ஆகஸ்ட் 26, 2011



பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலக்கும் அமெரிக்கா (Video)

மெரிக்கா. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் 
அல்லாதவர்களின் கனவு தேசம். அமெரிக்க 
விசாவோ அல்லது கிறீன் கார்ட் 
அதிர்ஸ்டமோ கிடைத்தால் யாரும்
 அதை வேண்டாம் என்று சொல்வதில்லை.
 சொர்க்கத்தின் கதவு திறந்தது போல் 
அவ்வளவிற்கு அமெரிக்க மோகம்.
 அமெரிக்கா மட்டுமல்ல. பிரித்தானிய
 லண்டன் வாழ்க்கைக்கும் இவர்கள் 
ஏங்கிக்கிடக்கிறார்கள்.
அமெரிக்க முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஒரு தொடராக
 யூத பதிப்பாளர் ஒருவரினால் குழந்தைகளிற்கான வர்ணம்
 தீட்டும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்
 வரையப்பட்டுள்வர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வாழும் 
இடங்கள். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல், 
உஸாமா பின் லாதினை அவர் மனைவியுடன் கைது செய்தல்,
 பாகிஸ்தானிய வசிரிஸ்தான் மீது அமெரிக்க விமானம்
 குண்டு வீசுதல், தலிபான்களின் கேலி உருவங்கள் என 
பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களை
 பயங்கரவாதிகளாகவும், காட்டுமிராண்டடிகளாகவும் 
ஆரம்பம் முதலே பதிய வைக்கும் பரா சைகோல
ஜி இங்கு கையாளப்பட்டுள்ளது.
பிஞ்சு நெஞ்சில் நஞ்ஞை கலக்கும் இந்த புத்தக
 வெளியீட்டிற்கு அமெரிக்க செனட்டர்கள் பங்கு பற்றி 
உரையாற்றியமை அமெரிக்காவின் உண்மையான கோர 
முகத்தினை வெளிக்காட்டுகின்றது. (இந்த வீடியோவை 
பாருங்கள். உண்மைகள் புரியும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக