டிசம்பர் 13, 2012


2030 இல் அமெரிக்காவை பின்தள்ளும் ஆசியா

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா, ஐரோப்பாவை பின்தள்ளி ஆசியா சர்வதேச சக்தியாக உருவெடுக்கும் என அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இன்னும் இரண்டு தசாப் தங்களுக்குள் அமெரிக்காவை பின்தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மறு புறத்தில்
வளர்ச்சியடைந்த நாடுகளின் மந்தமான பொருளாதாரம், வாழ்க்கைத் தர வீழ்ச்சி மற்றும் மந்தமான சனத் தொகை வளர்ச்சி குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு கவுன்ஸில் உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதனடிப்படையில் நேற்று வெளியிடப்பட்ட 172 பக்கங்கள் கொண்ட அறிக்கையிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சனத்தொகை அளவு, உள்நாட்டு உற்பத்தி, இராணுவ செலவு, மற்றும் தொழில்நுட்பத்திற்கான செலவுகள் ஆகிய அனைத்து துறைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை ஆசியா விஞ்சி நிற்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் 10, 15 ஆண்டுகளில் பொருளாதார சக்தியில் அமெரிக்காவை சீனா விஞ்சிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுபுறத்தில் ஐரோப்பா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பொருளாதார மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக