பிப்ரவரி 22, 2012


அணு உலைகளை பாதுகாக்க ஈரான் விண்ணில் போர்ப் பயிற்சி

அணு உலைகளை பாதுகாக்கும் முயற்சியாக ஈரான் இராணுவம் விண்ணில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் போர்ப் பயிற்சி 4 நாட்கள் நடைபெறும் என கதமால் அன்பியா விமானப்
படைத்தள ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதன்போது யுத்த விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்டு இந்த போர் ஒத்திகை இடம்பெற்றுவருகிறது. ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் இந்தப் போர் ஒத்திகையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த போர் ஒத்திகைக்கு ‘சரொல்லா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ‘இறைவனின் பதிலடி’ என்ற அரேபிய பொருளைக் கொண்டதாகும். இந்த போர் ஒத்திகை குறித்து ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டிலுள்ள முக்கிய தளங்களை, குறிப்பாக அணு உலைகளை பாதுகாக்கும் முயற்சியாக இந்த இராணுவ பயிற்சி முன்னெடுக்க ப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதேவேளை ஈரான் சென்றுள்ள ஐ. நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு அணு உலைகளில் ஆய்வு நடத்தாது என ஈரான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழு தெஹ்ரானில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் மாத்திரமே ஈடுபடும் என அது கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக