ஆகஸ்ட் 22, 2011



ஸியோனிஸ ஊடகங்களின் கொலைக் களம்

ன்று இஸ்லாத்தை பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு
 மார்க்கமாக மேற்குலகும் அமெரிக்காவும் மிகவும் 
சாமர்த்தியமாக
 மக்கள் மனதில் ஒரு எண்ணக் கருவை விதைப்பதில்
 வெற்றி கண்டுள்ளன. 


கூகிள், யாகூ, பேஸ்புக், 
டிவிட்டர்பிளிக்கர் போன்ற
 சமூக வலைத்தளங்களின் பாவனை
 என்பது இன்று மனிதர்களால்
 தவிர்க்க முடியாத ஒன்றாகி
 போய்விட்டது. தனது தாய்
 தந்ததையரது வீட்டிற்கோ அல்லது
 சகோதர சகோதரிகளின்
 வீட்டிற்கோ செல்ல மறுக்கும் 
மறக்கும் மனிதன் இந்த சமூக 
வலைத்தளங்களிற்கு ஒவ்வொரு
 நாளும் தவறாமல் செல்கிறான். 
மணிக்கனக்கில் அதில் சங்கமித்தும் 
விடுகிறான்.


மேற்படி சமூக வலைத்தளங்கள் மனித மூளையை ஒட்டு மொத்தமாக
 தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகின்றன. இந்த 
சாதகமான  நிலைமையை சீ.ஐ.ஏ. (C.I.A.) மிகவும் சமார்த்தியமாக
 பயன்படுத்திக் கொள்கிறது.
50 வீதமான உளவுத் தகவல்களை இன்று இவற்றின் மூலமே அறிந்து 
கொள்கிறது. இந்த தளங்களும் அமெரிக்காவிற்காக உளவு
 பார்க்கின்றன. இந்த சமூக வலைத் தளங்களுடன் உறவு
 வைத்திருப்பவர்கள் இளைஞர் யுவதிகள் மட்டுமல்ல. விஞ்ஞானிகள்
 இராணுவ தலைவர்கள் போராளிகள் போராட்ட அமைப்புக்கள் அரசியல்
 தலைவர்கள் என பட்டியல் தொடர்கிறது. இவை அனைத்துமே 
அமெரிக்காவால் உளவு பார்க்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டு அதன்
 உண்மைத் தன்மைகள் ஊர்ஜிதம் செய்யப்படுகின்றன.




அமெரிக்க மற்றும் ஸியோனிஸ சக்திகள் இன்று உலகத்தில்
 தாங்கள் விரும்பும் உலக ஒழுங்கை கொண்டுவர அதை
 அமுல்படுத்த இலத்திரனியல் ஊடகங்களை பெரிதும்
 நம்பியிருக்கின்றன.


ஒரு முறை முன்னால்அமெரிக்க
 பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட்
 ரம்ஸ்பீல்ட் அமெரிக்க காங்கிரஸில்
 உரை நிகழ்த்தும் போது கூறினான்
 "நாம் ஒரு நாட்டின் மீதான 
யுத்தத்தை ஊடகங்களை 
வைத்தே முதலில் 
ஆரம்பிக்கிறோம். அந்த
 யுத்தத்தை அதே ஊடகங்களை 
வைத்தே இறுதியில்
 முடிவிற்கும் கொண்டு வருகிறோம்".


இந்த நாசகார ஊடகங்கள் மக்கள் மனதில் தொடர்ந்து ஒரே விடயத்தை
 பல தரப்பட்ட ஒலி ஒளி வடிவங்களில் காண்பித்து திட்டமிட்ட
 கருத்தியலை நோக்கி மனித மூளைகளை வழி நடாத்துகின்றன.
 ஒரு கட்டத்தில் அந்த கருத்தியலிற்கு அங்கீகாரமளித்து உள்ளத்தால்
 அதை உறுதியாக நம்பி கண்மூடித்தனமாக அதை ஆதரிக்கும் 
நிலைக்கு மனித சமூகம் சென்று விடுகிறது.


இது ஒரு வகையான கண்கட்டு வித்தை. தெளிவான சூனியம். மனித 
சிந்தனையை மழுங்கடித்து சாத்தானிய கருத்துக்களை திணித்து 
உலக ஒட்டு மொத்த சமுதாயத்தையும் ஏமாற்றும் தந்திரம்.


அந்த வகையில் இந்த வேலையை அமெரிக்க ஸியானிஸ சக்திகளிற்காக 
செய்யும் ஊடகங்களை பட்டியலிடுவது அவசியம். இவற்றின் பொய்
 பிரச்சாரங்களில் இருந்தும் ஏமாற்று யுக்திகளிலிருந்தும் மக்களை
 குறிப்பாக முஸ்லிம்களை விழிப்பாக இருக்குமாறு  தளம் எச்சரிக்கிறது.
                                                                                                                                                                                              









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக