நவம்பர் 29, 2011

Fake & Real அமெரிக்க இந்திய உளவமைப்புக்களின் இன்னொரு அல் காயிதா - தரீக் ஈ தலிபான் - லஷ்கர் ஈ தய்பா

அல் காயிதா. தேர்ந்தெடுத்த பிரதேசங்களில் இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டுவதற்காக போராடும் போராளிகளை கொண்ட அணி. கூடவே ஆக்கிரமிக்கப்படும் முஸ்லிலம் தேசங்களின் விடுதலைக்காகவும் களமிறங்கும் அணி. இதில் பல்வேறுபட்ட இஸ்லாமிய போராட்டக் குழுக்கள் தங்கள் பொது இலட்சியங்களை அடைந்து கொள்வதற்காக ஒரு புள்ளியில் தமது வலையமைப்புக்களை கொண்டிருக்கின்றனர். சில வேளைகளில் வழி நாடாத்தவும் படுகின்றனர்.

அல் காயிதா. இது அமெரிக்காவின் உருவாக்கம். தனது ஊடகங்கள் ஊடாக ஊதி பெருப்பிக்கப்பட்ட இல்லாத இயக்கம். அமெரிக்காவே இதன் கட்டமைப்பு பற்றி கூறி, தலைமைத்துவம் பற்றி கூறி, வேலைத்திட்டம் பற்றி கூறி, தாக்குதல் இலக்குகள் பற்றி கூறி, இலக்குகள் பற்றி கூறி உலக மக்கள் மத்தியில் பொய்யான மாயையாக உருவாக்கப்பட்ட இன்னொரு அமைப்பு. ஏகாதிபத்தியங்களின் அடைவிற்காக ஒரு புள்ளியில் பொய்யான வலையமைப்புக்களை உருவாக்கி ப்றிமேஷனின் இலக்குகளை அடைய செயற்படுத்தப்படும் கற்பனை இயக்கம். பல வேளைகளில் இது அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யினால் வழி நாடாத்தவும் படுகின்றனர்.

நாம் பேசும் இரண்டு அல் கைாயிதாக்கள் பற்றிய சிறு குறிப்பு இது. அல் காயிதா மட்டுமல்ல இதே போன்றே தலிபான்கள் பற்றியும் அமெரிக்க சீ.ஐ.ஏ. உலகை ஏமாற்றுகிறது. “தரீக் ஈ தலிபான்”  எனும் உண்மையான போராட்டக் குழுவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் அமெரிக்க சீ.ஐ.ஏ.யினால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பரவலாக நிகழ்த்தப்படும் அப்பாவி பொது மக்கள் மீதான தற்கொலை தாக்குதல்களை “அஷ்ஷஹாதத்” தாக்குதல்களாக நிறுவப்பார்க்கிறது அமெரிக்கா. தினமும் ஆப்கானிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் மண்ணிலும் நிகழும் பல தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்காவின் கைகளே உள்ளன.

இளைஞர்களை தனது ஏஜென்ட்கள் மூலமாக உள்வாங்கி, திட்டமிட்ட அடிப்படையில் மூளைச்சலவை செய்து, இஸ்லாமிய அமைப்புக்கள், இஸ்லாமிய போராளிகள், இஸ்லாமிய தனி நபர்கள் போன்றவற்றில் இனம் புரியாத வெறுப்பை உருவாக்குவதன் ஊடாக சத்திய இஸ்லாத்தையே வெறுக்கும் அவர்களை ஒரு தற்கொலை போராளியாக உருவாக்கி தாக்குதல்களை மேற்கொள்கிறது அமெரிக்கா. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பலுச் இளைஞர்களை உள்வாங்கும் அமெரிக்கா அவர்களையே தனது மேற்கத்தேய வேள்விக்கு பலிகடாவாக மாற்றுகின்றது. வறுமையில் வாடும், வேலையற்ற ஒன்றும் அறியாத இளைஞர்களின் விரக்தி நிலையை திட்டமிட்ட கவுன்சிலிங் மூலமாக தற்கொலை போராளிகளாக மாற்றிவிடுகிறது அமெரிக்க உளவுத்துறை.

வீட்டிற்கும் சமூகத்திற்கும் ஏன் தனக்கும் கூட எதுவிதான பிரயோசனமும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களை அவர்களது வறுமையை பிரமாண்டமானதாக காட்டி அதற்கான தீர்வாக அவர்கள் மேற்கொள்ளும் தற்கொலை தாக்குதல்களிற்கு வெகுமானமாக அவர்கள் குடும்பங்களிற்கு பெரிய நிதியை வழங்குவதாக உறுதியளிக்கின்றது சீ.ஐ.ஏ. அமெரிக்க உளவமைப்பும் அவர்களிற்காக வேலை செய்யும் ஏஜெண்ட்களும் வழங்கும் கேவலம் “100 டொலர்களிற்காக” வெடிகுண்டை சுமக்கும் முஸ்லிம் இளைஞர்களின் உலக வாழ்க்கை பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் எண்ணுகையில் கவலைகளே எஞ்சியுள்ளன.


மற்றொன்று “லஷ்கர் ஈ தய்பா". காஷ்மீரின் விடுதலைக்காக உருவாகி நாளைடைவில் இஸ்லாமிய போராட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிய அமைப்பு இது. உண்மையான போராட்ட குழு இவ்வாறிருக்க அமெரிக்க சீ.ஐ.ஏ.யும் இந்திய அரசின் உளவமைப்பான “றோ”வும் இணைந்து தங்களது சொந்த அரசியல் நலனிற்காக உருவாக்கிய “லஷ்கர் ஈ தய்பாவும்” உள்ளது. தெற்காசிய நாடுகளில் ஜிஹாதிய முத்திரை குத்தி ஒரு அமைப்பை தடை செய்ய வேண்டுமா?, அல்லது அழிக்க வேண்டுமா? அல்லது புனித இஸ்லாத்திற்காக போராடும் தனி நபர்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்ய வேண்டுமா? “லஷ்கர்” எனும் ஒரு முத்திரை இவையனைத்தையும் செய்து முடிக்கும்.

அமெரிக்க இந்திய உளவமைப்புக்களினதும், அமெரிக்க இந்திய உள்நாட்டு அமைச்சுக்களினதும், அமெரிக்க இந்திய ஊடகங்களினதும் கூட்டுச்சதியில் உருவான லஷ்கர் ஈ தய்யபா பற்றியும் பேசுவது அவசியம். தெற்காசியாவில் எங்கு ஒரு உண்மையான இஸ்லாமிய செயற்பாடுகள் உருவாவதாக இவர்கள் அறிவார்களோ அங்கே லஷ்கரின் செல்லவாக்கு காணப்படுகிறது என முத்திரை பதித்து பயங்கரவாதிகளாக குறிப்பாக உலக மகா பயங்கரவாதிகளாக அதனை மாற்றிக்காட்டுவார்கள் இவர்கள்.

உண்மையான, உயர்வான இஸ்லாமிய போராட்டங்களையும், போராளிகளையும் சர்வதேச பயங்கரவாதத்துடன் இணைக்கும் இந்த மெகானிசம் பற்றி நாம் தெளிவான புரிதல்களை மேற்கொள்வது அவசியம்.
பீ.பீ.ஸி. , ரொய்டர் போன்ற பல ஊடகங்கள் மேற்கொள்ளும் அனைத்து விதமான ஊடாக வெளியீடுகளிலும் இதனையே செய்கிறார்கள். உண்மையான போராட்டக்குழுவின் பெயரில் போராட்டம் போன்ற சாயலில் மேற்கொள்ளும் இந்த பித்தலாட்டங்களின் வரிசையில் இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. அவற்றை மறுமுறை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
                         ABU MASLAMA                                                                                                                                             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக