ஆகஸ்ட் 07, 2012


ஆகஸ்ட் 6 அணுகுண்டு 

போடப்பட்ட நாள் ....நேரம் காலை

 8.15

உருகிய உலோகப்பெட்டி கருகிய உணவு
இன்று வரலாற்றின் கறுப்புதினம்.இன்றுதான் ஜப்பானின் ஹீரோசிமாவில் அந்த கொடூரமான நிகழ்வு அரங்கேறியது.காலை 8.00 மணி வேலைக்கு புறப்படுபவர்கள் சுறுசுறுப்பாக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.நகரம் முன்பாகவே விழித்திருந்தது.சாலைகள் மீண்டும் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன பாடசாலைக்கு புறப்படும் தமது குழந்தைகளுக்கு உணவை பார்சல் செய்து தாய்மார்கள் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தார்கள் காலை 8.15 பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. சூரியனை  பூமியில் பார்ப்பது போன்றவெளிச்சம் சில நொடிகள் இரும்புத்தூண்கள் குழம்புகள் ஆகின கொங்கிரீட் கட்டிடங்கள் காற்றில் பறந்தன.உருகிய உலோகத்தால் ஆன பெட்டியினுள் தாயார் கொடுத்த உணவு கருகியிருந்தது அதற்கு உரிமையான சிறுவன் சாம்பலாக காற்றோடு கலந்திருந்தான்.

ஹீரோசிமா டோக்கியோவில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரம்.இது அமெரிக்கா தான் வல்லரசு என ஏனைய நாடுகளுக்கு நிரூபிக்க பலிக்கடா ஆகிப்போனது.உண்மையைக்கூறினால் அமெரிக்கா ஜப்பான் மீது பரிசோதனையை நடத்தியது என்றுதான் கூறவேண்டும்.ஜப்பான் தாக்கியது அமெர்க்காவின் இராணுவத்தளத்தை ஆனால் அமெரிக்கா தக்கியது ஜப்பானின் சாதாரண அப்பாவி மக்களை.

காலை 8.15 ஓகஸ்ட் 1945 இல் லிட்டில் போய் என்ற அணுகுண்டு ஹீரோசிமா மீது போடப்பட்டது.இது 3 மீட்டர் நீளமுடையது.யுரேனியம் 235 ஐக்கொண்டது.3600 கிலோ எடை உடையது.12 500 டன் டி.என்.டி யின் சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது.



லிட்டில் போய் என்று Enola gay அழைக்கப்படும் US B29என்ற விமானத்தில் பசுபிக்கில் இருக்கும் தீவான Tinian இல் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.
நடுவே இருப்பவர் இந்த மிஸினை வெற்றிகரமாக நடாத்திய பவில் டிப்பெட்ஸ்

இவ் விமானத்தில் இருந்து பரசூட்டின் உதவியுடன் லிட்டில் போய் போடப்பட்டது.18.5 கிலோமீட்டர் பிரயாணத்தின் பின்னர் இலக்கை அடைந்தது.குண்டு போடப்பட்டு 4 செக்கன்ட்களில் காளான் உருவான புகைமண்டலம் 8000 மீட்ட்ர் உயரத்திற்கு எழுந்தது.பின்னர் 30 செக்கண்ட்களில் 12 000 மீட்டரிற்கு உயர்ந்து 45000 அடி வரை உயர்ந்தது.

அணுகுண்டு போடப்படுவதற்கு முன்னர்,பின்னர் ஹீரோசிமா

குண்டுபோடப்பட்ட இடத்திற்கு  7 கிலோமீட்டர் அருகாமையில் இருந்து எடுக்கப்பட்டு தப்பிய புகைப்படம்
அணுகுண்டு போடப்படும் காட்சி








70 000-80 000வரையான மக்கள் உடனடியாக இறந்தார்கள்.90%ஆன டாக்டர்கள் ஆன 93%தாதியர்கள் முழுவதுமாக இறந்தார்கள்.70 000மக்கள் காயத்திற்கு உள்ளானார்கள் மருத்துவவசதியின்மையும் இறப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாக இருந்தது.அணுகுண்டால் வெளிவிடப்பட்ட கதிர்வீச்சின் தாக்கம்காரணமாக DNAகள் தாக்கப்பட்டு பலநீண்டகால கேடுகளை விளைவித்தது.1950இற்குள் 200 000மக்கள் இறந்தார்கள்.லூக்கேமியா ,கான்சரால் இறப்புக்கள் அதிகரித்தன.அதில் 46%லூக்கேமியாவாலும் 11% கான்சராலும் இறந்தார்கள்.


ஓகஸ்ட் 6,9 களில் ஹீரோசிமா,நாகசாக்கியில் அணுகுண்டு தாக்குதலுக்கான பிரயாண வரைபடம்
உண்மையில் ஹீரோசிமாவோ நாகசாக்கியோ உடனடியாக இலக்குகளாக தெரிவுசெய்யப்படவில்லை.இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியால்4 இடங்கள் தெரிவுசெய்யப்பட்டன.
 கொகுறா-இவ்விடத்தில் அதிக அளவான வெடிமருந்து ஆலைகள் இருந்தன.


ஹிரோசிமா-துறைமுகம்,தொழில் மையங்கள்,நாட்டின் முக்கிய இராணுவ தலமை மையங்கள் இருந்தன.


நிகாட்டா-துறைமுகம்,தொழில் மையங்கள்,அலுமினியம் ஸ்டீல் உற்பத்தி நிலையங்கள்,எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தன.


கையோட்டோ-முக்கிய கைத்தொழில் நிலையங்கள்


தாக்குதலுக்கான இலக்குகளை பின்வருவனவற்றைக்கொண்டு அமைத்தார்கள்


1.இலக்குகள் 4.8 கிலோமீட்டர் விட்டத்தைவிட அதிகமாக இருக்கவேண்டும் அத்துடன் அது பெரிய நகர்ப்புறப்பகுதியாக இருக்கவேண்டும்.


2.குண்டுவெடிப்பு பாரியசேதங்களை உருவாக்கவேண்டும்.


பல வழிகளில் இந்த 4 இலக்குகளில் முதலில் தெரிவுசெய்யப்பட்டது ஹீரோசிமாதான்.ஆனால் நாகசாக்கி இந்த லிஸ்டில் இருக்கவில்லை கைட்டோதான் இருந்தது. ஆனால் அப்பொழுது யுத்தத்தில் தலமை வகித்த  Henry L. Stimson என்பவர் கைட்டோவை தள்ளிவிட்டு நாகசாக்கியை தெரிவு செய்தார்.இதற்குக்காரணம் இந்த யுத்தம் நடைபெறுவதற்கு சில வருடங்கள் முதல்தான் இவர் தனது தேன் நிலவை கைட்டோவில் கொண்டாடியிருந்தார்.
ஹீரோசிமாவைத்தாக்குமாறு வழங்கப்பட்ட கட்டளை





இது ஹீரோசிமாவின் கைத்தொழில் ஊக்குவிப்புமையம்.கட்டடம் இருந்ததற்கான அடையாளமாக எஞ்சியிருந்தது இது மட்டும்தான். இதுதான் இன்றைய நினைவுச்சின்னமாகிய the A-bomb Dome .இது அணுகுண்டால் இறந்த மக்களின் நினைவாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.


இன்றைய தோற்றம்

குண்டு வெடித்து 3 மணித்தியாலங்களின் பின்னர் நகரின் மத்தியில்  எடுக்கப்பட்ட புகைப்படம் இது.ஹீரோசிமாவில் அமைந்துள்ள பாலம் முழிவதும் அணுகுண்டால் பாதிக்கப்பட்டவர்கள் நிறைந்திருந்தார்கள்.

அதில் அதிகமாக  Prefectural Daiichi Middle School ,the Hiroshima Girls' Commercial School ஆகிய பாடசாலைகளைசேர்ந்த மாணவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.
Mr. Matsushige என்ற பத்திரிகை கமராமான் Hiroshima Tokuho என்ற பத்திரிகையில் தனது அனுபவங்களை எழுதினார்.

"ஒரு பொலீஸ் அதிகாரி ஓயில் கானுடன் ஓடி வந்து காயம்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்துகொண்டிருந்தார்.ஆனால் சடுதியாக காயம்பட்டவர்கள் அதிகரித்துக்கொண்டிருந்தார்கள்.நான் உடனே இவற்றை புகைப்படம் எடுக்கவேண்டும் என நினைத்து கமராவை எடுத்தேன்.அதன் பின் நான் கண்ட காட்சிகள் மிக கொடூரமாக இருந்தன.நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சுடுகின்றது சுடுகின்றது என்று கத்திக்கொண்டிருந்தார்கள் அவர்களது உடலில் இருந்த தீக்காயங்களினால் அவர்கள் ஆண்களா பெண்களா என்று கூட கண்டுபிடிக்க முடியாதிருந்தது.சிறுவர்கள் கத்திக்கொண்டே ஏற்கனவே இறந்த தமது  தாயின் உடலினருகில் ஓடினார்கள். நான் எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டேன் நான் ஒரு கமராமான் எனது கடமையை நான் செய்யவேண்டும்.இதுதான் ஒரே ஒரு போட்டோவாகவும் இருக்கக்கூடும்.என்னை மக்கள் இறுகிய இதயம் படைத்த பேய் என்றழைத்தாலும் பறுவாயில்லை."


300 ஆண்டுகள் பழமைவாய்ந்த எரிந்த மரம்







Shiroyama Primary School

வெடித்த இடத்திற்கு 2 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்த பெண்

இவர் 14 கிலோமீட்டர் தொலைவில் இருந்தவர்


குண்டு வெடித்த இடத்தில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருந்தவர்.உருகி எரிந்த பின் அவர் இருந்த இடம்.வெடித்ததும் வெளிவந்த கதிர்வீச்சின் வெப்பனிலை 1000 இல் இருந்து 200 டிகிரி வரை இருந்தது.




















ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டதை அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ட்ருமென் அறிவிக்கின்றார்.


அணுகுண்டு போடப்பட்டதை விபரிக்கும் அனிமேஸன்...



இப்படியான கொடூரங்கள் நடந்தேறி பல வருடங்கள் ஆகினாலும் இவை மக்கள் மனதில் மாறாத காயமாக இருந்துவருவது உண்மைதான்.இதனால்தான் உலகின் பல அமைப்புக்கள்,மக்கள் அணுஆயுதங்களுக்கு தொடர்ந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் வல்லரசுகள் தமது பலத்தை இதன் மூலமே ஏனைய நாடுகளுக்கு நிரூபித்துவருகின்றமை வெளிப்படையாகவே சகலருக்கும் தெரிந்தவிடயம்தான்.இதனால்தான் 3 ஆம் உலக யுத்தம் என்ற வார்த்தை கலக்கத்துடன் பல இடங்களில் தேவையில்லாமல் கூட வந்துசெல்கின்றது.

அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட கூறியுள்ளார்..."3 ஆம் உலக யுத்தம் எப்படி நடைபெறும் என்று என்னால் கூற முடியாது.ஆனால் 4 ஆம் உலக யுத்தம் கற்களையும்,மரத்தடிகளையும் வைத்தே நடைபெறும்".










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக