அக்டோபர் 28, 2011

பற்றியெரியும் பசுமை தேசம் : லிபிய போரில் நேட்டோவின் பிரதான ஆயுதம் “அல் ஜஸீரா”


உமர் முத்தார் அவர்கள் எந்த சுதந்திர போராளிகளை 
கொண்டு போராடி, லிபிய விடுதலையை பெற்றுக்கொடுத்தாரோ
அதே சுதந்திரப் போராளிகள் எனும் பெயரை சூடிக்கொண்டவர்களை 
வைத்து அமெரிக்கா லிபிய ஆக்கிரமிப்பை பரிபூரணமாக அடைந்து
கொண்டுள்ளது. உலக வரலாற்றில் அமெரிக்க மற்றும் மேற்கின் 
ஏகாதிபத்திய சக்திகளால் உருவாக்கப்படும் பொம்மை அரசாங்கங்கள் 
ஆகக்குறைந்தது 40 வருடங்களாவது ஆட்சியில் இருப்பது வழமை.  
 
ஆக நாளைய லிபிய “ஜனநாயக”(?) அரசாங்கமும் அமெரிக்க 
அடிவருடி அரசாக இன்னொரு 4 தசாப்தங்கள் ஆட்சி புரியும். 
இது போதாதா அமெரிக்காவிற்கு!




முஸ்லிம் நாடுகளின் பலம் வாய்ந்த இராணுவ கட்டமைப்புக்கள் 
அடியோடு இல்லாதொழிக்கப்படுகின்றன. அதன் போராயுத 
கட்டமைப்புகள், கட்டளை மையங்கள், ஆயுத களஞ்சியங்கள், 
இரசாயன ஆயுத தாக்குதல் வல்லமை, உயிரியல் ஆயுத தாக்குதல் 
வல்லமை, அனுஆயுத தாக்குதல் வல்லமை என இன்னோரன்ன 
வளங்கள் அமெரிக்க மற்றும் மேற்குலகின் “சமாதானத்தின் 
பேரிலான யுத்தத்தால்” இல்லாதொழிக்கப்படுகின்றன. இராணுவ 
மற்றும் படைத்துறை சார் ஆயுதங்களையும், கலங்களையும் 
இயக்கவல்ல வல்லுனர்கள், இராணுவ துறை சார்ந்த மூளைசாலிகள், 
விஞ்ஞானிகள், திறமை மிக்க தாக்குதல் தளபதிகள், திறமை 
மிக்க கட்டளை தளபதிகள், திறமை மிக்க போரியல் திட்டங்களை 
வகுக்கும் தளபதிகள் என ஒரு யுத்தத்தை கொண்டு நடாத்தும் 
திறன்மிக்கவர்கள் அமெரிக்க சீ.ஐ.ஏ.வால் (C.I.A.) நுட்பமான 
முறைகளில் படுகொலை செய்யப்படுகின்றனர்.

நாளைய முஸ்லிம் நாடுகளின் இராணுவம் என்பது ஒரு நிலையான
கட்டமைப்புமிக்கதாக அல்லாமல் குழுத்தன்மை வாய்ந்ததாகவும், 
பிராந்திய ரீதியில் பிரிவு பட்டதாகவும், சிறிய ரக அல்லது இலகு ரக 
ஆயுதங்களை இயக்க வல்லதாகவுமே அமைவதற்கான சாத்தியங்கள் 
உள்ளன. ஆனால் மேற்குலகோ (கிறிஸ்தவ தேசங்கள்) அல்லது 
அமெரிக்காவோ (இரண்டாம் ஸியோனிஸ தேசம்) டிஜிட்டல் வோர்
பெயார் டெக்னிக்ஸ் எனும் இரண்டாவது வோர் ஜெனரேசன் 
நோக்கி நகர்கின்றன. விளைவு? பிரீமேஷனும், ஸியோனிஸமும் 
தங்கள் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கான “பட்டுப் 
பாதை”யில் மதீனாவை நோக்கி முன்னேறப் போகின்றன.

திட்டமிட்ட லிபியா மீதான ஏகாதிபத்திய யுத்தத்தின் ஆரம்பத்தில் 
கேர்ணல் கடாபியை ஒரு “மிருகத்தனமான சர்வாதிகாரியாக” 
காட்டுவதற்கு மேற்குலகு அல் ஜஸீராவையே பயன்படுத்தியது. 
அதே போல் தெருச் சண்டைக்காரர்களை “சுதந்திரப் போராளிகளாக” 
பெரிதாக காட்டியதும் அல் ஜஸீராவே. அல் ஜஸீராவின் சுதந்திரப் 
போராளிகள் முசல்லாவில் தொழுவது ஒவ்வொரு பிரதேசங்களை 
அவர்கள் கைப்பற்றும் போதும் காட்டப்பட்டது. நகரங்களுல்
நுழையும் சுதந்திரப் போராளிகள் முசல்லாவில் அமர்ந்து துஆ 
கேட்பதும், கூட்டாக தொழுவதும், அல்லாஹீ அக்பர் என 
கோஷிப்பதும் விடாமல் அல் ஜஸீராவால் காட்டப்பட்டது. இதன்
மூலம் அவர்களை இஸ்லாமியவாதிகளாக காட்டி முழு உலக 
முஸ்லிம்களையும் லிபியாவின் இஸ்லாமிய எழுச்சிக்கு 
பிரார்த்தனை புரிய வைத்ததும் இந்த அல் ஜஸீராவே. பல கோடி 
முஸ்லிம்களின் புனித தலைவர் யூசுப் அல் கர்ளாவியின்
வாயை கொண்டே லிபியாவிற்கான முதல் குண்டின் 
கிளிப்பை கழட்டியது அமெரிக்கா. அந்த புனித வார்த்தைகளை 
அடிக்கடி ஒளிபரப்பியதும் கட்டாரிய தேசத்தின் அல் ஜசீராவே.

“அல் ஸாவியா” நகரில் நுழைந்த சுதந்திர போராளிகள் (?) பொது 
மக்களை சுட்டுத் தள்ளியதும், சிகரட்களை புகைத்தவாறு நகரினுல்
நளைந்ததையும், வெற்றிக் களிப்பில் சாம்பைன் மது போத்தல்களை 
குலுக்கி அதன் நுரைகளை பரஸ்பரம் ஒருவரிற்கு ஒருவர் பீச்சிக்
கொண்டதையும் அல் ஜஸீராவின் கமராக்கள் காண மறுத்தன. 
சிர்ட்டில் கைது செய்யப்பட்ட கடாபியின் பெண்கள் அணி படையினரை 
பலவந்தமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததையோ அல்லது 
அவர்களை கொன்றொழித்ததையோ அல் ஜஸீரா பேசவில்லை.
ஆனால் எங்கேயோ உள்ள இலங்கையின் பாலியல் பலாத்காரம்
பற்றி பேசியதும் சனல் 4ன் செய்திகள் உண்மையானவை என
சாட்சிப் பத்திரம் கொடுத்ததும் இந்த அல் ஜஸீராவே.
ஆஸ்பத்திரிகளில் காயப்பட்ட சுதந்திர போராளிகளை பல 
கோணங்களில் காட்டி அனுதாபங்களை அள்ளி விதைத்த
அல் ஜஸீராவிற்கு திரிப்போலி தாக்குதலில் காயப்பட்ட அப்பாவி 
பொது மக்களை காட்டுவது மிகவும் கசப்பான விடயமாக இருந்தது
. சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை விடவும் குறைவான வீடியோ 
பூட்டேஜே அல் ஜஸீராவிடம் இருந்தது. சிர்ட்டில் படுகொலை 
செய்யப்பட்ட அப்பாவி லிபிய மக்களின் கொலைக்ளம் பற்றி
உலகம் பேச மறந்ததற்கு அல் ஜஸீரா ஒரு பிரதான காரணி. எப்படி 
இலங்கையின் கொலைக்களம் பற்றி பேசிய பிரித்தானிய 
பாரளுமன்றமும் அமெரிக்க செனட்டும் லிபிய கொலைக்களம் பற்றி
பேச மறுப்பதன் மூலம் தங்கள் நயவஞ்சகத்தன்மையை மீண்டுமொரு 
முறை நிரூபித்துள்ளன.




இந்த இரண்டாயிரமாண்டின் புத்தாண்டில் இருந்து இன்று வரை 
நடந்த அழிவுகளில் லிபியாவின் “சிர்ட்”நகரே முதன்மை 
பெறுகின்றது. ஒவ்வொரு அங்குலம் நகரவும் ஒவ்வொரு 
கட்டிடங்களை ஏவுகணைகள் கொண்டு தகர்த்தார்கள் சுதந்திர 
போராளிகள். ஒவ்வொரு தெருச்சந்திகளை கைப்பற்றய 
போதும் வீடுகளினுள் சுட்டு தீர்த்தார்கள் சுதந்திர போராளிகள்.
எதிரி நாட்டு மக்களை கொன்றொழிப்பது போல தயவு 
தாட்சண்யம் இன்றி ஆண் பெண் பாகுபாடின்றி, சிறுவர் 
முதியோர் வயது வித்தியாசம் இன்று சுட்டுத்தள்ளினர் இந்ந 
சுதந்திர போராளிகள்.  யாருக்காக இந்த சிர்ட் நகர கொலைகள். 
யார் சொல்லி இதை செய்தார்கள். விடை நாம் சொல்ல
தேவையில்லை. இவர்கள் இந்த மனித (முஸ்லிம்) 
படுகொலையை நிகழ்த்திய போது இவர்களை விடவும் 
மோசமாக சிர்ட்டை தகர்தழித்தது நேட்டோ. காஸாவின் 
கண்ணீர் பற்றி பேசும் நாங்கள் சிர்ட்டில் சிந்திய இரத்தம் 
பற்றி பேச மறுக்கிறோம். இதற்காக உலகின் எந்த மூலையிலும் 
ஆர்ப்பாட்டங்களோ கண்டனங்களோ நடாத்தப்படாத விதமாக 
ஊடக யுத்தம் எம்மை ஜெயித்து விட்டது. மேற்குலகு 
முஸ்லிமை வைத்து முஸ்லிமை அழித்ததோடல்லாமல் 
முஸ்லிம் ஊடகத்தை வைத்து முஸ்லிம் தேசத்தை 
அழித்து விட்டது.

காஸாவிற்காகவும், சோமாலியாவிற்காகவும், செச்னியாவிற்காகவும் 
பல பனரோமாக்களையும், எபிசைட்களையும், டொக்கியுமென்றிக
ளையும் தயாரித்த அல் ஜஸீராவால் லிபிய சண்டையில் சுதந்திரப்
போராளிகளின் தியாகங்கள் பற்றியும், அவர்களது வீரங்கள் பற்றியும், 
கடாபியின் கொடுமைகள் பற்றியும் மட்டுமே பனரோமாக்களையும்,
எபிசைட்களையும், டொக்கியுமென்றிகளையும் தயாரிக்க முடிந்தது. 

“லிபியாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட மக்கள் புரட்சியின் 
வீரியமிக்க ஆயுதம் அல் ஜஸீரா”. மற்றயது அல் அரேபியா. 
மேற்குலகின் சீ.என்.என், பீ.பீ.சி., ரொய்டர், பொக்ஸ் நியுஸ்  
போன்றவை பல வேளைகளிலும் அல் ஜஸீராவை மேற்கோள்
காட்டியே தமது செய்திகளை வெளியிட்டன. அவர்களால் செய்திகள்
சேகரிக்க முடியாது என்பதல்ல இதன் அடிப்படை. முஸ்லிம்களையும், 
முல்லாக்களையும், அரேபிய ஏவலர்களையும் நம்ப வைக்க சிறந்த 
வழி அல் ஜஸீரா. பாவித்தார்கள். வென்றார்கள். இது லிபிய மக்களின்
வெற்றியல்ல. இது லிபிய சுதந்திர போராளிகளின் (?) 
வெற்றியல்ல. இது ஏகாதிபத்தியத்தின் வெற்றி. இது 
ஸியோனிஸத்தின் வெற்றி. இது ப்ரீமேஸனின் வெற்றி. 
புரிந்தால் சரி.!!


Abu Maslama 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக