ஜூன் 18, 2014


பிரேசில் - அவரவர் கவலை அவரவர்க்கு!



It is not just the hotels and tour operators, who are going to benefit the most from the 2014 FIFA Football World Cup. According to some estimates there are at least 10 lakh prostitutes in Brazil and they are also hoping to earn a lot during the World Cup.







 

பிரேசில் நாட்டில் தற்போது உலக கால்பந்தாட்ட போட்டி நடைபெறுவதை நாம் அறிவோம். இதற்காக உலகம் முழுவதிலும்
இருந்து விபசாரிகள் அங்கு குழுமியுள்ளார்களாம். மொத்தமாக 10 லட்சம் விபசாரிகள் தயாராக உள்ளனராம். போட்டியை பார்வையிட வருபவர்களுக்கு விருந்தளிக்கும் முகமாக அரசே இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. வாடிக்கையாளர்களை குஷிப்படுத்த தங்கள் ரேட்டையும் பாதியாக குறைத்துள்ளார்களாம் இந்த விபசாரிகள். இது அந்த விபசாரிகளின் கவலை.

உலக கால்பந்தாட்ட வீரர்களையும் அதனை காண வரும் உலக விஐபிக்களையும் எந்த வகையிலாவது குஷிப் படுத்த வேண்டும் என்று மதுவையும் மாதுக்களையும் வழக்கத்தை விட அதிகமாகவே சப்ளை செய்துள்ளது பிரேசிலிய அரசு. இது பிரேசில் அரசின் கவலை.

கால்பந்தாட்டத்துக்கும் விபசாரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று ஒரு சமூக ஆர்வலரும் குரல் எழுப்பவில்லை. பெண் உரிமை பேசும் பெண்களெல்லாம் தற்போது எங்கு ஒளிந்து கொண்டார்களோ தெரியவில்லை. இது நம்முடைய கவலை.

அதே நேரம் அதே பிரேசிலில் இன்னொரு கூட்டம் மக்களை உண்மையின் பால் அழைப்பதில் ஈடுபட்டுள்ளதையும் பார்க்கிறோம். அதையும் அந்த மக்கள் ஆர்வமோடு வாங்கி தங்களின் இறை தேடலை புதுப்பித்துக் கொள்கின்றனர். விபசாரம் கொடி கட்டி பறக்கும் இந்த தேசத்தில் அந்த மக்களை எப்படியாவது நல்வழிப் படுத்தி விட அல்லும் பகலும் உழைக்கும் இந்த சகோதரர்களுக்கு இறைவன் மேலும் கண்ணியத்தை தந்தருள்வானாக! இந்த காணொளியிலேயே ஒரு சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதையும் பார்க்கிறோம். எப்பாடு பட்டாவது இந்த மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்டு விட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த சகோதரர்களின் பயணம் அமைந்துள்ளது. இது இவர்களின் கவலை.

ஆக மொத்தத்தில் ஒவ்வொருவருக்கும் சமூகத்தையொட்டிய கவலை அவரவர் கோணத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக