ஏப்ரல் 04, 2012


துலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன

By Alex Lantier 

செய்தி ஊடக அறிக்கைகளும், உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகளின் விமர்சனங்களும், துலூஸில் ஒன்பது நாட்களில் மூன்று யூதப் பாடசாலைக் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரியானமுஹமட் மேரா ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சொத்தாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன.
இவ்வெளிப்பாடுகள் மேராவை தடுப்பதில் பிரெஞ்சு உளவுத்துறையின் தோல்வி பற்றிய வினாக்களை எழுப்புகின்றன; மேலும் இத்தோல்வி அரசியல் போக்குகளால் ஆணையிடப்பட்டனவா என்ற வினாவும் எழுகிறது. மேரா விசாரணையானது மத்திய உளவுத் துறை இயக்ககத்தினால் (DCRI)நடத்தப்பட்டது; இதற்கு Bernard Squarcini என்பவர் பொறுப்பானவர், அவரோ தற்போதைய ஜனாதிபதியான நிக்கோலா சார்க்கோசிக்கு நெருக்கமானவர். PSகட்சியின் வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டிற்கு எதிராக அடுத்த மாத ஜனாதிபதித் தேர்தலில் முன்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த சார்க்கோசி இப்பொழுது தாக்குதல்களுக்குப் பின் நடந்துள்ள மிகப் பெரிய செய்தி ஊடகத் தகவல்களால் ஆதாயம் அடைந்து, கருத்துக் கணிப்புக்களில் ஹோலண்டை நெருங்கி வருகிறார்.
மார்ச் 23ம் திகதி Le Monde  க்குக் Squarcini கொடுத்த பேட்டி ஒன்றில், மேரா அவருடைய சட்டபூர்வ வருமானங்கள் மிகக் குறைந்த தரத்தில் இருந்தாலும்,  மத்திய கிழக்கிற்கு நீண்ட தூரம் பயணித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தினார்: துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், ஏன் இஸ்ரேலுக்குக்கூட என்று Near East ற்குப் பயணித்தபின் அவர் சில காலம் கெய்ரோவில் தன் சகோதரருடன் கழித்தார்..... அதன்பின் அவர் ஆப்கானிஸ்தானிதிற்கு தாஜிகிஸ்தான் மூலம் சென்றார். வழக்கத்திற்கு மாறான வழிகளில் சென்றார், நம் கண்காணிப்பிற்கு தெரியவில்லை, பிரெஞ்சு, அமெரிக்க, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறைகளின் கண்காணிப்பிற்கும் உட்படவில்லை.
ஸ்க்வார்சினிபொலிசாரிடம் இருந்து மேரா தப்பும் திறன் கொண்டிருந்தது குறித்த உத்தியோகபூர்வ விளக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது வெளிப்படை: அதாவது அவர்  ஒரு கண்டுபிடிக்கப்பட முடியாத தானே தீவிரத்தன்மை அடைந்திருந்த ஒரு தனி ஓநாய். பிரெஞ்சு உளவுத்துறை அமைப்புக்கள் மேராவுடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருந்தன, அவரை இஸ்லாமியவாத வலையமைப்புகளின் உள் தகவல் தெரிவிக்கும் நபராக வளர்க்க முற்பட்டன என்று வந்துள்ள வெளிப்பாடுகளால், இக்கதை சிதைந்துள்ளது.
மேரா பிரான்சின் முக்கிய வெளியுறவு உளவுத்துறை அமைப்பான வெளியுறவுப் பாதுகாப்புப் பொது இயக்ககத்தில் (DGSE) பணிபுரிந்து வந்தார் என்னும் இத்தாலியத் தகவல்களை நேற்று Les Inrockuptibles குறிப்பிட்டுள்ளது.Il Foglio கூறியதாக அது மேற்கோளிட்டிருக்கிறது: அதாவது Il Foglio  உடன் பேசிய உளவுத்துறை ஆதாரங்கள் DGSE அவருக்கு 2010ல் இஸ்ரேலில் நுழைய ஏற்பாட்டை அவர் ஒரு தகவல் கொடுப்பவர் என்ற முறையில் அளித்தது என்றும், ஜோர்டானில் ஒரு எல்லைச் சாவடி மூலம் நுழைய வகைசெய்தது என்றும் தெரிவித்தன.... பிரான்சின் உதவியுடன் இஸ்ரேலில் அவர் நுழைந்தது, ஜிகாத்திய வலையமைப்புகளுக்கு அவர் ஐரோப்பிய பாஸ்போர்ட் ஒன்றுடன் எல்லைகளைக் கடக்கலாம் என்பதை நிரூபித்தது.
Les Inrockuptibles வினால் தொடர்பு கொள்ளப்பட்டபோது  DGSE,  Il Foglioகூறியதை மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை. “DGSE அதன் ஆதாரங்களையோ, செயற்பாடுகளையோ, உண்மையானாலும் சரி, கற்பனையானாலும் சரி, விவாதிப்பது இல்லை.
La Dépêche du Midi யில் நேற்று கொடுக்கப்பட்டக் கருத்துக்களில், Territorial Surveillance Director  (DST) உடைய முன்னாள் தலைவரும் இப்பொழுது DCRIல் உள்வாங்கப்பட்டிருப்பவருமான Yves Bonnet, மேரா ஒரு DCRI சேர்ந்தவரா என்று கேட்கப்பட்டார்.
Bonnet கூறினார்: எப்படியும் வியப்பைத் தருவது அவரைப்பற்றி DCRIஅறிந்திருந்தது, அவர் ஒரு இஸ்லாமியவாதி என்பதால் மட்டும் அல்ல, உள்நாட்டு உளவுத்துறைப் பிரிவில் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பதுதான். ஒரு தகவல் தருபவர் என்பது அசாதாரணம் அல்ல. அது ஒன்றும் நடக்காத ஒரு செயல் அல்ல. தகவல் கொடுப்பவர் செயல்படுபவர் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்....இந்த உறவுகள் அல்லது ஒத்துழைப்புக்கள் எந்த அளவிற்கு இருந்தன என்று எனக்குத் தெரியாது, ஆனால் கேள்விகள் எழுப்பப்படலாம்.
மேரா, “DCRI அல்லது எந்த பிரெஞ்சு அல்லது வெளிநாட்டு அமைப்பிற்கும் தகவல் கொடுப்பவர் இல்லை” என்று Squarcini மறுத்தார். ஆனால் Le Mondeக்கு அவர் கொடுத்துள்ள பேட்டி மேரா உண்மையில் அப்படித்தான் என்பதைத்தான் தெரிவிக்கிறது.
Squarcini இன் ஒப்புதல்படியே, மேரா பலமுறை DCRI அலுவலகங்களுக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாக்கிஸ்தானுக்குப் பயணித்தபின்அக்டோபர், நவம்பர் 2011ல்தான் பார்த்ததைப் பற்றி விவாதிக்க பலமுறை வந்திருந்தார்.இது ஒரு நிர்வாகப் பேட்டி, வலியுறுத்தல் ஏதும் கிடையாது, நாங்கள் ஒன்றும் நீதிமன்ற முறைப்படி அமைக்கவில்லை” என்று Squarcini கூறினார். எனவே DCRI க்கு விரும்பிய தகவலை மேரா தடையின்றிக் கொடுத்து வந்தார்; அதாவது, உத்தியோகபூர்வமாகவோ, மற்ற விதமாகவோ அவர் ஒரு தகவல் கொடுப்பவர்.
இத்தகைய வெளிப்பாடுகள் ஏன் மேராவை அதிகாரிகள் அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தவில்லை என்பது விளங்கிக் கொள்ள முடியாததாகத்தான் உள்ளது. கொலைகளைப் பற்றிய விசாரணைகளில் இருந்து பெரும் முறையற்ற தன்மையின் பின்னணியில் பிரெஞ்சு உளவுத்துறை அதிகாரிகள் இருந்தனரா என்ற பிரச்சினையையும் இவைகள் எழுப்புகின்றன.
மார்ச் 11, மார்ச் 15, மற்றும் மார்ச் 19 ஆகிய தினங்களில் துப்பாக்கிச் சூடுகள் நடந்தாலும், மேராவின் மீது சந்தேகம் மார்ச் 20 அன்றுதான் வந்ததுபொலிசார் துலூஸ் பகுதி இஸ்லாமியவாதிகளை ஒரு கணணி IPமுகவரிகள் பட்டியலுடன் ஒப்பிட்ட பின்னர், மார்ச் 11 கொலைப் பாதிப்பிற்குட்பட்டவரின் தொடர்புகளோடு ஒப்பிட்ட பிறகுதான் இச்சந்தேகம் வந்தது.
செய்தியாளர் Didier Hazzoux, Les Inrockuptibles இடம், பொலிசார் 576 IPமுகவரிகளை, ஒரு சிப்பாய் முதலில் கொலை செய்யப்பட்ட தகவல் வந்தபின்தான்” பெற்றனர்அதாவது மார்ச் 11ல். ஆனால் கண்காணிப்புத் தொழில்நுட்ப வல்லுனர் Jean-Marc Manach கருத்துப்படி, IP முகவரிகள் ISPமுகவரிச் சேவை அளிப்பவர்களுக்கு அடையாளம் காண்பதற்காக மார்ச் 16, அதாவது ஐந்து நாட்கள் வரை அனுப்பப்படவில்லை. ISP க்களோ மறுதினமே விடையிறுத்துவிட்டனர்.
இந்த ஐந்து நாள் காலதாமதம் அசாதாரணமானது என்று மனாக் குறிப்பிடுகிறார்: என்னிடம் பொலிஸ் ஆதாரங்கள் இத்தகைய நடவடிக்கைகள் ISP  க்களிடம் இருந்து தகவலைப் பெறுவது ஒரு சில நிமிடங்கள்தான் ஆகும் என்று கூறியுள்ளனர். இத்தகைய நீதித்துறை வேண்டுகோளுக்குப் பொதுவாக விடையிறுக்கும் மற்றொரு ஆதாரம் இவைஅதிகப்பட்சம் 48 மணி நேரம்தான் பிடிக்கும்” என்று கூறினார்.
மேரா ஒரு தனி ஓநாய்” எனப்படும் மற்றொரு உத்தியோகபூர்வத் தகவலுக்கு அடி கொடுக்கும் வகையில், துப்பாக்கிதாரி செய்த கொலைகள் பற்றிய ஒரு வீடியோக் காட்சி Al Jazeera விற்கு திங்களன்று நேரம் கழித்துக் கிடைத்தது; இது மார்ச் 21 புதன்கிழமை தபால்முத்திரையைக் கொண்டிருந்தது. ஆனால் அன்று முஹமட் மேரா  தன்னுடைய வீட்டிற்குள் பொலிஸ் முற்றுகைக்கு உட்பட்டுப் பதுங்கியிருந்தார்; அவருடைய சகோதரர் அப்தெல்காதரையும் பொலிஸ் காவலில் வைத்திருந்தது. யார் இந்த வீடியோவை அனுப்பியிருக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை; இது குரல்களை மறைப்பதற்கு அதிக அளவில் பதிப்பிக்கப்பட்டு இருந்ததுஇது மேராவிற்கு கொலைகள் செய்யக் கூட்டாளிகள் இருந்திருக்கலாம் என்னும் வாய்ப்பைக் காட்டுகிறது.
வீடியோ பற்றிய செய்திக்கு பிரெஞ்சு அதிகாரிகள் சீற்றமான விடையிறுப்புக்களைக் கொடுத்தனர். தொலைக்காட்சி நிறுவனம் எதுவும் அத்தகைய காட்சிகளைப் பெற்றிருந்தால், அவைகள் ஒளிபரப்பப்படக் கூடாது என்று சார்க்கோசி கூறினார்; இந்த வீடியோவை ஒளிபரப்பினால் Al Jazeeraபிரான்ஸில் அதன் உரிமைகளை இழக்க நேரிடும் என்றும் ஹோலண்ட் எச்சரித்தார்.
துலூஸ் குறித்து ஹோலண்டின் நிலைப்பாடு முதலாளித்துவ இடதுகட்சிகள் பிரான்ஸில் இந்தச் சோகச் துப்பாக்கிச் சூட்டிற்குப்பின் உள்ள சட்டம்-மற்றும்-ஒழுங்கு குறித்த வெறிக்குச் சரண் அடைந்துவிட்டதைத்தான் காட்டுகிறது. இப்பொழுது இது ஒரு அரச நடவடிக்கை என்று சந்தேகத்திற்கு உட்பட்டாலும்கூட, எவரும் கொலைகளில் உளவுத்துறைப் பிரிவுகளின் பங்கு பற்றி விசாரணை வேண்டும் என்று கோரவில்லை. அதேபோல் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அல்லது PS  ஆகியவையும் குற்றத்தில் இருந்து பலன் அடைந்துள்ள சார்க்கோசி நிர்வாகம் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற முறையான சந்தேகத்தையும் தெரிவிக்கவில்லை.
முழு அரசியல் ஸ்தாபனமும் எந்த அளவிற்கு இழிசரிவில் உள்ளது என்பதை இது பிரதிபலிக்கிறது. முஸ்லிம் நாடுகளின் மீது நடத்தப்படும் ஏகாதிபத்திய போர்களுக்கும், பிரான்சில் நடைபெறும் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள் என்னும் அலைகளுக்கும் ஆதரவைக் கொடுத்தபின்ஐரோப்பிய ஒன்றியம் கோரியபடி இன்னும் தீவிரப் பேரழிவைத் தரும் வெட்டுக்களை சமூக ஜனநாயக அதிகாரிகள் கிரேக்கத்தில் செயல்படுத்தியவகையில்—“இடதுகட்சிகளே இப்பொழுது வெறித்தனமாக முஸ்லிம் எதிர்ப்பைத் தூண்டும் தேசபக்தி வெறியைத்தான் நம்பியுள்ளன. இது அவர்களை பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் சார்க்கோசி நிர்வாகத்தின் துலூஸ் கொலைகளை அரசியல் ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை எனத் தோற்றுவிக்கும் வகையில் திருப்பும் முயற்சியில் ஈடுபடுதலுக்கு முன் சரணடைய வைத்துள்ளது.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக