டிசம்பர் 11, 2011

அமெரிக்க விமானம் கனணி தாக்குதல் மூலமே ஈரானில் வீழ்த்தப்பட்டுள்ளது.

மெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவு விமானம் கடந்த தினம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அது ஈரானிய சைபர் போசஸ் எனும் கனனி தாக்குதல் பிரிவினரால் வீழ்த்தப்பட்டதாக உத்தியோகபூர்வமாக ஈரானிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. RQ170 - SENTINAL DRONE எனும் ஸ்டெல்த் ரக விமானமே வீழ்த்தப்பட்டுள்ளது.

சீ.ஐ.ஏ.யின் பல வெற்றிகர தாக்குதல்களிற்கு உதவிய இந்த விமானம் பற்றிய செய்திலை அமெரிக்க அரசோ அ்ல்லது சீ.ஐ.ஏ.யோ வெளியில் சொல்லவில்லை. மிகவும் இரகசியமான போரிற்கு துணைநிற்கும் ஆயுதமாக பேணப்பட்டு வந்தது.
அபோதாபாத் தாக்குதலில் நன்கு பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் மீண்டும் ஈரானின் இராணுவ இலக்குகளை வேவு பார்த்த பொது தாக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசால் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இந்த விமானத்தை அமெரிக்கா அதற்கு வழங்கவில்லை.

ஈரானிய அரசால் காட்சிக்கு வைக்கப்பட்டுளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் ஈரானிய எல்லைக்குள் உள் நுழைந்த பின் இதன் முழு கட்டடுப்பாடும் பெக்ரான் தளத்தில் செயற்படும் விஷேட அமெரிக்க வீரர்களால் அற்றுப்போன நிலை தோன்றியது. விமானம் ஈரானில் வீழ்ந்திருக்கலாம் என அமெரிக்கா அறிவித்தது.

ஈரான் மேல் பறந்த விமானம் ஈரானிய சைபர் போஸ் அதிகாரிகளால் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு தரையிறக்கம் செய்யப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்தால் தானாகவே வெடித்து சிதறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. முழுமையாக அது இரானின் வசம்வந்தமையானது அமெரிக்காவை கிலி கொள்ள செய்துள்ளது. நாளை இந்த விமானம் ரஷ்யாவிடமோ அல்லது சீனாவிடமோ சென்று விட்டால் அது அமெரிக்காவை மிகவும் பாதிக்கும் விடயமாக மாறிவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக