நவம்பர் 26, 2011

சிரிய யுத்தம்-எதை நோக்கி?

“இஸ்ரேலுடன் போரிட்ட தேசங்களின் இராணுவங்கள் அழிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லையெனின் அகண்ட யூத தேச கனவிற்கு இவை பெரும் தடையாக அமையும்”   மேற்கூறிய வார்த்தைகள் பிரபல ஸியோனிஸ்ட் ஏரியல் ஷரோனிற்கு சொந்தமானவை. இந்த வார்த்தைகளை அடிக்கடி பாராளுமன்ற அமர்வுகளில் நினைவுபடுத்தி பேசியது இன்னொரு ஸியோனிஸ்ட் சகாவான இட்ஷாக் சமீர்.
ஏரியல் சரோனின் வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்களை முஸ்லிம்கள் புரியாவிட்டாலும் யூதர்கள் தெளிவாகவே புரிந்துள்ளனர். அதிலும் குறிப்பாய் ஸியோனிஸ்ட்கள்.

அமெரிக்காவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸியோனிஸ லொபிகள் இந்த வார்த்தைகளை செயலுருகொடுத்துள்ளது 2011ல். மத்திய கிழக்கின் புரட்சிகளின் பின்னணியில் இரு யூத தேசங்களுமே செயற்பட்டுள்ளன. ஆனால் ஆரம்பம் அவர்கள் எதிர்பார்த்தவாறு இருந்தாலும் முடிவுகள் பல இஸ்லாத்தின் எழுச்சியின் வித்தாக அமைந்துள்ளன.

யூத தேசமான இஸ்ரேல் அஞ்சிய நாடுகளுள் சிரியாவும், எகிப்தும் உள்ளடக்கம். இரண்டுமே இதனுடன் 6 நாள் யுத்தத்தில் ஈடுபட்டவை. அதிலும் இஸ்ரேல் மீது கூட்டுத்தாக்குதல் நடாத்தியவை. இப்போது எகிப்திய இராணுவ ஜெனரல்களின் விலையை சீ.ஐ.ஏ. நிர்ணயம் செய்யும் தகுதியை பெற்றுள்ளது. நினைத்த நேரத்தில் அழித்து விடலாம் எனும் நம்பிக்கை ஸியோனிஸ்ட்களிற்கு.

இரண்டாவது சிரியா. பலமிக்க இராணுவ கட்டமைப்பை கொண்டுள்ள நாடு.
போராற்றல் மிக்க தேசம். கூடவே ஹிஸ்புல்லா எனும் இஸ்ரேலிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அமைப்பின் நட்பு தேசம் வேறு. சிரிய மக்கள் புரட்சியின் பின்புலத்தில் ஸியோனிஸமே செயற்பட்டது. அதற்கு அமெரிக்க சீ.ஐ.ஏ. பாரிய பங்களிப்பை வழங்கியது.

சிரிய கம்யூனிஸ்ட்களை பாத் அரசிற்கு எதிராக கிளர்ந்தெழ வைத்ததே இவர்கள் தான். பின்னர் தொழிளாலர் பிரச்சனையாக மாற்றி உழைக்கும் வர்க்கத்தையும், விவசாயிகளையும் ஓரணியில் இணைத்தார்கள். பின்னர் அதற்கு தமது கட்டடுப்பாட்டில் இயங்கும் பாரிய ஊடகங்கள் மூலமாக மக்கள் போராட்டம் என பெயரிட்டார்கள். சுன்னிகளிற்கு எதிரான ஷியாக்களின் எழுச்சி என்று பொய்களை அவிழ்த்து விட்டார்கள். பல மேஷனரிகளை உள்வாங்கி “லிபியாவில்” செய்தது போல மக்களை கொலை செய்துவிட்டு சிரிய அரசிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கி உலகை ஒரு வகையான “மீடியா ஹோமா” நிலைக்கு கொண்டு சென்றார்கள்.

இவர்கள் அஞ்சுவது சிரியாவின் ஏவுகணை கட்டமைப்பிற்கும், அவர்களது டாங்கி படை பிரிவிற்குமாகும். அண்மையில் 06 ரஷ்ய கடற்படை கலங்கள் சிரிய கடல் எல்லையில் நுழைந்து பல போர் தளவாடங்கைள சிரிய மண்ணில் தரையிறக்கியுள்ளது.  S-300 ஏவுகணைகள் அடங்கிய ஒரு தொகுதியை நேட்டோவிற்கு எதிரான சிரிய தாக்குதல் வல்லமையை அதிகரிக்கும் நோக்கில் தயார்படுத்த முனைந்துள்ளது ரஷயா. ரஷ்ய ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் ஆற்றல் மிக்க நிபுணர்களையும் களமிற்கியுள்ளது ரஷ்யா.


மொஸ்கோவின் பத்திரிகைகள் நேட்டோவினை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இது மேற்கின் அழிவிற்கான சிவப்பு கோடு என தலையங்கம் தீட்டியுள்ளன. 1979ல் ரஷ்யா அன்றை போர்கால யுத்த சூழலில் தரையில் இருந்து ஆகாயத்தை நோக்கி பாயும் ஏவுகணை தொழில்நுட்பத்தை மிக வெற்றிகரமாக தன்னக்தே கொண்டிருந்தது. தற்போது “எஸ் - 300” என தரமுயர்த்தப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் வானில் 100 இலக்குகளை குறிவைத்து பாய்ந்து அதி்ல் 12 இலக்குகளை தாக்கியழிக்கும் திறன் மிக்கவை.


சிரியாவை ஆயுதமயப்படுத்தும் ரஷ்யாவின் ஆதரவை நம்பியே அது நோட்டோவின் வான் தடை (“no fly zone” ) பற்றி கிஞ்சித்தும் கவலையற்றவர்களாக போராட்டக்காரர்கைள இராணவத்தின் துணைகொண்டு அழித்தொழிக்கின்றது. ரஷ்ய நிபுணர்களால் நேற்றைய தினம் சிரியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இரு பெரிய “ராடர்கள்” பொருத்தப்பட்டுள்ளன. இந்த ராடர்கள் விமானங்களை மட்டுமன்றி துருக்கியின் விமானத்தளம் (Incirlik military base in Turkey) மற்றும் எல்லைபுர இஸ்ரேலிய இராணுவ நகர்வுக்ள போன்றவற்றை துல்லியமாக அவதானிக்க வல்லவை இவை.


மெல்ல மெல்ல முழு உலகும் ஒரு மூன்றாம் யுத்தத்தின் படிகட்டுக்ளில் ஏறுவதை உணர முடிகிறது. சிரியா மீதான தாக்குதலிற்கு எதிராக ஈரானினது ஆதரவென்பது இதை இன்னும் வேகப்படுத்தும் என்பது உண்மையே.


ABU MASLAMA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக