மார்ச் 24, 2011

ஐ.நா. செயலாளர் ‘பான் கீ மூன்’ மீது எகிப்தில் தாக்குதல் (படங்கள் இணைப்பு)


Ban Ki-Moon’s bodyguards look around nervously amid the shouting and green-flag waving in Cairo
எகிப்திய கெய்ரோ நகருக்கு    விஜயம் செய்த     ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அந்நாட்டிலுள்ள லிபிய அரசாங்கத்துக்கு ஆதரவானவர்களால் தாக்கப்பட்டுள்ளார்.  லிபியாவில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அரபு   லீக்கின்    தலைமையகத்துக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அங்கு அரபு     லீக்கின் செயலாளர் நாயகம்
அமர்   மூஸாவுடன் பேச்சுக்களை  நடத்தி திரும்புகையில் அவரது  கார் வழிமறிக்கப்பட்டு   மேற்படி கடாபியின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளது.
உடனே அவர் மீண்டும் அரபு லீக்கின் தலைமையகத்துக்கு திரும்பியதையடுத்து வேறு மார்க்கமாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.      கடாபியின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும்    30 தொடக்கம் 40 பேர் வரையிலானவர்கள் பான் கீ மூனின் காரை வழிமறித்து      கற்களை வீசி எறிந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.  எனினும் பான் கீ மூன் காயம் எதுவும் இன்றி தப்பியுள்ளார், அரபு லீக்கின் தலைமையகத்திலிருந்து       தஹ்ர் சதுக்கத்தை நோக்கி பான்கீ   மூன் செல்ல எத்தனித்த வேளை கடாபி ஆதரவாளர்கள் சுமார் 50 பேர் கோஷம் எழுப்பியபடி அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகுவதற்கு காரணமாயிருந்த மக்கள் எழுச்சியின் போது அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களின் கேந்திர ஸ்தானமாக   தஹ்ர் சதுக்கம்   விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
லிபியாவுக்கு    மேலாக விமானம் பறப்பதற்கு  தடைவிதிக்கப்பட்ட   வலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு கடாபியின் படையினருக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கும்     ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டு   மூன்று நாட்களின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் மீதான இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
A Ban Ki-Moon bodyguard holds his gun as pro-Gaddafi supporters protest outside the Arab League headquarters
Protesters were expressing their anger at the United Nations and the United States for their intervention in Libya


As jostling starts, protection officers surround Ban and others hold the crowds back


Things become a little frantic as security guards try to get Ban out of the melee
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக