செப்டம்பர் 02, 2012


சுயஸ்கால்வாயில் ஈரானிய போர்கலங்கள் - அமெரிக்க ஈரானிய ரகசிய டீல்?

Abu Sayyaf
   மீண்டும் ஈரானிய கப்பல்கள் கொள்கலன்களை சுமந்து கொண்டு,
 சண்டை கலங்களின் 
வழித்துணையுடன் சிரியா சென்றடைந்துள்ளது. 
கொள்கலன்களில் சிரிய 
சண்டையை மேலும் கொண்டு நடாத்துவதற்கான ஆயுத 
தளவாடங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 இவை சிரியாவை சென்றடைந்த 
பாதையே இங்கு சில சர்ச்சைகளை கிளப்புகிறது. “சுயஸ் கால்வாய்” 
ஊடாகவே ஈரானிய கப்பல்கள் 
சிரியாவை நோக்கி சென்றடைந்துள்ளன. இந்நிகழ்வு கடந்த ஒரு மாதகாலத்தில் 
நடக்கும் இரண்டாவது நிகழ்வாகும். ஆகஸ்ட் 31, 2012 ல் சரியாக மாலை
(கிறீன்விச்) 17:43:47 வது நொடியில் இவை சுயஸ் கால்வாயூடாக 
பிரவேசித்துள்ளன.
Admiral (Ret.) Mohab Mamish. இவர் எகிப்தின் சுயஸ் கனல் அத்தோரிட்டியின் 
கட்டளை அதிகாரி. இவரின் அனுமதியின்றி எந்த கப்பலும் உள்நுழையவோ, வெளிச்செல்லவோ முடியாது. நடைமுறை சட்டங்கள் மீறப்படுமானால் 
எகிப்தின் கரைகளில் பொருத்தப்பட்டுள்ள கலிபர் துப்பாக்கிகள் வேட்டுகளை 
வானை நோக்கி தீர்க்கும். பின்னர் கப்பலை குறிவைக்கும். கப்பல் முடக்கப்படும்.
 பீரங்கிகளும் கப்பலை குறிவைத்து பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் 
“சிரயாவிற்கான ஆயுத விநியோகத்தில்” இவையெதுவும் நடக்கவில்லை.
 சர்வதேச சட்டங்களிற்கு அமைய செங்கடலின் தெற்கு வாயிலால் 
நுழையும் ஈரானிய கப்பல்களில் என்ன உள்ளது என்பதை அவர்கள் டிக்லயர் 
செய்தால் மட்டும் போதும் என எகிப்திய அட்மிரல் சிம்பிளாக இதற்கு பதில் 
கூறியுள்ளார்.

கப்பலில் செல்வது ஆயுதங்கள் என்று தெரிந்தும் கூட இஹ்வானிய அரசு 
மௌனமாக அதனை அனுமதித்தது. ஆனால் அதிபர் முர்ஷி கருத்து 
வெளியிடுகையில் துனிஷியா, லிபியா, எகிப்தின் வழியில் “சிரிய புரட்சி” 
வெல்லும் என சுப சோபனம் கூறியுள்ளார். லிபியாவின் கேர்ணல் கடாபிக்கு 
எதிராக முழங்கிய யூசுப் அல் கர்ழாவி சிரியாவின் அலவி ஷியாக்களிற்கு 
எதிராக ஆரம்பங்களில் முழங்கி இப்போது அடக்கமாக கருத்து தெரிவிக்கிறார். 
இன்னொன்றும் உள்ளது. அது...

ஈரானிய போர்கப்பல்களில் என்ன போகிறது என்பது அமெரிக்காவிற்கு நிச்சயமாக 
தெரியும். வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் இரண்டு போர்கப்பல்களை தாண்டியே இந்த கப்பல் பயணங்கள் ஈரானிற்கு சாத்தியமாகின்றன.
 இந்த ஈரானிய இராணுவ தளவாடங்களை சுமந்த கப்பல்களை முகமன் கூறி 
அமெரிக்க விமானந்தாங்கி கப்பலும், நாசகாரி கப்பலும் வழியனுப்பின என்பதே 
பெரிய உண்மை.

ஈரானிய கப்பல்கள் சண்டை கலங்களுடன் சுயஸினுள் நுழைந்ததை சும்மா 
வேடிக்கை பார்த்தது அமெரிக்க கப்பல்கள். அமெரிக்காவின் ஒரு நாசாகாரி 
கப்பலும் மத்திய கிழக்கின் கடலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கடற்பரப்பிற்கு 
அருகில் தயாராகவே உள்ளது. விமானந்தாங்கி கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ள 
தாக்குதல் விமானங்களோ அல்லது உளவு விமானங்களோ கூட ஈரானிய 
கப்பல்களை தொடர்ந்து சென்று என்ன நடக்கப் போகிறது என்பதனை கண்காணிக்
கவில்லை. இவ்வாறு தான் கடந்த மாதம் சீனாவின் போர்க்கப்பலும், புதிதாக 
நிர்மாணிக்கப்பட்ட நாசாகாரி (டிஸ்ட்ரோயர்) கலமும் சிரிய துறைமுகத்தை 
சுயஸ் கால்வாய் ஊடாக கடந்து சென்றடைந்தன.

என்ன தான் நடக்கிறது? ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் மத்திய கிழக்கு 
சம்மந்தமாக என்ன பங்கு பரிவர்த்தனை நடந்துள்ளது? மத்திய கிழக்கை 
இரண்டு துண்டாக வெட்டி இஸ்ரேலிற்கும், ஈரானிற்கும் வழங்கும் ஒரு 
பெரிய இலுமினாட்டிகளின் நாடகத்தின் ஓர் அங்கமா சிரிய போர்?. 

இருவரிற்கும் ஆயுதங்களை வழங்க துணை நிற்கிறது அமெரிக்கா. சண்டையை 
லிபியாவை போல உடன் நிறுத்த நேட்டோ செல்லவில்லை. ஆனால் சிரிய களம் 
என்பது பெரிய அழிவுகளில் அகல கால் பதித்துள்ளது. நாம் மீடியாக்களில் சிரிய 
பொது மக்களின் இழப்புக்கள் பற்றி அறிந்துள்ளோமேயன்றி உறுதியான ஒரு 
சிரிய இராணுவமும் அதன் விமானப்படையும் மெல்ல மெல்ல சின்னாபின்னப்பட்டு 
வருவதை உணர்வதில்லை. மத்திய கிழக்கின் வலிமைமிக்க மூன்றாவது இராணுவ 
இலக்கும் மிக பலவீனமான, கட்டமைப்புகள் சீரழிந்த ஒரு நிலைக்கு வந்துள்ளது. 
இதுவே அமெரிக்க இஸ்ரேல் ஸியோனிஸ தேசங்களின் நெடுநாள் கனவு. அது 
இப்போது வசப்படும் பொழுதாகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக