நவம்பர் 23, 2011

புஷ், பிளேர் போர்க்குற்றவாளிகள்  மலேசியா போர்க்குற்ற நீதிமன்றம் தீர்ப்பு
இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய் தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத் தப்பட்டகுற்றச்சாட்டு களை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு இராக் கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட் டனர் என்று ஐந்து உறுப் பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழுமுடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயு தங்களை குவித்து வைத்தி ருக்கிறார் என்று சதாம் உசேன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச்சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்துத் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித் துள்ள நீதிபதிகள், இராக் கிற்கு எதிராகப் போர்தொடுப்பது என்ற இரண்டு முன்னாள் தலைவர்களின் முடிவு சட்டத்தை தவறாகப்பயன்படுத்தியதாகும். ஏராள மான இராக்கியர்களைப் படுகொலை செய்வதில் போய் முடிந்தது.குண்டு மழை பொழிவதும், வேறு பல வன்முறை நடவடிக்கை களும் இராக்கில் நிகழ்வது அன்றாடவாடிக்கையான அம்சமாக மாறிவிட்டது. இராக்கின் வசம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றனஎன்பதற்கு ஆதாரமாக மோசடியான ஆவணங் களை அமெரிக்க முன் னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சர்வதேச சமூகத்தின் முன் வைத்தார்.

ஆனால், இத்தகைய பேரழிவு ஆயுதங்கள் இராக் கில் இல்லை என்பது பின் னால் தெரியவந்தது.இது அமெரிக்க மற்றும் பிரிட் டன் தலைவர்களுக்கும் தெரிந்தே இருந்தது. இந்தப்படையெடுப்பின்போது, சுமார் பத்து லட்சம் பேர் கொல்லப்பட்டனர். போர்க்குற்றங்கள் தொடர்பாகரோம் விதி களில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் இந்தத் தீர்ப்பை அனுப்பி வைக்கவேண்டும் என்று கூறினர்.அந்த விதிகள்தான் சர்வதேச குற்றவியல் நீதிமன் றத்தை உருவாக்கியதுஎன் பது குறிப்பிடத்தக்கது. போர்க்குற்றவாளிகள் பதிவேட்டில் ஜார்ஜ் புஷ் மற்றும் டோனி பிளேர்ஆகிய இருவரும் இடம் பெற வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தியுள் ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக