டிசம்பர் 01, 2011

கொதித்தெழுந்த ஈரானியர்கள், தடுமாறிய 

பிரித்தானியா
ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் தாக்கப்பட்டதையடுத்து அங்குள்ள தனது அனைத்து இராஜதந்திரிகளையும் பிரித்தானியா வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது.இதன்படி தெஹ்ரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திலிருந்த முதல் தொகுதி இராஜதந்திர குழுவினர் அங்கிருந்து துபாய்க்குச் சென்றுள்ளனர். ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகம் நேற்று நூற்றுக்கணக்கானோரின் பயங்கரத்தாக்குதலுக்குள்ளாகியது. இதன்போது தூதரகம் அடித்து நொறுக்கப்பட்டது. குறித்த சம்பவமானது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பதில் நடவடிக்கையாக தனது அனைத்து இராஜதந்திரிகளையும் பிரித்தானியா மீள அழைத்துள்ளது. அந்நாட்டின் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை முடக்குவதாக பிரித்தானியா அண்மையில் அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இத்தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்நடவடிக்கைக்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது அந்நாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கையெனவும், இதற்கு தகுந்த பதிலடிகொடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக