பிப்ரவரி 26, 2012



மொரோக்கோ: ஒரு புதிய பயணத்தின் 


தொடக்கம்



றவூப் ஸெய்ன்
moroccoமொரோக்கோ
பரப்பு: 710850 சதுர கிலோ மீற்றர்
மக்கள்: 33.8 மில்லியன் (2007)
தலைநகர்: ரபாத் (சனத்தொகை 1.6 மில்லியன்)
அரசாங்கம்: அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி
நாட்டின் தலைவர்: மன்னர் 6ம் முஹம்மத்
எல்லைகள்: மொரிடானிஅல்ஜீரியாமேற்கு ஸஹாரா ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. 
நவம்பர் 25 இல் மொரோக்கோவில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (PJD - Parti de la justice et du developpment) 395 ஆசனங்களில் 107ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மொரோக்கோவின் அடுத்த பாராளுமன்றத்திற்கு தலைமை வகிக்கும் ஆற்றலை இக்கட்சி பெற்றுள்ளது.

395 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மொரோக்கோவில் 95 தொகுதிகள் உள்ளன. 2007 இல் நடைபெற்ற தேர்தலின்போது இக்கட்சியே ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஸ்திக்லால் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. மன்னர் ஆறாம் முஹம்மத் இஸ்லாமியக் கட்சியுடன் இணைந்தே அடுத்த அரசாங்கம் உருவாக்கப்படும் எனக் கூறியிருந்த நிலையில்தற்போது இக்கட்சி பெரும்பாலான ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்திலுள்ள ஸ்திக்லால் கட்சி 60 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அக்கட்சியோடு இணைந்து கூட்டரசாங்கமொன்றை உருவாக்கும் முயற்சியில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் இறங்கியுள்ளார். ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்புக்கு ஏற்பவே தேர்தல் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Morocco-voteஇஸ்லாமியவாதிகளின் வருகையும் அரசியல் வெற்றியும் மொரோக்கோவின் எதிர்காலத்தை திசை திருப்பும் வலிமை கொண்டது என வர்ணிக்கப்படுகின்றது. ஏனெனில்,பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வகையில் மன்னரின் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
அதேவேளைபிரதமர் குறிப்பிடத்தக்க அதிகாரங்களைப் பெறவுள்ளார். இது மொரோக்கோவின் சமூகஅரசியல் தளங்களில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கை ஆழப் பதிப்பதற்கும் இஸ்லாமிய அடிப்படையிலான மாற்றங்களைக் கொண்டு வருவதற்குமான வாய்ப்பைத் தந்துள்ளது.
மொரோக்கோவின் பிரபல அரசியல் பகுப்பாய்வாளர் மஆதி முன்ஜிம் எசோஸியேடட் பிரஸுக்கு கருத்து வெளியிடுகையில், "மொரோக்கர்கள் இஸ்லாத்தையும் அரசியலையும் சரியாக ஒன்றிணைக்கின்றனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறபு நாடுகளில் நடைபெற்று வரும் மக்கள் புரட்சியின் எதிரொலியே மொரோக்கோவில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தம் எனக்கருதப்படுகின்றது. அரசியல் சீர்திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியவாதிகள் அரசியல் அதிகாரத்தைக் கையேற்றிருப்பது மிகப்பெரும் வெற்றியாகும் என அவதானிகள் கருதுகின்றனர்.
மொரோக்கோவில் மன்னராட்சி அமுலில் இருந்தபோதும் அது ஏனைய வடஆபிரிக்க முஸ்லிம் நாடுகள் போன்று மிகுந்த சர்வதிகாரம் கொண்டதாகவோ இராணுவ அச்சுறுத்தல் உள்ளதாகவோ இருக்கவில்லை. மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளும் இஸ்லாமியக் கட்சிகளும் சுதந்திரமாக இயங்கக் கூடிய அரசியல் சூழல் அந்நாட்டில் இருந்து வந்தது. மன்னரிடம் அதிகாரம் குவிந்திருந்தபோதும் தூனிஸியாலிபியா போன்று இஸ்லாமியவாதிகள் மீது ஒடுக்குமுறையோகொடுங்கோன்மையோ கட்டவிழ்க்கப்படவில்லை.
எவ்வாறாயினும்அரசியலமைப்புக்கு உட்பட்ட மன்னராட்சியில் மிக முக்கிய அதிகாரங்கள் மன்னரிடம் குவிந்து கிடந்தமை பற்றிய அதிருப்திகளும் விமர்சனங்களும் இருந்து வந்தன. தூனிஸியாவிலும் லிபியாவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை அடுத்து மன்னர் ஆறாம் முஹம்மத் மொரோக்கோவின் அரசியல் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முன்வந்திருப் பது ஒரு சாதகமான சமிக்ஞையே.
மொரோக்கோவில் மதச்சார்பற்ற கட்சிகள் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை மற்றொரு முக்கிய மாற்றமாகும். அப்பாஸ் பாஸி தலைமையிலான ஸ்திக்லால் கட்சி 2007 தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியை விட 20 ஆசனங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரவையைக் கைப்பற்றியது. ஆனால்இந்த வருட தேர்தலில் ஸ்திக்லால் கட்சியும் அரசியல் களத்தில் பின்னடைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
ஜனநாயக ஒன்றியம்அரசியல் அமைப்பு ஒன்றியம்தேசியக் காங்கிரஸ் கட்சிஜனநாயக சக்திகளின் முன்னணிதொழிற்கட்சிதேசிய ஜனநாயகக் கட்சிஜனநாயகத்திற்கான மொரோக்கோ ஒன்றியம்,சோசலிஸக் கட்சி ஆகிய பிரதான கட்சிகள் அனைத்தும் படிப்படியாகத் தோல்வியடைந்து வந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மிதவாத இஸ்லாமியம் முழு வட ஆபிரிக்க மக்களின் தெரிவாக மாறிவருவதை மொரோக்கோ தேர்தல் நிரூபித்துள்ளது.
ஒப்பீட்டுரீதியில் ஓரளவு பொருளாதார ஸ்திரம் கொண்ட மொரோக்கோவின் பொருளாதாரசமூக அரசியல் வாழ்வில் இஸ்லாமியவாதிகள் பெரும் செல்வாக்குள்ள சக்தியாக மாறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையிலேயே நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளமை கவனிப்புக்குரியது.
மிதவாத இஸ்லாமிய இயக்கங்கள்வலதுசாரி முதலாளியக் கட்சிகள்இடதுசாரி சோஸலிஸ முகாம்களைப் பின்நோக்கித்தள்ளி வருகின்றன. வன்முறையை பூச்சாண்டியாகக் காட்டிஇஸ்லாமிய சக்திகளை ஒடுக்கி வரும் அமெரிக்கா போன்ற முதலாளிய வர்க்கம் புதிய அரசியல் காட்சிகளைக் கண்டு திடுக்குற்று நிற்கின்றது.
மொரோக்கோ தேர்தல் குறித்து அமெரிக்க ராஜாங்க திணைக்களம் எதுவும் கூறவில்லை. அதன் மௌனம் மிகுந்த சங்கடத்திலிருந்து மேலெழுகின்றது.
வடஆபிரிக்காவில் வளர்ந்து வரும் இஸ்லாமிய வாதம் உறுதியான வாதம்உறுதியான அடித்தளங்களைக் கொண்டுள்ளது. அது இனி அமெரிக்காவில் மட்டுமல்லஎந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
மொரோக்கோ: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி
mororஇது அப்துல் கரீம் அல் கதீபினால் ஸ்தாபிக்கப்பட்டது. அந்நாளில் இருந்த மக்கள் இயக்கத்தை ஸ்தாபித்தவர்களின் ஒருவரே அப்துல் கரீம். 1960 களின் நடுப்பகுதியில் மக்கள் இயக்கத்திலிருந்து அவர் விலகினார். மக்கள் ஜனநாயகஅரசியலமைப்பு இயக்கம் என்ற பெயரில் அக்கட்சி பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது.
பின்னர்ஐக்கிய சீர்திருத்த இயக்கம் எனும் அமைப்பும் இதனுடன் இணைக்கப்பட்டு தரிஷ் பஸ்ரியின் ஒத்துழைப்போடு 1998 இல் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி என்று பெயர் மாற்றம் பெற்றது. தரிஷ் பஸ்ரி மொரோக்கோவின் முன்னாள் உள்விவகார அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
2002 செப்டம்பர் 27 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி முதன் முறையாகப் போட்டியிட்டு 325 ஆசனங்களில் 42 ஐக் கைப்பற்றியது. வேட்பாளர்களை நிறுத்திய அனைத்து மாவட்டங்களிலும் அக்கட்சி ஆசனங்களைக் கைப்பற்றியது. 2004 இல் கட்சியின் பொதுச் செயலாளராக ஸஅத் அத்தீன் தெரிவானார். 2007 செப்டம்பர் 07 தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 46 ஆசனங்களைக் கைப்பற்றியது. இத்தேர்தலில் ஸ்திக்லால் கட்சி 52ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தை வழிநடத்தியது.
துருக்கியின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கொள்கைகளே தம்மை ஈர்த்துள்ளதாக மொரோக்கோவின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி கூறுகின்றது. இக்கட்சியின் பிரதான நிகழ்ச்சி நிரலாக பின்வருவன அமைந்துள்ளன.
1. மொரோக்கோவின் கல்வி முறையில் சீர்திருத்தங்க ளைக் கொண்டு வருதல்.
2. ஏனைய நாடுகளுடனான பொருளாதார உறவுகளை மறுசீரமைத்தல்.
3. முதலீட்டாளர்களை ஊக்குவித்தல்
4. பூரண அறபு-முஸ்லிம் ஜனநாயகக் குடியரசாக மாற்றுதல்
5. மனித உரிமைகளை மேம்படுத்தல்.
நன்றி: மீள்பார்வை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக