நவம்பர் 13, 2011


'தவக்குல் கர்மானிக்கு' நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்

















இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு 

வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் 

நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின்

அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் 

தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி 

இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக

முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில்

ஆழ்த்தியுள்ளது.

 என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய

எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய 

முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட்

அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் 

முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா 

அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய்

என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு

அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும்

இம்முறை இவருக்கு நோபல் பரிசு

கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால்

அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில்

புரிந்துவிடும்.

ஏனென்றால் நோபல் பரிசைப் பொருத்தவரை

நேர்மையற்றதாகவும் ஒருபக்க சார்புடையதுமாகவே

எப்போதும் இருக்கும் ஏகாதிபத்தியத்தின்

கொள்கைகளுக்கும் அவர்களின் வருங்கால

செயல்திட்டங்களுக்கும் ஏற்றவாறேதான் நோபல்

பரிசு குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு

காணப்படுகிறது அதனால் தான் நோபல்

பரிசுகளிலேயே மிக உயர்ந்ததாக அமைதிக்கான

நோபல் பரிசு கருதப்படுகின்றது அமைதிக்கான 

நோபல் பரிசைப் பெரும் ஐந்தாவது முஸ்லீம் 

நபர்தான் தவக்குல் கர்மானி.

 இதற்க்கு முன்பு அன்வர்சதாத். யாசர்அராபத்.

ஷிரின்எபாதி. முஹம்மதுஅல்பராதி. ஆகியோருக்கு 

இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கின்றது இவர்களில்

ஒவ்வொருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ள

சந்தர்ப்பங்களையெல்லாம் உற்று நோக்கியாலே 

அமெரிக்காவின் அரசியல் தந்திரத்தின் உண்மை

புரிந்துவிடும் அமெரிக்காவிற்க்கும் இஸ்ரேலுக்கும்

அரசியல் லாபங்களை நிறைவேற்றித் 

தந்ததற்க்காகத்தான் இவர்களுக்கெல்லாம் நோபல்

பரிசு வழங்கப்பட்டுள்ளது அப்படிப் பார்க்கும் போது

எமனின் தவக்குல் கர்மானிக்கு ஏன் நோபல் பரிசு

வழங்கவேண்டும் என்று சிந்தித்தால் அரபுலகில்

ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடுகின்றார்

என்று காரணம் சொல்வதெல்லாம் வெறும் 

கண்துடைப்புதான் ஏனென்றால் அரபு நாடுகளின்

புரட்சியைப் பொறுத்தவரை நடந்து முடிந்துவிட்ட

ஒன்றல்ல நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் 

அதேபோல் அரபு புரட்சி என்பது சில நாடுகளைத்

தவிர மற்றுள்ள நாடுகளின் அதிபர்கள் பல்லாண்டு

காலமாக பதவியில் உள்ளார்கள் அவர்களை

பதவியிலிருந்து அப்புற்படுத்தவேண்டும் என்பதுதான் 

முக்கிய காரணமாக இருக்கின்றது தவக்குல் 

கர்மானிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்க்கு

நிறைய காரணங்கள் உள்ளது.

 அவற்றைப் பார்ப்போம் முதல் காரணம் அரபு

நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளின் மூலமாக 

அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்து 

பல்லாண்டுகளாக நாட்டை ஆட்சிசெய்து

கொண்டிருந்த ஆட்சியாளர்கள் எல்லாம்

நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தீவிர இஸ்லாமிய

இயக்கங்கள் என்று உலகலவில் அறியப்படும்

கட்சிகள் அந்நாடுகளில் ஆட்சியைப் பிடிக்குமள

விற்க்கு வளர்ந்துள்ளது  இரண்டாவது காரணம்

அரபுலகில் ஆட்சியைப் பிடிக்குமளவிற்க்கு

வளர்ந்துள்ள இஸ்லமிய கட்சிகள் ஆட்சியையும்

பிடித்துவிட்டால் மத்தியகிழக்கின் அமெரிக்கா என்று

வர்ணிக்கப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பு நிச்சயம் 

கேள்விக்குறியாகிவிடும் என்பது மூன்றாவது 

மத்தியகிழக்கில் பெரும்பாலான நாடுகளின் உள்விவ

காரங்களில் சர்வசாதரணமாக புகுந்து விளையாடிய 

அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனம் இனி அங்கு

செல்லுபடியாகாது என்பதும் ஒருகாரணம் ஆகவேதான்

இவையெல்லாம் யுத்தங்கள் மூலம் சாதிக்கமுடியாது.

 அதுவும் அமெரிக்காவின் பொருளாதாரம் தினந்தோறும்

சரிவடைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் 

கண்டிப்பாக அதுமுடியாது என்று உணர்ந்து கொண்ட

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரபுநாடுகளில்

ஆட்சியைப் பிடிக்கக் கூடுதல் வாய்ப்புள்ள தீவிர 

இஸ்லாமிய கட்சிகள் என்று உலகலவில் அறியப்படும் 

கட்சிகளுடன் சுமூகமான முறையில் உறவு வைத்துக்

கொள்ளவிரும்புகிறது தேர்தல் மூலம் வெற்றிபெரும்

எந்த இஸ்லாமிய கட்சியுடனும் அமெரிக்கா நட்புடன் 


செயல்படும் என்று அமெரிக்காவின் வெளியுறவுச்

செயலாளர் ஹிலாரி கிளின்டன் அக்டோபர் 1ம் தேதி

எகிப்தில் ஒளிபரப்பாகும் அல்ஹயாத் என்ற டீவி

சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது.

 இதை உறுதிபடுத்துகின்றது எகிப்து தலைநகர் 

கெய்ரோவில் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டுத்தூதர்கள் 

இக்வானுல் முஸ்லிமூன் தலைவர்களைச் சந்தித்துப் 

பேச்சுவார்த்தை நடத்தியது இதை மேலும் உறுதிபடு

த்துகின்றது அதேபோல் நேற்று 11ம் தேதி புதன் கிழமை 

இஸ்ரேல் தான் பிடித்து வைத்திருக்கும் 315 ஆயுள்

கைதிகள் உட்பட ஆயிரம் ஹமாஸ் போராளிகளை 

விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருப்பதும் 

இதன் தொடர்ச்சியாக இருக்குமோ என்று என்னத் 

தோன்றுகிறது அதனால் வருங்காலங்களில் 

அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் அரபுநாடுகளுடன்

உறவாட ஒரு உறவுப்பாலமாக தவக்குல் கர்மானி 

இருப்பார் என்ற அமெரிக்காவின் அரசியல் தந்திர 

எதிர்பார்ப்பே நோபல் பரிசு பெரும் உலகின் முதல்

அரபுப் பெண்ணாக தவக்குல் கர்மானியை 

மாற்றியிருக்கக் கூடும் என்று என்னத் தோன்றுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக