ஆகஸ்ட் 15, 2011


இலங்கையின் கிண்ணியா மஸ்ஜித் தாக்குதல் ஒரு ஆரம்பம் மட்டுமே..!

லங்கை வேடர்களின் தேசம். ஆரியனும்
 திராவிடனும் மோதி முற்றில் ஆரியன்
 வென்று விட்டான். இப்போது
 ஆரியனின் வாளின் பசிக்கு சோனகன்
 இரையாகும் நிலை. இது தான் உண்மை
 களம். உலகளாவிய முஸ்லிம்
 உம்மாவின் கலாச்சார எழுச்சியின்
 தாக்கம் இலங்கையிலும் உருவானதே
 பிரச்சனைகளிற்கு பிரதான காரணம். பெளாத்த
 சிங்கள இனவாத சக்திகளும் தமிழ் குறுந்தேசியவாத 
சக்திகளும் அச்சப்படுகின்றன. 
அதற்கு தீர்வாக முஸ்லிம்களை சின்னாபின்னப்படுத்த
 முனைகின்றன. 

கிண்ணியா மஸ்ஜிதினுல் புகுந்து தாக்குதல் நடாத்திய விவகாரம்
 ஒரு சாதாரண நிகழ்வாக கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.
 கூடவே 35 முஸ்லிம்களை கைது செய்து முகாம் கொண்டு
 சென்றுள்ளனர். சிங்கள பேரினவாதத்தின் முஸ்லிம்கள் மீதான
 நீண்ட நாள் கனவான இனக்கலவரத்திற்கு கட்டியம் கூறும் ஒரு
 நிகழ்வாகவே இதனை கருத முடியும். இன முரண்பாடுகளில்
 போராட்டம் வெடித்து ஒரு படி முறையின் நீண்ட நிகழ்வே
 இவ்வாறு நடக்கும். ஆனால் கிண்ணியாவில் நடந்துள்ளது 
எம்மை வியக்க வைக்கிறது. சடுதியாக எதிரி கிராமத்தினுள்
 புகுந்தது போல் நிகழ்வுகள் நடந்துள்ளன. 


எதுவுமே நடக்காதது போல் எல்லோருமே இருக்கிறார்கள். 
அல்லாஹ்வின் பள்ளியினுள் புகுந்து தொழுபவர்களை 
தாக்கியுள்ளார்கள். வெறுமனே இதை ஒரு சம்பவமாக 
எடுத்துக்கொள்ள முடியாது. முஸ்லிம்களிற்கு எதிரான ஒரு
 நீண்ட திட்டத்தின் சில சடுதியான நடவடிக்கைகளே இவை.
 அரசு மொளனம் காக்கிறது. ஊடகங்கள் மொளனம் காக்கின்றன.
 முஸ்லிம் அரசியல்வாதிகள் மொளனம் காக்கிறார்கள்.
 இஸ்லாமிய இயக்கங்கள் மொளனம் காக்கின்றன. காக்கட்டும்.
 நாளை இவர்களது தேர்தல் மேடைகளிற்கும், இவர்களால் 
வெளியிடப்படும் இதழ்களிற்கும் இவை பேசு பொருளாக
 தேவைப்படுமல்லவா?.


இன்று துணிந்து மஸ்ஜிதினுல் நுளைந்து தாக்குதல்
 நடாத்தியவர்கள் இதனை நாளை நாடு முழுவதும் செய்வதற்கு
 நிச்சயமாக துணிவார்கள். பிரிவினை கோராமல், ஆயுத
 போராட்டங்களை முன்னெடுக்காமல், இலங்கை ஜனநாயக
 சோஷலிச குடியரசின் சட்ட வரையறைகளிற்கு உள்ளே வாழும்
 இலங்கை முஸ்லிம்கள் மீதான மேற்படி நடவடிக்கையானது
 இலங்கையினுள்ளே ஒரு மியன்மாரை உருவாக்கும்
 செயற்பாட்டின் ஒரு வடிவமாப் பார்க்கலாம்.


எங்கோ கிழக்கு மாகாணத்தில், கிண்ணியா எனும் ஏழை
 கிராமத்தில் நடந்தது தானே என்று நாம் நினைப்போமானால்
 நாளை நமக்கும் இதே நிலை ஏற்பட வெகுநாட்களாகாது.
 இவ்வாறான பேரினவாதத்தின் எதேச்சாதிகாரமான 
நடவடிக்கைகளை நாம் ஒன்று திரண்டு வன்மையாக கண்டிக்க
 வேண்டும்.
எமது ஒற்றுமையின் பலமே முஸ்லிம்களை அடக்க நினைக்கும்
 சக்திகளை அச்சம் கொள்ள வைக்கும். பொளத்த சிங்கள மற்றும் 
தமிழ் பேரினவாத ஒடுக்கு முறைக்கும் அடக்கு முறைக்கும்
 எதிரான முஸ்லிம்களின் ஒன்று பட்ட எதிர்பியக்கம் என்பது 
தவிர்க்க முடியாத ஒன்றாகும்.


இலங்கை முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களுடைய
 பிரச்சனைகள் விரிவாகவும் விவரமாகவும் தெளிவுபடுத்தப்படல்
 வேண்டும். தெற்கிலங்கை முஸ்லிமின் பிரச்சனை
 வடக்கிழங்கை முஸ்லிமிற்கும், கிழக்கிலங்கை முஸ்லிம்களின்
 பிரச்சனை மத்தி இலங்கை முஸ்லிம்களிற்கும் என 
தெளிவுபடுத்தப்படல் வேண்டும். ஒரு பகுதி முஸ்லிம்களின் 
இழப்பு தமது சொந்த இழப்பாக கருதும் மனோபாவம்
 முஸ்லிம்களிடையே உருவாதல் அவசியம். இதையே முஸ்லிம் 
உம்மா வேண்டி நிற்கிறது.


கிண்ணியா நிகழ்வுகள் வெறும் ஆரம்பமே. முடிவுகள்
 தெற்கிலங்கையிலேயே எழுதப்படும். முஸ்லிம்கள் 
“கிண்ணியாவை” கணக்கில் எடுக்க மாட்டார்கள் என நிணைக்கும்
 இனவாத சக்திகளிற்கு முஸ்லிம்களின் ஏகோபித்த எதிர்ப்பின்
 வலிமை புரிய வைக்கப்படல் வேண்டும். 


இனிவரும் காலங்களில் பிரச்சனைகளிற்கு மட்டும் செயற்பட்டு
 ஓயும் செயலணி முஸ்லிம்களிடையே காணப்படுவது 
அர்த்தமற்றது. ஒரு திட்டமிட்ட ஓழுங்கில் பேரினவாத 
அச்சுறுத்தல்களிற்கு எதிராக இந்த நாட்டின் சட்டவரையறையின் 
எல்லைக்குள் நின்று உச்சத்தில் போராடுமு் ஒரு மெக்கானிசம் 
அவசரமாக உணரப்பட வேண்டிய ஒரு விடயம்.


இலங்கை முஸ்லிம்களின் வசந்த காலங்கள் கடந்து சென்று வெகு
 நாட்களாகி விட்டது. நாளைய எமது பிள்ளைகளின், சந்ததிகளின்
 பாதுகாப்பான இருப்பிற்கான நீண்டகால திட்டமிடலுடனான ஒரு
 செயல் வடிவத்தை அடிப்படையாகக் கொண்ட
 பொறிமுறையமைப்பு தவிர்க்க முடியாதது.


நாம் இந்நாட்டு மக்கள். நாம் வேறு தேசம் செல்ல முடியாது.
 எமது ஜனனமும் இங்கே தான். மரணமும் இங்கே தான். 
இன்றைய நிலையில் கலபி என்றும் ஸலபி என்றும் இன்னும்
 பல பல இசங்களில் முரண்பட்டு நிற்கும் அனைத்து ஜமாத்களும்
 இது விடயத்தில் ஒரு பொது செயல் திட்டத்தில் கண்டிப்பாக 
கூட்டிணைதல் அவசியம். பொளத்த மதவாதத்திற்கும், சிங்கள
 இனவாதத்திற்கும், தப்லீக்கிற்கு ஒரு முறை தவ்ஹீத்திற்கு
 இன்னொரு முறை என வித்தியாசமான
 இனவாத செயற்பாடுகளை கொண்டிருக்கவில்லை. 
பாயும் புலி இரையையே குறி 
வைக்கும். அது மானாலும் சரி மரையானாலும் சரி.


எம்மை காக்க சவுதி அரேபியா வரப்போவதில்லை. இமாம் 
மஹதியும் வரப்போவதில்லை. வாழ்வாயினும் சரி சாவாயினும்
 சரி இரண்டும் நம் கையிலேயே. இந்த மண்ணிலேயே. எமது
 சமுதாய ஒற்றுமையின் வலிமை எதிரியை பின் தள்ளும். எமது
 பிளவுகள் எதிரியை மேலும் மேலும் எம்மீது நாசங்கைளை
 ஏற்படுத்த துணிவு கொள்ள வைக்கும். 


இதற்கு பின்பும் அரசியல்வாதிகளை குறைசொல்லி காலம்
 கடத்த முடியாது. அரசியல்வாதிகள் பச்சோந்திகள். குப்ர்
 அரசியலை ஏற்றுக்கொண்டவர்கள். குப்ர் அரசியலை
 ஏற்றுக்கொண்டவன் குப்பாரின் அடிமை என்று தானே 
பொருள். குப்பாரின் அடிமையால் அல்லாஹ்வின் அடிமைக்கு
 பாதுகாப்பை வழங்க முடியுமா?. அப்படியென்றால் 
“இஸ்லாமிய இயக்கங்கள்” என்று தம்மை
 மார்தட்டிக்கொள்ளும் அமைப்புக்களின் சமுதாய
 பிரச்சனைகளிற்கான வகிபாகம்
 தான் என்ன? புரியவில்லை. கேட்டால் இதுவல்ல
 தங்களிற்கான
 களம் என்பார்கள். நேரம் என்பார்கள். ஆனால் பின்பு தங்கள்
 ஏடுகளிலும், இணையங்களிலும் பத்தி பத்தியாக 
பிரச்சனைகளை ஆராய்வார்கள். தீர்வு சொல்வார்கள். 


இன்று இலங்கை முஸ்லிம்களிற்கு தேவை தலைமை. 
சரியான தலைமை. அது நிச்சயமாக சத்திய இஸ்லாத்தை விளங்கியவர்களாலேயே வழங்க முடியும். இந்நிலையில் இஸ்லாமியவாதிகளதும், இயக்கங்களினதும் கனத்துப்போன 
சுயநலமே எஞ்சி நிற்கிறது. “பிடரியில் வெடிபட்ட ஹசனுல்
 பன்னாஹ், தூக்கு மேடை பார்த்து வந்த மொளலான 
மொளதுதி, சவுதி மன்னன் பஹதை எச்சரித்த அப்துல்லாஹ்
 பின் பாஸ்” போன்றவர்களின் புராணம் பாடும் வாரிசுகள் 
அந்த தலைவர்கள் போலல்லாது கோழைகளாக, தெடை
நடுங்கிகளாக பின்நகர்கின்றனர். தனது உயிர், தனது குடும்பம்,
 தனது வாழ்க்கை என பின்னோக்கிப் பார்க்கும் இவர்கள்தான்
 “சடவாதம்” பேசுபவர்கள். ”ஹாக்கீமியத்திற்காக” குரல்
 கொடுப்பவர்கள். 


அரசியல் எல்லைகளை கடந்த, இயக்கவாதங்களை கடந்த, வர்க்க 
எல்லைகளை கடந்த இலங்கை முஸ்லிம்களின் செயலணி
 உருவாக எல்லாவற்றையும் மிகைத்த வல்லோன் அல்லாஹ்வை
 இறைஞ்சுவோம்.
“யா அல்லாஹ் எம்மை குஜாராத் முஸ்லிம்கள் போன்றோ,
 கொஸாவோ முஸ்லிம்கள் போன்றோ, பொஸ்னிய முஸ்லிம்கள்
 போன்றோ, மியன்மார் முஸ்லிம்கள் போன்றோ சோதித்து
 விடாதே” என.

அபூ மஸ்லமா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக