டிசம்பர் 07, 2011

மோசடி மூலம் ஆளுங்கட்சிக்கு வெற்றி! ரஷ்ய மக்கள் ஆவேசம்

டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில்ஏராளமான மோசடிகள் நடந்துள்ளன என்று அனைத்துக்கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.திங்களன்று வெளியான முடிவுகளின்படி ஆளும் ஐக்கிய ரஷ்யா கட்சிக்கு 238 இடங்களும், ரஷ்யக்கம்யூனிஸ்ட் கட்சிக்கு 92 இடங்களும், ஜஸ்ட் ரஷ்யா கட்சிக்கு 64 இடங்களும், லிபரல் ஜனநாயகக்கட்சிக்கு 56 இடங்களும் கிடைத்துள்ளன. களத்தில் இருந்த மற்ற மூன்று கட்சிகளும் குறைந்தபட்சத்தேவையான மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெறவில்லை என்பதால், அக்கட்சிகளுக்குநாடாளுமன்றத்தில் இடங்கள் கிடைக்கவில்லை. கடந்த தேர்தலில் 315 இடங்களைப் பெற்றிருந்தஆளுங்கட்சி தற்போது 238 இடங்களை மட்டுமே பெற்றுள்ளதோடு, மொத்த வாக்குகளில் 50விழுக்காடு வாக்குகளை எட்ட முடியவில்லை. 

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இது ஆளுங்கட்சி வேட்பாளர்விளாடிமீர் புடினுக்கு நெருக்கடியைத் தரும் என்று கூறப்படுகிறது. இத்தனைக்கும் இந்த 49விழுக்காடு வாக்குளையோ, வாக்குச்சாவடி மோசடிகள், பிரச்சாரத்திற்கு அரசு எந்திரப் பயன்பாடு,அதிகார வர்க்கத்தின் மிரட்டல்கள் போன்றவற்றின் உதவியால்தான் பெறமுடிந்தது.ஆளுங்கட்சியின் மோசடிகளை எதிர்த்து ரஷ்ய மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பெரும் ஆர்ப்பாட்டங்களில்ஈடுபட்டிருக்கிறார்கள். ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில்அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மக்களைக் கட்டுப்படுத்த கலவரத்தடுப்பு காவல்துறையை ரஷ்யஅரசு இறக்கி விட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் இரவும், பகலும்ஆயுதங்களோடு நாட்டின் வீதிகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

குண்டர்களும் குவிப்புமக்களின் போர்க்குரலை ஒடுக்க காவல்துறையினரை இறக்கி விட்டதோடுநிற்காமல், ஆளுங்கட்சியும் தனது தரப்பில் குண்டர்களையும் நிறுத்தியுள்ளது. போராடும் மக்களுக்குஎதிர்ப்போராட்டம் நடத்துகிறோம் என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் வேலைகளில் அவர்கள்இறங்கியிருக்கிறார்கள். ஆளுங்கட்சி வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சிகள் என்று கூறிஎதிர்க்கட்சியினரையும், மோசடிகளை எதிர்க்கும் மக்களையும் ஒடுக்கும் பணி இவர்கள் வசம்ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் காவல்துறையினர், மறுபுறத்தில் ஆளுங்கட்சி இறக்கிவிட்டிருக்கும் குண்டர்கள் என்று போராடும் மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சிக்காக வன்முறையில் ஈடுபடும் குண்டர்களைக் கைது செய்யாமல், போராடும்மக்களைக் கைது செய்வதில் காவல்துறை கவனம் செலுத்துகிறது. மாஸ்கோவில் ஆர்ப்பாட்டம்நடத்திய 250 பேரைக் கைது செய்து காவல்துறை அழைத்துச் சென்றது. வெட்கப்படுங்கள்பாசிஸ்டுகளே என்றும், புடின் இல்லாத ரஷ்யா என்றும் அரசு எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டனர்.இது ஒரு நாள் நடந்து முடியும் நிகழ்வல்ல. ஆர்ப்பாட்டங்கள் தொடரும், மோசடிகள் அம்பலமாகும்வரை போராட்டம் நடக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

இதற்கிடையில், குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க விரும்பும் அமெரிக்கா, ரஷ்யத் தேர்தல்மோசடிகள் பற்றி முழுமையாக விசாரணை நடக்க வேண்டும் என்று கோரியுள்ளது. அந்நியத்தலையீடு தேவையில்லை என்று அரசு எதிர்ப்பாளர்களே அமெரிக்காவுக்கு பதிலடிகொடுத்திருக்கிறார்கள். ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவை என்று ரஷ்ய அரசால்அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தடைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. 

கம்யூனிச எதிர்ப்பு வெறிப்பிரச்சாரம்
கம்யூனிஸ்ட் கட்சி கருத்து

ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யொன்றைவெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர்4 ஆம் தேதி யன்று புதிய நாடாளுமன்றத் தைத் தேர்வு செய்யவாக்குப் பதிவு நடந்தது. அதிகாரபூர்வ மான முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும். 2007ஆம் ஆண்டு நடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில், கணிசமான முன்னேற்றத்தை கம்யூனிஸ்ட் கட்சிகண்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 92 இடங்கள் கிடைத்துள்ளன. 2007ஆம் ஆண்டில் 57 இடங்கள் மட்டுமே இருந்தன.

பிரச்சாரத்தின்போது அரசு எந்திரம் ஆளும் கட்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்தப்பட்டது.கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறிப்பிரச்சாரம் நடந்தது. வாக்குச்சாவடிகளில் ஏராளமான மோசடிகள்ஆளுங்கட்சியால் அரங்கேற்றப்பட்டது. ஐக்கிய ரஷ்யா என்ற அரசியல் கட்சியை மட்டுமல்ல,ரஷ்யாவின் அரசு எந்திரம், அதிகார வர்க்கம் ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.நாடாளுமன்றத் தேர்தலோடு 27 மாகாணங்களுக்கான தேர்தலும் நடந்தது. வோல்கோகிராடு,லெனின்கிராடு, மாஸ்கோ, நோவ்கோராட் உள்ளிட்ட பெரிய மாகாணங்களில் வாக்குப்பதிவுகள்நடைபெற்று முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்குகள்அதிகரித்துள்ளன. இறுதி
 முடிவுகள் வந்தபிறகு விரிவான அறிக்கையை கட்சி வெளியிடும் என்றுகூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக