்மத் ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லாம் எவ்வாறான ஒரு அரசை ஸ்தாபித்தார்களோ அதே போன்ற அரசமைப்பு பாகிஸ்தானிற்கு அவசியம். அவர்கள் கட்டியெழுப்பிய இராணுவ கட்டமைப்பின்அடிப்படையில் பாகிஸ்தானிய இராணுவம் புணருத்தாபனம் செய்யப்படல் வேண்டும். இதன் ஊடாக இஸ்லாத்தின் எதிரிகளிற்கான ஒரு பலமான இஸ்லாமிய அரசை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.


எமது ஆட்சியாளர்கள் ஐரோப்பாவின் நட்பை இழந்து விடுவோமோ, அமெரிக்காவின் நட்பை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தால் அவர்கள் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும். தங்கள் கடவுளாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தமாகும். இந்த சக்திகளை வேண்டுமானால் “இந்தியா தனது இதர கடவுள்கள் பட்டியலில் இணைத்து கொள்ளட்டும்”. நாம் இறைவனின் துணையில் துணிந்து நிற்பவர்கள்.


இஸ்லாம் உலகின் ஆதிக்க சக்தியாக வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. அப்போது இரண்டு சக்திகள் இஸ்லாத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆட்சி செய்யும். ஒன்று துருக்கி. மற்றையது பாகிஸ்தான். மூன்றாவது சக்தியான ஈரான் பற்றி இங்கு நான் பேச விரும்பவில்லை. பாகிஸ்தானின் வெற்றி பாகிஸ்தானியர்களின் நாட்டிற்கான தியாகத்திலும் ஒற்றுமையிலும் தங்கியுள்ளது. பாகிஸ்தானிய மக்களும் போராளிகளும் ஒரு நேட்டோ அல்ல பல நேட்டோக்களை ஒரே பொழுதில் களம் காண தயாராக உள்ளனர்”.

ஹாபிஸ் ஷய்தின் பேச்சில் ஒரு முக்கிய செய்தி உள்ளது. “மதீனா அரசாட்சி” பற்றிய செய்தியது. இன்றைய சமகால ஸலபி உலமாக்கள் பலர் இது பற்றி பிரஸ்தாபித்துள்ளனர். உண்மையாக போராடும் இஸ்லாமிய முஜாஹிதா அமைப்புக்களிலும் இந்த செய்தி பரவலாக பகிரப்படுகிறது. மதீனா யுகத்தை கட்டியெழுப்புவோம் எனும் அந்த செய்தி ஒவ்வொரு இஸ்லாமியனின் உள்ளத்திலும் உறுதியாக இடம்பெற வேண்டிய செய்தியாகும். அந்த அரசாட்சியின் நிழலில் மரணிக்க இறைவனை வேண்டுவது ஒரு உண்மை முஸ்லிமின் அடிப்படையாகும். மேற்கின் கலப்பற்ற, உமையாக்களின் எச்சங்களற்ற அந்த “மதீனா யுகம்”. கிலாபாவின் அச்சாணியும் அந்த மதீனா யுகமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக