மார்ச் 27, 2013


நமது குழந்தைகளின் உயிருக்கு 

ஆபத்து எச்சரிக்கை!



 ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின்
 தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு
 இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான
 தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு 
வருகிறது.

ஆனால் இந்த நிறுவனத்தின்
 தயாரிப்புகளை
 குழந்தைகளுக்கு
 பயன்படுத்தினால்
 குழந்தைகளுக்கு அலர்ஜி,
 ஆஸ்மா, கேன்சர், போன்ற
 நோய்களையும் சில 
நேரங்களில் உடனே 
மரணத்தை கூட உண்டாக்க கூடிய அளவுக்கு 
ஆபத்தானது என்பது தெரியவந்துள்ளது.

கேரளா உணவு தரக்கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து 
தொடரப்பட்ட வழக்குக்கு பின்னர் இந்த கம்பெனி சிறிய
 கண்ணுக்கு தெரியாத எச்சரிக்கை வாசகத்தை அதில்
 பிரிண்ட் செய்துள்ளது. இதை குழந்தைகள் தொட வேண்டாம் என்று எழுதி இருக்கிறார்கள். இதை
 குழந்தைகள் தெரியாமல் குடித்து விட்டாலோ அல்லது
 சுவாசித்தாலோ பெரிய ஆபத்து உண்டாக்கும் என்று 
எழுதி வைத்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான தாயரிப்பு என்று சொல்லி விட்டு 
குழந்தைகளை தொடவேண்டாம் என்று சொல்வதில்
 இருந்து இதன் பயங்கர நச்சு தன்மையை நம்மால்
 புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நிறுவனத்தின் 
தயாரிப்புகள் அனைத்தும் சுத்திகரிக்கபடாத 
பெட்ரோல்களின் கழிவில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.
 இது குறித்து உலக அளவில் இயங்கும் சுகாதார
 நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளை
 புறக்கணிக்கும்படி  வேண்டுகோள் விடுத்துள்ளன.

இதில்
 வேடிக்கை
 என்ன
வென்றால் 
 Johnson & 
Johnson 
தயாரிப்
புகளை உபயோகப்படுத்தி அதன் மூலம் வரும் 
அலர்ஜி மற்றும் நோய்களுக்கு இந்த நிறுவனமே
 மருந்துக்களையும் தயாரித்து விற்கிறது. எப்படி 
கம்ப்யூட்டர்களை தயாரித்து விற்று விட்டு, அந்த 
கம்ப்யூட்டரை ரிப்பேர் ஆக்க வைரஸ்களை பரப்புவதும், 
அதை சரி செய்ய என்று ஆண்டி வைரஸ் வாங்குங்கள்
 என்று வியாபாரம் செய்வதும் போன்ற அதே கார்பரேட் 
கொள்ளைதான் மனித உயிர்களிலும் விளையாடுகிறது. 
அதுவும் ஒன்றும் அறியாத பச்சிளம் குழந்தைகளின்
 உயிரோடும் விளையாடுகிறார்கள்.


பெற்றோர்களே உஷார்! இந்த நாசகார ஜோன்சன் &
 ஜோன்சன் 
தயாரிப்புகளை புறக்கணிப்போம்! நமது குழந்தைகளை
 பல்வேறு 
நோய்களில் இருந்து பாதுகாப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக