மே 25, 2011


கராச்சி கடற்படைத்தள தாக்குதல்” - அமெரிக்காவின் இன்னொரு நாடகம்!!



ராச்சி. பாகிஸ்தானின் மிக முக்கிய நகரங்களில் ஒன்று. அதன் துறைமுக நகரம் இது. ஞாயிற்றுக்கிழமை பின் இரவு 10.30 மணியளவில் தலிபான் போராளிகள் சடுதியாக பீ.என்.எஸ். மெஹ்ரான் (P.N.S. MEHRAN) கடற்படைத் தளத்தினுல் நுளைந்து தாக்குதல் நடாத்தினார்கள். 12 பேர் கொண்ட தாக்குதல் அணி நடாத்திய தாக்குதலின் காரணமாக 13 பாகிஸ்தானிய கடற்படை சிப்பாய்கள் ஸ்தல பலியானார்கள்.   போராளிகள் நடாத்திய தாக்குதலில் 2 அமெரிக்க  விமானங்கள் (P-3 Orion surveillance aircraft) நாசமடைந்தன.  20 மேற்பட்டோர் காயமடைந்தனர். பாகிஸ்தானிய கடற்படை சிப்பாய்கள் திருப்பி தாக்கியதில் 4 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர். 2 போராளிகள் சிறை பிடிக்கப்பட்டனர். 4 கலஸ்னிகோவ் ரைபிள்(A.K.47) 10 கை எறிகுண்டுகள் 1 எறிகணை செலுத்தியும் இரண்டு எறிகணைகளும் (Rocket Launcher - R.P.G. 7) போன்றவை உதவி்க்கு விரைந்த பாகிஸ்தானிய பரா துருப்பினரால் கைப்பற்றப்பட்டன. சண்டை அதிகாலை 03.30 மணிவரை நீடித்தது. இந்த தளத்திற்கு சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தானிய வான் படைத்தளமான மஸ்ரூர் (MASROOR AIR BASE & ATOMIC HEADS YARD) இருக்கிறது. இங்கே 100 இற்கும் மேற்பட்ட அனுஆயுத முகப்புக்களையுடைய ஏவுகணைகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் தலிபான்கள் நன்றாகவே ஊடுருவியுள்ளனர். ஒரு கடற்படைத் தளத்தையே தாக்குமளவிற்கு பலம் பெற்றுள்ளனர். உஸாமா பின் லாதினுடைய தாக்குதலிற்கான பதில் தாக்குதலலே இது. சுமார் 6 மணி நேரம் கடற்தளத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர். அதுவரை பாகிஸ்தானிய படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக இவர்கள் மஸ்ரூர் அனு களஞ்சிய சாலையை தாக்கினால் என்னவாகும்?. அந்த அனு ஆயுதங்களை கைப்பற்றினால் விளைவு என்ன?.................. பாகிஸ்தானை பாகிஸ்தானிய அரசால் பாதுகாக்க முடியாவிட்டால் யார் பாதுகாப்பது? இவை அனைத்தும் அமெரிக்காவும் அதன் ஊது குழல்களான ஊடகங்களும் கேட்கும் கேள்விகளாகும்.

விடயம் இது தான். மேற்படி தாக்குதல் அமெரிக்காவால் அதன் உளவு அமைப்பான C.I.A.யால் வடிவமைக்கப்பட்ட ஆயுதக் குழுவான லஸ்கர் ஈ ஜங்வி (Lashkar-e-Jhangvi (LeJ))அமைப்பினரால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இதற்கான அனைத்துவிதமான அனுசரணைகளும் அமெரிக்க உளவு அமைப்பால் இவர்களிற்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதக் குழுவை உருவாக்கி பயிற்சி அளித்து பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் பல தற்கொலைத் தாக்குதல்களை நடாத்த முக்கிய சூத்திரதாரியாக விளங்கியவன்றேய்மண்ட் டேவிஸ் (Raymond Davis). இவன் தான் அப்பாவி இரு பாகிஸ்தானிய முஸ்லிம்களை சகட்டு மேனிக்கு சுட்டு படுகொலை செய்தவன். அமெரிக்க அழுத்தம் காரணமாக பாகிஸ்தானிய கோழை அரசால் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டவன்.

பாகிஸ்தானிய புலனாய்வு பிரிவினரும் கராச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் தளத்திற்கு வந்த போது அங்கிருந்த கடற்படை அதிகாரிகளால் தாமதத்திற்கு உள்ளாக்கப்பட்டதுடன் பிரதான வாயிலின் ஊடாக உள்நுளைய அநுமதிக்கப்படவில்லை. கடற்படைத்தளத்தினுல் நடைபெற்ற ஒரு வைபவத்திற்கு விருந்தினர்களாக பல பொது மக்களும் கலந்து கொண்டுள்ள வேளையிலேயே தாக்குதல் அணியினரும் மெல்ல உள்நுளைந்துள்ளனர். இவர்களிற்கு கடற்படை அதிகாரிகள் சிலரது உதவியும் கிட்டியுள்ளதாக பாகிஸ்தானிய கடற்படை புலனாய்வுப்பிரிவின் முதல் அறிக்கை சொல்கிறது.

அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள்
இஸ்லாமாபாத் தாக்குதலை சமாளிக்க அமெரிக்காவால் நடாத்தப்பட்ட போலித் தாக்குதலே இது. பாகிஸ்தானிய அனுஆயுதங்கள் பயங்கரவாதிகளின் கைகளில் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது என உலக மக்களை நம்ப வைக்கவே அமெரிக்கா இவ்வாறெல்லாம் செய்கிறது.
தலிபான் பயங்கரவாதம் என்ற பெயரில் நடைபெறும் பல தாக்குதல்களிற்கு இந்த லஸ்கர் ஈ ஜங்வி குழுவினரே காரணம். பாகிஸ்தானில் அடிக்கடி நடக்கும் சியா சுன்னி தற்கொலை தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தானிய கிறிஸ்தவர்மீதான தாக்குதல்கள் எல்லாவற்றிற்கும் இவர்களே பொருப்பாளர்கள்.

இன்றைய பாகிஸ்தானில் ஆசீப் சர்தாரி முதற்கொண்டு பல அரசியல்வாதிகளும் நிர்வாக மற்றும் இராணுவ அதிகாரிகளும் அமெரிக்க C.I.A.யால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். இந்தியாவால் தேடப்படும் முதன்மை குற்றவாளி தாவுத் இப்றாகிம் முதல் பாகிஸ்தானில் செயற்படும் இந்திய உளவமைப்பான றோ ஏஜென்ட்கள் வரை அமெரிக்க சீ.ஐ.ஏ.வால் விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். 

கடந்த பல வருடங்களாக தாவுத் இப்றாஹி்ம் அமெரி்க்காவிற்காக நேரடியாகவே களமிறக்கி விடப்பட்டுள்ளதாகவே உணர முடிகிறது. கராச்சி மசூதியில் வைத்தும் ராவல்பிண்டியி்ல் வைத்தும் அபுதாபி விளையாட்டு மைதானத்தில் வைத்தும் 3 தடவைகள் தாவுத் இப்றாஹிமை கொல்லக் கூடிய வாய்ப்புக்கள் இருந்தும் றோ அதனை செய்யவில்லை. மாறாக இந்திய உள்துறை அமைச்சக அனுமதி கிடைக்கும் வரை கை கட்டப்பட்டு விடப்பட்டது. தாவத் இப்ராஹிம் அமெரிக்காவிற்கு இன்றைய நகர்வுகளிற்கு முக்கியமாக புள்ளியாக இருப்பதால் அமெரிக்க வேண்டுகோளின் பேரிலேயே இதனை அவர்களால் செய்ய முடியாமல் போனது. 

கடந்த இரு வார காலத்தினுல் பாகிஸ்தானிய கடற்படையினர் மீது நடாத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும். இதற்கு முன்பு பாகிஸ்தானிண கடற்படையினர் சென்ற வாகனம் மீத பாதையோர குண்டுத் தாக்குதவுலும் அவர்கள் மீதான எறி குண்டு தாக்குதலும் நடாத்தப்பட்டன. இவற்றை செய்தது தரீக் எ தலிபான் என அமெரிக்கா விசம பிரச்சாரமும் செய்தது நினைவிருக்கலாம்.

ஒரு நாட்டை கைப்பற்றவோ அல்லது அழிக்கவோ நினைத்தால் அமெரிக்கா முதலில் குறி வைப்பது கடற்படை தளங்களையும் அதன் போரிடும் வளங்களையுமே. அராபிய கடலில் பம்பாயை தாக்கவல்ல தளமான கராச்சியின் மீது தாக்குதல்கள் நடாத்தப்படுவதன் பின் புலத்தில் அமெரிக்க ஸியோனிஸ சக்திகள் மட்டுமல்லாது இந்திய உளவமைப்பான றோவின் கைங்கரியங்கள் நிறையவே உண்டா?, என எண்ணத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக