மே 03, 2011

பின்லேடன் உண்மையில் கொல்லப்பட்டாரா : பெரும் சர்ச்சைக்குள் அமெரிக்கா

நேற்று முந்தினம் நடைபெற்ற பாரிய தாக்குதலில் அல்கைடா அமைப்பின் ஸ்தாபகர் ஓசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து பி.பி.சி அல்ஜசீரா மற்றும் சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகள் அவர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.   ஆனால்   அப் புகைப்படம் போலியானது   என ஆதாரங்களோடு
   தற்போது    நிரூபனமாகியுள்ளதால் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.
வெளியிடப்பட்ட புகைப்படம் ஓசாமா பின்லேடன் உயிரோடு இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெள்ளத்தெளிவாகக் விளக்கப்படுகிறது. ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஒருவரின் உடலத்தை இப் புகைப்படத்தோடு இணைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
படங்களை   திருத்தி வடிவகைக்கும்  ஒரு கணணி மென்பொருளை (phtoshop) வைத்து ஓசாமா பின்லேடன் உயிரோடு இருக்கும் போது எடுத்த படத்தை அவர் இறந்து  கிடப்பது போல வடிவமைத்துள்ளது தெளிவாக புலப்படுவதால் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.
சர்வதேச தொலைக்காட்சிகள் சில ஏற்கனவே தாம் வெளியிட்ட   புகைப்படங்களை தமது இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது.     சண்டை நடைபெற்றதாகச் கூறப்படும் இடத்தையும், இரத்தக்கறைகள் படிந்த படுக்கை அறை ஒன்றையும் காட்டி அவ்விடத்திலேயே பின்லேடன் கொல்லப்பட்டதாக இச் செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளமையும், அமெரிக்க படையினர் தாம் பின்லேடனின் உடலை கடலில் வீசிவிட்டதாகச் சொல்வதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
எது எவ்வாறு இருப்பினும், பின்லேடன் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டு வெளியான புகைப்படம் போலியான ஒன்று என்று தற்போது நிரூபனமாகியுள்ளது என்பது, மக்களிடையே அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்கர்கள் இது குறித்து மெளனம் சாதித்துவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக