மே 08, 2012


போர்களமாக மாறும் U.A.E. - அமெரிக்க சதியின் விதி !

 

F-22 (Stelth Air Superiority Fighter Jet). இது தான் 
அமெரிக்காவின் இன்றைய பலம். பிற நாடுகள் மீது 
தனது ஆதிக்க இறக்கையை விரிக்க அமெரிக்கா 
நம்பியுள்ள பிரதான ஆயுதம். அமெரிக்காவின் “ F” சண்டை 
விமானங்கள் வரிசையில் இதுவே இன்றைய அதிஉயர் 
தாக்குதல் திறன் கொண்ட விமானம். அமெரிக்காவிடம் பல
 நாடுகள் தங்கள் விமானப்படையை வலுப்படுத்த, இன்னும் 
“ F-16” ரக விமானங்களை பெற்றுக்கொள்ள மன்றாடி நிற்கும்
 நிலையில் ஈரான் மீதான தாக்குதலிற்கான அமெரிக்காவின்
 தெரிவு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்டின் நிறுவனமே 
இதனையும் தயாரித்துள்ளது. 2005 ல் செய்யப்பட்டது இந்த 
விமான உற்பத்தி திட்டம். இப்போது தான் அமெரிக்க
 இராணுவம் தனது விமானப்படையின் பிரதான சண்டை
 விமானமாக எப்-22 ஐ இணைத்து கொண்டுள்ளது.  
ஐக்கிய அரபு எமிரேட்டின் அல்-தப்ரா விமான தளத்தில் 
இவை இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
பென்டகன் அமெரிக்க விமானப்படை விமானமான எப்-22
 விமனாங்கள் தென் மேற்கு ஆசியாவில் நிலை
 நிறுத்தப்பட்டுள்ளன என்றே கூறியது. ஆனால் இவை
 இரகசியாமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் 
தரையிறக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. இதற்கு 
முன்னரே வளைகுடா கடலில் இரண்டு விமானந்தாங்கி 
கப்பல்களையும் துணை கலங்களையும் நிறுத்தியுள்ள 
அமெரிக்கா இப்போது எமிரேட்ஸில் விமானப்படையணியை 
நிறுத்தியிருப்பது ஈரான் மீதான தாக்குதலினை விரைவாகவும்,
 அடுத்தடுத்தும் நிகழ்த்த கூடிய ஏதுவான நிலையை 
அமெரிக்காவிற்கு உருவாக்கியுள்ளது. விமானப்ப
டைத்தளமளித்த ஐக்கிய அரபு இராஜ்ஜிய அரசு 
விமானங்களிற்கான எண்ணையை தாராளமாக 
வழங்காமலா இருக்கப்போகிறது?.

இன்னொரு நாட்டின் வான் எல்லையை கடந்து சென்று 
தாக்குதல் நடாத்தும் நிர்ப்பந்த நிலையற்ற வாய்ப்பானது
 அமெரிக்காவின் இராஜதந்திரத்தில் ஒரு வெற்றியாகவே
 கொள்ள முடியும். அமெரிக்காவின் அரவணைப்பில் சவுதி
 அரசு மட்டுமே என்ற நிலை மாறி இப்போது குவைத்,
 கட்டார், ஐக்கிய அரபு இராஜ்ஜியங்கள் என தனது 
இராணுவதள எல்லைகளை அமெரிக்கா ஆழமாக 
விரிவாக்கம் செய்துள்ளது. ஒட்டகத்திற்கு இடம் 
கொடுத்தால் எழுப்ப முடியாது என பழமொழிகள் 
சொன்ன தேசம் இன்று தனது மண்ணில் அமெரிக்காவிற்கு
 இடம் கொடுத்துள்ளது. 

உலகின் கடல்வழி போக்குவரத்தின் முக்கிய இடம் 
ஹோர்மூஸ். இந்த சந்திப்பின் ஊடாகவே உலக கடல் 
வர்த்தக போக்குவரத்துக்கள் நடைபெறுகின்றன. இதன் 
முனையில் உள்ள மூன்று தீவுகள் அபூ மூஸா, பெரிய,
 சிறிய துன்ப் தீவுகளாககும். ஈரானிய ஊடகங்கள் இந்த 
தீவுகளை அசையாத ஈரானின் விமானந்தாங்கி கப்பல்கள் 
எனவே அழைக்கின்றன. இந்த பாதையை ஈரான் மூடினால்
 உலக பொருளாதாரம் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள 
நேரிடும்.  

ஈரானிய பாதுகாப்பமைச்சர் ஜெனரல் அஹ்மட் வாஹித் 
இதனை ஒரு ஆத்திரமூட்டும் செயல் என வர்ணித்துள்ளதுடன்
 எமது ஏவுகணைகள் இதுவரை காலமும் இஸ்ரேலை 
முன்னோக்கியே நிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு 
இராஜ்ஜியங்கள் அமெரிக்காவிற்கு தளம் வழங்கியுள்ள
மையால் நாம் சில முடிவுகளை நோக்கி செல்ல 
வேண்டியுள்ளது என சூட்சகமாக ஒரு செய்தியை 
வளைகுடா தேசங்களிற்கு சொல்லியுள்ளார்.

அமெரிக்காவின் அராபிய நேட்டோ என அழைக்கப்படும் 
தேசங்கள் சவுதி அரேபியா, குவைத், கட்டார் போன்றன.
 இப்போது அந்த வரிசையில் ஐக்கிய அரபு இராச்சியமும் 
இணைந்துள்ளது. வளைகுடாவில் மட்டும் 200 பில்லியன்
 டொலர்   பெறுமதிமிக்க அமெரிக்க ஆயுதங்கள் குவிக்க
ப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கான பாதுகாப்பு
 என்ற பெயரில் பெட்ரியட் ஏவுகணை பாதுகாப்பு 
பொறிமுறையை அண்மையில் அமெரிக்கா வழங்கிளது.
 சுமார் 4 பில்லியன் அமெரிக்கன் டொல்ர்கள் பெறுமதியான
 உதவி அது. மத்திய கிழக்கின் கேடய படை என இந்த 
தேசங்களின் இராணுவங்களை லியோன் பெனாட்டா 
அழைப்பது வழக்கம். 

1990 ஈராக் யுத்தம், 2003 குவைத் யுத்தம், மற்றும் 2011 ல் 
பஹ்ரைன் புரட்சியை அடக்க படைகளை அமெரிக்கா சவுதி 
இராணுவம் என்ற பெயரில் நன்றாகவே பயன்படுத்தியுள்ளது. 
அமெரிக்க ஆயுதங்கள் மட்டுமன்றி பிரான்ஸ் மற்றும் 
பிரித்தானிய ஆயுதங்களும் இன்று மத்திய கிழக்கில் 
குப்பையாக கொட்டப்பட்டுள்ளன. 'Black Gold' என்ற 
வார்த்தையின் அர்த்தம் கறுப்பு தங்கம். இது பற்றிய 
திடைப்படம் ஒன்றும் முன்பு வெளிவந்தது. மீண்டும்
 தங்களது அந்த யுகத்தை உருவாக்க நினைக்கிறார்கள் 
அமெரிக்கர்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்டின் வாதமான தீவுகள் தமக்கே 
சொந்தம் என்ற கோரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை.
 ஹொங்கோங்கை பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது 
போல 41 ஆண்டுகள் ஈரானியக் கட்டுப்பாட்டின் கீழ் தீவுகள்
 இருப்பதற்குப் பின் இம்மோதல் திடீரென மீண்டும் 
வெளிப்பட்டுள்ளமை வாஷிங்டன் கூட்டாகச் செயல்படுத்திய 
ஆத்திரமூட்டுதலின் விளைவுதான் என்பது தெளிவு. 
பாரசீக வளைகுடாவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதின் 
மூலம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானுக்கு 
ஒரு தகவலை அனுப்புகின்றன. பின்வாங்கு, அல்லது 
மற்ற முன்னணிகளிலும் அழுத்தங்களை எதிர்கொள்.” 
என்பதாகும்.
கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுச் 
சுற்றுக்களைத் தொடர்ந்து ஈரானில் போர் ஆபத்து 
என்பது குறைந்து கொண்டிருக்கிறது என நம்பிக்கை 
தரும் செய்தி ஊடகத் தகவல்கள் வெளிவந்தன. 
இந்நிலையில் இப்பிராந்தியத்தில் சமீபத்திய ஆத்திரமூட்டல்
 தரும் மற்றும் பொறுப்பற்ற அமெரிக்க இராணுவத்தின் 
நிலைப்பாடு என்னும் செயல் அந்நம்பிக்கைக்கு முற்றிலும் 
மாறாகத்தான் உள்ளது.
கடந்த ஒரு தசாப்தக்கால ஆப்கானிய, ஈராக் போரில் 
இந்த நோக்கத்தை அடைவதில் தோல்வி அடைந்துள்ள 
நிலையில், வாஷிங்டன் இப்பிராந்தியத்தின் பெரிய 
சக்தியான ஈரானுக்கு எதிரான ஒரு மூன்றாம் போரை
 நடத்துவதற்கான தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. 
இந்நாடோ ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்கிற்கும் இடையே 
உள்ளது ஆகும்.
இன்னும் கூடுதலான அமெரிக்க இராணுவப் படைகள் 
பேர்சிய வளைகுடாவில் நிலைநிறுத்தப்படும்போது, 
ஏற்படும் மோதல் என்பது ஈரானுக்கு எதிரான ஓர் 
அமெரிக்கப் போருக்கு வழிசெய்யக்கூடும் அல்லது இது 
ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படும். வியட்நாமிற்கு 
எதிராக ஒரு முழுஅளவு அமெரிக்கப் போருக்கு டொன்கின் 
வளைகுடா நிகழ்வு அரங்கு அமைத்துக் கொடுத்தது 
போலவே, எப்பொழுதும் போலிக்காரணங்கள் 
தயாரிக்கப்படலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக