ஆகஸ்ட் 23, 2012


அமெரிக்கா –அவலத்தின்  தேசம். 




அமெரிக்கா- நம்மில் பலர் வாழ்க்கையில் ஒருதடவையாவது போய் பார்த்துவிட ஆசைப்படும் நாடு. ஐக்கிய அமெரிக்க நாடுகள் – United States of America – கட்டுப்பாடுகள் இல்லை,வதைக்கும் சட்டங்கள் இல்லை, குடிமக்களை தலைவர்களாக நடத்தும் அரசு, ஜனாதிபதியையே பெயர்சொல்லி அழைக்கக்கூடிய சுதந்திரம், சாப்பாடு, ஏஞ்சலினா ஜோலி, பிஸ்ஸா, ஹோலிவூட் படங்கள், சிலபல பலான விஷயங்கள்... ஒவ்வொருவருக்கும் கனவுகான காரணம் வேறு. கனவு ஒன்றுதான் – அமெரிக்கா!

அத்தனை சுதந்திரமான வாழ்க்கைக்குள் புதைந்து கிடக்கும் அவலங்கள் என்னென்ன? ஆபத்துக்கள் என்னென்ன? அமெரிக்காவின் மக்களின் உண்மை நிலை என்ன, அமெரிக்காவின் உண்மை மக்களின் நிலை என்ன? எதுவும் வெளி உலகத்துக்கு தெரியாது, அல்லது தேவையில்லை. அமெரிக்கா உலகத்துக்கே வந்த ஒரு வியாதி, தொற்று, அதைப்பற்றி கவலையில்லை. உலகத்தின் மீதி அனைத்து நாடுகளையும் சுரண்டும் எலி அமெரிக்கா – தேவையில்லை. அமெரிக்கா! பெயரின் போதை.

உலக சனத்தொகையின் 5% கூட வராத அமெரிக்கா உலக மொத்த சக்தி உற்பத்தியின் கால்ப்பங்கை நுகர்கிறது. மொத்த நிலக்கரியில் 25%, எண்ணை உற்பத்தியில் 26%,இயற்கை வாயுவில் 27%.

 அமெரிக்காவில் அனுமதி உள்ள ஓட்டுனர்களை விட  கார்களின் எண்ணிக்கை அதிகம், தேவையைவிட வீடுகள் 38% அளவில் பெரியவை.

அமெரிக்கர்களில் 65 சதவீதமானோர் அதிக உடல் எடை கொண்டவர்கள். (Obese) நிறைய செலவு செய்து சாப்பிடும் தேவையில்லாத தீனிகளால் வரும் விளைவு. ஒட்டுமொத்தமாக நாள் ஒன்றுக்கு 815 கலோரிகளை உட்கொள்கிறார்கள். பொதுவான தேவையைவிட 200 பில்லியன் அதிகம். இது மட்டுமே 80 மில்லியன் மக்களுக்கு அடிப்படை ஊட்டத்துக்கு போதுமானது. இப்படி வகைதொகை இல்லாமல் தின்றுவிட்டு பின்னர் அதற்கு சிகிச்சை எடுக்க வருடம்தோறும் செலவிடும் தொகை 117 பில்லியன் டொலர். (இது போதாதென்று தினம்தோறும் அமெரிக்கர்கள் 200,000 தொன் சாப்பிடக்கூடிய உணவை குப்பையில் போடுகிறார்கள். ) மேலும், அமெரிக்காவில் விளையும் மனிதர்கள் உண்ணக்கூடிய சோளத்தில் 80% மற்றும் ஓட்சில் 95% கால்நடைகளுக்கு உணவாகிறது.  உலகளவில் வருடம்தோறும் பசியால் சாகும் மனிதர்களின் எண்ணிக்கை பத்து மில்லியன். ஒரு பில்லியன் மக்களுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை.

வருடத்துக்கு சராசரியாக ஒரு அமெரிக்கர் கடனட்டைகளுக்கு (Credit Cards) கட்டும் வடுடாந்த வட்டி  1900டொலர். இது சுமார்  35 நாடுகளில் மக்களின் சராசரி வருமானத்திலும் அதிகம்.

75 வருடங்கள் வாழும் ஒரு அமெரிக்கர் உலகத்துக்கு விட்டுச்செல்லும் குப்பையின் அளவு 52 தொன். உலகளவில் கொட்டப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய குப்பையின் 72% அமெரிக்கர்களால் இடப்படுகிறது.

உலகளாவிய புவி வெப்பமயமாதலுக்கு காரணமான காபன் வெளியேற்றம் கூடிய நாடு அமெரிக்கா. அதைவிட அதிர்ச்சி, அதனை குறைத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் போட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்ததுதான். தனது நாட்டு மக்களின் நன்மைக்காக, மீதி அனைத்து நாட்டின் மக்களையும் பலிபோட கொஞ்சமும் யோசிக்காத நாடு அமெரிக்கா. சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக், வியட்னாம், கியூபா, வெனிசுலா, வடகொரியா.. இது மெரிக்கா தேவையில்லாமல் சண்டைபோட்டு அளித்த நாடுகள். ஜப்பானில் அணுகுண்டு, வியட்நாமில் வயல்நிலங்களுக்கும் மக்களுக்கும் நஞ்சு, மெக்ஸிகோ மக்களுக்கு மின்சார வேலி... அமெரிக்காவின் மந்திரம் ஒன்றுதான். தன நட்டு மக்களைத்தவிர வரு யாருமே மக்களில்லை.

எந்த நாட்டில் யாரை அழிக்க வேண்டுமென்றாலும் அந்த நாட்டின் அனுமதி  இல்லாமல் தாக்குதல் நடத்தும். தன்னை ஒருகாலத்தில் ஆண்ட , உலகத்தையே ஆண்ட பிரித்தானியா கூட அமெரிக்கா சொன்னால் கேட்டுத்தான் ஆகவேண்டும். அல்லாவிட்டால் பின்விளைவுகள் எதையும் யோசிக்காமல் அமெரிக்கா அணுகுண்டு போட்டுவிடும். ஏன்? அமெரிக்காவின் மந்திரம் ஒன்றுதான். தன் நாட்டு மக்களைத்தவிர வேறு யாருமே மக்களில்லை.

அது என்னப்பா தன் நாட்டு மக்கள், தன் நட்டு மக்கள்.. யார்தானப்பா அந்த அமெரிக்காவின் மக்கள்?

அமெரிக்காவில் தற்போது இருக்கும், தங்களை அமெரிக்கர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாருக்குமே அமெரிக்க மண் சொந்தமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால்  வெறும் நானூறு வருடங்களாக வாழும் இனங்களுக்குரியவ்ர்களே அவர்கள். அமெரிக்காவின் சுதந்திரப் போர்- புரட்சி கூட வரலாற்றில் முக்கியத்துவம் பெறாததற்கு காரணமும் இதுதான். ஏனெனில் விடுதலை கிடைத்தது சுதேச்களுக்கு இல்லை. அந்தப் புரட்சியால் அந்த மண், ஒரு அந்நிய ஆட்சியாளரிடமிருந்து இன்னொரு குழு அன்னியர்களிடம்தான் சென்றது.  அமெரிக்கர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒவ்வொருவர் கால்வைத்து நிற்கும் நிலத்திலும் அந்த மண்ணை முதலில் மிதித்தவர்களுடைய இரத்தம் படிந்துள்ளது.



மெக்ஸிகோவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் சுதேச மக்கள். ஆனால் அந்த மக்கள் தனது நாட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக மின்சாரவேலி போட்டுவைத்துள்ள நாடு அமெரிக்கா. ஏற்கெனவே ஓரளவு தெரியும் என்றாலும், இந்தப் பதிவை எழுதுவதற்காக முழு வரலாற்றையும் படித்தபிறகு எதேச்சையாக ஒரு ஹொலிவூட் படம் ஒன்றை பார்த்தேன். அமெரிக்காவின் நேர்த்தியான வீதிகள், பெரும் அங்காடிகள், கட்டடங்கள் – இத்தனை காலமும் பார்த்தபோது பிரமிப்பை தந்தவை – மனதில் பாரமாயின. அந்த ஒவ்வொரு கட்டடத்துக்கும் அடியில் செவ்விந்தியர்களின் இரத்தம், கண்ணீர், சாம்பல்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக