பிப்ரவரி 13, 2012


 இலங்கை முஸ்லிம் 
சமூகமும் 
சமூக மாற்றம் குறித்த 
சிந்தனைகளும் 

  உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர்       

நீண்ட கால சிந்தனா அரசியல் போராட்டத்தின் 
விளைவாக அரபுலகில் புரட்சிகள் வெடித்துள்ள
மையை அவதானிக்க முடிகிறது. பெரும்பான்
மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் படிப்
படியான அரசியல் மாற்றங்களையும் விளைவாக
சமூகரீதியான மாற்றங்களையும் அவதானி
க்கிறோம். துருக்கி, இந்தோனேஷியா, 
மலேஷியா, என்பன இதற்கு சிறந்த உதா
ரணங்கள். இவ்வாறு இஸ்லாமிய உலகில்
ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இயல்பானவை.
தவிர்க்க முடியாதவை.

இத்தகைய மாற்றங்களை சிறுபான்மை 
முஸ்லிம் சமூகத்திலும் காண முடியுமா?...
எத்தகைய மாற்றங்களை இந்த சமூகங்களில்
காண முடியும். அவற்றை எவ்வாறு சாத்தி
யமாக்கலாம். இப்பிரச்சினை மிகவும் முக்
கியமானது. எமது பாதையை சரியாக ஒழுங்
குபடுத்தக் கூடியது என்ற வகையில் இது 
பற்றி இங்கு ஆராய்வோம்.

நவீன கால அரசு மிகப் பாரிய நிறுவனம். 

சமூக மட்டத்தில் அதன் கைகள் மிகவும் 
விரிந்தவை. பயிற்றுவித்தல் நிறுவனங்களான 
பாடசாலை, பல்கலைக் கழகம், ஊடகத்துறை 
என்பவற்றின் மீது அது பாரிய செல்வாக்கு 
செலுத்த முடியும். அன்றாட பொருளாதார 
வாழ்வில் அது ஏற்படுத்தும் செல்வாக்கு மிகப்
பாரியது. நீர்;,மின்சாரம்,பாதை,போக்குவரத்து
போன்ற ஓர் ஊரின், நகரின், நாட்டின் கீழ்க்கட்
டமைப்பில் கூட அது பாரிய செல்வாக்கு 
செலுத்த முடியும். இப்பாரிய இயந்திரத்தின் 
உள்ளேயே சிறுபான்மை சமூகம் வாழ 
வேண்டியுள்ளது. அதன் நீண்ட பரந்த 
கரங்களுக்கு அகப்படாமல் அதன் 
சக்கரங்களின் கீழ் மிதிபடாமல் வாழ்வது 
என்பது சாத்தியமில்லை. சமூக நிலையை 
வடிவமைப்பதில் அரச அதிகாரம் பிரயோகி
க்கும் சக்தி இவ்வளவு பாரிய தன்மை 
கொண்டதாக இருக்கும் போது சிறுபான்மை 
எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க முடியும்?
சிறுபான்மை 
சமூகத்தை பொறுத்
தவரையில் பெரும்
பான்மை முஸ்லிம் 
சமூகத்தில் காணப்ப
டும் போராட்டம் 
போன்று அரச 
அமைப்பையே 
மாற்றுவதை இலக்காக கொள்ளல் நடைமுறை
சாத்தியமான தீர்வன்று. இஸ்லாமிய அரசு, 
அங்க சம்பூரணமான இஸ்லாமிய சமூக 
அமைப்பு என்பது நம்மைப் பொறுத்தவரையில்
ஏறத்தாழ ஒரு கற்பனையே. இந் நிலையில் 
இந்தப் பாரிய அழுத்தங்களிலிருந்து இயன்றளவு 
விடுதலை பெற்று சிறுபான்மை தனது 
இஸ்லாமிய ஆளுமையைக் காத்துக் கொள்வது 
எவ்வாறு என சிந்திப்பதுவும் அதனையோட்டிய, 
அதனைப் பின்னணியாகக் கொண்ட 
இலக்குகளை வகுத்துக் கொள்ளலுமே மிகவும் 
பொருத்தமானதும் சாத்தியமானதும் கூட.

இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு கூறுகளையும்,

ஒழுங்கமைப்புகளையும் இந்த சமூக அமைப்பு 
கொண்டிருந்தாலும் அதனோடு உறவாடுவது 
தவிர்க்க முடியாதது. அந்த அரச நிறுவனங்களில்
பணி புரிய வேண்டும், பாராளுமன்றத்தில் 
அங்கத்துவம் வகிக்க வேண்டும், பாடசாலை
களுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஏனைய 
தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் செல்ல 
வேண்டும். இவ்வாறு உறவாடல் என்பது 
தவிர்க்க முடியாதது. இவை அனைத்தையும் 
விட்டு ஒதுங்கி மூடுண்ட சமூக அமைப்iபாக 
நாம் வாழ்வது என்பது எந்த வகையிலும் 
சாத்தியமில்லை. ஒரு தனிமனிதன் இவ்வாறு 
வாழ முயற்சி செய்யலாம். ஆனால் 
ஒட்டுமொத்த முழு சமூகமும் இவ்வாறான 
வாழ்வு முறை பற்றி சிந்தித்தல் சாத்தியமில்லை.
இந்த வகையில் தான் உறவாடிக் கொண்டே
இச்சமூக அமைப்பில் தன்னை இழந்து கரைந்து 
போகாமல் காத்துக் கொள்ளல் என்பதுவே 
முஸ்லிம் சிறுபான்மையின் போராட்டத்திற்கான 
அடிப்படை கொள்கையாக அமைய முடியும்.

முஸ்லிம் அல்லாத அமைப்போடு உறவாடி 

ஆளுமை அழியாது காத்துக் கொள்ளல் என்ற 
வாழ்வமைப்பின் கருத்தையும், பொருளையும் 
புரிந்து கொள்ளல் இங்கு அவசியம. இஸ்லாம் 
ஒரு சம்பூரண வாழ்க்கைத்திட்டம் வாழ்வின் 
எல்லாப் பகுதிகளையும் அது தெளிவுபடுத்துகிறது. 
எனவே ஒரு முஸ்லிம் தனது ஆளுமையைக் 
காத்துக் கொள்ளல் என்பது பரந்துபட்டதாக 
அமைகிறது. கல்வி, பொருளாதாரம், அரசியல், 
இலக்கிய சமூக வாழ்வு நடைமுறைகள், பொழுது 
போக்கு, ஆண் பெண் தொடர்பு, அடிப்படை 
நம்பிக்கைகள், வணக்க வழிபாடுகள், சடங்கு 
சம்பிரதாயங்கள், போன்ற எல்லாப் பகுதிகளையும் 
நெறிப்படுத்திக் கட்டமைத்து உருவாகும் 
ஆளுமையே இஸ்லாமிய ஆளுமையாகும். 
இப் பின்னணியில் இஸ்லாமிய ஆளுமையைக் 
காத்தல் என்பது மிகப் பாரிய தேவைத் 
திட்டமாகும். அதற்கான அதனை அடிப்படை
யாகக் கொண்ட இலக்குகளும், அதனைப் 
பின்னணியாகக் கொண்ட திட்டமிடலும், 
செயற்பாட்டுப் போராட்ட ஒழுங்கும் இந்த 
வகையில் வகுக்கப்படல் மிகவும் 
அவசியமானதாக அமைகிறது.

இப்போது இக் கருத்தையும, சிந்தனையையும் 

வைத்து எவ்வாறு இயங்கும் வழிமுறையைக் 
காணலாம். என்பது பற்றி ஓரளவு விளங்க 
முனைவோம். முஸ்லிம் சமூகம் முடிவுகளை 
நடைமுறைப்படுத்தும் அதிகாரமிக்க 
தலைமைத்துவ மையல்களை கொண்டதல்ல. 
இது சிறுபான்மை அமைப்பின் இயல்பான 
விளைவு. 
எனவே ஆழ்ந்த 
இஸ்லாமிய அறிவுப் 
பலமும் மிகச் சிறந்த 
ஆன்மீக ஏனைய வாழ்வுப்
பயிற்றுவித்தலும் 
முஸ்லிம் ஆளுமையைக் 
காக்க இத்தகைய சமூக 
சூழலில் மிகவும் 
அடிப்படையானதாகும். 
இஸ்லாம் சார் பலமான 
பொதுசன அபிப்ராயத்தின் அழுத்தம் அடுத்த 
அம்சமாகும். அத்தகையதொரு பொது அபிப்ராயம் 
கிராமம் கிராமமாக பலமாக உருவாகும் 
பின்னணியில் தான் அக்கிராமங்களுக்கான 
ஷூறா அடிப்படையிலான தலைமைகளும் 
அமைய வேண்டும்.

பொதுசன அபிப்ராயம் ஒரு மானசீக அதிகாரம்.

அரச அதிகாரம் இல்லாத போது அதுவே 
முற்படுத்ப்பட வேண்டும். எமது கிராமங்களில்
இந்நிலை காணப்படுகிறது என்பது உண்மை. 
ஆனால் இஸ்லாத்தை பற்றிய நல்ல புரிதல் 
இல்லாததன் காரணமாகவும், பயிற்றுவித்தல் 
பகுதியில் காணப்படும் குறைபாடுகள், 
பலவீனங்கள் காரணமாகவும் அது பலவீனப்பட்டும்
பல குறைகள் கொண்டதாகவும் காணப்படுகிறது. 
அத்தோடு இஸ்லாமிய பாரம்பரியங்கள் அழிந்து 
போயும். இஸ்லாமிய கலாச்சாரத் தோற்றங்களோ 
வெளிப்பாடுகளோ அற்றுப் போயும் உள்ளன. 
இந் நிலையில் கிராமங்களில் கட்டுக் கோப்பு 
உடைந்து சிதறிப் போயுள்ள. கந்தூரி வைபவங்கள், 
இறந்தோருக்கான கத்தம், மீலாதுன் நபி போன்றன
இஸ்லாமிய கலாச்சார அடையாளங்களாகவும் 
தோற்றப்பாடுகளாகவும் காணப்பட்டன.
அவை இப்போது பித்அத்காளாகக் காணப்பட்டு 
ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்விடத்தை நிரப்பும் 
வகையில் எதுவும் தோன்றவில்லை. எமது ம
க்களை குறிப்பிட்தொரு சிந்தனையின் கீழ் 
வாழ உணர்வுரீதியாக ஒழுங்குபடுத்தும் 
கலாச்சார கூறுகளும் இல்லாது போயின 
கவிதை, பாட்டு, நாடகம் போன்ற இலக்கிய 
வடிவங்களும் எமது மார்க்க வாழ்வு பிரதிபலி
ப்புகளாக எம் மத்தியில் அருகிப் போய்விட்டன. 
இவ்வாறு   பொதுசன அபிப்ராயத்தை வளர்க்கும், 
உறுதிப்படுத்தும் கலாச்சார அம்சங்கள் எம் 
மத்தியில் இல்லாது போய்விட்டன.

முஸ்லிம் கிராமங்களில் ஒரு இஸ்லாமிய 

ரீதியான ஓர் ஷூரா சிந்தனையை நடை
முறைப்படுத்தும் கட்டமைப்பொன்று தேவை 
என்ற உண்மையையே இங்கு விளக்கவிருந்தோம்.  
இந்த ஷூரா அமைப்பே கிராமத்தின் 
தலைமையாகும். அதனூடாக மக்கள் 
தமக்கான இஸ்லாமியத் தலைமையைப் 
பெறுவர். அது முஸ்லிம்  தனித்துவத்தைக் 
காக்கும் முக்கிய அடிப்படை வழியாகும். 
இஸ்லாத்தை விட்டுத் தூரமாகச் செல்ல
வோரையும், முஸ்லிம் ஊரில் இஸ்லாத்திற்கு 
முரணான சிந்தனைகள், நடத்தைகள், செயற்பா
டுகளை கட்டுப்படுத்தும் அதிகாரபூர்வமான ஒ
ழுங்கமைப்பு இது.

இத் தலைமை உருவாவது எவ்வாறு? அதற்கான 

தகுதிகளும், பண்புகளும் யாவை? அதன் செயற்
பாட்டு ஒழுங்குகள் யாவை? இவ்வாறு கிராமம் கி
ராமமாக உருவாகும் தலைமைத்துவங்கள் தம்மி
டையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தே
சிய ஒழுங்கமைப்பொன்றுக்கு வரலாமா? ஊரின் 
இந்தத் தலைமைத்துவங்கள் அதிகாரத்தைப் பிர
யோகிக்கலாமா? அது 
எந்தளவு தூரம் 
சாத்தியம்? இஸ்லாமிய 
குற்றவியல்சட்டங்
களுக்கும் சிறுபான்மை 
முஸ்லிம் சமூகத்திற்கும் 
என்ன சம்பந்தமுள்ளது?
இஸ்லாத்தின் ஷூரா 

அதிகாரம் குற்றவியல் 
சட்டங்கள் என்பவற்றை 
ஆழ்ந்து ஆராய்ந்து இக்கேள்விகளுக்கான தீர்வுகளை 
முன்வைத்து சிறுபான்மைக்கான நிர்வாக, 
முகாமைத்துவ அமைப்பொன்று தயாரிக்கப்பட 
வேண்டும்.  இப்போது கிராமங்களில் காணப்படும் 
பள்ளிவாசல்கள் நிர்வாக சபை இத்தகையதொரு
தலைமைத்துவமன்று என்பது இங்கு நன்கு 
கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

முஸ்லிம் சமூகத்தில் தற்போது காணப்படும் 

இன்னொரு தலைமைத்துவம் அரசியற் தலை
மைத்துவமாகும். அவை இஸ்லாமிய சிந்தனை
யைப் பிரதிபலிக்கவில்லை என்பது தெளிவு. 
இதன் பொருள் முஸ்லிம் பெரும்பான்மை 
சமூக அரசியலை அப்படியே இங்கு பிரதி 
பண்ண வேண்டும் என்பதல்ல. அது நடை
முறைச் சாத்தியமானதன்று. ஒரு சிறுபான்மை 
சமூகத்தின் அரசியற் போராட்டத்தை எவ்வாறு 
இஸ்லாமியப் பின்னணியிலிருந்து வரையலாம்
என்பதுவே அதன் பொருளாகும்.

சிறுபான்மை தனது இஸ்லாமியத் தனித்துவத்தை 

இழக்காது இந் நாட்டு நலனில் அக்கறை கொண்ட 
பிரஜைகளாக வாழ்வது எப்படி? என்ற கேள்வியை 
மையமாகக் கொண்டே முஸ்லிம் அரசியல் 
வகுக்கப்பட வேண்டும். இப்பின்னணியில்.

1. தனி அரசியற் கட்சி 
2. அரசுடனோ, பெரும்பான்மை, தமிழ்ச் 

சிறுபான்மையுடனோ கூட்டுச் சேர்தல்.
3. பல வகைத் துறைகளைப் பொறுப்பேற்றல், 

அமைச்சுப் பதவிகளை வகித்தல்.
4. தேர்தல் தொகுதிகள்வாரியாக முஸ்லிம்கள் 

வாழும் அமைப்பு.
5. அரசியற் தலைமைத்துவமும், பொது 

இஸ்லாமியத் தலைமைத்துவங்களும் என்ற 
இப்பகுதிகள் நன்கு ஆராயப்பட்டு சிறுபான்மை 
முஸ்லிம் அரசியற் கொள்கையொன்று 
வகுக்கப்படுவதோடு, போராட்ட ஒழுங்கொன்றும் 
அமைக்கப்பட வேண்டும்.
அடுத்து முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட
வேண்டி பகுதி உலமாக்கள் எனப்படும் இஸ்லாமிய 
அறிவுப் பகுதி சார்ந்தவர்களாவர். இவர்கள் முஸ்லிம் 
சமூகத்தை வழிநடாத்தவும், அதன் தலைமைத்து
வத்தை ஏற்கவும் தகுதி படைத்தவர்கள் எனப் 
பேசப்படுவதுண்டு. எனினும் இங்கு சிந்திக்கப்பட 
வேண்டிய சில உண்மைகளைக் கவனத்திற் 
கொள்வோம்.
1. சமூக, பொருளாதார, அரசியற் பகுதிகளில் 
காணப்படும் பல்வேறு பிரச்சினைகளையும், 
சிந்தனைகளையும் ஆராய்ந்து தீர்வு சொல்லு
மளவுக்கு உலமாக்கள் தகுதிபடைத்தவர்களாக 
உள்ளனரா? இஸ்லாமிய அரசியல், 
பொருளாதாரம், இஸ்லாமிய இலக்கியம் 
போன்ற பகுதிகளில் இஸ்லாமிய உலகில் 
தோன்றிய புதிய இஜ்திஹாது, ஆய்வுகள் 
என்பவற்றோடு இவர்களுக்கு எவ்வளவு தூரம்
தொடர்புள்ளது. மத்ஹபுகளினுள்ளே 
சிறைப்படாது முன்வைக்கப்பட்ட அந்த 
ஆய்வுகளை படித்து, ஆயும் மனோ நிலைப் 
பிரச்சினைகள் கூட உலமாக்களிடம் 
காணப்படுகிறதா?
2. இந்த வகையில் எமது மத்ரஸா அமைப்புகளில் 
பாரிய மாற்றங்கள் எவ்வாறு தேவைப்படுகின்றன? 
அவற்றை சாத்தியப்படுத்த முடியுமா? அதற்கான 
வழிமுறைகள் யாவை?
அடுத்து கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய 

பகுதியினர் முஸ்லிம் சமூகத்தின் படித்தவர்களும், 
புத்திஜீவிகளுமாவர். அவர்களில் முக்கியமாக 
இளைஞர்கள் உண்மையில் இவர்களே முஸ்லிம் 
சமூகத்தின் மாற்றத்தை சாதிக்கக் கூடியவர்கள். 
அதற்கான போராட்ட உணர்வும், நவீன உலகம் 
பற்றிய புரிதலும் இவர்களிடம் உள்ளன. ஆனால் 
இவர்களிடம் உள்ள அடிப்படைப் பிரச்சினை ஆழ்ந்த 
இஸ்லாமிய அறிவின்மையும், இஸ்லாமிய 
ரீதியாகப் பயிற்றுவிக்கப்படாமையுமாகும். 
இப்பகுதி இவ்விடயத்தில் சீர்படுத்தப்படுமானால் 
சமூக மாற்றத்தின் முதற்படியை ஆரம்பித்து 
வைத்ததாக அது அமையும்.

முஸ்லிம் சமூகத்தின் 

கட்டமைப்பை சீர்குலை
யாது பாதுகாக்கத் தக்க 
தலைமை, இஸ்லாமியப் 
பின்னணி கொண்ட 
அரசியற் தலைமை, 
நவீன ஆய்வுகள், 
இஜ்திஹாதுகளோடு 
சம்பந்தப்பட்ட உலமாக்கள், சமூக மாற்றத்தின் 
முதன்மை சக்தியாக அமையும் இளம் புத்திஜீவிகள் 
படித்த வர்க்கத்தினர் இம் மூன்று பகுதியுமே சமூக 
மாற்றத்தின் அல்லது புணரமைப்பின் அடிப்படையாவர். 
குடும்பம், அல்குர்ஆன் மத்ரஸா, பாலர் பாடசாலை  
போன்ற பயிற்றுவித்தல் நிறுவனங்கள் மேற்சொன்ன 
பிரிவினர்களின் ஊடாகவே சீர் பெற முடியும்.
இப்போது தோன்றும் கேள்வி எங்கிருந்து ஆரம்பிப்பது?

என்பதாகும். இங்குதான் இஸ்லாமிய இயக்கங்கள் 
வருகின்றன. அவை இத்தகைய கேள்விகளுக்கு 
விடை காண்பது அவசியமாகும்.

1. நாம் ஒரு கட்சி அமைப்பைப் பெற்றவர்களா? 

சமூக சீர்திருத்த அமைப்பா?
2. சமூகக் களத்தில் உழைக்கும் பல்வகைப் 
பிரிவுகளை இறுகிய கட்டமைபில் வைத்துக் 
கொள்வதா? இயக்கங்கள் மிகச் சுதந்திரமாக 
நிறுவன ஒழுங்குகளாக அமைத்துக் கொள்வதா?
3. சமூக வாழ்வை இஸ்லாமியப்படுத்தல் என்ற 
பகுதிக்கு அழுத்தம் கொடுக்கும் இஸ்லாமிய 
இயக்கங்கள் இதுவரை காலமும் ஏன் ஆழ்ந்த 
செல்வாக்கை சமூகத்தில் எங்கும் பெறவில்லை. 
எங்கு எம்மிடம் குறைபாடுள்ளது.
இலங்கை முஸ்லிம் சிறுபான்மை சமூகம் குறித்த 
சில சிந்தனைகள் இவை. இவற்றின் சில இன்னும் 
விரிவாகக் தரப்பட வேண்டும். கட்டுரை விரிந்து
விடக் கூடாது என்ற அடிப்படையில் இவ்வாறு 
சுருக்கி அமைத்தோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக