நவம்பர் 26, 2011

பாகிஸ்தான் மீதான நேட்டோவின் தாக்குதல்

நேட்டோவின் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானிய படை வீரர்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானுடனான தரை வழிப்போக்குவரத்தினை கண்காணிக்கும் காவலரணாக செயற்பட்ட பெஸாவார் பிரதேசத்தின் மெஹன்மன்டில் அமைந்துள்ள சலாலா பகுதியில் மேற்படி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.


பாகிஸ்தானிய சோதனை சாவடியை இரு முறை தாழப்பறந்து சென்று வட்டமிட்ட அப்பாச்சி ரக நேட்டோவின் தாக்குதல் ஹெலிகப்டர் ஒன்றே மேற்படி தாக்குதலை நடாத்தியுள்ளது. பாகிஸ்தானிய கொடியுடன், பாகிஸ்தானிய மண்ணில் அமைந்துள்ள காவலரண் தாக்கப்பட்டமையானது தெரியாமல் நடந்த விபத்து என்று ஒரு போதும் சொல்ல முடியாத அளவிற்கு இந்த தாக்குதல் நடாத்தப்பட்டமையானது ஒரு திட்டமிட்ட செயலாகவே உள்ளது.

மேற்படி தாக்குதலினால் ஆத்திரமடைந்த பாகிஸ்தானிய படையினர் நேட்டோவிற்கு செல்லும் எண்ணைய் விநியோக வழியை முற்றாக மூடியுள்ளனர். “தக்தா பெய்க்” என அழைக்கப்படும் சோதனை சாவடியை விட இன்னும் 3 சோதனை சாவடிகள் உள்ள நிலையில் இது ஒரு அரசியல் பின்புல வழிகாட்டலுடன் கூடிய ஒரு தாக்குதலாகவே கருத முடிகிறது. மூன்று தாக்குதல் ஹெலிகப்டர்கள் பங்கேற்ற மேற்படி தாக்குதல் நிகழ்வையிட்டு நேட்டோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

அமெரிக்க பாகிஸ்தானிய முரண்பாடுகளையும் தாண்டி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  பாகிஸ்தானிய இராணுவத்தை இது ஆத்திரமூட்டும் செயலாக மாற்றும் என்பதனை கருத்திற் கொண்டெ இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவே கருத முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக