மார்ச் 27, 2012


அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமைமேம்பாட்டாளர் கண்டனம்

அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன்ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்றபிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடிமனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்தமார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்ஜெனீவாவில் 
நடந்த இந்தக்கூட்டத்தில் உரையாற்றிய அவர்லக்பிம நிவ்ஸ் ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால்அபேநாயக்கஅமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் ஆட்சியாளர்களினால் கொடுமைப்படுத்தப்படுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு 'ஆம்என்று கூறுவதற்கு பதில் 'நான் என்னசொல்வதுஎன்று கூறினார்.
இவர் தனது உரையில் மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபா மாவை தாக்கிப் பேசினார்.அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மீது தனது ஆளில்லாவிமானங்களின் மூலம் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுஅப்பாவி ஆண் கள்பெண்கள்மற்றும் சிறுவர்களை குறிப்பாக இன்னுமொரு இனத் தைச் சேர்ந்த மக்களை படுகொலைசெய்கிறதேஇதற்கு யார் கார ணம் என்று அந்த ஆசிரியர் தொடர்ந்தும் கேள்வி எழுப்பிய போதுபதிலளித்த வண. ஜெசி ஜெக்ஸன்எய்தவன் இருக்கும் போது அம் பின் மீது நாம் குற்றம் சுமத்தமுடியுமா? அமெரிக்க நிர்வாகமே இந்தப் படுகொலைகளுக்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்றுகூறினார்.
இந்தக் கருத்தின் மூலம் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கமே ஆப் கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் மனித உயிர்களை பலியெடுப்ப தற்கான பொறுப்பை ஏற்க வேண்டுமென்றுஅமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கண்டனம் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கம் அமுலாக்கியுள்ள புதிய தேர்தல் சட்டத்தினால் அந்நாட்டின் 21மில்லியன்கறுப்பின மக்கள் வாக்குரிமையை இழக் கிறார்கள். இந்த சட்டம் கறுப்பின மக்கள் அதிகமாக உள்ளமா நிலங்களையே பாதிக்கின்றது. இதனால் 25சதவீதமான அமெரிக்க பிரஜைகளுக்கு வாக்குரிமைமறுக்கப்படுகிறது. கறுப்பின மக்களின் மனித உரிமைக்காக போராடும் னிதிதிவிஜி அமைப்புஇதுபற்றிய முறைப்பாடொன்றை ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்சமர்ப்பித்தது.
ஆயினும் இது குறித்து மனித உரிமை பேரவை எவ்வித தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்காமல்அந்தப் பிரேரணையை அப்பால் வைத்து மறைமுகமாக அதனை நிராகரித்தது. இதிலிருந்து அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளில் எந்தளவிற்கு தனது அதிகாரத்தைபிரயோகித்து வருகிறதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அமெரிக்க அரசாங்கத்தின் மாநில தேர்தல் சட்டங்கள் அமெரிக்காவில் உள்ள சிறுபான்மை மக்களின்சிவில் மற்றும் மனித உரிமைகளை அடக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கிறதென்று அந்நாட்டின்கறுப்பின மக்களின் முன்னேற்றத்திற்காக செயற்பட்டு வரும் தேசிய அமைப்பு (னிதிதிவிஜி)ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில்முறைப்பாடொ ன்றை தாக்கல் செய்தது.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவை பொதுவாக லிபியாசிரியாஐவ ரிகோஸ்ட் ஆகிய நாடுகளின்மனித உரிமை மீறல்களை ஆராய் ந்து வருவதுண்டு. 1940ம், 50ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட னிதிதிவிஜி அமைப்பு அமெரிக்காவில் கறுப்பு இன மக்க ளின் சிவில் உரிமைபோராட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத் தினதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைமன்றத்தினதும் பிரச்சினை களை தீர்த்து வைப்பதற்கு உதவுமாறு கோரிக்கைகளை விடுத்தது.
இலங்கை போன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிது படுத்தி ஆய்வுகளை நடத்திவரும் அமெரிக்கா தனது நாட்டில் உள்ள கறுப்பின மக்களை இவ்விதம் துன்பப்படுத்துகிறது.அமெரிக் காவில் கடந்த ஆண்டு முதல் 15 மாநிலங்களில் இந்த புதிய தேர் தல் சட்டம்அமுலாக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி ஒருவர் அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அடையாளப் புகைப்படம் கையிருப்பில் இருந்தால் மட்டுமே அவர் அமெரிக்க பிரஜை என்பதை நிருபித்து தேர்தலில் வாக்களிக்கஇடமளிக்கப்படுகிறதுஇதனால் உண்மையிலேயே அந்நாட்டின் பிரஜாவுரிமையுடைய கறுப்பு இனமக்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்கள். இது அமெரிக்காவில் நடைபெறும்மனித உரிமை மீறல் என னிதிதிவிஜி அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
அமெரிக்க அரசாங்கம் தனது நாட்டில் உள்ள மனித உரிமை மீறல்கள் பற்றி அந்தளவிற்கு அக்கறைகாட்டாமல்தமது நாட்டுப் பிரஜைக ளின் மனித உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் இலங்கைபோன்ற நாடுகளின் மனித உரிமை மீறல்கள் பற்றி பெரிதுபடுத்திதுன்புறுத் தும் முயற்சிகளைமேற்கொண்டு வருவதை அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்என்று இந்த ஆட்சேபனை குறித்து கருத்து தெரிவித்த சட்டவல்லுநர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
அது மட்டுமன்றி அமெரிக்க சனத்தொகையில் 25 சதவீதமானோருக் கும் அரசாங்கத்தினால்அங்கீகரிக்கப்பட்ட அடையாள புகைப்படம் இல்லாதிருக்கிறது. அடையாள புகைப்படம் இல்லாதபிரதேசங்க ளில் வாழும் மக்களில் பெரும்பாலானோர் கறுப்பின மக்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக