செப்டம்பர் 26, 2012


இஸ்ரேல் எம்மீது தாக்கினால்.... - Mohammad “Ali Jafari”, commander of Iran’s Revolutionary Guard

Mohammad Ali Jafari, September 16, 2012.

ரானை தாக்கினால் இஸ்ரேலிற்கு என்ன ஆகும்? என்ற இராணுவ களநிலையை ஊடகங்களின் தொடரான செயற்பாட்டின் ஊடாக மாற்றி இன்று உலக மக்களின் மனதை இன்னொரு சிந்தனைக்கு இட்டு சென்றுள்ளது ஸியோனிஸ சக்திகள். இன்றைய ஊடகங்கள் “இஸ்ரேல் ஈரானை தாக்க தயாராகிறது”, “எந்த நிமிடத்திலும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானை தாக்கலாம்” போன்ற செய்திகளை தொடராக வெளியிடுவதன் மூலம் இஸ்ரேல் ஈரானை தாக்குவது இயல்பான, நியாயமான ஒரு செயல் எனும் பிரமாண்டமான மித்தை உருவாக்கியுள்ளன.


இந்த அரசியல் கள நிலையில் ஈரானின் புரட்சிகர காவலர் படைகளின் தலைமை தளபதி ஒரு செய்தியாளர் மாநாட்டை நடாத்தியுள்ளார். அதில் அவர் கூறிய கருத்துக்கள் சில தகவல்களை உணர்த்துவனவாயுள்ளன.

“இஸ்ரேல் எம்மை எந்நேரத்திலும் தாக்குவோம் என அடிக்கடி கூறி வருகிறது. அல்லாவிடின் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானின் அனுஉலைகளை தாக்கியழிக்க தயாராகிறது என்று சொல்லி வருகின்றது. இவையிரண்டுமே இவர்கள் இருவராலும் பேசி முடிவாகிய ஒரு பொது வேலைத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்”.

“இது ஒரு அப்பட்டமான உளவியல் யுத்தம். அது இப்போது யூத நஸரானி ஊடகங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கபட பிரச்சாரத்தினால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் கூறும் தாக்குதல் என்பது ஒரு வேளை அவர்களால் நிகழ்த்தப்படுமானால் அதுவே இஸ்ரேல் எடுக்கும் இறுதி முடிவாகவும் இருக்கும். இஸ்ரேல் இதனால் பெரும் அழிவுகளை சந்தித்து முழுதாக நாசமாக போகிறது”.

Mohammad Ali Jafari, commander of Iran’s Revolutionary Guard இது பற்றி பேசுகையில் “எமது தற்காப்பு தயாரிப்புகள் சிறப்பானவை. மேலும் பல தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறோம். இந்த தற்காப்பு நடவடிக்கைகளால் மக்களையும் தேசத்தையும் எம்மால் பாதுகாக்க முடியும். இதனால் ஈரான் தற்காப்பு யுத்தத்தை செய்யும் என்று நம்புவது எதிரிவிடும் மிகப்பெரிய தவறாக அமையும். தற்காப்பு போரென்பது மக்களிற்காகவே. எதிரி என்று வந்து விட்டால் ஈரான் தாக்குதல் சண்டைகளை ஆரம்பிக்க தயங்காது”.

“1981 இல் ஈராக்கிலும், 2007ல் சிரியாவிலும் இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியது. பின்னர் தனது தோழமை தேசங்களுடன் சேர்ந்து இராஜதந்திரரீதியில் தனக்கு எதிர் விளைவுகள் ஏற்படாதவாறு தற்காத்து கொண்டது. இந்த தந்திரம் ஈரானிடம் பலிக்காது. நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது ஏவுகணைகள் சூழவுள்ள அமெரிக்க தளங்களையும், இஸ்ரேலிய தேசத்தையும் நிர்மூலம் செய்யும் வல்லமை பெற்றவை. இது நான் சொல்லும் வெற்று வார்த்தைகள் அல்ல. நாம் உலகிற்கும், இஸ்ரேலின் தோழமை தேசங்களிற்கும் சொல்லும் தீரக்கமான செய்தி”.

இஸ்ரேல் எம்மை தாக்கினால் அவர்களும், அவர்களது தேசமும் அழிக்கப்படும். உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேல் என்ற நாட்டை இல்லாமல் செய்யுமாறு எமது ஜனாதிபதி முழங்கிய வார்த்தைகளை ஈரானின் படையினர் செய்து முடிப்பர்”.

ஹோர்மூஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்காவினதும் அதன் கூட்டாளிகளினதும் கடற்படை ஒத்திகைகள் நடாத்தப்படுகின்றன. விடாமல் தொடராக நடாத்தப்படுகின்றன. இதனை நாம் அருகில் இருந்து அவதானித்து வருகிறோம். இவர்களது செயற்பாட்டை மட்டுமல்ல, ஹோர்மூஸ் நீரிணையின் அருகில் செல்லும் எண்ணை கப்பல்களின் நடமாட்டங்களையும் கூட. கடற் தாக்குதல்களின் பின்விளைவானது உலகின் 20 வீத எண்ணைய் விநியோகத்தை ஸ்தம்பிக்க செய்யவல்லது”.

“ஈாரன் மீது யாரும் சிகப்பு கோடுகள் கீற முடியாது. எமக்கு காலஎல்லையும் நிர்ணயிக்க முடியாது. அமெரிக்க அதிபர் தேர்தலிற்கு பலியாக்க நினைக்கும் இவர்களது ஈரான் மீதான தாக்குதல் திட்டம் எவ்வளவிற்கு ஆபத்தானது என்பதனை ஸியோனிஸ்ட்களும் அதன் தோழர்களும் விரைவில் உணர்ந்து கொள்வர். அதனை நாம் செயலில் நிரூபிக்க எப்போதும் தயாராக உள்ளோம்”.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக