ஏப்ரல் 29, 2011

ஐ.நா அறிக்கையால் சமாதானத்துக்கு அச்சுறுத்தல் - வோல் ஸ்ட்ரீட்!


இலங்கை மீதான யுத்த குற்ற விசாரணைகள், பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பிலான அறிக்கை குறித்து, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

எனினும் இந்த அறிக்கை, யுத்தக் குற்றம் சார்ந்த விடயங்களிலேயே அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி தவணை முறை மாற்றப்பட்டமை உள்ளிட்ட அரசியல் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற வன்னி யுத்தம் குறித்த விமர்சகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், வன்னி யுத்தத்தைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் பிழையான வழி ஒன்றை பற்றிச் செல்வதாக த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வன்னி யுத்தில் இடம்பெற்ற குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் போது, அது மேலும் பிழையான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த அறிக்கைக்கு எதிராக, இலங்கையில் தேசிய ரீதியாக ஆர்ப்பாட்டங்களும், எதிர்ப்பு கருத்துக்களும் வெளிப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், சர்வதேச அமைப்புகள், இலங்கையின் யுத்த குற்றங்கள் தொடர்பில் குறைவான அவதானத்தை செலுத்தி, ஏனைய அரசியல் விவகாரங்களில் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என, அந்த பத்திரிகை வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு செய்யப்படும் போது, இலங்கையில் தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகமான அரசியல் சூழ்நிலை உருவாக ஏதுநிலைகள் ஏற்படும் எனவும், த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை தவிர்த்து, வெறும் தவறுகளை சுட்டிக்காட்டி அழுத்தம் கொடுக்கும் போது, இலங்கையில் மீண்டும் குழப்ப நிலைகள் தோன்ற வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக