ஜூலை 25, 2011


அமெரிக்க சதியும் - பாகிஸ்தான் விதியும்

பாகிஸ்தான். ஆசியாவின் இராணுவ பலமிக்க இரண்டாவது பெரிய முஸ்லிம் நாடு. (முன்னையது ஈரான்). இராணுவ தளபாடங்களில் இந்தியாவை விடவும் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி பரீட்சார்த்தம் செய்து பார்த்த நாடு.


தரமான ஆகாயப்படையினரைக் கொண்ட் நாடு. மிகச் சிறப்பாக சண்டையிடும் விசேட இராணுவ படைப்பிரிவுகளை தன்வசம் வைத்துள்ள நாடு. இந்த நாட்டின் இராணுவத்தினரிடம் தேசப்பற்று மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், 
இஸ்லாம், சர்வதேச முஸ்லிம் உம்மா எனும் உறுதியான கருத்தியல்கள் வெகுவாக பரவி விரவி காணப்படுகிறது.

ஏவுகணைத் தொழில் நுட்பத்திலும் சீனா வடகொரியா ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து தனது ஏவுகணை தாக்குதல் வளங்களை வெகுவாக அதிகரித்துக் கொண்ட நாடு. கூடவே அணு ஆயுத பலம். சொல்லப்போனால் அமெரிக்க (ப்றீ மேசன்) கொள்கைக்கு பெரிய தடங்கலான நாடு.இந்த நாட்டின் இராணுவ மற்றும் உளவு அமைப்பின் கட்டமைப்புக்களை தகர்க்க வேண்டும் எனும் முடிவு பென்டகனால் 1996களிலேயே முடிவாக்கப் பட்டுவிட்டது. அதனை செயற்படுத்துவதற்கான முயற்ச்சியில் இந்தியாவுடன் கைகோர்த்து செயற்படுகிறது அமெரிக்கா.


ஜெனரல் ஸியா உல் ஹக்கின் படுகொலை, ஜெனரல் அப்துர் ரஹ்மானின் படுகொலை, ஜெனரல் அஸ்லம் பெக்கின் பலாத்கார இராஜினாமா, தலிபானிற்கு ஆதரவு வழங்கியமை, அல்கைதா எனும் ஊடக மாயை, பம்பாய் தாக்குதல்கள், பலுசிஸ்தான் போராட்டத்தை தீவிரப்படுத்தியமை, பெனாசிர் பூட்டோவை கொலை செய்ய வைத்தமை, நீதிபதி சொளத்திரி மூலம் பர்வீஸ் முஸாரபை கவிழ்த்தமை, சியா சுன்னி பிரச்சனையை ரத்தக்களரியாக்கியமை , தற்கொலை தாக்குதல்களிற்கு பயிற்சி அளித்து தற்கொலையாளியின் குடுப்பங்களிற்கு பணம் வழங்க ஏற்பாடு செய்தமைஎன பல முனைகளில் காய் நகர்த்திய அமெரிக்கா இப்போது நேரடி நடவடிக்கைகளில் இறங்களாம் என தீர்மானித்துள்ளது.


அந்த தீர்மானத்தின் முன் விளைவு வஸிரிஸ்தான்(N.W.P.F.) பிரதேசங்கள் மீதான பரவலான வான் மற்றும் ஏவகணைத் தாக்குதல். கூடவே அந்த பிரதேசங்களில் திடீரென வந்திறங்கி தாக்குதல் நடத்திச் செல்லும் அமெரிக்க ஒத்திகை. தற்போதைய விளைவு பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தினுள்ளேயே வந்து தாக்குதல் நடத்திச் சென்றமை. இதில் பாகிஸ்தான் அரசிற்கு ஒரு செய்தி சொல்லியுமிருக்கிறது அமெரிக்கா.


உண்மையில் உஸாமாவை கொன்றதைவிட பாகிஸ்தானிற்கே செக் வைத்துள்ளது அமெரிக்கா. தலைநகரில் உலக பயங்கரவாதிக்கு அடைக்கலம் எனும் இறுக்கமான அரசியல் பாச கயிற்றை வீசியுள்ளது அமெரிக்கா. கூடவே ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியா, ”பாகிஸ்தானின் தீவிரவாதத்தை ஆதரிக்கும்” போக்கை பல முனைகளிலும் தனது ஊது குழல்களின் மூலம் கண்டிக்கிறது.


சர்வதேச ரீதியாக பாகிஸ்தானை இராணுவரீதியில் தனிமைப்படுத்தப் பார்க்கிறது அமெரிக்கா. அண்மைக்காலமாக சீன பாகிஸ்தான் இராணுவ உறவு அமெரிக்காவிற்கு எரிச்சல் தரும் ஒரு விடயமாகவும் வருங்கால எச்சரிக்கையாகவும் இருந்தது.


அண்மையில் பஹ்ரைன் நாட்டில் மக்கள் போராட்டத்தை அழித்தொழிக்க முற்பட்ட மன்னராட்சி பாகிஸ்தானிடமே நேரடி உதவி கோரியது. ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் பாகிஸ்தானிய இராணுவத்தை புரட்சி ஏற்பட்டால் அதை அடக்க தந்துதவுமாறு கோரியிருந்தது. இது அமெரிக்காவிற்கு அதிர்ச்சி தரும் விடயமும் கசப்பான விடயமுமாகும்.


முன்னைய இரண்டு நாடுகளின் கோரிக்கையினையும் விட பேரதிர்ச்சியான விடயம் சவுதி அரேபிய இராணுவ தளபதியின் மார்ச் மாத பாகிஸ்தான் விஜயம். அதில் அவர் சவுதியில் மக்கள் கிளற்ச்சி அல்லது அல்கைதா புரட்சி ஏற்பட்டாலோ அல்லது ஈரான் போன்ற நாடுகளது இராணுவ ஆக்கிரமிப்பு நடந்தாலோ பாகிஸ்தான் அரசு நட்பு நாடு என்ற ரீதியில் நேரடியான இராணுவ தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரி்க்கை விடுத்திருந்தார்.
இதற்கு பகரமாக சவுதி அரேபியா பாகிஸ்தானிற்கான நிதி உதவியினை செய்யும் எனவும் கூறி ஒப்பந்தம் கைசாத்திட்டார். இது அமெரிக்காவின் எதிர்கால மத்திய கிழக்கிற்கான கொள்கையில் பாரிய விளைவு மாற்றங்களை கொண்டு வருமென்பது அமெரிக்காவிற்கு நன்கு தெரியும்.


அமெரிக்கா என்பதனை விட ஸியோனிஸ சக்திகளிற்கும் ப்றீ மேசனின் சாத்தானிய தேச உருவாக்கத்திற்கும் இது பாரிய பின்னடைவாக அமையும் என்பதே உண்மை நிலை. அகண்ட யூத தேச சாம்ராஜ்ஜிய கனவை (அதன் ஒரு எல்லை மதீனாவை கடந்து யெமன் வரை) அடியோடு இல்லாது ஒழித்துவிடும்.


பாகிஸ்தானிய படைகள் கூலிப்படைகளாக சவுதி மண்ணில் நிலைகொண்டால் முஸ்லிம்கள் என்ற ரீதியில் பாரிய நிரந்தர படைத்தளப் பெருக்கத்தை வளைகுடா வரைக்கும் விரிவாக்கும்.


ஓநாய் எவ்வழியோ தெரு நாயும் அவ்வழி என்று ஒரு பழமொழி உண்டு. சவுதி அரேபியா பாகிஸ்தானிய படையினரிற்கு தளமமைக்க (கூலிப்படைத்தளம்) இடமளித்தால் குவைத், பஹ்ரைன், கட்டார், எமிரேட்ஸ் என ஏனைய நாடுகளும் அதே வழியை பின்பற்றும்.


அப்படி ஒரு நிலை தோன்றினால் அமெரிக்கா தளங்களை இழுத்து மூட வேண்டிய நிலை வரும். இராணுவ தளங்களை மூடினால் அடுத்த கட்டம் எண்ணெய் நிர்வாகங்களையும் இழக்க வேண்டி வரும்.


ஆக உடனடியாக பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்தி அதன் இராணுவ கட்டமைப்பை தகர்த்து பலவீனமாக்கி, எப்படி சோவியத் யூனியன் எரிட்ரியாவையும் சோமாலியாவையும் வறுமை நாடாக மாற்றியதோ அதே போல் பாகிஸ்தானையும் பங்களாதேசை விட கேவலமான நாடாக மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது அமெரிக்கா.


இதன் பின்னணியில் யூத ஸியோனிஸ லொபிகளும், சாத்தானிய சக்திகளும் உள்ளன. அவற்றின் அழுத்தமே அண்மைய தாக்குதல் நாடகம். இனிவரும் காலங்களில் பாகிஸ்தானில் மட்டுமல்ல ஏணையை முஸ்லி்ம் நாடுகளிலும் உள்ள இராணுவ அரசியல் மார்க்க தலைவர்களை நினைத்தவாறு நினைத்த இடத்தில் கொல்லும் (INTERNATIONAL KILLING LICENCE) எடுப்பதற்கான முதல் நடவடிக்கையே இது.


ஐ.ஏஸ்.ஐ. - I.S.I.
பாகிஸ்தானின் அரசியல் இராணுவ நிலையை தீர்மானிக்கும் தீர்க்கமான சக்தி மிக்க அமைப்பு. கடல் கடந்த உளவு மையச் செயற்பாட்டில் சி.ஐ.ஏ.க்கும் மொஸாட்டிற்கும் சற்றும் சளைத்ததள்ள ஐ.எஸ்.ஐ. ஜெனரல் ஸியாஉல் ஹக்கினால் மிக கச்சிதமாக வடிவமைக்கப்பட்ள உலக தரம் வாய்ந்த அமைப்பு.
உலக நாடுகளின் உளவு அமைப்பு பட்டியலில் 8 வது இடம் இதற்கு. இந்தியாவின் ரோ கூட 11 வது இடத்திலேயே உள்ளது.
நவாஸ் சரீப் பெனாஸிர் பூட்டோ அலி சர்தாரி போன்றவர்களது மூன்றாம் தர அரசியல் உபாயங்களிற்கும் உள்நாட்டு அரசியல்வாதிகளை வேவு பார்ப்தற்கும் ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தப்பட்டமையால் அதன் தரம் வெகுவாக கெட்டு விட்டது. அத்துடன் மேல் மட்ட ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளிடம் ஊழல் தலைகாட்டத் தொடங்கிவிட்டது. 
துல்லியமான உளவுத் தகவல்களை சரியான நேரத்தில் அரசியல் தலைமைக்கு தெரிவிக்காமை தவறான தகவல்களை வழங்குகின்றமை என அதன் நாட்டிற்கான விசுவாச போக்கு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.யினுலும் சி.ஐ.ஏ. (C.I.A.) ஏஜென்ட்கள் உருவாகியுள்ளமை பெரிதும் கவலை தரும் விடயமாகும். இப்போது ஐ.ஏஸ். இரண்டாக உள்ளது. ஒரு சாரார் இஸ்லாமிய எழுச்சிக்கு ஆதரவாகவும் அமெரிக்க இந்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் வேலை செய்கின்றனர். மறுசாரார் பாக்கிஸ்தானிய அரசியல்வாதிகளின் விசுவாசமிக்க நாயாக உழைக்கின்றனர்.


இஸ்லாமாபாத் தாக்குதல் பாகிஸ்தான் அரசிற்கு முன்பே தெரியும்
பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ. இயக்குனர் ஜெனரல் HAMEED GUL கடந்த வாரம் வாசிங்டன் பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்கு காரணம் பாக்கிஸ்தானியரை சுட்டு கொன்ற அமெரிக்கரது விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு என காரணமும் கூறப்பட்டது.
ஆனால் உண்மையில் அவர் பென்டகனில் அமெரிக்க தாக்குதல் நாடகத்தை எவ்வாறு வெற்றிகரமாக நடாத்துவது என்பது பற்றியே தனது அநுபவ அறிவை அமெரிக்க ஓநாய்களிற்கு வழங்கிக்கொண்டிருந்தார். (எகிப்தின் உமர் சுலைமான் - OMAR SULAIMAN போன்று)
ஆஸிப் அலி சர்தாரி பெயர் பெற்ற ஊழல் பெருச்சாலி. பெனாஸிரின் காலத்தில் செய்த ஊழலிற்கு சிறையிலும் அடைக்கப்பட்டவர். அவர்தான் இன்றைய பாக்கிஸ்தான் ஜனாதிபதி. சி.ஐ.ஏ.யால் மொத்தமாக விலைக்க வாங்கப்பட்டவர். அமெரிக்கா செய்ய நினைப்பதை பாகிஸ்தானில் அரசியலாக்கும் துரோகி. யூசுப் ரஸா கிலானி நவாஸ் சரீப் போன்ற எல்லோருமே பாகிஸ்தானை ஏப்பம் விட்ட முதலைகள். இவர்கள் அனைவருடனும் அமெரிக்காவிற்கு நெருங்கிய நட்புண்டு. பாகிஸ்தானில் அமெரிக்கா இராணுவ தாக்குதல் ஒன்றை நடாத்த இருப்பது இவர்களிற்கு ஏலவே தெரிந்த ஒரு விடயம்.


ஒபரேஸன் ஜெரோனிமோ 

Osama Bin Laden Military Operation Code Name 'Geronimo'  ("enemy killed in action.")

general Hamid Gul 9/11
General Hameed Gul
இந்த அமெரிக்க போலி தாக்குதல் நாடகத்தி்ற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்ததே ஐ.எஸ்.ஐ (I.S.I.) இயக்குனர் ஹமீட் குல் தான். அங்கே பின் லாதினுடைய குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் தேவைகளை கவனிக்க 10 பேர் கொண்ட பணியாளர் குழு அவர்களுடன் தரித்திருந்தது. அதில் நால்வர் ஐ.எஸ்.ஐ. ஊழியர்கள். இந்த அடிப்படையை வைத்தே அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டது.
ஸ்டெல்த் ரக (MH-60 stealth variant of a standard Black Hawk helicopter) தாக்குதல் ஹெலிகொப்டர்மூலம் தரையிரங்கிய அமெரிக்க படையினர் மீண்டும் திரும்பிச் செல்கையில் பிரிதொரு ஹெலிகொப்டரிலேயே தளம் திரும்ப முற்பட்டனர். ஒஸாமாவை கொன்றோமா இல்லையா என்ற விவரம் இவர்கள் வாய் மூலம் கசியாமல் இருக்க அந்த வீட்டில் சகட்டு மேனி்க்கு பேர்ஸ்ட் பயர் செய்த இந்த வெறி பிடித்த சிப்பாய்களை சீ.ஐ.ஏ. அதே ஸ்டெல்த் ஹெலிகொப்டர் மூலம் தாக்கி அழித்து்ம் விட்டது. (மொத்த கொம்பாட்மென்ட் யூனிட்டில் இறந்த ஐவருமே வீட்டினுல் உள் நுழைந்தவர்கள்)
The MH-60 stealth variant of a standard Black Hawk helicopter
நிலைமைகள் பாகிஸ்தானில் தீவிரமடைந்தமையும் பாகிஸ்தானிய இராணுவ தலைமை குறிப்பாக ஜெனரல் அஸ்பாக் பர்வீஸ் கியானி இது தொடர்பில் வேகமாக செயற்பட்டமையால் பாகிஸ்தான் அரசு அமெரி்க்காவிற்கு எதிராக அறிக்கை விடு்ம் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்க தாக்குதல் முயற்ச்சிக்கு எதிராக அமெரிக்காவை பற்றி பேசாமல் இந்தியா இவ்வாறு தாக்கினால் நாங்கள் இந்தியாவை அழிப்போம் என சூளுரைத்து அடிமட்ட சாரசரி பாகிஸ்தானியரின் இந்திய விரோத உணர்வை உசுப்பிவிட பார்க்கிறது பாக் அரசு.


நாளை ஜலாலுத்தீன் ஹக்கானியில் தொடங்கி மொலான பஸ்லுர் ரஹ்மான் அல்லது காஸி ஹீசைன் வரை படுகொலை செய்யும் இஸ்ரேலிய பாணியிலான கொமாண்டோ ஒப்பரேசன்கள் பரவலாக இடம்பெற வாய்புண்டு.
இந்தியாவும் அதன் பங்கிற்கு லஸ்கரி தய்பா தலைமை என்றும் தாவூத் இப்ராஹிம் என்றும் கொமாண்டோ தாக்குதலை பற்றி சிந்திக்கலாம். 


பலுசிஸ்தானை பாகிஸ்தானில் இருந்து பிரித்து ஈரானிய பலுசிஸ்தானையும் ஆப்கானிய எல்லை பலுசிஸ்தானையும் ஒன்றாக இணைக்க அமெரிக்கா முற்படலாம். இதன் மூலம் ஈரானுடன் அதன் நாட்டுக்குள்ளேயே பலுசிஸ்தான் போராட்டத்தை உருவாக்க பார்கிறது அமெரிக்கா.
இந்த பிரச்சனைகளிற்கு அவசரமாக தேவைப்படுவது ஒருஇராணுவ புரட்சி. பாகிஸ்தான் பாகிஸ்தானாக இருக்க வேண்டுமென்றால் மீண்டும் ஒரு உறுதியான இறுக்கமான இராணுவத் தலைமை பாகிஸ்தானிற்கு தேவைப்படும். அப்போது அதன் தேர்வு மேற்குலக ஆதரவா இல்லை அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்கத் துடிக்கும் இஸ்லாமிய முஜாஹித்களின் உறவா? என்பதை தீர்மானிக்கும்.


 - அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக