டிசம்பர் 19, 2012


பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை எதிர்க்கொண்டு அபாரமான வளர்ச்சியை கண்டுள்ளது இஸ்லாம். இந்த கணக்கெடுப்பு மூலமாக, பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பல ஊடங்களும் இஸ்லாமின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியே செய்திகளை வெளியிடுகின்றன. 

மேலே கூறியதை ஆழமாக புரிந்துக்கொள்ள சென்சஸ் தகவல்களுக்கு இப்போது செல்வோம். 

பிரிட்டனின் மொத்த மக்கட்தொகை 2001-2011 காலக்கட்டத்தில் 7% அதிகரித்து 5.6 கோடியாக உள்ளது. 

பிரிட்டனை பொருத்தமட்டில், அதிக மக்களால் பின்பற்றப்படும் மதம் என்றால் அது கிருத்துவம் தான். ஆனால் கிருத்துவத்துவர்களின் எண்ணிக்கை 2001-ஆம் ஆண்டு சென்சசை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது. 2001-ல் 3.7 கோடியாக இருந்த கிருத்துவ மக்களின் எண்ணிக்கை தற்போது நாற்பது லட்சம் குறைந்து 3.3 கோடியாக உள்ளது.  சதவித கணக்கில் சொல்லப்போனால் 71%-மாக இருந்த கிருத்துவர்களின் எண்ணிக்கை தற்போது 59%-மாக குறைந்துள்ளது. 

இது ஆய்வாளர்களுக்கு பலத்த ஆச்சர்யத்தை தந்துள்ளது. 

அதே நேரம், நாத்திகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2001-ல் 14%-மாக இருந்த நாத்திகர்களின் எண்ணிக்கை இப்போது 25%-மாக உயர்ந்துள்ளது. ஆக, பிரிட்டன் மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் நாத்திகர். 

கிருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம், இப்போதெல்லாம் கலாச்சாரம் சார்ந்து தங்களை கிருத்துவர்கள் என்று அடையாளப்படுத்துவோர் குறைந்துள்ளதாக இங்கிலாந்து சர்ச் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

கிறித்துவத்தின் வீழ்ச்சிக்கும், நாத்திகத்தின் வளர்ச்சிக்கும் ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களுக்கு பெரும் பங்கிருப்பதாக கருதப்படுகின்றது. 

இங்கு தான், ஆய்வாளர்களை வியப்பூட்டும் அந்த செய்தி வருகின்றது. ரிச்சர்ட் டாகின்ஸ் போன்றவர்களால் முஸ்லிம்களின் இறைநம்பிக்கையில் எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த முடியவில்லை என்று பிரபல "டெய்லி மெயில்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஏன் என்பதற்கு சென்சஸ் தகவல்களை பார்த்தால் விடை சொல்லிவிடலாம். 

பிரிட்டன் முஸ்லிம்களின் மக்கட்தொகை கடந்த பத்து ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. 2001-ல் 15 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 12 லட்சம் அதிகரித்து தற்போது 27 லட்சமாக உயர்ந்துள்ளது. சதவித கணக்கில் சொல்ல வேண்டுமானால் 2001-ல் 3%-மாக இருந்த முஸ்லிம்கள் இப்போது சுமார் 5% இருக்கின்றனர். இஸ்லாமின் இந்த வளர்ச்சி மற்ற எந்த மார்க்கத்தை விடவும் மிக அதிகமாகும். இதனாலேயே 'பிரிட்டனில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம்' என ஊடகங்கள் தலையங்கம் வெளியிடுகின்றன. 



இந்த செய்தி குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. பிரிட்டனின் பன்முகத்தன்மையில் முஸ்லிம்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 

முஸ்லிம் மக்கட்தொகை அதிகரிப்பு மேலும் பல முக்கிய விசயங்களுக்கு வழிவகுத்துள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இனி ஈத் விடுமுறைகள் குறித்தும், ரமலான் மாதம் அணுகப்படும்விதம் குறித்தும், பள்ளிகளில் இஸ்லாம் போதிக்கப்படும்விதம் குறித்தும் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார் இஸ்லாம்-கிருத்துவ மன்றத்தின் தலைவரான ஜூலியன் பான்ட். 

இப்படியான அபார வளர்ச்சிக்கு தெளிவான காரணங்கள் அலசப்படவில்லை. குடியேற்றம் (Immigration) ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டாலும், கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் வெளியாகும் ஆய்வுகள் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை பலமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றன. உதாரணமாக, சென்ற ஆண்டு, பிரபல 'தி இன்டிபண்டன்ட்' ஊடகம் 'இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்' என்று செய்தி வெளியிட்டது கவனிக்கப்பட வேண்டியது
இப்போது இந்த பதிவின் தலைப்புக்கு வருவோம். 

சில மாதங்களுக்கு முன்பு தான், கடந்த பத்து ஆண்டுகளில் 16 லட்சம் அதிகரித்து, அமெரிக்காவில் வேகமாய் வளரும் மார்க்கம் இஸ்லாம் என்ற ஆய்வு முடிவுகள் வெளிவந்தன 

இப்போது பிரிட்டனிலும் அதே நிலைமை உருவாகியிருப்பது குறித்து டெய்லி மெயில் ஊடகம் கருத்து தெரிவிக்கும் போது, 'பிரிட்டன் வாழ்க்கையில் இருந்து கிருத்துவத்தை வெளியேற்ற உற்சாகமாக செயல்படும் நாத்திகர்கள், தங்களின் இச்செயல் இஸ்லாமிற்கான காலியிடத்தை மட்டுமே உருவாக்கியுள்ளதை உணர்ந்துக்கொள்வார்கள். இஸ்லாம் என்னும் நம்பிக்கையை ரிச்சர்ட் டாகின்ஸ்சால் ஒன்றுமே செய்ய முடியவில்லை' என்று தெரிவித்துள்ளது. 


இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன். 

இறைவனே எல்லாம் அறிந்தவன். 


வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக