நவம்பர் 29, 2011

பெரும் போராட்டங்களின் துவக்கக் கட்டம்  ிரிட்டன் தொழிற்சங்கம் கருத்து

நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் நாடு தழுவிய தொழிலாளர்களின்வேலைநிறுத்தம், வரவிருக்கும் பெரும் போராட்டங்களின் துவக்ககட்டம்தான் என்று பிரிட்டனின்பெரிய தொழிற்சங்க மான தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியுள்ளது. பிரிட்டன் அரசின்பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் கல்வியை வியாபார மாக்கும்அணுகுமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நவம்பர் 30 அன்றுநடைபெறுகிறது. பெரும் பாலான தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் செய்யவாக்களித்துள்ளனர். இதில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற் பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. 

தொழிலாளர்களின் அதிருப்தி அதி கரித்துக் கொண்ட வந்தநிலையில், ஓய் வூதியம் குறித்தகொள்கை ஆத்திரத்தைக் கிளப்பிவிட்டது. வேலை நிறுத்தம் செய்ய லாமா என்றுதொழிற்சங்கங்கள் கேள்வி யெழுப்பியபோது, அதன் உறுப்பினர்கள் ஏகமனதாக சரி என்றுசொன்னது அந்த அதிருப்தியை எடுத்துக் காட்டியது. இந்த வேலைநிறுத்தத்தை, வரக்கூடிய பெரும்போராட்டங்களின் துவக்கமாகத்தான் பார்க்கிறோம் என்று தொழிற்சங்கக் காங்கிரசின்தலைவர்களில் ஒருவரான பிரென்டன் பார்பெர் கூறுகிறார். வரும் வாரங்களில் என்னநடக்கப்போகிறது என்பதுதான் அதை நிர்ணயிப்பதாக இருக்கும் என்கிறார் அவர்.

இதற்கிடையில், வேலை நிறுத்தம் செய்வதால் அரசுத்துறை ஊழியர்களுக்கு கிடைக்கவிருக்கும்சலுகைகள் பாதிக்கப் படலாம் என்று பிரிட்டனின் நிதித்துறை தலைமைச் செயலாளர் டேனிஅலெக் சாண்டர் மிரட்டியுள்ளார். கல்வியமைச் சர் பேசுகையிலும், நாங்கள் பெருந்தன் மையாகஒரு திட்டத்தை முன்வைத்தோம். அதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பதாக அமைச்சர்கள் பேசுவது தவறு என்று பொதுத்துறைஊழியர்கள் சங்கமொன்றின் தலைவர் மார்க் செர் வோட்கா குற்றம் சாட்டுகிறார். அமைச்
சரவைதான் ஓய்வூதியம் போன்றவை மீது தாக்குதல் தொடுத்திருக்கிறது என்றுஎதிர்க்குற்றச்சாட்டை அவர் எழுப்புகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக